புவியியல் ஆள்கூற்று முறை

புவியியல் ஆள்கூற்று முறை (Geographic coordinate system) என்பது புவியின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் கோள ஆள்கூற்று முறையின் இரண்டு ஆள்கூறுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும்.

இதன் போது புவியின் சுழற்சி அச்சை மையமாக கொண்டு ஆள்கூறுகள் கணிக்கப்படுகின்றன. கிரேக்க சிந்தனையாளரான தொலெமி பாபிலோனியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வட்டமொன்றை 360 பகுதி(பாகை)களாகப் பிரித்தார்.

  • அகலாங்கு (நிலநேர்க்கோடு) என்பது எந்தவொரு புள்ளிக்கும் நடுக்கோட்டுக்கும் இடையேயான கோணமாகும். ஒன்றுக்கொன்று சமதொலைவான கற்பனை அகலாங்கு கோடுகள் பூமியின் மேற்பரப்பில் சிறு வட்டங்களை அமைக்கின்றன. நிலநடுக்கோடு 0 பாகை அகலாங்காகும். இது ஒரு பெருவட்டத்தை அமைக்கிறது. புவி முனைகள் 90 பாகை அகலாங்குகளாகும் (வட முனை 90° N, தென் முனை 90° S).
  • நெட்டாங்கு (நிலநிரைக்கோடு) என்பது ஒரு புள்ளி ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து கிழக்காகவோ மேற்காகவோ ஆக்கும் கோணமாகும்: ஐக்கிய இராச்சியத்தின் கிறின்விச் நகரூடாக செல்லும் வட தெற்கான் கோடு 0 பாகையாகக் கொள்ளப்படுகிறது. அகலாங்குகளை போலல்லாது நெட்டாங்குகள் எல்லாமே பெரு வட்டங்களாகும். இக்கோடுகள் யாவும் வட மற்றும் தென்முனைகளில் இணைகின்றன.
புவியியல் ஆள்கூற்று முறை
அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம்

இவ்விரு ஆள்கூறுகளை கையாள்வதன் மூலம் புவி மேற்பரப்பின் எந்தவொரு புள்ளியையும் அடையாளப்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, சென்னை மாநகரானது அகலாங்கு 13.09° வடக்கு, மற்றும் 80.27° கிழக்கு ஆள்கூறுகளை கொண்டுள்ளது. இதன் கருத்து, புவி மையத்திலிருந்து 13.09° வடக்காகவும்,80.27° கிழக்காகவும் வரையப்படும் ஒரு கற்பனைக் காவியானது சென்னை மாநகரூடாக செல்லும் என்பதாகும்.

பாகையானது பொதுவாக, கலை ( ′ ) விகலை ( ″ ) என பிரிக்கப்படுகின்றது. அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை குறிக்க இவை பல முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக அகலாங்கு முதலில் கூறப்படுவது வழக்கமாகும்.

  • DM பாகை:கலை (49:30.0-123:30.0)
  • DMS பாகை:கலை:விகலை (49:30:00-123:30:00)
  • DD தசம பாகை (49.5000-123.5000), பொதுவாக 4 தசமதானங்களுக்கு.

அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை கணிப்பிட பயன்படுத்தப்படும் முறைக்கேற்ப (Geodetic system அல்லது datum அல்லது WGS84) ஒரு புள்ளியின் அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பன வேறுபடும். இது இம்முறைகள் பயன்படுத்தும் ஆதாரப்புள்ளியை பொருத்ததாகும்

புவிநிலை ஆள்கூறுகள்

புவிநிலை செயற்கைக்கோள்கள் (உ+ம் தொலைக்காட்சி செயற்கைகோள்கள் ) நிலநடுக்கோட்டுக்கு மேலாக காணப்படுகின்றன. ஆகவே, அவற்றின் நிலையம் நெட்டாங்குகள் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றது. அவற்றின் அகலாங்கு மாறுவதில்லை அஃது எப்போதும் பூச்சியமாகும்.

மூன்றாவது பரிமாணம்: உயரம், ஆழம்

புவி மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளியை முற்றாக வரையறுத்து நிலையப்படுத்த உயரமும் தேவைப்படுகிறது. ஒரு புள்ளியின் உயரமானது ஒரு ஆதார தளத்துக்குச் சார்பாக அதிலிருந்து "செங்குத்தாக" அளக்கப்படுகிறது. புவியின் மையத்திலிருந்து உயரத்தை குறிப்பிட முடியுமாயினும், கடல் மட்டம் பொதுவாக பயன்பாட்டில் உள்ளது. புவியின் ஆழமான அல்லது விண்வெளியில் உள்ள புள்ளிகளைக் குறிக்க மட்டுமே புவி மையத்திலிருந்து அளக்கப்பட்ட தொலைவு பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

Tags:

புவியியல் ஆள்கூற்று முறை புவிநிலை ஆள்கூறுகள்புவியியல் ஆள்கூற்று முறை மூன்றாவது பரிமாணம்: உயரம், ஆழம்புவியியல் ஆள்கூற்று முறை உசாத்துணைகள்புவியியல் ஆள்கூற்று முறை வெளியிணைப்புகள்புவியியல் ஆள்கூற்று முறைதொலெமிபாகை (அலகு)புவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வரிசையாக்கப் படிமுறைகாயத்ரி மந்திரம்சைவ சமயம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்கடல்கணினிசீவக சிந்தாமணிம. பொ. சிவஞானம்மணிமேகலை (காப்பியம்)ஜிமெயில்தமிழ்விடு தூதுமறைமலை அடிகள்சீர் (யாப்பிலக்கணம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுபறையர்திருட்டுப்பயலே 2களப்பிரர்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)நயன்தாராமனித மூளைஇந்து சமயம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பித்தப்பைமுடியரசன்புதுச்சேரிசித்த மருத்துவம்பல்லவர்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைவெண்பாதமிழச்சி தங்கப்பாண்டியன்ஸ்ரீமூகாம்பிகை கோயில்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இயேசுவிண்ணைத்தாண்டி வருவாயாதமிழர் கலைகள்முதுமலை தேசியப் பூங்காதற்கொலை முறைகள்பெயர்ச்சொல்வீட்டுக்கு வீடு வாசப்படிமாத்திரை (தமிழ் இலக்கணம்)தாவரம்யாதவர்முதலாம் உலகப் போர்பாண்டியர்கோயம்புத்தூர்நீர் மாசுபாடுநாற்கவிஐம்பெருங் காப்பியங்கள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கில்லி (திரைப்படம்)பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்மயங்கொலிச் சொற்கள்இலங்கையின் மாவட்டங்கள்தமிழர் விளையாட்டுகள்செம்மொழிபிலிருபின்கட்டபொம்மன்திருமலை (திரைப்படம்)மாதேசுவரன் மலைமுத்துராஜாசூளாமணிஅருண் ஜேட்லி விளையாட்டரங்கம்காதல் தேசம்திருப்பூர் குமரன்ரயத்துவாரி நிலவரி முறைதமிழ் தேசம் (திரைப்படம்)வேதம்திருக்குறள் பகுப்புக்கள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்முல்லை (திணை)கண்ணதாசன்வழக்கு (இலக்கணம்)திட்டக் குழு (இந்தியா)மஞ்சும்மல் பாய்ஸ்மண் பானை🡆 More