நிலக்கரி

நிலக்கரி (Coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும்.

இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப் படுகிறது. பெரும்பாலும் கரி மற்றும் ஹைடிரோகார்பன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட்ட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். தொழில் புரட்சியுடன் தொடர்புடைய நிலக்கரி ஒரு முக்கியமான எரிபொருளாகும். நிலக்கரி ஓர் அடையற் பாறை வகையைச் சேர்ந்ததாகும். அது வழமையாக ஒரு சதுப்பு நில சூழலில் பாதுகாக்கப்பட்டு திரட்சியடைந்த தாவர உயிர்சுவடுகளினால் உருவாகியதாக காணப்படுகின்றது. இயற்கை வாயு, கனிய எண்ணெய் போன்றவற்றுடன் குறிப்பிடப்படும் முக்கியமான தொல்படிவ எரிபொருட்களுள் ஒன்றாகும். நிலக்கரி மின்உற்பத்தி போன்ற பல்வேறு பரந்த பயன்பாடுடையது. நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1983 லிருந்து உலக நிலக்கரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

நிலக்கரி
 —  படிவுப் பாறை  —
நிலக்கரி Image
ஆந்திரசைட்டு (Anthracite) வகை நிலக்கரித் துண்டு
கலவை
முதன்மை கார்பன்
இரண்டாம் நிலை சல்ஃபர்,
ஹைட்ரஜன்,
ஆக்ஸிஜன்,
நைட்ரஜன்

நிலக்கரி வணிகம்

நிலக்கரி பூமியிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள், அல்லது நிலத்தடி குழாய் சுரங்கங்கள் அல்லது திறந்த குழிச் சுரங்கங்கள் மூலம் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. 1983 லிருந்து உலகின் நிலக்கரி தயாரிப்பாளர்களுள் சீனா முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது. உலகின் 7,695 மில்லியன் டன்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 49.5% அதாவது 3,250 மில்லியன் டன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் ஐக்கிய அமெரிக்கா (993 மில்லியன் டன்கள்), இந்தியா (589 மில்லியன் டன்கள்), ஐரோப்பிய ஒன்றியம் (576 மில்லியன் டன்கள்), ஆஸ்திரேலியா (416 மில்லியன் டன்கள்) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன. அதிகளவு நிலக்கரி ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா திகழ்கிறது. 2010 இல் இந்நாடு 328 மில்லியன் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்தது. இது உலக நிலக்கரி ஏற்றுமதியில் 27.1 விழுக்காடு ஆகும். அடுத்த இடத்தில் இந்தோனேசியா 316 டன்களை ஏற்றுமதி செய்து இரண்டாமிடத்திலுள்ளது இதன் ஏற்றுமதி அளவு உலக நிலக்கரி ஏற்றுமதியில் 26.1 விழுக்காடு ஆகும். நிலக்கரியை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடுகளாக 207 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து ஜப்பான் முதலிடத்திலும் (உலக அளவில் 17.5%) சீனா 195 மில்லியன் டன்கள்(உலக அளவில் 16.6%) நிலக்கரியையும் தென்கொரியா 126 மில்லியன் டன்கள் (10.7%) நிலக்கரியையும் இறக்குமதி செய்கின்றன.

தோற்றம்

நிலக்கரி 
நிலக்கரியின் வேதிக் கட்டமைப்பின் எடுத்துக்காட்டு

மிகப்பன்னெடுங்காலத்திற்கு முன்பு பூமியில் அடர்ந்த காடுகளும் ஈரப்பதம் மிகுந்த சதுப்புநிலங்களும் காணப்பட்டன. இயற்கையாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்காடுகள் மண்ணில் புதையுண்டன. மேன்மேலும் மண்ணானது இப்பகுதியை மூடியது. இச்செயல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. புவியின் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் இவை அழுத்தத்திற்கு உள்ளாயின. எனவே புதையுண்ட தாவரங்கள் படிவுகளாக மாறி நிலக்கரியாக மெதுவாக உருமாறத்தொடங்கின. நிலக்கரியில் கார்பன் பெருமளவு அடங்கியுள்ளது. இவ்வாறு தாவஙக்ள் நிலக்கரியாக மாறுவது கரிமமாற்றம் என்றழைக்கப்படுகிறது.

