உயிர்ச்சத்து பி6

உயிர்ச்சத்து பி6 (Vitamin B6) என்பது உயிரினங்களில் இடை மாற்றம் செய்ய இயலும் வேதிச்சேர்மங்களின் குழுவைக் குறிக்கிறது.

இது, உயிர்ச்சத்து பி தொகுதியின் ஒரு அங்கமாக உள்ளது. இதன் செயற்படும் வடிவமான பிரிடாக்சால் 5' பாசுபேட்டு (PLP) அமினோ அமிலம், குளுக்கோசு, கொழுமியம் ஆகியவற்றின் வளர்சிதைமாற்ற வினைகளில் நிகழும் பல்வேறு நொதிய வினைகளில் துணைக்காரணியாக உள்ளது.

உயிர்ச்சத்து பி6
பிரிடாக்சால் பாசுபேட்டு

வடிவங்கள்

உயிர்ச்சத்து பி6 
பிரிடாக்சின்
உயிர்ச்சத்து பி6 
பிரிடாக்சமைன்

உயிர்ச்சத்து பி6- ன் ஏழு வடிவங்கள் (vitamers):

  • பிரிடாக்சின் (அ) பிரிடொக்சின் (PN), பொதுவாக பி6 சேர்க்கையாகக் கொடுக்கப்படும் வடிவம்
  • பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு (PNP)
  • பிரிடாக்சால் (PL)
  • பிரிடாக்சால் 5' பாசுபேட்டு (PLP), ஊன்ம ஆக்கச்சிதைவில் செயற்படும் வடிவம் ( 'பி-5-பி' என உயிர்ச்சத்துச் சேர்க்கையாக விற்கப்படுகிறது)
  • பிரிடாக்சமைன் (PM)
  • பிரிடாக்சமைன் 5'-பாசுபேட்டு (PMP)
  • 4-பிரிடாக்சிக் அமிலம் (PA), சிதைமாற்றப் பொருளாக சிறுநீரில் வெளியிடப்படுகிறது

பிரிடாக்சிக் அமிலத்தைத் தவிர்த்து மற்றைய அனைத்து வடிவங்களும் இடைமாற்றம் செய்யகூடியவைகளாகவே உள்ளன. நம் குடலில் உறிஞ்சப்படும் பிரிடாக்சமைன், பிரிடாக்சால் கைனேசு என்னும் நொதியால் பிரிடாக்சமைன் 5'-பாசுபேட்டாக மாற்றப்பட்டு பிறகு, பிரிடாக்சமைன்-பாசுபேட்டு அமைன்மாற்றி (transaminase) (அ) பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு நொதியத்தால் பிரிடாக்சால் 5' பாசுபேட்டாக மாற்றப்படுகிறது. பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு நொதியம், பிரிடாக்சின் 5'-பாசுபேட்டை பிரிடாக்சால் 5' பாசுபேட்டாக மாற்றுவதிலும் வினையூக்கியாகச் செயற்படுகின்றது. பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு ரிபோஃபிளாவின் உயிர்ச்சத்திலிருந்து பெறப்படும் ஃபிளேவின் ஒற்றை நியூக்ளியோட்டைடு துணைக்காரணியைச் சார்ந்திருக்கிறது. எனவே, இந்த உயிரிய வழிமுறையில் உணவிலுள்ள உயிர்ச்சத்து பி6-ஐ உயிர்ச்சத்து பி2 இல்லாமல் உபயோகப்படுத்தமுடியாது.


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)

மேற்கோள்கள்

Tags:

அமினோ அமிலம்உயிர்ச்சத்து பிகுளுக்கோசுகொழுமியம்நொதியம்வளர்சிதைமாற்றம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்திய அகாதமி விருதுதிருநாவுக்கரசு நாயனார்மீனா (நடிகை)அருந்ததியர்இராசேந்திர சோழன்வெண்குருதியணுஅத்தி (தாவரம்)இந்து சமயம்கேரளம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்முல்லைப்பாட்டுவெந்தயம்பரிதிமாற் கலைஞர்கௌதம புத்தர்நீர் மாசுபாடுஉயிர்மெய் எழுத்துகள்நுரையீரல்வெ. இறையன்புமூதுரைவியாழன் (கோள்)சி. விஜயதரணிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிசினைப்பை நோய்க்குறிஅபூபக்கர்சீமான் (அரசியல்வாதி)கேழ்வரகுபாரத ஸ்டேட் வங்கி2024 இந்தியப் பொதுத் தேர்தல்வட்டாட்சியர்மாடுவிண்ணைத்தாண்டி வருவாயாவெள்ளையனே வெளியேறு இயக்கம்விடுதலை பகுதி 1உமறுப் புலவர்விழுப்புரம் மக்களவைத் தொகுதிநா. முத்துக்குமார்மெய்யெழுத்துசோழர்மயங்கொலிச் சொற்கள்இந்தியப் பிரதமர்புறப்பொருள் வெண்பாமாலைதிருவாசகம்வைரமுத்துமொழிஇந்திய ரூபாய்சொல்லாட்சிக் கலைகம்பராமாயணத்தின் அமைப்புதிருமூலர்வாதுமைக் கொட்டைசென்னை சூப்பர் கிங்ஸ்கலிங்கத்துப்பரணிபங்களாதேசம்வீரப்பன்புதுமைப்பித்தன்வேளாண்மைநெடுநல்வாடை (திரைப்படம்)இந்திரோகித் சர்மாகுற்றியலுகரம்மருதமலை முருகன் கோயில்குருதிச்சோகைகோயில்ஆசிரியர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பனிக்குட நீர்யூலியசு சீசர்இதயம்உருவக அணிஞானபீட விருதுநன்னீர்சித்தர்கள் பட்டியல்கணையம்பெரியபுராணம்ஆப்பிள்பச்சைக்கிளி முத்துச்சரம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்சிலப்பதிகாரம்ஒப்புரவு (அருட்சாதனம்)🡆 More