ஓமோ இரெக்டசு

ஓமோ இரெக்டசு (Homo erectus) என்பது, ஒமினிட் குடும்பத்தைச் சேர்ந்த அழிந்துவிட்ட ஒர் இனம்.

Euteleostomi

பிளீசுட்டோசீன் நிலவியல் காலத்தின் பெரும் பகுதியூடாக இவ்வினம் வாழ்ந்திருந்தது. இதன் மிக முந்திய புதைபடிவச் சான்றுகள் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. மிகப் பிந்திய சான்றுகள் 70,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் ஓமோ இரெக்டசு, ஜார்ஜியா, இந்தியா, இலங்கை, சீனா, இந்தோனீசியா ஆகியவை உள்ளடங்கலாக யூரேசியப் பகுதி முழுவதும் பரந்து குடியேறின.

ஓமோ இரெக்டசு
புதைப்படிவ காலம்:1.9–0.07 Ma
PreЄ
Pg
N
முந்திய பிளீசுட்டோசீன் – பிந்திய பிளீசுட்டோசீன்
ஓமோ இரெக்டசு
பிரான்சின் தவுத்தாவெல்லில் காண்டெடுக்கப்பட்ட மாதிரியொன்றின் மீட்டுருவாக்கம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Hominidae
இனக்குழு:
Hominini
பேரினம்:
Homo
இனம்:
H. erectus
இருசொற் பெயரீடு
Homo erectus
(துபோயிசு, 1892)
வேறு பெயர்கள்

இதன் வகைப்பாடு, மூதாதைகள், சந்ததிகள் என்பன குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ஓமோ எர்காசுட்டர் இனத்துக்கும் இதற்கும் இடையிலான தொடர்பு குறித்து இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது, ஓமோ இரெக்டசு, ஓமோ எர்காசுட்டர் ஆகிய இரண்டும் ஒரே இனத்தையே குறிக்கும் என்றும் அதனால், ஓமோ இரெக்டசு ஓமோ ஈடில்பேர்கென்சிசு, ஓமோ நீன்டர்தாலென்சிசு, ஓமோ சப்பியன்சு ஆகியவற்றின் நேரடி மூதாதை ஆகும் என்னும் நிலைப்பாடு. இரண்டாவது, ஓமோ இரக்டசு ஒரு ஆசிய இனம், ஆப்பிரிக்க ஓமோ எர்காசுட்டர் இனத்தில் இருந்து வேறுபட்டது என்ற நிலைப்பாடு.

தொல்மானிடவியலாளர்களில் இன்னொரு பிரிவினர் இன்னொரு கருத்தை முன்வைக்கின்றனர். இது முன்னர் குறிப்பிட்ட முதலாவது நிலைப்பாட்டுக்கு மாற்றீடாக உள்ளது. இதன்படி, ஓமோ எர்காசுட்டர் என்பது, ஓமோ இரெக்டசுவின் ஆப்பிரிக்க வகை ஆகும். இவர்கள் ஆசிய வகைக்கு ஓமோ இரெக்டசு சென்சு இசுட்ரிக்டோ என்றும் ஆப்பிரிக்க, ஆசிய வகைகளை உள்ளடக்கிய பெரிய வகைக்கு ஓமோ இரெக்டசு சென்சு லாட்டோ என்றும் பெயர் இட்டுள்ளனர்.

டிமானிசி மண்டையோடுகள் ஆவணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2013ல் புதிய விவாதம் ஒன்று தொடங்கியது. டிமானிசி மண்டையோடுகளில் காணப்படும் பெரிய உருவவியல் வேறுபாடுகளைக் கருத்தில் எடுக்கும்போது, முன்னர் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்ட மனித மூதாதைகளை, எடுத்துக்காட்டாக ஓமோ எர்காசுட்டர், ஓமோ ருடோல்பென்சிசு, ஓமோ அபிலிசு போன்றவற்றை, ஓமோ இரெக்டசு இனமாக வகைப்படுத்த வேண்டும் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தற்கொலை முறைகள்சென்னை உயர் நீதிமன்றம்திராவிட மொழிக் குடும்பம்அறுபடைவீடுகள்இனியவை நாற்பதுகண்ணாடி விரியன்நாளந்தா பல்கலைக்கழகம்இராமாயணம்பௌத்தம்காயத்ரி மந்திரம்திருவாசகம்மனித வள மேலாண்மைதேவாரம்இயேசு காவியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வட்டாட்சியர்கபிலர் (சங்ககாலம்)சிலப்பதிகாரம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)ரஜினி முருகன்பில்லா (2007 திரைப்படம்)சுந்தர் பிச்சைகுறுந்தொகைஇலங்கையின் வரலாறுவாகமண்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இந்திய அரசுவிளையாட்டுஇசுலாமிய வரலாறுகலம்பகம் (இலக்கியம்)தமிழ்க் கல்வெட்டுகள்வீரப்பன்இயற்கை வளம்நரேந்திர மோதிகருப்பைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மொழிஇந்திய மக்களவைத் தொகுதிகள்ஆதலால் காதல் செய்வீர்சிதம்பரம் நடராசர் கோயில்நாடகம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்இந்திய தேசிய சின்னங்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வீரமாமுனிவர்மட்பாண்டம்கரகாட்டம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருட்டுப்பயலே 2சமந்தா ருத் பிரபுகலைஅஸ்ஸலாமு அலைக்கும்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதேவேந்திரகுல வேளாளர்முத்துராஜாசேரர்இந்திய நிதி ஆணையம்தொலெமிகருக்கலைப்புமுத்திரை (பரதநாட்டியம்)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)உப்புச் சத்தியாகிரகம்சீரகம்இன்ஸ்ட்டாகிராம்இன்று நேற்று நாளைஆறுமுக நாவலர்உரிப்பொருள் (இலக்கணம்)சித்திரைத் திருவிழாமலக்குகள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ஏலாதிதிருநாவுக்கரசு நாயனார்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தூது (பாட்டியல்)திருக்குர்ஆன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)பூவெல்லாம் உன் வாசம்🡆 More