எஃகு

எஃகு அல்லது உருக்கு (steel) என்பது இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும்.

இதில் இரும்புடன் சிறிதளவு கரிமமும் (0.2% முதல் 2.1% எடையில்) கலந்திருக்கும். கரிமத்தின் அளவைப் பொறுத்து இதன் தரம் மாறுபடும். பொதுவாக இதில் கரிமம் கலக்கப்படுகிறது, எனினும் மாங்கனீசு, நிக்கல், வனேடியம் போன்ற கனிமங்களும் கலக்கப்படுகின்றன. எஃகின் தரம், வலு, நெகிழ்வுத்தன்மை, இழுவு தன்மை ஆகியவை இதனுடன் சேர்க்கப்படும் உலோகத்தைப் பொறுத்து மாறுபடும். இதனுடன் சேர்க்கப்படும் கரிமத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க இதன் வலு அதிகமாகும், ஆனால் நெகிழ்வுத்தன்மை குறையும்.

எஃகு
இரும்புப் பாலம்
எஃகு
எஃகுக் கம்பி

சேர்க்கப்படும் கலப்பு உலோகங்களின் தன்மையைப் பொறுத்து எஃகின் அடர்த்தி மாறுபடுகிறது. வழக்கமாக எஃகின் அடர்த்தி 7750 மற்றும் 8050 கிலோகிராம்/மீட்டர்3 ஆகும். குறைந்தது பதினோரு விழுக்காடு குரோமியமும், சிறிதளவு நிக்கல் மற்றும் கரியும் கலந்து தயாரிக்கப்படுவது துறுயேறாக எஃகாகும். எஃகுடன் குரோமியம் சேர்ப்பதால் துரு பிடித்தலும் அரிமானம் உண்டாவதும் தடுக்கப்படுகிறது.

கரிம எஃகு

கரிம உருக்கே பரவலாகப் பயன்படுகின்ற கலப்புலோகமாயினும், அவற்றின் சிறப்பியல்புகளுக்காகப் பயன்படுத்தப்படும் கலப்புலோகங்கள் பல உள்ளன. ஒரு பழைய வரைவிலக்கணத்தின்படி, எஃகு என்பது 2.1% வரை கரிமத்தைக் கொண்ட கலப்புலோகமாகும். தற்காலத்தில், கரிமம் ஒரு விரும்பப்படாத கலப்புலோகக் கூறாகக் கருதப்படும் சிலவகையான உருக்குகளும் உண்டு. ஓர் அண்மைய வரைவிலக்கணம், உருக்கு என்பது plastic ally வார்க்கக்கூடிய ஒரு இரும்பை அடிப்படையாகக் கொண்ட கலப்புலோகம் என்கிறது. உருக்கில் கரிமத்தின் முக்கியத்துவம், உருக்கின் இயல்புகளிலும், அதன் நிலை மாற்றத்திலும், கார்பன் கொண்டிருக்கும் தாக்கத்தின் விளைவுகளினாலேயே உருவாகிறது. கார்பனின் அளவு அதிகரிக்க, உருக்கின் கடினத்தன்மையும், இழுவைப் பலமும் அதிகரிக்கின்றது. ஆனாலும் அதன் நொறுங்கக்கூடிய தன்மையும் அதிகரிக்கவே செய்கின்றது.

பண்புகள்

எஃகு 
இரும்பு-கரிமம் பிரிவு வரைபடம்

.

எஃகின் அடர்த்தி இதன் உலோகக் கலப்பைப் பொறுத்து மாறுபடும், ஆனால் பொதுவாக 7.75 முதல் 8.05 g/cm3 அடர்த்திக்குள் இருக்கும். எஃகின் தன்மையின் காரணமாக இது பெரும்பான்மையான உபயோகங்களுக்கு பயன்படுகிறது. அறை வெப்பநிலையில் body-centered cubic (BCC) நிலைகள் இருக்கும். எஃகு காந்தத்தன்மை கொண்டது.

