இராசத்தான்: இந்திய மாநிலம்

இராசத்தான் (Rājasthān, தேவநாகரி: राजस्थान), அல்லது இராஜஸ்தான், என்பது இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று.

செய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இதுதவிர உதயப்பூர் மற்றும் சோட்பூர் ஆகியன முக்கிய நகரங்கள் ஆகும். இராசத்தானி, மார்வாரி, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழிகள் ஆகும்.

இராசத்தான்
மாநிலம்
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
இந்தியாவில் இராசத்தான் அமைவிடம்
இந்தியாவில் இராசத்தான் அமைவிடம்
ஆள்கூறுகள் (செய்ப்பூர்): 26°36′N 73°48′E / 26.6°N 73.8°E / 26.6; 73.8
நாடுஇராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள் India
Established30 மார்ச்சு 1949
தலைநகரம்செய்ப்பூர்
பெரிய நகரம்செய்ப்பூர்
அரசு
 • ஆளுநர்கால்ராச்சு மிசுரா
 • முதலமைச்சர்அசோக் கெலட் (காங்கிரசு)
 • சட்டமன்றம்ஓரவை (200 இடங்கள்)
 • நாடாளுமன்றத்
 தொகுதிகள்
மாநிலங்களவை 10
மக்களவை 25
பரப்பளவு
 • மொத்தம்3,42,239 km2 (1,32,139 sq mi)
பரப்பளவு தரவரிசை1ஆவது
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்68,548,437
 • தரவரிசை7ஆவது
 • அடர்த்தி200/km2 (520/sq mi)
இனங்கள்இராசத்தானி
GDP (2017–18)
 • Total8.40 இலட்சம் கோடி (US$110 பில்லியன்)
Languages
 • அலுவல்மொழிஇந்தி
 • Additional officialஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-RJ
வாகனப் பதிவுRJ-
HDI (2017)இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள் 0.621
medium · 29ஆவது
எழுத்தறிவு (2011)66.1%
பாலின விகிதம் (2011)928 ♀/1000 ♂
இணையதளம்Rajasthan.gov.in
சின்னங்கள்
நடனம்
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
கூமர்
விலங்கு
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
ஒட்டகம் மற்றும்
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
இந்தியச் சிறுமான்
பறவை
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
கானமயில்
மலர்
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
Rohida
மரம்
இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள்
வன்னி (மரம்)

இம்மாநில தார் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் எனுமிடத்தில் முதன் முதலாக 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாளன்று சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் இந்தியா தன் முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. பின்னர் இரண்டாம் முறையாக அதே இடத்தில், 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் சக்தி நடவடிக்கை எனும் பெயரில் ஐந்து அணுகுண்டுகள் வெடித்து சோதனை செய்தது.

இராசத்தான் வரலாறு

புவியியல்

இந்தியாவின் மேற்குப் பகுதியல் உள்ள இராசத்தான், பாகித்தான் எல்லையை ஒட்டி உள்ளது. குசராத்து, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இராஜஸ்தானுக்கு அண்மையில் உள்ளன. இராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது.

உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் இம்மாநிலத்தின் தென்மேற்கில் இருந்து வடகிழக்காக செல்கிறது. அபு சிகரம் இம்மலை மீதே அமைந்துள்ளது.

மாவட்டங்கள்

இராசத்தான்: இராசத்தான் வரலாறு, புவியியல், மாவட்டங்கள் 
செய்சல்மரில் உள்ள ஒரு பழைய கட்டிடம்

இராசத்தானில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் செய்ப்பூர், சோட்பூர், அச்சுமீர், உதய்ப்பூர், பிகானேர், கோட்டா, பரத்பூர் எனும் ஏழு கோட்டங்களில் அடங்கும். அவைகள் பின்வருவன;

