உயிரியல் பேரினம்: உயிரலகு தரநிலை

பேரினம் (Genus) (இலங்கை வழக்கு-சாதி) என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டுத் தரநிலை (taxonomic rank) ஆகும்.

இது சிற்றினத்திற்கு மேல் நிலையிலும், குடும்பத்திற்கு கீழ் நிலையிலும் உள்ள ஒரு வகைப்பாட்டு தரநிலை ஆகும். பல சிற்றினங்கள் அடங்கியது ஒரு பேரினம். ஒரு உயிரியின் விலங்கியல் பெயரில் முதலில் வருவது பேரினப் பெயராகும். ஒரு பேரினத்தின் கீழ் பல சிற்றினங்கள் உள்ளன. உதாரணமாக, பாந்தெரா லியோ (சிங்கம்) மற்றும் பாந்தெரா ஓன்கா (ஜாகுவார்) ஆகியவை பாந்தெரா பேரினத்தில் உள்ள இரண்டு சிற்றினங்கள் ஆகும். பாந்தெரா என்பது பெலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும். இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் துணைப்பேரினங்களாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள பொதுவான அடுத்த பெயரீட்டுத் தரநிலை சிற்றினம் ஆகும். பேரினம் என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், மரபணு வகை உறவாட்டங்களின் (டி. என். ஏ புணர்வுகள்) அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனமும் குறிப்பிடப்படுகின்றது.

உயிரியல் பேரினம்: உயிரலகு தரநிலை
உயிரியல் வகைப்பாடு

பேரினம் என்பது இலங்கை வழக்கு சாதி என்பதாகும். இருசொற் பெயரீட்டு முறைப்படி உயிரினங்கள் பெயரிடப்படும்போது, முதலில் வரும் சொல் உயிரினத்தின் பேரினத்தைக் குறிக்கும் சொல்லாகும். இரண்டாவது சொல் உயிரினத்தின் இனத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

மேற்கோள்கள்

Tags:

அறிவியல் வகைப்பாடுஇனம் (உயிரியல்)உயிரினம்டி. என். ஏதுணைப்பேரினம்பெயரீட்டுத் தரநிலைமரபணு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்சிராப்பள்ளிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசெக் மொழிகள்ளழகர் கோயில், மதுரைமதுரை வீரன்அளபெடைகருப்பசாமிசௌந்தர்யாஐஞ்சிறு காப்பியங்கள்ஆங்கிலம்தேசிய ஜனநாயகக் கூட்டணிபொருளியல் சிந்தனையின் வரலாறுஇரட்சணிய யாத்திரிகம்மாணிக்கவாசகர்தைராய்டு சுரப்புக் குறைவானிலைஇந்திய வாக்குப் பதிவு கருவிபூலித்தேவன்நம்ம வீட்டு பிள்ளைதிரைப்படம்டிரைகிளிசரைடுஇயற்கை வேளாண்மைகாளமேகம்அம்பிகா (நடிகை)இயற்கைஓ காதல் கண்மணிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிவெ. இராமலிங்கம் பிள்ளைதிருவிழாகலிங்கத்துப்பரணிஇட்லர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கல்லணைஇந்திய தேசிய சின்னங்கள்எங்க ஊரு பாட்டுக்காரன் (திரைப்படம்)இந்திரா காந்திபொன்னியின் செல்வன்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதொகாநிலைத் தொடர்பள்ளிக்கூடம்நயன்தாராஐக்கிய அரபு அமீரகம்சைவ சமயம்ஐக்கூதிருவிளையாடல் புராணம்முதுமொழிக்காஞ்சி (நூல்)கருக்காலம்உ. வே. சாமிநாதையர்தமிழ் நீதி நூல்கள்விண்டோசு எக்சு. பி.திருட்டுப்பயலே 2திரு. வி. கலியாணசுந்தரனார்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஇந்திய தேசியக் கொடிபெருமாள் திருமொழிகாமம்சுரதாஏறுதழுவல்பண்பாடுதகவல் தொழில்நுட்பம்முக்கூடற் பள்ளுகுறவஞ்சிகண் கண்ட தெய்வம்இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)சுற்றுலாபீப்பாய்நெடுநல்வாடைமலையாளம்சேரர்கட்டுரைநாலடியார்ஆரணி (சட்டமன்றத் தொகுதி)சுய இன்பம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வெண்குருதியணுமனித உரிமைநவக்கிரகம்🡆 More