மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 (MH370, அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ748) என்பது 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரோடு காணாமல் போன போயிங் 777 வகை விமானம் ஆகும்.

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370
காணாமல்போன 9M-MRO விமானம்,
2011ம் ஆண்டு சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில்
சுருக்கம்
நாள்8 மார்ச் 2014
சுருக்கம்காணவில்லை, தேடும் பணி நடக்கின்றது
இடம்கடைசித் தொடர்பு: தென்சீனக் கடலின் கோத்தா பாருவில் இருந்து 120 கடல் மைல்கள் கிழக்கே
பயணிகள்227
ஊழியர்12
வானூர்தி வகைபோயிங் 777-2H6ER
இயக்கம்மலேசியா எயர்லைன்ஸ்
வானூர்தி பதிவு9M-MRO
பறப்பு புறப்பாடுகோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், கோலாலம்பூர்
சேருமிடம்பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம், பெய்ஜிங்

மலேசியா எயர்லைன்ஸின் போயிங் 777 வகை விமானங்களில் அதிக சேதம் விளைவித்ததும், உலகின் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதும் இந்த நிகழ்வாக இருக்கும். போயிங் 777 வகை விமானம் இத்தகைய மீட்கமுடியா விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.

காணாமல் போன விவரங்கள்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 அன்று 00:41 (ம.நே) மணியளவில் இவ்விமானம் புறப்பட்டது. இருவேறு முரண்பாடான தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துள்ளது.

தேடுதல் பணிகள்

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 
பயணப் பாதை. ஆரம்பித்தது: கோலாலம்பூர், சென்றிருக்க வேண்டியது: பெய்ஜிங்.
A: அந்தமான் கடல், G: தாய்லாந்து வளைகுடா. M: மலாக்கா நீரிணை, S: தெற்கு சீனக் கடல்.
கோலாலம்பூர்
கடைசித் தொடர்பு
பெய்ஜிங்
1000 km
A
M
G
S

அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்சு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய கடற்படையினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மார்ச் 13, 2014

  • தேடும் பணியில் இந்தியாவும் இணைந்தது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 விமானங்கள் அந்தமான் கடலில் தேடுதல் பணியைத் தொடங்கின. இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் சுமார் 35,000 சதுர கி. மீட்டர் பரப்பளவுக்கு விமானத்தைத் தேடி வருகின்றன. தாய்லாந்து கடலில் முகாமிட்டுள்ள இந்தியாவின் சாகர் போர்க்கப்பலும் விரைவில் தேடுதல் பணியில் இணையும். இந்தியாவின் உளவு செயற்கைக்கோளான ருக்மணியும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மார்ச் 14, 2014

  • தேடும் பணிகள், ஏழாவது நாளில் இந்தியப் பெருங்கடலுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா தனது கண்காணிப்புக் குழுக்களை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியது. மலேசிய விமானக் கட்டுப்பாட்டு ரேடாருடனான தொடர்பினை இழந்தபிறகும் விமானம் சில மணிநேரங்கள் தொடர்ந்து பறந்ததாக நம்பப்படுவதே இந்த நடவடிக்கைக்கு காரணமென செய்திகள் தெரிவித்தன. சென்னைக் கடற்கரைக்கு அப்பால் வங்காள விரிகுடாவில், 9000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தியாவின் தேடுதல் நடப்பதாகவும் மலேசியா தெரிவித்தது.

மார்ச் 15, 2014

  • மலேசிய அரசாங்கத்திடமிருந்து வந்த புதிய வேண்டுகோளின்படி, இந்தியா தனது தேடுதல் பணிகளை மத்திய மற்றும் கிழக்கு வங்காள விரிகுடாவில் தீவிரப்படுத்தியது. 2,50,௦௦௦ சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு அந்தமான் மற்றும் வங்காள விரிகுடா கடல்களில் தேடுதல் பணிகள் தொடர்வதாக இந்திய கடற்படை தெரிவித்தது.

மார்ச் 16, 2014

தேடும் பணிகளில் உதவிடுமாறு 25 நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்தது.

மார்ச் 17, 2014

சுமத்ராவிலிருந்து தெற்கு இந்தியப் பெருங்கடல்வரை தேடும் பணிகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. லாவோசிலிருந்து காப்சியன் கடல்வரை தேடும் பணிகளில் சீனாவும் கசகஸ்தானும் முன்னெடுத்து வருகின்றன.

மார்ச் 20, 2014

விமானத்தின் உடைந்த இரு பாகங்கள் என நம்பப்படும் பொருட்களை தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தமது செய்மதிகள் கண்டுபிடித்துள்ளதாக ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.