வெப்பமாக்கும் முறை

எஃகுக்கு பல வகையான வெப்பமாக்கும் முறைகளும் உள்ளன. காய்ச்சுதல், தணித்தல் மற்றும் பதமாக்குதல் என்பவை மிகப் பொதுவான வெப்பமாக்கும் முறைகளாகும். கார்பன் மீக்குறை அளவாக 0.8% பகுதிப்பொருளாக இருக்கும்போது வெப்பமாகும் முறை திறனுள்ளதாக இருக்கும். மீவுயர் பகுதிப் பொருளாக கார்பன் உள்ளபோது எஃகு வெப்பமாகும் முறை போதுமான பயனளிக்காது. காய்ச்சிக் குளிரவைத்தல் என்பது உட்புற அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்காக எஃகை போதுமான அளவுக்கு வெப்பப்படுத்தி பின்னர் குளிரவைக்கும் செயல்முறையாகும். இத்தயாரிப்பு முறை பொதுவாக எஃகை மென்மையாக்காது. ஆனால் உட்புற இறுக்கம் மற்றும் அழுத்தத்தை விடுவிக்கிறது. காய்ச்சிக் குளிரவைத்தல் செயல்முறை மூன்று கட்டங்கள் வழியாக நிகழ்கிறது. மீட்பு, மறுபயன்பாடு மற்றும் படிகவளர்ச்சி என்பவை அம்மூன்று கட்டங்களாகும். காய்ச்சிக் குளீரவைத்தல் செயல்முறைக்கு குறிப்பிட்ட வகை எஃகுக்குத் தேவையான வெப்பநிலை அதனுடன் கலப்புலோகமாக சேர்க்கக்கூடிய உலோகத்தையும் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

எஃகை நன்றாக துறு ஏறா நிலைக்கு சூடுபடுத்தி தண்ணீர் அல்லது எண்ணெயில் தோய்த்து குளிரவைத்தலே தனித்தல் செயல்முறையாகும். இத்தகைய விரைவுக் குளிர்விப்பால் கடினமான ஆனால் நொறுங்கும் தன்மையுடைய துருப்பிடிக்காத எஃகு கட்டமைப்பு உருவாகிறது தணித்தலுக்குப் பின்னர் எஃகு பதப்படுத்தப்படுகிரது. இந்த சிறப்பு காய்ச்சிக் குளிரவைத்தலால் நொறுங்கும் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் கடின இரும்பு உருவாகிறது. கம்பியாக நீளும் தன்மை கொண்ட அதே சமயம் முறியும் தன்மையற்ற எஃகு கிடைக்கிறது.

எஃகு தயாரித்தல்

எஃகு 
எஃகு தயாரிப்பதற்குத் தேவையான இரும்புத் துகள்கள்

இரும்பு தாதுவிலிருந்து எஃகு தயாரித்தல் என்பது இரண்டாம் நிலையாகும். இந்த நிலையில் இரும்பிலிருந்து சல்பர், பாஸ்பரஸ் மற்றும் அதிகப்படியான கார்பன் ஆகிய மாசுப்பொருள்கள் நீக்கப்படுகின்றன. பின் இதில் கலப்பு உலோகங்களான நிக்கல், குரோமியம், மாங்கனீசு, வனேடியம் போன்றவை சேர்க்கப்பட்டு தேவையான எஃகு தயாரிக்கப்படுகிறது.

தாதுக்களில் இருந்து இரும்பு உருக்கிப் பிரிக்கப்பட்ட பின்னர் அதில் அதிகமான கார்பன் கலந்திருக்கும். எஃகைப் பெறுவதற்கு தேவையான சரியான அளவுக்கு கார்பனைப் பிரித்தெடுக்க மீள் செயல்முறைக்கு உட்படுத்த வேண்டும். முற்காலத்தில் இரும்பு தயாரித்தலின் போது வார்ப்புகளாக இரும்பு தயாரிக்கப்பட்டு, பின்னர் மேலும் மேலும் அதை சுத்திகரிப்புக்கு உட்படுத்தி இறுதி பொருள் தயாரிக்கப்பட்டது. தற்காலத்தில் நவீன செயல்முறைகள் மூலம் நேரடியாகவே வெட்டியும் வடிவமைத்தும் பாளங்கள் வார்க்கப்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் அதிக அளவில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் பொருள் எஃகு ஆகும் இதனுடைய மறுசுழற்சி வீதம் 60% ஆகும். 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 82000 மெட்ரிக் டன் எஃகு மறுசுழற்சி செய்யப்பட்டது, [59] அமெரிக்காவில் மட்டும் 82,000,000 மெட்ரிக் டன் (81,000,000 டன் டன்) 2008 ஆம் ஆண்டில் மறுசுழற்சி செய்யப்பட்டது ,

பயன்கள்

இயந்திரவியலில் இது அதிகம் பயன்படுகிறது. இது ஆட்டோமொபைல் துறையில் அதிகம் பயன்படுகிறது.