நிலக்கரியின் வகைகள்

நிலக்கரி 
நோவா ஸ்கோசியாவின் அக்கோனி முனையிலுள்ள நிலக்கரிப் படுகை கடலோரத்தில் வெளிப்பட்டுருத்தல்

நிலக்கரி பூமியில் பல வகைகளில் கிடைக்கிறது.நிலகக்ரியை வகைப்படுத்தலில் நாடுகளுக்கிடையே வேறுபாடு காணப்படுகிரது

  1. முற்றா நிலக்கரி.
  2. பழுப்பு நிலக்கரி.
  3. அந்திரசைட் நிலக்கரி
  4. கிராபைட்
நிலக்கரி 
நிலக்கரியின் வேதியியல் கட்டமைப்பு உதாரணம்

உலகளாவிய நிலக்கரி இருப்பு

2008ஆம் ஆண்டு இறுதியில் மெய்பிக்கப்பட்ட அகழ்ந்தெடுக்கத்தக்க நிலக்கரி இருப்பு (மில்லியன் டன்கள் (டெராகிராம்கள்))
நாடு அந்தராசைட்டு & அசுபால்ட்டு தரம்குறை புகைமலி நிலக்கரி லிக்னைட்டு மொத்தம் மொத்த உலக இருப்பில் விழுக்காடு
நிலக்கரி  United States 108,501 98,618 30,176 237,295 22.6
நிலக்கரி  Russia 49,088 97,472 10,450 157,010 14.4
நிலக்கரி  China 62,200 33,700 18,600 114,500 12.6
நிலக்கரி  Australia 37,100 2,100 37,200 76,400 8.9
நிலக்கரி  India 56,100 0 4,500 60,600 7.0
நிலக்கரி  Germany 99 0 40,600 40,699 4.7
நிலக்கரி  Ukraine 15,351 16,577 1,945 33,873 3.9
நிலக்கரி  Kazakhstan 21,500 0 12,100 33,600 3.9
நிலக்கரி  South Africa 30,156 0 0 30,156 3.5
நிலக்கரி  Serbia 9 361 13,400 13,770 1.6
நிலக்கரி  Colombia 6,366 380 0 6,746 0.8
நிலக்கரி  Canada 3,474 872 2,236 6,528 0.8
நிலக்கரி  Poland 4,338 0 1,371 5,709 0.7
நிலக்கரி  Indonesia 1,520 2,904 1,105 5,529 0.6
நிலக்கரி  Brazil 0 4,559 0 4,559 0.5
நிலக்கரி  Greece 0 0 3,020 3,020 0.4
நிலக்கரி  Bosnia and Herzegovina 484 0 2,369 2,853 0.3
நிலக்கரி  Mongolia 1,170 0 1,350 2,520 0.3
நிலக்கரி  Bulgaria 2 190 2,174 2,366 0.3
நிலக்கரி  Pakistan 0 166 1,904 2,070 0.3
நிலக்கரி  Turkey 529 0 1,814 2,343 0.3
நிலக்கரி  Uzbekistan 47 0 1,853 1,900 0.2
நிலக்கரி  Hungary 13 439 1,208 1,660 0.2
நிலக்கரி  Thailand 0 0 1,239 1,239 0.1
நிலக்கரி  Mexico 860 300 51 1,211 0.1
நிலக்கரி  Iran 1,203 0 0 1,203 0.1
நிலக்கரி  Czech Republic 192 0 908 1,100 0.1
நிலக்கரி  Kyrgyzstan 0 0 812 812 0.1
நிலக்கரி  Albania 0 0 794 794 0.1
நிலக்கரி  North Korea 300 300 0 600 0.1
நிலக்கரி  New Zealand 33 205 333-7,000 571–15,000 0.1
நிலக்கரி  Spain 200 300 30 530 0.1
நிலக்கரி  Laos 4 0 499 503 0.1
நிலக்கரி  Zimbabwe 502 0 0 502 0.1
நிலக்கரி  Argentina 0 0 500 500 0.1
மற்ற நாடுகள் 3,421 1,346 846 5,613 0.7
மொத்த உலக இருப்பு 404,762 260,789 195,387 860,938 100

