நிகழ்வுகள்
- 64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
- 362 – ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார்.
- 1290 – பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார்.
- 1389 – நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது.
- 1391 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார்.
- 1806 – மால்ட்டா, பிர்கு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1812 – ஆங்கிலோ-உருசிய, மற்றும் ஆங்கிலோ-சுவீடியப் போர்கள் முடிவுக்கு வந்தன.
- 1841 – இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார்.
- 1870 – முதலாவது வத்திக்கான் பேரவை திருத்தந்தையின் தவறா வரக் கோட்பாட்டிற்கு ஆணையிட்டது.
- 1872 – ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் நாடாளுமன்ற, உள்ளூராட்சித் தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
- 1925 – இட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது
- 1942 – செருமனி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 வானூர்தியை சோதனைக்காகப் பறக்கவிட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில், யுகொசுலாவியப் போர்க் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து சப்பானியப் பிரதமர் இதெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
- 1966 – மனித விண்வெளிப்பறப்பு: நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.
- 1968 – இன்டெல் நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.
- 1976 – 1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் முதற்தடவையாக சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
- 1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
- 1982 – குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1984 – கலிபோர்னியாவில் மெக்டொனால்ட்சு உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர்.
- 1994 – அர்கெந்தீனாவில் புவெனசு ஐரிசு நகரில் யூத சமூக மையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர், 300 பேர் காயமடைந்தனர்.
- 1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.
- 1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
- 1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1200 படையினர் கொல்லப்பட்டனர்.
- 1997 – மும்பையில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
- 2007 – மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
- 2012 – பல்காரியாவில் இசுரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.
- 2013 – அமெரிக்காவின் டிட்ராயிட் மாநில அரசு, $20 பில்லியன் கடனுடன், திவாலா நிலை யை அடைந்தது.
பிறப்புகள்
- 1852 – பால் கேரஸ், செருமானிய அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1919)
- 1853 – என்ட்ரிக் லொரன்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பிலாளர் (இ. 1928)
- 1893 – ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில், திருவிதாங்கூர் விடுதலை இயக்கப் போராளி (இ. 1957)
- 1861 – கடம்பினி கங்கூலி, இந்தியப் பெண் மருத்துவர் (இ. 1923)
- 1909 – இரா. கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 1997)
- 1918 – நெல்சன் மண்டேலா, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் (இ. 2013)
- 1919 – ஜெயச்சாமராஜா உடையார், மைசூர் சமஸ்தானத்தின் 25வது, கடைசி அரசர் (இ. 1974)
- 1926 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (இ. 2015)
- 1927 – மெகுதி அசன், பாக்கித்தானியப் பாடகர் (இ. 2012)
- 1935 – செயந்திர சரசுவதி, இந்திய ஆன்மிகத் தலைவர், 69வது சங்கராச்சாரியார்
- 1950 – றிச்சர்ட் பிரான்சன், ஆங்கிலேயத் தொழிலதிபர்
- 1950 – யக் லேற்ரன், கனடா அரசியல்வாதி (இ. 2011)
- 1964 – வெண்டி வில்லியம்சு, அமெரிக்க ஊடகவியலாளர்
- 1967 – வின் டீசல், அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1971 – சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)
- 1971 – சுக்விந்தர் சிங், இந்தியப் பாடகர், நடிகர்
- 1975 – மாதங்கி அருள்பிரகாசம், ஆங்கிலேய--ஈழ ராப் இசைக் கலைஞர்
- 1978 – ஜோ சாங்-வூக், தென்கொரிய நடிகர்
- 1980 – கிறிஸ்டன் பெல், அமெரிக்க நடிகை, பாடகி
- 1982 – பிரியங்கா சோப்ரா, இந்திய நடிகை
- 1985 – சாஸ் கிராஃபோர்ட், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
- 1610 – கரவாஜியோ, இத்தாலிய ஓவியர் (பி. 1573)
- 1721 – ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (பி. 1684)
- 1817 – ஜேன் ஆஸ்டின், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1775)
- 1931 – ஆஸ்கர் மின்கோவஸ்கி, செருமானிய நோயியலாளர், வானவியலாளர் (பி. 1858)
- 1974 – எஸ். வி. ரங்கராவ், தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் (பி: 1918)
- 1982 – உரோமன் யாக்கோபுசன், உருசிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1896)
- 2005 – சித்திரசேன, இலங்கை நடனக் கலைஞர் (பி. 1921)
- 2012 – ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர் (பி. 1942)
- 2013 – வாலி, தமிழகக் கவிஞர் (பி. 1931)
- 2013 – செ. பெருமாள், தமிழக அரசியல்வாதி (பி. 1950)
- 2013 – சமர் முகர்ஜி, இந்திய மார்க்சிய அரசியல்வாதி (பி. 1913)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article சூலை 18, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.