கொழுப்பு

கொழுப்புகள் (Fats) எனப்படுபவை பொதுவாக கரிம கரைப்பான்களில் கரையக் கூடியதும், நீரில் கரையாததுமான பரந்த சேர்மங்களைக் குறிக்கும்.

வேதி முறைப்படி டிரைகிளிசரைடுகள், கிளிசராலின் மும்மணமியங்கள் மற்றும் பல கொழுப்பு அமிலங்களையும் கொழுப்புகள் எனலாம். இவற்றின் கட்டமைப்பு மற்றும் பொதிவுகளைப் பொருத்து கொழுப்புகள் திடமாகவோ அல்லது திரவமாகவோ அறைவெப்பநிலையில் காணப்படும். எண்ணெய்கள், கொழுப்புகள் மற்றும் கொழுமியங்கள் முதலான சொற்கள் கொழுப்பைக் குறிக்க உபயோகப்படுத்தப்பட்டாலும், எண்ணெய்கள் சாதாரண அறைவெப்பநிலையில் திரவங்களாக இருக்கும் கொழுப்புகளையும், திடமாக இருக்கும் கொழுப்புகளைக் கொழுப்புகள் என்றும் வழக்கமாக அழைக்கிறோம். திட மற்றும் திரவ கொழுப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களை வழக்கமாக மருத்துவ மற்றும் உயிரிவேதியியல் சூழலில் கொழுமியம் (Lipids) என்றழைக்கிறோம். மேலும் நீரில் கரையாத, வழுவழுப்புத் தன்மைக்கொண்ட எந்தவொரு பொருளையும், அதன் வேதிவடிவத்தைப் பொருட்படுத்தாது, எண்ணெய் என்றழைக்கிறோம். உதாரணமாக, பெட்ரோலியம் (அல்லது கச்சா எண்ணெய்), வெப்பமூட்டும் எரி எண்ணெய் மற்றும் இன்றியமையா எண்ணெய்கள்.

உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

கொழுப்புகள், கொழுமியங்களில் உள்ள ஒரு பகுப்பாகும். மற்ற கொழுமியங்களிலிருந்து கொழுப்புகள் வேதிவடிவத்திலும், இயற்பியல் பண்புகளிலும் வேறுபடுகின்றன. கொழுப்பு மூலக்கூறுகள் வாழ்வின் பல நிலைகளிலும் கட்டமைப்பு மற்றும் வளர்சிதைமாற்ற பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை பெரும்பாலான சார்பூட்ட உயிரிகளின் (மனிதர்கள் உட்பட) உணவில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. கணையத்தில் உருவாகும் கொழுமியச்சிதைப்பி நொதிகளால் கொழுப்புகளும், கொழுமியங்களும் உடலில் சிதைக்கப்படுகின்றன.

உண்ணத்தக்க விலங்குக் கொழுப்புகளுக்கான உதாரணங்கள்: பன்றிக்கொழுப்பு, மீன் எண்ணெய், வெண்ணெய்/நெய் மற்றும் திமிங்கிலக் கொழுப்பு. இவை விலங்குகளின் தோலுக்கு அடியிலிருந்தும், பால் மற்றும் இறைச்சியிலிருந்தும் கிடைக்கும் கொழுப்புகளிலிருந்துப் பெறப்படுகின்றன. உண்ணத்தக்க தாவரக் கொழுப்புகளுக்கான உதாரணங்கள்: நிலக்கடலை, சோயா அவரை, சூரியகாந்தி, எள், தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய்கள். அடுதலுக்கு உபயோகிக்கப்படும் காய்கறி நெய் (டால்டா), அடுதலிலும், பரப்பியாகவும் பயன்படும் வனஸ்பதி ஆகியன மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெய்களை ஹைட்ரசனேற்றம் செய்வதன் மூலம் பெறப்படுகின்றன.

இந்த கொழுப்புகளுக்கான உதாரணங்களை நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் நிறைவுறாக் கொழுப்புகள் என வகைப்படுத்தலாம். நிறைவுறா கொழுப்புகளை இயற்கையில் சாதாரணமாகக் காணப்படும் ஒருபக்ககொழுப்புகள் என்றும், இயற்கையில் அரிதாகவும் ஆனால் பகுதி ஹைட்ரசனேற்றம் செய்யப்பட காய்கறி எண்ணெய்களில் பெருமளவிலும் உள்ள மாறுபக்ககொழுப்புகள் என்றும் பகுக்கலாம்.

மேற்கோள்கள்

மேற்கொண்டு படிக்க

Tags:

உயிரிவேதியியல்கட்டமைப்புகரிமம்கரைப்பான்கிளிசரால்கொழுப்பு அமிலம்கொழுமியம்சேர்மம்திண்மம் (இயற்பியல்)திரவம்நீர்பெட்ரோலியம்மருத்துவம்வேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபிபூக்கள் பட்டியல்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ஆனைக்கொய்யாசென்னைபதினெண் கீழ்க்கணக்குபிள்ளைத்தமிழ்பாசிப் பயறுஅரண்மனை (திரைப்படம்)விஷால்பஞ்சதந்திரம் (திரைப்படம்)உடன்கட்டை ஏறல்நாயன்மார்நாம் தமிழர் கட்சிகா. ந. அண்ணாதுரைநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)நயன்தாராதாஜ் மகால்வில்லிபாரதம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சித்தர்விருமாண்டிஹரி (இயக்குநர்)திராவிடர்கனடாதிருக்குறள்பாசிசம்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஆசிரியர்இந்தியன் (1996 திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்நம்மாழ்வார் (ஆழ்வார்)விநாயகர் அகவல்சீவக சிந்தாமணிஆழ்வார்கள்நிர்மலா சீதாராமன்திராவிசு கெட்திருமூலர்திருப்பூர் குமரன்சுந்தரமூர்த்தி நாயனார்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)அபிராமி பட்டர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திவ்யா துரைசாமிநீர்ப்பறவை (திரைப்படம்)காளமேகம்பாண்டி கோயில்சைவ சமயம்வாலி (கவிஞர்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பூப்புனித நீராட்டு விழாதெலுங்கு மொழிகண்டம்அறுபது ஆண்டுகள்இயேசுஇந்திய அரசியல் கட்சிகள்நிலாஉமறுப் புலவர்இந்தியத் தேர்தல்கள் 2024தேவாங்குசூரியக் குடும்பம்மனித வள மேலாண்மைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்முல்லைக்கலிஇனியவை நாற்பதுசேக்கிழார்கிராம சபைக் கூட்டம்மயில்நாயக்கர்சிங்கம் (திரைப்படம்)குணங்குடி மஸ்தான் சாகிபுசுபாஷ் சந்திர போஸ்🡆 More