பெருமளவு நிலக்கரி உற்பத்தியாளர்கள்

இங்கு இருப்புக் காலம் என்பது அட்டவணையிலுள்ள நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவையும் மெய்பிக்கப்பட்ட இருப்பையும் கொண்டு மதிப்பிடப்பட்டதாகும். எதிர்காலத்தில் உற்பத்தி அளவு கூடுதலாவதையோ அல்லது தற்கால உற்பத்தி மாற்றங்களையோ கருத்தில் கொள்ளவில்லை. ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களுக்கு கூடுதலான உற்பத்தியுள்ள நாடுகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. ஒப்பீட்டிற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகளும் தரப்பட்டுள்ளன. எண்ணெய்க்கு இணையான டன்களில் மாற்றப்பட்ட தரவுகளைக் கொண்டு நாடுகளின் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு வாரியாகவும் ஆண்டு வாரியாகவும் நிலக்கரி உற்பத்தி (மில்லியன் டன்கள்)
நாடு 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 பங்கு இருப்புக் காலம் (ஆண்டுகள்)
நிலக்கரி  China 1834.9 2122.6 2349.5 2528.6 2691.6 2802.0 2973.0 3235.0 3520.0 49.5% 35
நிலக்கரி  United States 972.3 1008.9 1026.5 1054.8 1040.2 1063.0 975.2 983.7 992.8 14.1% 239
நிலக்கரி  India 375.4 407.7 428.4 449.2 478.4 515.9 556.0 573.8 588.5 5.6% 103
நிலக்கரி  European Union 637.2 627.6 607.4 595.1 592.3 563.6 538.4 535.7 576.1 4.2% 97
நிலக்கரி  Australia 350.4 364.3 375.4 382.2 392.7 399.2 413.2 424.0 415.5 5.8% 184
நிலக்கரி  Russia 276.7 281.7 298.3 309.9 313.5 328.6 301.3 321.6 333.5 4.0% 471
நிலக்கரி  Indonesia 114.3 132.4 152.7 193.8 216.9 240.2 256.2 275.2 324.9 5.1% 17
நிலக்கரி  South Africa 237.9 243.4 244.4 244.8 247.7 252.6 250.6 254.3 255.1 3.6% 118
நிலக்கரி  Germany 204.9 207.8 202.8 197.1 201.9 192.4 183.7 182.3 188.6 1.1% 216
நிலக்கரி  Poland 163.8 162.4 159.5 156.1 145.9 144.0 135.2 133.2 139.2 1.4% 41
நிலக்கரி  Kazakhstan 84.9 86.9 86.6 96.2 97.8 111.1 100.9 110.9 115.9 1.5% 290
உலக மொத்தம் 5,301.3 5,716.0 6,035.3 6,342.0 6,573.3 6,795.0 6,880.8 7,254.6 7,695.4 100% 112

பெருமளவு நிலக்கரி நுகர்வாளர்கள்

குறிப்பிட்ட மில்லியன் டன்களை விட கூடுதலாக ஆண்டு நுகர்வுள்ள நாடுகள் காட்டப்பட்டுள்ளன.

நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி நுகர்வு (மில்லியன் அமெரிக்க டன்கள்)
நாடு 2008 2009 2010 2011 பங்கு
நிலக்கரி  China 2,966 3,188 3,695 4,053 50.7%
நிலக்கரி  United States 1,121 997 1,048 1,003 12.5%
நிலக்கரி  India 641 705 722 788 9.9%
நிலக்கரி  Russia 250 204 256 262 3.3%
நிலக்கரி  Germany 268 248 256 256 3.3%
நிலக்கரி  South Africa 215 204 206 210 2.6%
நிலக்கரி  Japan 204 181 206 202 2.5%
நிலக்கரி  Poland 149 151 149 162 2.0%
உலக மொத்தம் 7,327 7,318 7,994 பொருந்தாது 100%

பெருமளவு நிலக்கரி ஏற்றுமதியாளர்கள்

ஆண்டுக்கு 10 மில்லியன் டன்களுக்கு கூடுதலாக மொத்த ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நிகர ஏற்றுமதியாளர்கள் எனக்கொண்டாலும் ஆஸ்திரேலியா (328.1 மில்லியன் டன்கள்), இந்தோனேசியா (316.2) மற்றும் உருசியா (100.2) பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகும்.

நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி ஏற்றுமதி (மில்லியன் அமெரிக்க டன்கள்)
நாடு 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 பங்கு
நிலக்கரி  Australia 238.1 247.6 255.0 255.0 268.5 278.0 288.5 328.1 27.1%
நிலக்கரி  Indonesia 107.8 131.4 142.0 192.2 221.9 228.2 261.4 316.2 26.1%
நிலக்கரி  Russia 41.0 55.7 98.6 103.4 112.2 115.4 130.9 122.1 10.1%
நிலக்கரி  United States 43.0 48.0 51.7 51.2 60.6 83.5 60.4 83.2 6.9%
நிலக்கரி  South Africa 78.7 74.9 78.8 75.8 72.6 68.2 73.8 76.7 6.3%
நிலக்கரி  Colombia 50.4 56.4 59.2 68.3 74.5 74.7 75.7 76.4 6.3%
நிலக்கரி  Canada 27.7 28.8 31.2 31.2 33.4 36.5 31.9 36.9 3.0%
நிலக்கரி  Kazakhstan 30.3 27.4 28.3 30.5 32.8 47.6 33.0 36.3 3.0%
நிலக்கரி  Vietnam 6.9 11.7 19.8 23.5 35.1 21.3 28.2 24.7 2.0%
நிலக்கரி  China 103.4 95.5 93.1 85.6 75.4 68.8 25.2 22.7 1.9%
நிலக்கரி  Mongolia 0.5 1.7 2.3 2.5 3.4 4.4 7.7 18.3 1.5%
நிலக்கரி  Poland 28.0 27.5 26.5 25.4 20.1 16.1 14.6 18.1 1.5%
மொத்தம் 713.9 764.0 936.0 1,000.6 1,073.4 1,087.3 1,090.8 1,212.8 100%

