நிலநிரைக்கோடு

நிலநிரைக்கோடு (இலங்கை வழக்கு: நெட்டாங்கு, தீர்க்க ரேகை Longitude) என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும்.

இதனை நிலநெடுவரை, நில நீள்கோடு, தீர்க்கரேகை. புவி நெடுங்கோடு என்றும் அழைப்பர்

நிலநிரைக்கோடு
புவியின் நிலப்படம்
நிலநிரைக்கோடு (λ)
நிலநிரைக் கோடுகள் இங்கே வளை கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை பெரு வட்டத்தின் அரைப் பகுதிகளாகும்.
நிலநேர்க்கோடு (φ)
இங்கே நிலநேர்க்கோடுகள் கிடைக் கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை வெவேறு விட்டங்களைக் கொண்ட வட்டங்களாகும்.
நிலநடுக்கோடு புவிக் கோளத்தை வட அரைக்கோளம், தென் அரைக்கோளம் என இரண்டாகப் பிரிக்கின்றது. இதன் அளவு 0°. நிலநிரைக்கோடு

நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் பாகைகளில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு பொதுவாக கிரேக்க எழுத்துரு லாம்டா (λ) மூலம் குறிப்பிடப்படுகிறது. ஒரே நிலநிரைக்கோடு அலகுள்ள புள்ளிகள் அனைத்தும் வட முனையத்திலிருந்து தென் முனையம் வரை செல்லும் ஒரே நேர்கோடில் அமைந்துள்ளன. வழமைப்படி, இவற்றில் முதன்மை நிரைக்கோடு எனப்படும் இங்கிலாந்தின் கிரீன்விச்சில் உள்ள அரச வான் ஆய்வகம் வழியே செல்லும் நிரைக்கோடு 0°ஐக் (சுழியப் பாகை) குறிக்கிறது. பிற இடங்களின் நிரைக்கோட்டு அலகு இந்த முதன்மை நிரைக்கோட்டிலிருந்து கிழக்கே அல்லது மேற்கே எத்தனை பாகைகள் தள்ளி உள்ளன என்பதைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, முதன்மை நிரைக்கோடு அமைந்திருக்கும் தளத்திற்கும் வட,தென் முனையங்களோடு குறிப்பிட்ட இடம் அமைந்துள்ள தளத்திற்கும் இடையேயுள்ள கோணமாகும். கிழக்கு அல்லது மேற்கு என திசைக் குறிப்பிடப்படாத நிலையில் நேர்மறை அலகுகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த இடம் முதன்மை நிரைக்கோட்டிற்கு கிழக்கே அமைந்துள்ளதாகவும் எதிர்மறை அலகுகள் மேற்கே அமைந்துள்ளதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது ஓர் வலது கை குறிகாட்டு அமைப்பாக, முதன்மை நிரைக்கோட்டில் புவியின் மையத்திலிருந்து வலது கை கட்டைவிரல் வட முனையம் (z அச்சு) நோக்கியும் புவியின் மையத்திலிருந்து வலது கை சுட்டுவிரல் (ஆள்காட்டி விரல்) புவிமையக்கோட்டுடன் இணையாகவும் (x அச்சு) உள்ளது.

ஓர் நிரைக்கோட்டில் ஓரிடத்தின் வடக்கு-தெற்கு அமைவிடம் அந்த இடத்தின் நிலநடுக்கோட்டின் மூலம் குறிப்பிடப்படுகிறது. புவியிடங்காட்டி கருவிகள் இவற்றைக் காட்டும்.

வெளியிணைப்புகள்

நிலநிரைக்கோடு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

நிலநிரைக்கோடு  விக்சனரி விக்சனரி
நிலநிரைக்கோடு  நூல்கள் விக்கிநூல்
நிலநிரைக்கோடு  மேற்கோள் விக்கிமேற்கோள்
நிலநிரைக்கோடு  மூலங்கள் விக்கிமூலம்
நிலநிரைக்கோடு  விக்கிபொது
நிலநிரைக்கோடு  செய்திகள் விக்கிசெய்தி


Tags:

புவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாவலரேறு பெருஞ்சித்திரனார்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதீரன் சின்னமலைதயாநிதி மாறன்மூவேந்தர்வேலு நாச்சியார்அவிட்டம் (பஞ்சாங்கம்)சிலப்பதிகாரம்திருப்பதிசிலம்பரசன்அரபு மொழிதொல். திருமாவளவன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019முதுமலை தேசியப் பூங்காசிறுதானியம்கடையெழு வள்ளல்கள்வேதம்கயிறுபாரதிதாசன்திருநாவுக்கரசு நாயனார்அகத்தியமலைராசாத்தி அம்மாள்எஸ். சத்தியமூர்த்திபர்வத மலைஇந்திரா காந்திமெய்யெழுத்துஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஉ. வே. சாமிநாதையர்இந்திய ரிசர்வ் வங்கிதிருவிளையாடல் புராணம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்திருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழ்ஒளிமியா காலிஃபாபாண்டவர்இராமலிங்க அடிகள்கந்த புராணம்பஞ்சபூதத் தலங்கள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கொடைக்கானல்சின்னம்மைகுணங்குடி மஸ்தான் சாகிபுகாடுவெட்டி குருநன்னீர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அருணகிரிநாதர்ஆசியாஇனியவை நாற்பதுகோயம்புத்தூர்அருந்ததியர்எங்கேயும் காதல்சூர்யா (நடிகர்)குற்றியலுகரம்ரோபோ சங்கர்வாணிதாசன்மரியாள் (இயேசுவின் தாய்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சுரதாஜெயம் ரவியோவான் (திருத்தூதர்)ஓ. பன்னீர்செல்வம்குருதிச்சோகைநீரிழிவு நோய்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)எனை நோக்கி பாயும் தோட்டாஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிநான்மணிக்கடிகைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சிவாஜி (பேரரசர்)பட்டினப் பாலைபந்தலூர்முத்தரையர்முகம்மது நபியின் இறுதிப் பேருரைகல்லீரல் இழைநார் வளர்ச்சிதிருக்குறள்🡆 More