தலைக்காலி

தலைக்காலிகள் (Cephalopoda) என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த வகுப்பு ஆகும்.

இதில் கணவாய், எண்காலி மற்றும் கடலோடி நத்தைகள் ஆகியவை அடங்குகின்றன. இவை கடலில் மட்டும் வாழுகின்ற இருபக்கச் சமச்சீரான மெல்லுடலிகளாகும். இவற்றின் தசைப்பிடிப்பான பாதம் கால்களாகவும்/ கைகளாகவும், பரிசக் கொம்புகளாகவும், ஓட்டுக் குழாய்களாகவும் திரிபடைந்துள்ளது. இவற்றில் ஒப்பீட்டளவில் பெரிய தெளிவான தலை உள்ளது. இவற்றின் தலையிலிருந்து கால்கள் வெளிப்படுவது போல் உள்ளதால் இவை தலைக்காலிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் உடலில் உள்ள மைப்பையில் உள்ள மையைக் கக்குவதன் மூலம் எதிரிகளிடமிருந்துத் தப்பித்துக் கொள்ளும் பொறிமுறையைக் கையாளுகின்றன. தலைக்காலிகளில் இரு உப வகுப்புக்கள் உள்ளன. Coleoidea என்ற உபவகுப்பில் உள்ளவற்றில் புற ஓடு இருப்பதில்லை. எனினும் அகவன்கூடு காணப்படலாம் அல்லது அதுவும் இல்லாதிருக்கலாம். இவ்வுப வகுப்பினுள் கணவாய், சாக்குக் கணவாய் என்பன அடங்குகின்றன. மற்றைய உப வகுப்பு நாட்டிலாய்டியா ஆகும். இவ்வுப வகுப்பைச் சார்ந்த உயிரினங்களில் புற ஓடு காணப்படும். உதாரண அங்கத்தவர்: நாட்டிலசு. இதுவரை 800 உயிர்வாழும் தலைக்காலி இனங்கள் அறியப்பட்டுள்ளன.

Cephalopods
புதைப்படிவ காலம்:Late Cambrian – Present
PreЄ
Pg
N
Expression error: Unexpected < operator.
தலைக்காலி
Bigfin reef squid (Sepioteuthis lessoniana)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
Mollusca
வகுப்பு:
{{{1}}}

Cuvier, 1797
வகுப்பும் வரிசைகளும்

வாழிடம்

தலைக்காலிகளால் நன்னீரில் உயிர் வாழ முடியாது. இவை கடலின் மேற்பரப்பிலிருந்து கடற்படுக்கை வரை அனைத்து இடங்களிலும் பரம்பிக் காணப்படுகின்றன. உதாரணமாக சாக்குக் கணவாய் கடலடியில் வாழும் ஓர் விலங்காக உள்ளது. அதிகளவான இனங்கள் மத்திய கோட்டை அண்மித்த கடற்பரப்பிலேயே வாழ்கின்றன. துருவக் கடற்பரப்புகளில் இவற்றின் இனப்பல்வகைமை குறைவாக உள்ளது.

உடலமைப்பு

ஏனைய மெல்லுடலிகளைக் காட்டிலும் தலைக்காலிகளின் உடலமைப்பு அதிக விருத்தியைக் காட்டுகின்றது.

நரம்புத் தொகுதியும் புலனங்கங்களும்

முள்ளந்தண்டற்ற விலங்குகளுள் மிகவும் சிக்கலான நரம்புத் தொகுதியைத் தலைக்காலிகள் கொண்டுள்ளன. தலைக்காலிகளே முள்ளந்தண்டற்றவற்றுள் மிகப்பெரிய மூளையைக் கொண்டுள்ளதோடு அதிக நுண்ணறிவையும் பெற்றுள்ளன. மூளை கசியிழையத்தாலான மண்டையோட்டினுள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

தலைக்காலி வாழிடம்தலைக்காலி உடலமைப்புதலைக்காலி மேற்கோள்கள்தலைக்காலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பயில்வான் ரங்கநாதன்பாலை (திணை)நயினார் நாகேந்திரன்சாத்துகுடிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்வெட்சித் திணைமரவள்ளிவேலுப்பிள்ளை பிரபாகரன்திருவிழாமுருகன்திருவிளையாடல் புராணம்உலக மலேரியா நாள்வண்ணார்சைவத் திருமுறைகள்சேரர்நான்மணிக்கடிகைதமிழ் மன்னர்களின் பட்டியல்சூல்பை நீர்க்கட்டிமீனம்யுகம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பெயர்குண்டலகேசிதமிழ்நாடுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்மாதவிடாய்கேரளம்இந்தியாவில் இட ஒதுக்கீடுகிராம சபைக் கூட்டம்நாட்டு நலப்பணித் திட்டம்இந்தியக் குடியரசுத் தலைவர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தீபிகா பள்ளிக்கல்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சுற்றுச்சூழல் மாசுபாடுவானிலைசித்தர்தேவேந்திரகுல வேளாளர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்நாயக்கர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005உமறுப் புலவர்வே. செந்தில்பாலாஜிநாளந்தா பல்கலைக்கழகம்மதுரை நாயக்கர்புற்றுநோய்கல்விஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இந்திரா காந்திஇடிமழைசிவன்சோமசுந்தரப் புலவர்பரணி (இலக்கியம்)ஹரி (இயக்குநர்)அளபெடைஅவிட்டம் (பஞ்சாங்கம்)சதுரங்க விதிமுறைகள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ர. பிரக்ஞானந்தாசேலம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திராவிடர்திக்கற்ற பார்வதிஅம்பேத்கர்கூத்தாண்டவர் திருவிழாபதினெண் கீழ்க்கணக்குகலிப்பாஇந்திய இரயில்வேஒற்றைத் தலைவலிவிசயகாந்துதமிழ்த்தாய் வாழ்த்துசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்நாடகம்சூரரைப் போற்று (திரைப்படம்)மருது பாண்டியர்கருப்பசாமிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்நிதிச் சேவைகள்🡆 More