கட்டுமானத்துறையில்

தற்காலக் கட்டுமானத்துறையிலே உருக்கு மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. தூண்கள், உத்தரங்கள், கூரைச் சட்டகங்கள், தள அமைப்புகள், கூரைத் தகடுகள் மற்றும் பலவகையான அமைப்பு சம்பந்தப்பட்ட மற்றும் அலங்காரத்துக்கான கட்டிடக் கூறுகள் உருக்கினாலேயே ஆக்கப்படுகின்றன. இவற்றைவிட வலிதாக்கப்பட்ட காங்கிறீற்று அமைப்புக்களில் பெருமளவு உருக்கு, கம்பிகள் வடிவில் பயன்படுத்தப்படுகின்றது. சாலைகள், இரயில்வே பாதைகள் அமைத்தல், உள்கட்டமைப்புகள், உபகரணங்கள், மற்றும் கட்டடங்களுக்கான கட்டுமானம் போன்ற செயல்களில் பரவலாக இரும்பும் எஃகும் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டு அரங்கங்கள், வானளாவிய கட்டிடங்கள், பாலங்கள், மற்றும் விமான நிலையங்கள் போன்ற மிக பெரிய நவீன கட்டமைப்புகள் உருவாக்கத்திற்கு எஃகு பயன்படுத்தப்படுகிறது.

உற்பத்தி செய்யும் நாடுகள்

கச்சா எஃகு உற்பத்தி (மில்லியன் டன்களில்):
தரவரிசை நாடு 2007 2008 2009 2010 2011
 உலகம் 1,351.3 1326.5 1,219.7 1,413.6 1,490.1
1 எஃகு  சீன மக்கள் குடியரசு 494.9 500.3 573.6 626.7 683.3
எஃகு  ஐரோப்பிய ஒன்றியம் 209.7 198.0 139.1 172.9 177.4
2 எஃகு  ஜப்பான் 120.2 118.7 87.5 109.6 107.6
3 எஃகு  அமெரிக்க ஐக்கிய நாடு 98.1 91.4 58.2 80.6 86.2
4 எஃகு  இந்தியா 53.5 57.8 62.8 68.3 72.2
5 எஃகு  உருசியா 72.4 68.5 60.0 66.9 68.7
6 எஃகு  தென் கொரியா 51.5 53.6 48.6 58.5 68.5
7 எஃகு  செருமனி 48.6 45.8 32.7 43.8 44.3
8 எஃகு  உக்ரைன் 42.8 37.3 29.9 33.6 35.3
9 எஃகு  பிரேசில் 33.8 33.7 26.5 32.8 35.2
10 எஃகு  துருக்கி 25.8 26.8 25.3 29.0 34.1
11 எஃகு  இத்தாலி 31.6 30.6 19.7 25.8 28.7
12 எஃகு  தாய்வான் 20.9 19.9 15.7 19.6 22.7
13 எஃகு  மெக்சிகோ 17.6 17.2 14.2 17.0 18.1
14 எஃகு  பிரான்சு 19.3 17.9 12.8 15.4 15.8
15 எஃகு  எசுப்பானியா 19.0 18.6 14.3 16.3 15.6
16 எஃகு  கனடா 15.6 14.8 9.0 13.0 13.1
17 எஃகு  ஈரான் 10.1 10.0 10.9 12.0 13.0
18 எஃகு  ஐக்கிய இராச்சியம் 14.3 13.5 10.1 9.7 9.5
19 எஃகு  போலந்து 10.6 9.7 7.2 8.0 8.8
20 எஃகு  பெல்ஜியம் 10.7 10.7 5.6 8.1 8.1
21 எஃகு  ஆஸ்திரியா 7.6 7.6 5.7 7.2 7.5
22 எஃகு  நெதர்லாந்து 7.4 6.8 5.2 6.7 6.9
23 எஃகு  தென்னாப்பிரிக்கா 9.1 8.3 7.5 8.5 6.7
24 எஃகு  எகிப்து 6.2 6.2 5.5 6.7 6.5
25 எஃகு  ஆஸ்திரேலியா 7.9 7.6 5.2 7.3 6.4
26 எஃகு  அர்ச்சென்டினா 5.4 5.5 4.0 5.1 5.7
27 எஃகு  செக் குடியரசு 7.1 6.4 4.6 5.2 5.6
28 எஃகு  சவூதி அரேபியா 4.6 4.7 4.7 5.0 5.3
29 எஃகு  சுவீடன் 5.7 5.2 2.8 4.8 4.9
30 எஃகு  கசக்ஸ்தான் 4.8 4.3 4.1 4.3 4.7
31 எஃகு  சிலோவாக்கியா 5.1 4.5 3.7 4.6 4.2
- எஃகு  மலேசியா 6.9 6.4 4.0 4.1 N/A
32 எஃகு  பின்லாந்து 4.4 4.4 3.1 4.0 4.0
 Others 29.8 (est.) 28.3 (est.) 23.3 (est.) 25.6 (est.)

