சுபா ஜெய்

சுபா ஜெய் (Shuba Jay) என அழைக்கப்படும் சுபாசிணி ஜெயரத்தினம் (Shubashini Jeyaratnam, 15 சூலை 1976 – 17 சூலை 2014) மலேசிய தொலைக்காட்சி, மற்றும் திரைப்பட நடிகையும் ஆவார்.

நாடகம், நடனம், திரைப்படம், தொலைக்காட்சி எனப் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்.

சுபா ஜெய்
Shuba Jay
பிறப்புசுபாசிணி ஜெயரத்தினம்
Shubashini Jeyaratnam

(1976-07-15)15 சூலை 1976
இறப்பு17 சூலை 2014(2014-07-17) (அகவை 38)
கிராபோவ், தோனெத்ஸ்க், உக்ரைன்
இறப்பிற்கான
காரணம்
விமான விபத்து
தேசியம்மலேசியர்
பணிநடிகை, தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
2001–2014

பணி

இலங்கை வம்சாவழிக் குடும்பம் ஒன்றில் மலேசியாவில் பிறந்த சுபாசிணி கோலாலம்பூரில் இருந்து வெளிவரும் நியூ ஸ்ட்ரெயிட் டைம்சு ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி ஒப்பீட்டுநராகப் பணியாற்றிய பின்னர், அப்பத்திரிகையின் விளம்பரப் பகுதியில் பணியாற்றினார். 2010 ஆம் ஆண்டில் இவர் ஆஸ்ட்ரோ ரியா தொலைக்காட்சியில் தனது தந்தை ஜெயரத்தினத்துடன் இணைந்து மாரி மேனாரி என்ற நிகழ்ச்சியை நடத்தினார். 2011 இல் இவர் நடிக்க ஆரம்பித்தார். ஸ்பானார் ஜெயா, காடிசு 3, சுகமான சுமைகள் உட்படப் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். அத்துடன் ரிலேசன்சிப் ஸ்டேட்டசு (2012), டோக்காக் (2013) ஆகிய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆங்கிலம், மலாய், மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நன்றாகக் கதைக்கக் கூடியவர்.

தனிப்பட்ட வாழ்க்கை

வியட்நாமில் சுற்றுலா சென்ற போது இவர் நெதர்லாந்து நாட்டவரான பவுல் கோயிசு என்பவரை சந்தித்துத் திருமணம் புரிந்து கொண்டார். திருமணத்திற்குப் பின் இவர் தாய்ப்பாலூட்டல், மற்றும் வீட்டில் பிள்ளைப்பேறு போன்றவற்றுக்குப் பரப்புரை செய்தார். 2012 இல் இவருக்கு கைலா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இறப்பு

சுபா தனது கணவர், மற்றும் மகளுடன் நெதர்லாந்தில் இருந்து மலேசியா எயர்லைன்சு விமானம் 17 மூலமாக கோலாலம்பூர் வந்த போது, உக்ரைனிய வான்பகுதியில் விமானம் சுடப்பட்ட போது விமானத்தில் இருந்த அனைத்து 298 பேரும் இறந்தார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சுபா ஜெய் பணிசுபா ஜெய் தனிப்பட்ட வாழ்க்கைசுபா ஜெய் இறப்புசுபா ஜெய் மேற்கோள்கள்சுபா ஜெய் வெளி இணைப்புகள்சுபா ஜெய்மலேசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலக்குகள்தமிழ் எண் கணித சோதிடம்மின்னஞ்சல்ஜெயகாந்தன்தமிழ் எழுத்து முறைஇந்தியத் தேர்தல் ஆணையம்பிரீதி (யோகம்)குண்டூர் காரம்வெண்பாதாஜ் மகால்வேதம்சோழர் காலக் கட்டிடக்கலைஇயற்பியல்அணி இலக்கணம்தங்கம் தென்னரசுஅன்மொழித் தொகைதிருவோணம் (பஞ்சாங்கம்)திரிகடுகம்சைவ சமயம்சூரியக் குடும்பம்மதுரைஒற்றைத் தலைவலிபாவலரேறு பெருஞ்சித்திரனார்திருநங்கைமுதலாம் இராஜராஜ சோழன்சூரைஒப்புரவு (அருட்சாதனம்)நாடாளுமன்ற உறுப்பினர்காயத்ரி மந்திரம்ஆடுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தீரன் சின்னமலைதொல்லியல்பீப்பாய்டி. எம். கிருஷ்ணாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மார்ச்சு 28தமிழ்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஆங்கிலம்மாதவிடாய்சிதம்பரம் மக்களவைத் தொகுதிசங்க காலப் புலவர்கள்உயிர்ப்பு ஞாயிறுஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ஆடு ஜீவிதம்இளையராஜாதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வேதநாயகம் பிள்ளைசெண்டிமீட்டர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சீர் (யாப்பிலக்கணம்)ஆய கலைகள் அறுபத்து நான்குசெரால்டு கோட்சீதிருப்பூர் மக்களவைத் தொகுதிபுறப்பொருள்ந. பிச்சமூர்த்திபிரபுதேவாவிபுலாநந்தர்ஜி. யு. போப்தொல்காப்பியம்அகோரிகள்தமன்னா பாட்டியாஇசுலாத்தின் ஐந்து தூண்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கிராம சபைக் கூட்டம்சூல்பை நீர்க்கட்டிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வேலூர் மக்களவைத் தொகுதிபெரியாழ்வார்மும்பை இந்தியன்ஸ்காமராசர்அம்பேத்கர்தென் சென்னை மக்களவைத் தொகுதிகுறிஞ்சிப் பாட்டுகுடும்ப அட்டைஆ. ராசா🡆 More