மலேசியா எயர்லைன்சு விமானம் 17

மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 (Malaysia Airlines Flight 17, எம்எச்17 (MH17/MAS17) என்பது ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், 2014 சூலை 17 இல், விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய மலேசிய நாட்டு வானூர்தி ஆகும்.

போயிங் 777 ரக விமானம் உக்ரைனின் தோனெத்ஸ்க் வட்டாரத்தில் கிராபோவ் நகருக்கு அண்மையில் உருசிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் வீழ்ந்தது. விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 பணியாளர்களும் உயிரிழந்தனர்.

மலேசியா எயர்லைன்சு விமானம் 17
மலேசியா எயர்லைன்சு விமானம் 17
ரோமின் பியுமிசினொ விமான நிலையத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சம்பந்தப்பட்ட விமானம் நின்றிருந்தபோது எடுக்கப்பட்ட ஒளிப்படம்
Incident சுருக்கம்
நாள்17 சூலை 2014 (2014-07-17)
சுருக்கம்Under investigation. Fired at with surface-to-air missile.
இடம்ஹ்ரபோவே அருகே ,டநிட்ஸ்க் ஒப்லாஸ்து , உக்ரைன்
48°7′56″N 38°39′19″E / 48.13222°N 38.65528°E / 48.13222; 38.65528
பயணிகள்283
ஊழியர்15
உயிரிழப்புகள்(மொத்தம்) 298
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபோயிங் 777-200ER
இயக்கம்மலேசியா எயர்லைன்சு
வானூர்தி பதிவு9M-MRD
பறப்பு புறப்பாடுஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்
சேருமிடம்கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர்ப் பகுதியிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கைகளின் படி, இவ்விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், யார் இதனைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. உக்ரைனியப் பிரச்சினையில் உருசியா சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை அறிவித்த அடுத்த நாள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் வைத்து பூக் நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைனின் உட்துறை அமைச்சு அறிவித்தது. உக்ரைனிய அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ இதனை ஒரு "பயங்கரவாதத் தாக்குதல்" எனக் கூறியுள்ளார். உக்ரைனியப் படையினரே விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தினர். தாம் ஒரு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் இருவர் தமக்குள் தொலைபேசியில் உரையாடியதைத் தமது புலனாய்வுப் பிரிவு ஒட்டுக் கேட்டதாக உக்ரைனிய அரசு அறிவித்தது.

11 செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகவும் மோசமான வானூர்தித் தொடர்பான தாக்குதலாக இந்நிகழ்வு கருதப்படுகிறது.

விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்

மலேசியா எயர்லைன்சு விமானம் 17 
விமானம் பயணித்த பாதை

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சூலை 17, 2014 அன்று 12:15 (நெதர்லாந்து நேரம்) மணியளவில் விமானம் புறப்பட்டது. பயண அட்டவணைப்படி இவ்விமானம் காலை 06:10 (மலேசிய நேரம்) மணியளவில் கோலாலம்பூர் சென்று சேரவேண்டும். ஆனால் 17:15 (உக்ரைன் நேரம்) மணியளவில் கிழக்கு உக்ரேனின் வான்வெளிப் பகுதியில் விமானம் எரிந்து விழுந்தது. கடைசித் தொடர்பின்போது விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் பறந்துள்ளது.

விமானத்தின் காலக்கெடு

கடந்துவிட்ட நேரம் நேரம் நிகழ்வு
ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் ஆம்ஸ்டர்டாம் உக்ரைன் கோலாலம்பூர்
00:00 10:14 12:14 13:14 18:14
04:01 14:15 16:15 17:15 22:15 விமானம் உக்ரைன் ரேடாரில் இருந்து மறைந்தது

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்

நாடு வாரியாகப் பயணிகள்
நாடு எண்ணிக்கை
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  Netherlands 192
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  Malaysia 44
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  Australia 27
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  Indonesia 12
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  United Kingdom 10
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  Belgium 4
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  Germany 4
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  Philippines 3
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  New Zealand 1
மலேசியா எயர்லைன்சு விமானம் 17  Canada 1
மொத்தம் 298

விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 மலேசியப் பணியாளர்களும் உயிரிழந்தனர். இவர்களில் 192 பேர் நெதர்லாந்து நாட்டவர். சூலை 19 இல் அனைத்து 298 பேரினதும் விபரங்களை மலேசியா ஏர்லைன்சு நிறுவனம் வெளியிட்டது.

ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெறும் 20வது பன்னாட்டு எயிட்சுக் மாநாட்டில் கலந்து கொள்ளவென விமானத்தில் போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 100 எயிட்சு வல்லுநர்களும், பன்னாட்டு எயிட்சு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜோயிப் லாங்கேயும் இதில் கொல்லப்பட்டனர். இவர்களுடன் டச்சு மேலவை உறுப்பினர் வெல்லெம் விட்டெவீன், ஆத்திரேலிய எழுத்தாளர் லியாம் டேவிசன், மலேசியத் தமிழ் நடிகை சுபா ஜெய், மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் பாட்டியார் சிறீ சித்த அமீரா ஆகியோரும் இறந்த பிரபலங்களில் அடங்குவர்.

உலக மக்களின் அஞ்சலி

விமானத்தின் விவரங்கள்

  • வகை: போயிங் 777 – 2H6ER
  • வரிசை எண்: 28411
  • பதிவு எண்: 9M-MRD
  • தயாரிப்பு விவரம்: போயிங் 777 வகையில் 84 ஆவது விமானம்.
  • முதல்முறையாக பறந்த நாள்: 17 சூலை 1997
  • மலேசிய ஏர்லைன்சுக்கு விற்கப்பட்ட நாள்: 29 சூலை 1997
  • என்ஜின்கள்: இரண்டு Rolls-Royce Trent 800
  • விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282

குறிப்புகள்

மேற்கோள்கள்

இதையும் காண்க

வெளியிணைப்புகள்

மலேசியா எயர்லைன்சு விமானம் 17 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Malaysia Airlines Flight 17
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

மலேசியா எயர்லைன்சு விமானம் 17 விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்மலேசியா எயர்லைன்சு விமானம் 17 பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உலக மக்களின் அஞ்சலிமலேசியா எயர்லைன்சு விமானம் 17 விமானத்தின் விவரங்கள் [32]மலேசியா எயர்லைன்சு விமானம் 17 குறிப்புகள்மலேசியா எயர்லைன்சு விமானம் 17 மேற்கோள்கள்மலேசியா எயர்லைன்சு விமானம் 17 இதையும் காண்கமலேசியா எயர்லைன்சு விமானம் 17 வெளியிணைப்புகள்மலேசியா எயர்லைன்சு விமானம் 17ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்உக்ரைன்உருசியாகோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்தோனெத்ஸ்க்போயிங் 777மலேசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மீனா (நடிகை)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)இந்திய தேசிய காங்கிரசுபுறநானூறுவிராட் கோலிபெண்களின் உரிமைகள்மலக்குகள்எம். கே. விஷ்ணு பிரசாத்அன்மொழித் தொகைமொழியியல்ஆண்டு வட்டம் அட்டவணைவெண்குருதியணுசெயங்கொண்டார்விண்டோசு எக்சு. பி.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)இந்தியாவின் பொருளாதாரம்குப்தப் பேரரசுபாரத ரத்னாபொருநராற்றுப்படைசிதம்பரம் நடராசர் கோயில்அம்பேத்கர்மலைபடுகடாம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமதராசபட்டினம் (திரைப்படம்)மதுரை மக்களவைத் தொகுதிதன்னுடல் தாக்குநோய்எட்டுத்தொகை தொகுப்புதிராவிட மொழிக் குடும்பம்ஊராட்சி ஒன்றியம்வெண்பாகுருதிப்புனல் (திரைப்படம்)மக்களாட்சிசீரடி சாயி பாபாஆண் தமிழ்ப் பெயர்கள்டி. எம். கிருஷ்ணாஇந்தியன் பிரீமியர் லீக்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சுலைமான் நபிதபூக் போர்இந்திய வரலாறுஅரசியல்பால்வினை நோய்கள்நெடுநல்வாடை (திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்திருமலை நாயக்கர்காம சூத்திரம்நீரிழிவு நோய்நன்னூல்புறப்பொருள் வெண்பாமாலைநான்மணிக்கடிகைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)மெட்ரோனிடசோல்மூன்றாம் பானிபட் போர்சிங்கம் (திரைப்படம்)பொதியம்முதற் பக்கம்திருவாசகம்பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிகிரியாட்டினைன்திரு. வி. கலியாணசுந்தரனார்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இராமாயணம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மண் பானைஅழகிய தமிழ்மகன்வாழைரயத்துவாரி நிலவரி முறைகல்லீரல்குலுக்கல் பரிசுச் சீட்டுசிற்பி பாலசுப்ரமணியம்கேரளம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்செங்குந்தர்மஞ்சும்மல் பாய்ஸ்கோத்திரம்ஐம்பூதங்கள்இந்தியாவில் இட ஒதுக்கீடுசுபாஷ் சந்திர போஸ்🡆 More