இந்தியாவின் எஃகு உற்பத்தியாளர்கள்:

  • டாட்டா எஃகு ஆலை
  • எஸ்ஸார் எஃகு ஆலை
  • இஸ்பாத் எஃகு ஆலை
  • ஜிண்டால் எஃகு ஆலை

ஏற்றுமதி

முன்னணி ஏற்றுமதி நாடுகள் 2008
தரவரிசை நாடு அளவு
1 சீன மக்கள் குடியரசு 56.3
2 ஜப்பான் 36.9
3 உக்ரைன் 28.6
4 செருமனி 28.6
5 உருசியா 28.4
6 பெல்ஜியம் 21.2
7 தென் கொரியா 19.7
8 துருக்கி 18.5
9 இத்தாலி 18.0
10 பிரான்சு 17.1
11 அமெரிக்க ஐக்கிய நாடு 11.9
12 தாய்வான் 10.0
13 நெதர்லாந்து 10.0
14 போர்த்துகல் 9.4
15 பிரேசில் 9.1
முன்னணி மொத்த எஃகு ஏற்றுமதி 2006
தரவரிசை நாடு அளவு
1 சீன மக்கள் குடியரசு 32.6
2 ஜப்பான் 30.1
3 உக்ரைன் 29.1
4 உருசியா 25.6
5 பிரேசில் 10.7
6 பெல்ஜியம் 7.6
7 செருமனி 4.9
8 சிலோவாக்கியா 2.7
9 தென்னாப்பிரிக்கா 2.6
10 ஆஸ்திரியா 2.6
11 பின்லாந்து 2.3
12 நெதர்லாந்து 2.0
13 பிரான்சு 1.9
14 கசக்ஸ்தான் 1.3
15 இந்தியா 1.2

சாதனை

இந்தியா உருக்கு உற்பத்தியில் சீனா, ஜப்பான், அமெரிக்காவிற்கு அடுத்து நான்காவது இடத்தில் இருந்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முந்தைய இரண்டு மாதங்களில் 1.456 கோடி டன்கள் உற்பத்தி செய்து அமெரிக்காவை மிஞ்சி சாதனை செய்தது. உலக அளவில் 12.76 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

எஃகு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Steel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

எஃகு கரிம எஃகு பண்புகள்எஃகு வெப்பமாக்கும் முறைஎஃகு தயாரித்தல்எஃகு பயன்கள்எஃகு உற்பத்தி செய்யும் நாடுகள்எஃகு இந்தியாவின் உற்பத்தியாளர்கள்:எஃகு ஏற்றுமதிஎஃகு சாதனைஎஃகு மேற்கோள்கள்எஃகு புற இணைப்புகள்எஃகுஇரும்புகனிமம்கரிமம்நிக்கல்மாங்கனீசுவனேடியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் படம் 2 (திரைப்படம்)வளைகாப்புபகிர்வுதங்க மகன் (1983 திரைப்படம்)ஆசிரியர்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பத்து தலதிரிகடுகம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சி. விஜயதரணிதிருநாவுக்கரசு நாயனார்விஜயநகரப் பேரரசுமுத்தொள்ளாயிரம்கா. ந. அண்ணாதுரைசங்க காலப் புலவர்கள்விளம்பரம்சிங்கம்ராமராஜன்மூவேந்தர்ஓரங்க நாடகம்நான்மணிக்கடிகைபி. காளியம்மாள்இந்திய உச்ச நீதிமன்றம்அறுசுவைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுஐயப்பன்தற்குறிப்பேற்ற அணிபால்வினை நோய்கள்மணிமேகலை (காப்பியம்)சைவ சமயம்வேதம்பனிக்குட நீர்காடழிப்புதிராவிடர்திருமால்இந்திய மக்களவைத் தொகுதிகள்கார்ல் மார்க்சுசிவபுராணம்செயற்கை மழைஇராவணன்தமிழ் எண்கள்மதுரைக் காஞ்சிமுதலாம் உலகப் போர்ருதுராஜ் கெயிக்வாட்நவதானியம்மகரம்வேளாண்மைவேர்க்குருபெண்ணியம்பரதநாட்டியம்வைரமுத்துநாடகம்திருமலை நாயக்கர்அரிப்புத் தோலழற்சிகடல்இரண்டாம் உலகப் போர்சூர்யா (நடிகர்)தமிழ் இலக்கணம்பொது ஊழிசார்பெழுத்துஞானபீட விருதுசைவத் திருமணச் சடங்குரவிசீனிவாசன் சாய் கிஷோர்களப்பிரர்தங்கராசு நடராசன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இலங்கையின் மாவட்டங்கள்வராகிஆண்டுஜே பேபிதேவாங்குதிருநங்கைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பித்தப்பைகூகுள்🡆 More