சிற்றெழால்

About 10, see text

சிற்றெழால்
சிற்றெழால்
Adult male Falco tinnunculus tinnunculus
சிற்றெழால்
Female(♀) Falco tinnunculus tinnunculus from Tal Chhapar Sanctuary, Churu, இராசத்தான், இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
குடும்பம்:
Falconidae
பேரினம்:
இனம்:
F. tinnunculus
இருசொற் பெயரீடு
Falco tinnunculus
L, 1758
துணையினம்

சிற்றெழால்
Global range of F. t. tinnunculus     Year-Round Range     Summer Range     Winter Range
வேறு பெயர்கள்

Falco rupicolus Daudin, 1800 (but see text)
Falco tinnunculus interstictus (lapsus)

சிற்றெழால் (Common kestrel, Falco tinnunculus) என்பது வல்லூறு குடும்ப கரைவணை வகைப் பறவையாகும். கழுகு, வல்லூறு சிற்றெழால் ஆகிய பறவையினங்கள் பிற விலங்குகளை தாக்கிக் கொன்றுண்ணும் பறவைகள். இதனால் இவைகளுக்கு கொன்றுண்ணிப் பறவைகள் என்று பெயர். தமிழ் நாட்டில் வாழும் சிற்றெழால் ஆண் சுமார் 150 -160 கிராம் இருக்கும். பெண் சுமார் 180 -190 கிராம் எடை இருக்கும் 34-38 செ.மீ நீளம் இருக்கும் (சுமார் ஒரு புறாவின் அளவினதாகும்). இறக்கைகள் 70-80 செ.மீ இருக்கும். சிற்றெழால் காடை முதலிய பறவைகளையும், எலி போன்ற சிறு பாலூட்டிகளையும், தவளை, வெட்டுக்கிளி போன்றவற்றையும் தின்னும். உயிரின வகைப்பாட்டாளர்கள் 'ப்பால்க்கோ டின்னுக்யுலசு (Falco Tinnuculus) என்று அழைப்பர்.

தமிழ் இலக்கியத்தில் திணைமொழி ஐம்பது பாடல் 51ல்

      சிறுபுள் புறவொடு சிற்றெழால் சீறு
      நெறியரு நீள்சுரத்து

சிற்றெழாலை மலையாள மொழியில் சிறு புள்ளு என்று அழைக்கிறார்கள்.

இந்த இனம் பெரிய வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவில் பரவலாக உள்ளது, அதே போல் எப்போதாவது வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை அடைகிறது.

விளக்கம்

சிற்றெழால் தலைமுதல் வால்வரை 32–39 cm (12+1215+12 அங்) நீளம் இருக்கும். இறக்கை விரிந்த நிலையில் 65–82 cm (25+1232+12 அங்) அகலம் இருக்கும். பெண் பறவைகள் ஆண்பறவைகளை விட அளவில் பெரியவை . வயதுவந்த ஆண் பறவையின் எடை 136–252 g (4+348+78 oz), சராசரியாக சுமார் 155 g (5+12 oz) ஆகும். வளர்ந்த எண் பறவையின் எடை 154–314 g (5+3811+18 oz), சராசரியாக சுமார் 184 g (6+12 oz) ஆகும். மற்ற வேட்டையாடி பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை சிறியவை. ஆனால் பெரும்பாலான பாடும் பறவைகளை விட பெரியவை. இவை மற்ற வல்லூறு இனங்களைப் போலவே, நீண்ட இறக்கைகள், தனித்துவமான நீண்ட வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இப்பறவைகளின் அலகு சிலேட் நீலநிறத்திலும், விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், கால்கள் செம்மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இறக்கைகள் கூர்மையானவையாகவும், வட்டமான வாலும் கொண்டவை. பால் ஈருருமை கொண்ட பறவை இது. ஆண் பறவையின் தலை, உச்சி, பின்கழுத்து, கழுத்தின் பக்கங்கள் ஆகியவை கருஞ்சாம்பல் நிறமாகக் கருங்கோடுகளுடன் காணப்படும். முதுகு, செங்கல் சிவப்பாக நீள் வட்டமான கரும் புள்ளிகளோடு காணப்படும். கீழ் முதுகு, வால் மேல் இறகுகள் ஆகியவை கருஞ்சாம்பல் நிறம். வால் முனை வெண்மையாகவும் அதற்கு மேல் அகன்ற குறுக்குக் கரும்பட்டையும் காணப்படும். அடிப்பகுதி பகுதி வெளிர் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும். மார்பில் கருங்கோடுகளும் வயிற்றில் கரும் புள்ளிகளும் காணப்படும்.

பெண் பறவையின் உச்சி, கழுத்து ஆகியவை வெளிர் மஞ்சள் சிவப்பாக இருக்கும். முதுகில் சில வரைகள் காணப்படும். பின் முதுகும் வாலும் நீர்த்த கருஞ்சாம்பல் நிறத்தில் காணப்படும். மார்பும், வயிறும் ஆணை பறவையை விட நிறங்குன்றி கருங்கோடுகளும் புள்ளிகளும் அழுத்தமாக காணப்படும்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

சிற்றெழால் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Falco tinnunculus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
சிற்றெழால் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருமுட்டை வெளிப்பாடுபஞ்சதந்திரம் (திரைப்படம்)திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஇந்திய ரூபாய்மதுரைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்குமரி அனந்தன்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇலங்கைமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமலக்குகள்தங்க தமிழ்ச்செல்வன்முக்கூடற் பள்ளுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திருப்பதிசினைப்பை நோய்க்குறிகொன்றைபாண்டியர்இந்தியாவின் பொருளாதாரம்துரைமுருகன்வேதாத்திரி மகரிசிஎல். முருகன்லோகேஷ் கனகராஜ்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சிவாஜி (பேரரசர்)வியாழன் (கோள்)சுயமரியாதை இயக்கம்வளையாபதிசித்தர்கள் பட்டியல்மருது பாண்டியர்விரை வீக்கம்நாம் தமிழர் கட்சிதிரிகடுகம்இயற்கை வளம்நுரையீரல்ஏலாதிநேர்பாலீர்ப்பு பெண்கம்பராமாயணம்செண்பகராமன் பிள்ளைகனிமொழி கருணாநிதிஉத்தரகோசமங்கைவிண்ணைத்தாண்டி வருவாயாசீர் (யாப்பிலக்கணம்)முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்நாடாளுமன்றம்இங்கிலாந்துபாரத ஸ்டேட் வங்கிஹஜ்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஆடு ஜீவிதம்விஷ்ணுதொல். திருமாவளவன்கணியன் பூங்குன்றனார்ராதிகா சரத்குமார்நெடுநல்வாடை (திரைப்படம்)தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகரிகால் சோழன்சுக்ராச்சாரியார்சங்கம் மருவிய காலம்பிரேமலுவயாகராபகவத் கீதைகண்ணாடி விரியன்இந்திய உச்ச நீதிமன்றம்தமிழ்த்தாய் வாழ்த்துஅபினிநஞ்சுக்கொடி தகர்வுசொல்லாட்சிக் கலைஅக்பர்தமிழ் எழுத்து முறைசன்ரைசர்ஸ் ஐதராபாத்பாரிசங்க காலப் புலவர்கள்வெள்ளி (கோள்)பழனி பாபாராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)மஞ்சும்மல் பாய்ஸ்🡆 More