மார்ச் 21, 2014

பூமியின் தொலைதூரப் பகுதியில், கடுமையான சூழலில் விமானங்கள் தொடர்ந்து தேடுதல் பணிகளை செய்தன.

மார்ச் 22, 2014

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 
விமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருட்கள் பற்றிய செய்மதிப் படிமங்கள் வெளியிடப்பட்டன. 1: தெற்கு சீனக் கடலில் இருப்பதாக சொல்லப்பட்டது, நிரூபிக்கப்படவில்லை (மார்ச் 12). 2: தெற்கு இந்தியப் பெருங்கடலில் காணப்பட்டதாக ஆஸ்திரேலியாவினால் சொல்லப்பட்டது (மார்ச் 20). 3: தெற்கு இந்தியப் பெருங்கடலில் காணப்பட்டதாக சீனாவால் சொல்லப்பட்டது (மார்ச் 22)

விமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய செய்மதிப் படிமத்தை சீனா ஆராய்ந்து வருவதாக மலேசியா தெரிவித்தது.

மார்ச் 23, 2014

விமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய புதிய செய்மதிப் படிமங்களை பிரான்ஸ் தந்துள்ளதாக மலேசியா தெரிவித்தது.

மார்ச் 24, 2014

விமானம் தெற்கு இந்துமாக்கடலில் விழுந்துள்ளதாக செய்மதிப் படிமங்கள் மற்றும் ராடார் மூலம் தெரியவந்துள்ளது.

மார்ச் 27, 2014

  • தெற்கு இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 300 பொருட்களை தாம் கண்டுள்ளதாக தாய்லாந்து நாட்டின் விண்வெளி நிறுவனம் தெரிவித்தது. 450 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பொருட்கள் பரவிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேடுதல் பணியானது மோசமான வானிலை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 78,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி நடப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது.

சூலை, 29, 2015

காணாமல் போன இவ்விமானத்தின் வலதுபுற இறக்கையின் சிறுபகுதி மடகஸ்காருக்கு அருகில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ரியூனியன் தீவிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, அச்சிறுபகுதி மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370தினுடையதே என உறுதிசெய்யப்பட்டது. இத்தகவலை மலேசியப் பிரதமர் ஆகத்து, 5, 2015 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள்

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 
ஆஸ்திரேலிய விமானப்படையைச் சேர்ந்த AP-3C Orion எனும் விமானம் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 
சிங்கப்பூரின் RSS Steadfast எனும் கப்பல் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 
அந்தமான் கடலில் கப்பல் மூலம் நடந்த தேடுதல் பணி
  1. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  மலேசியா
  2. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  ஆத்திரேலியா
  3. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  புரூணை
  4. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  சீனா
  5. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  இந்தியா
  6. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  இந்தோனேசியா
  7. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  சப்பான்
  8. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  நியூசிலாந்து
  9. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  பிலிப்பீன்சு
  10. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  சிங்கப்பூர்
  11. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  சீனக் குடியரசு
  12. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  தாய்லாந்து
  13. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  ஐக்கிய அமெரிக்கா
  14. மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  வியட்நாம்

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்

இவ்விமானத்தின் பொறுப்பாளர் (captain) சாகிரே அக்மத் ஷா ஆவார். 53 அகவையினரான இவர் மலேசியாவின் பினாங்கு நகரத்தவர். 1981இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்த இவர் 18,365 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர் ஆவார். முதல் அதிகாரியான (first officer) இபரிக் அப்துல் அகமதுவும் மலேசியராவார். 27 அகவையினரான இவர் 2007இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்து 2,763 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர். 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரின் பெயர்ப்பட்டியலை தங்களின் பதிவேட்டிலிருந்து மலேசியா எயர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. 12 பணிக்குழுவினரும் மலேசியராவர்.

நாடு பயணிகள்
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  ஆத்திரேலியா 6
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  ஆஸ்திரியா 1
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  கனடா 2
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  சீனா 153
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  பிரான்சு 4
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  ஆங்காங் 1
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  இந்தியா 5
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  இந்தோனேசியா 7
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  இத்தாலி 1
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  மலேசியா 38 (+12 பணிக்குழுவினர்)
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  நெதர்லாந்து 1
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  நியூசிலாந்து 2
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  உருசியா 1
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  சீனக் குடியரசு 1
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  உக்ரைன் 2
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370  ஐக்கிய அமெரிக்கா 3
மொத்தம் (15 நாட்டினர்) 239

புலனாய்வு

இவ்விமானத்தில் பயணம் செய்த இருவர் திருடப்பட்ட கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து, விமானம் காணாமல் போனமை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் அமெரிக்க, மலேசிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

மார்ச் 15, 2014

விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக மலேசியா அறிவித்தது. கோலாம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார்கள் தந்துள்ள ஆதாரங்களின்படி, இவ்விமானம் தனது பாதையினை மாற்றியிருப்பதோடு ஏறத்தாழ ஏழு மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாக தெரிவித்தார். விமானத்திலிருந்த ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக தெரியவருகிறது எனவும் நஜிப் ரசாக் தெரிவித்தார் .