  1. அல்வர் மாவட்டம்
  2. அச்சுமீர் மாவட்டம்
  3. அனுமான்காட் மாவட்டம்
  4. உதய்பூர் மாவட்டம்
  5. பாரான் மாவட்டம்
  6. பில்வாரா மாவட்டம்
  7. பூந்தி மாவட்டம்
  8. பரத்பூர் மாவட்டம்
  9. பான்சுவாரா மாவட்டம்
  10. பார்மேர் மாவட்டம்
  11. பிகானேர் மாவட்டம்
  12. பாலி மாவட்டம்
  13. பிரதாப்காட் மாவட்டம்
  14. சூரூ மாவட்டம்
  15. கரௌலி மாவட்டம்
  16. சவாய் மாதோபூர் மாவட்டம்
  17. சித்தோர்கார் மாவட்டம்
  18. சிரோகி மாவட்டம்
  19. சீகர் மாவட்டம்
  20. தௌசா மாவட்டம்
  21. தோல்பூர் மாவட்டம்
  22. டுங்கர்பூர் மாவட்டம்
  23. சிரீ கங்காநகர் மாவட்டம்
  24. கோட்டா மாவட்டம்
  25. செய்ப்பூர் மாவட்டம்
  26. சாலாவார் மாவட்டம்
  27. செய்சல்மேர் மாவட்டம்
  28. சாலாவார் மாவட்டம்
  29. சுன்சுனூ மாவட்டம்
  30. சோட்பூர் மாவட்டம்
  31. நாகவுர் மாவட்டம்
  32. இராசசமந்து மாவட்டம்
  33. டோங் மாவட்டம்

முக்கிய நகரங்கள்

செய்ப்பூர், செய்சல்மேர், அச்சுமீர், உதயப்பூர், கோட்டா, பரத்பூர் மற்றும் சோத்பூர் நகரங்களாகும்.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 68,548,437 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 75.13% மக்களும், நகர்புறங்களில் 24.87% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.31% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 35,550,997 ஆண்களும் மற்றும் 32,997,440 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 928 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 519 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 66.11 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 79.19 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 52.12 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,649,504 ஆக உள்ளது. பில் பழங்குடி மக்கள் தொகை 28,05,948 ஆக உள்ளது.

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 60,657,103 (88.49 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 6,215,37 (9.07%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 96,430(0.14%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 872,930 (1.27%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 622,023 (0.91%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 12,185(0.02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 4,676(0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 67,713(0.10%) ஆகவும் உள்ளது.

மொழிகள்

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், இராசத்தானி, மார்வாரி, குசராத்தி, உருது, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழியும் பேசப்படுகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இராசத்தான் வரலாறுஇராசத்தான் புவியியல்இராசத்தான் மாவட்டங்கள்இராசத்தான் முக்கிய நகரங்கள்இராசத்தான் மக்கள் தொகையியல்இராசத்தான் பார்க்க வேண்டிய இடங்கள்இராசத்தான் மேற்கோள்கள்இராசத்தான் வெளி இணைப்புகள்இராசத்தான்இந்திஇந்தியாஇராச்சசுத்தானிஉதயப்பூர்உருதுசெய்ப்பூர்சோத்பூர்தேவநாகரிபஞ்சாபி மொழிமார்வாரி மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறவஞ்சிஎல் நீனோ-தெற்கத்திய அலைவுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சேரர்மனித உரிமைதீரன் சின்னமலைதைப்பொங்கல்முல்லைப் பெரியாறு அணைநாயன்மார் பட்டியல்அறம்டி. என். ஏ.விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)இந்திய அரசியலமைப்புதாஜ் மகால்நாட்டு நலப்பணித் திட்டம்வானிலைதிருமந்திரம்குடும்ப அட்டைமுல்லைப்பாட்டுதமிழ் தேசம் (திரைப்படம்)புறப்பொருள்கலிப்பாவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்மே நாள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தொல். திருமாவளவன்உடன்கட்டை ஏறல்புதுமைப்பித்தன்கடல்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்முகம்மது நபிஆங்கிலம்வேதநாயகம் பிள்ளைஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இந்தியாவில் பாலினப் பாகுபாடுநிணநீர்க் குழியம்பீனிக்ஸ் (பறவை)தமிழ் விக்கிப்பீடியாஸ்ரீபட்டா (நில உரிமை)வெந்து தணிந்தது காடுகுருதி வகைசிறுபஞ்சமூலம்பிள்ளையார்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்செயற்கை நுண்ணறிவுஜி. யு. போப்மஞ்சள் காமாலைஎஸ். ஜானகிஜெ. ஜெயலலிதாகன்னி (சோதிடம்)கள்ளழகர் கோயில், மதுரைசதுரங்க விதிமுறைகள்கம்பராமாயணம்சின்னம்மைதமிழர் அணிகலன்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைபோக்குவரத்துஏப்ரல் 25நற்கருணைகலிங்கத்துப்பரணிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இல்லுமினாட்டிபுதுக்கவிதைசேக்கிழார்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்அண்ணாமலையார் கோயில்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅட்சய திருதியைநிணநீர்க்கணுமொழிபெயர்ப்புகுமரகுருபரர்அரச மரம்சுரதா🡆 More