பெருமளவு நிலக்கரி இறக்குமதியாளர்கள்

20 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக நிலக்கரியை மொத்த இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல். நிகர இறக்குமதி எனக்கொண்டாலும் பெருமளவு இறக்குமதியாளர்களாக ஜப்பான் (206.0 மில்லியன் டன்கள்), சீன மக்கள் குடியரசு (172.4) மற்றும் தென் கொரியா (125.8) உள்ளனர்.

நாடுவாரியாகவும் ஆண்டுவாரியாகவும் நிலக்கரி இறக்குமதி (மில்லியன் அமெரிக்க டன்கள்)
நாடு 2006 2007 2008 2009 2010 பங்கு
நிலக்கரி  Japan 199.7 209.0 206.0 182.1 206.7 17.5%
நிலக்கரி  China 42.0 56.2 44.5 151.9 195.1 16.6%
நிலக்கரி  South Korea 84.1 94.1 107.1 109.9 125.8 10.7%
நிலக்கரி  India 52.7 29.6 70.9 76.7 101.6 8.6%
நிலக்கரி  Taiwan 69.1 72.5 70.9 64.6 71.1 6.0%
நிலக்கரி  Germany 50.6 56.2 55.7 45.9 55.1 4.7%
நிலக்கரி  Turkey 22.9 25.8 21.7 22.7 30.0 2.5%
நிலக்கரி  United Kingdom 56.8 48.9 49.2 42.2 29.3 2.5%
நிலக்கரி  Italy 27.9 28.0 27.9 20.9 23.7 1.9%
நிலக்கரி  Netherlands 25.7 29.3 23.5 22.1 22.8 1.9%
நிலக்கரி  Russia 28.8 26.3 34.6 26.8 21.8 1.9%
நிலக்கரி  France 24.1 22.1 24.9 18.3 20.8 1.8%
நிலக்கரி  United States 40.3 38.8 37.8 23.1 20.6 1.8%
மொத்தம் 991.8 1,056.5 1,063.2 1,039.8 1,178.1 100%

மேற்கோள்கள்

Tags:

நிலக்கரி வணிகம்நிலக்கரி தோற்றம்நிலக்கரி யின் வகைகள்நிலக்கரி மேற்கோள்கள்நிலக்கரிஎரிபொருள்கந்தகம்கரிதொல்லுயிர் எச்சங்கள்தொழில் புரட்சிஹைடிரோகார்பன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாற்கோதுமைகஜினி (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்மொழிஅங்குலம்இன்ஸ்ட்டாகிராம்பனிக்குட நீர்ஆண்டு வட்டம் அட்டவணைகாடுவெட்டி குருபுணர்ச்சி (இலக்கணம்)மாமல்லபுரம்ஆதலால் காதல் செய்வீர்திருவள்ளுவர் ஆண்டுஅபிராமி பட்டர்மதுரைசோல்பரி அரசியல் யாப்புபுறாஇராமர்நீர்ப்பறவை (திரைப்படம்)சூர்யா (நடிகர்)நெல்சமுத்திரக்கனிஇந்து சமய அறநிலையத் துறைஉதகமண்டலம்முதற் பக்கம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சாகித்திய அகாதமி விருதுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வில்லிபாரதம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)தன்னுடல் தாக்குநோய்அனுமன்இடமகல் கருப்பை அகப்படலம்சிற்பி பாலசுப்ரமணியம்சிவவாக்கியர்பகிர்வுஆந்தைபகத் பாசில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கரிகால் சோழன்தமிழ் இலக்கணம்மோகன்தாசு கரம்சந்த் காந்திவீரப்பன்ஸ்ரீலீலாஇடிமழைநிலாஆசிரியர்ராஜா ராணி (1956 திரைப்படம்)நிலக்கடலைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்எட்டுத்தொகைதமிழ்காதல் தேசம்இந்தியக் குடியரசுத் தலைவர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ் படம் 2 (திரைப்படம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)பத்துப்பாட்டுஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைநெசவுத் தொழில்நுட்பம்தமிழர் நிலத்திணைகள்சவ்வரிசிபாசிப் பயறுபெண்களின் உரிமைகள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்நவதானியம்நாயன்மார்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மரம்அப்துல் ரகுமான்முலாம் பழம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்பாரதிதாசன்சப்ஜா விதைர. பிரக்ஞானந்தாதிதி, பஞ்சாங்கம்🡆 More