மார்ச் 18, 2014

தன்னுடைய ரேடார் ஒரு விமானத்தைக் கண்டுள்ளதாகவும், அவ்விமானம் காணாமல்போன மலேசிய விமானமாக இருக்கக்கூடும் எனவும் தாய்லாந்து இராணுவம் தெரிவித்தது.

மார்ச் 02 2016

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் கடற்கரையில் போயிங் வகை விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது இனிமேல்தான் தெளிவாகும்..

விமானத்தின் விவரங்கள்

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 
9M-MRO விமானத்தின் கட்டுப்பாட்டு அறை (2004ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒளிப்படம்)
  • வகை: போயிங் 777 – 2H6ER
  • வரிசை எண்: 28420
  • பதிவு எண்: 9M-MRO
  • தயாரிப்பு விவரம்: போயிங் 777 வகையில் 404ஆவது விமானம்
  • முதல்முறையாக பறந்த நாள்: 14 மே 2002
  • மலேசிய ஏர்லைன்சுக்கு விற்கப்பட்ட நாள்: 31 மே 2002
  • என்ஜின்கள்: இரண்டு Rolls-Royce Trent 892
  • விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282 (35 பிசினசு, 247 எகோனோமி)

முடிவு

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 
mini

இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்த அந்த நாட்டின் உளவுத்துறை முற்றுப்பெறாத பிங் (partial ping) தகவலை காரணம் காட்டியுள்ளது. இந்த பிங்கிங் என்பது விமானத்திற்கும் செயற்கைக்கோளுக்குமான தொடர்பு பிரதிபலிப்பு ஆகும். விமானத்தின் எந்த ஒரு பகுதியையும் கண்டுபிடிக்காத நிலையில் அதன் கருப்புப்பெட்டியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி இதுவரை இந்த விமானம் பற்றிய தகவல் எதுவுமே கிடைக்கவில்லை.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 காணாமல் போன விவரங்கள்மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 தேடுதல் பணிகள்மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள்மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 புலனாய்வுமலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 விமானத்தின் விவரங்கள்மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 முடிவுமலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மேற்கோள்கள்மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 வெளியிணைப்புகள்மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்போயிங் 777மலேசியா எயர்லைன்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதலுக்கு மரியாதை (திரைப்படம்)பெரியபுராணம்பள்ளர்பீப்பாய்உலர் பனிக்கட்டி108 வைணவத் திருத்தலங்கள்பெருமாள் திருமொழிகருத்தரிப்புதிருவிளையாடல் புராணம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வெ. இராமலிங்கம் பிள்ளைரவிசீனிவாசன் சாய் கிஷோர்கில்லி (திரைப்படம்)தில்லி சுல்தானகம்பெண்களின் உரிமைகள்பிரேமலுஆந்திரப் பிரதேசம்பல்லாங்குழிதாஜ் மகால்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்நுரையீரல் அழற்சிபிளாக் தண்டர் (பூங்கா)மு. க. ஸ்டாலின்இராமலிங்க அடிகள்ராஜேஸ் தாஸ்நிணநீர்க்கணுஇந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திணைநயன்தாராஉரிச்சொல்பருவ காலம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்தொல்காப்பியம்தைப்பொங்கல்தேவதாசி முறைகிராம ஊராட்சிஇலக்கியம்அரண்மனை (திரைப்படம்)தமிழில் கணிதச் சொற்கள்அமேசான்.காம்நேர்பாலீர்ப்பு பெண்பனைசித்த மருத்துவம்குருதி வகைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தமிழில் சிற்றிலக்கியங்கள்சிவபெருமானின் பெயர் பட்டியல்சப்ஜா விதைஉயிர்மெய் எழுத்துகள்இந்திய நாடாளுமன்றம்கா. ந. அண்ணாதுரைகொல்லி மலைசாகித்திய அகாதமி விருதுகண் (உடல் உறுப்பு)வினோஜ் பி. செல்வம்வெ. இறையன்புபெயர்ச்சொல்வானிலைமியா காலிஃபாமனித உரிமைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மென்பொருள்இயோசிநாடிசொல்பல்லவர்மூவேந்தர்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மனோன்மணீயம்வாசுகி (பாம்பு)தமிழக வரலாறுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அங்குலம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கண்ணதாசன்சூரை🡆 More