சமந்தா ருத் பிரபு: அழகிய இந்திய நடிகை

சமந்தா ருத் பிரபு (Samantha Ruth Prabhu, பிறப்பு: ஏப்ரல் 28, 1987) இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார்.

இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். 2007இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார். இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் (2010), தூக்குடு (2011), சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு (2012), அத்தாரிண்டிகி தாரேதி (2013), கத்தி (2014) போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவரது அழகும் துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் வைத்திருக்கின்றன.

சமந்தா ருத் பிரபு
சமந்தா ருத் பிரபு: ஆரம்பகால வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, திருமண வாழ்க்கை
பிறப்புசமந்தா ருத் பிரபு
ஏப்ரல் 28, 1987 (1987-04-28) (அகவை 36)
பல்லவபுரம், மெட்ராஸ், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்யசோதா
கல்விஇளநிலை வணிகம்
படித்த கல்வி நிறுவனங்கள்ஸ்டெல்லா மேரிக் கல்லூரி, சென்னை
பணிநடிகை, உருமாதிரிக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2007 - தற்போது வரை
சமயம்கிறித்தவம்
வாழ்க்கைத்
துணை
நாக சைதன்யா (தி. 2017⁠–⁠2021)
கையொப்பம்சமந்தா ருத் பிரபு: ஆரம்பகால வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, திருமண வாழ்க்கை

ஆரம்பகால வாழ்க்கை

சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு. இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொழில் வாழ்க்கை

கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன் கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு இருந்தது. அத்திரைப்படத்திற்காக ஆகஸ்ட் 2009-தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார், அத்திரைப்படம் பிப்ரவரி 16, 2010-ல் வெளியானது. இவர் ஜெஸ்ஸி என்னும் ஐதராபாத்தில் வசிக்கும் மலையாள கிருத்துவ பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியான பிறகு, சமந்தாவின் நடிப்பை பாராட்டி நாளிதழ்களில் வரத்துவங்கியது. சிபி (Sify) உட்பட பல இணையத்தளத்தில் இவரை "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்"("scene-stealer") என்றும் அவருடைய அழகு, "கவர்ந்திழுப்பதாகவும்" ("is alluring"), என சிபியில் இவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தது.

அதன்பிறகு ஏ. ஆர். ரகுமான் இசையில், கௌதம் மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் தோன்றினார்.

திருமண வாழ்க்கை

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது. பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா நந்தினி தமிழ் சிறப்புத் தோற்றம்
2010 ஏ மாய சேசாவே ஜெஸ்ஸி தெலுங்கு சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது
நந்தி சிறப்பு நடுவர் விருது
2010 பாணா காத்தாடி பிரியா தமிழ் பரிந்துரை - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது
2010 மாஸ்கோவின் காவிரி காவேரி தங்கவேலு தமிழ்
2010 பிருந்தாவனம் இந்து தெலுங்கு
2011 நடுநிசி நாய்கள் தமிழ் சிறப்புத் தோற்றம்
2011 தூக்குடு பிரசாந்தி தெலுங்கு
2012 ஏக் தீவானா தா சமந்தா இந்தி சிறப்புத் தோற்றம்
2012 ஈகா பிந்து தெலுங்கு
2012 நான் ஈ தமிழ்
2012 நீ தானே என் பொன்வசந்தம் நித்யா வாசுதேவன் தமிழ்
2012 யேடோ வெல்லிப்போயிந்தி மனசு தெலுங்கு
2012 அஸ்ஸி நப்பே பூரே சாவ் இந்தி
2012 ஆட்டோநகர் சூர்யா சிரிசா தெலுங்கு
2012 சீதம்மா வகித்லோ சிரிமல்லே சேத்து கீதா தெலுங்கு
2012 யெவடு தெலுங்கு
2014 கத்தி தமிழ்
2015 10 என்றதுக்குள்ள தமிழ்
2015 தங்கமகன் தமிழ்
2015 தெறி மித்ரா தமிழ்
2016 24 சத்யா எ சத்தியபாமா தமிழ், தெலுங்கு குரல்: பாடகி சின்மயி

விருதுகள்

ஆண்டு விருது விருது பெற்றது திரைப்படம் முடிவு
2011 சினிமா விருதுகள் (CineMAA Awards) சிறந்த அறிமுக நடிகை ஏ மாய சேசாவே வெற்றி
தென்னிந்திய பிலிம்பேர் விருது சிறந்த நடிகை (தெலுங்கு) பரிந்துரை
சிறந்த அறிமுக நடிகை வெற்றி
நந்தி விருது நந்தி சிறப்பு நடுவர் விருது வெற்றி
டி. எஸ். ஆர் தொலைக்காட்சி-9 திரைப்பட விருது டி. எஸ். ஆர் தொலைக்காட்சி-9 சிறந்த கதாநாயகி விருது வெற்றி
விஜய் விருதுகள் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது பாணா காத்தாடி பரிந்துரை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சமந்தா ருத் பிரபு ஆரம்பகால வாழ்க்கைசமந்தா ருத் பிரபு தொழில் வாழ்க்கைசமந்தா ருத் பிரபு திருமண வாழ்க்கைசமந்தா ருத் பிரபு திரைப்படங்கள்சமந்தா ருத் பிரபு விருதுகள்சமந்தா ருத் பிரபு மேற்கோள்கள்சமந்தா ருத் பிரபு வெளி இணைப்புகள்சமந்தா ருத் பிரபு19872007அத்தாரிண்டிகி தாரேதிஇந்தியத் திரைப்படத்துறைஏப்ரல் 28கத்தி (திரைப்படம்)சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுசீத்தம்மா வகிட்டிலோ சிரிமல்லி செட்டுசென்னைதமிழ்த் திரைப்படத்துறைதூக்குடுதெலுங்குதெலுங்குத் திரைப்படத்துறைநடிகர்பிருந்தாவனம்மலையாளம்மாஸ்கோவின் காவிரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபிகன்னி (சோதிடம்)ஐக்கிய நாடுகள் அவைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்புவிமணிமேகலை (காப்பியம்)தமிழர் பருவ காலங்கள்மனித மூளைஅழகர் கோவில்நீர்நிலைஏப்ரல் 26மண்ணீரல்சிவபெருமானின் பெயர் பட்டியல்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தாயுமானவர்மதுரைநவக்கிரகம்போயர்அக்கிகாதல் தேசம்தமிழ்திருப்பாவைதமிழர் தொழில்நுட்பம்பழமுதிர்சோலை முருகன் கோயில்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கிறிஸ்தவம்அன்புமணி ராமதாஸ்காடுவெட்டி குருசுற்றுச்சூழல்மயங்கொலிச் சொற்கள்நயன்தாராநீதிக் கட்சிபோதைப்பொருள்தேஜஸ்வி சூர்யாஏலாதிவேற்றுமைத்தொகைஇந்தியாஇலங்கைகலாநிதி மாறன்அரிப்புத் தோலழற்சிசட் யிபிடிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்புலிநேர்பாலீர்ப்பு பெண்பிரேமலுஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பத்துப்பாட்டுஇந்திய உச்ச நீதிமன்றம்ஜெயகாந்தன்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)புனித யோசேப்புதிருமங்கையாழ்வார்கோவிட்-19 பெருந்தொற்றுதைப்பொங்கல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்மாதவிடாய்தனுசு (சோதிடம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகண்ணதாசன்அறம்இந்திய நிதி ஆணையம்பறவைக் காய்ச்சல்பீனிக்ஸ் (பறவை)அறுவகைப் பெயர்ச்சொற்கள்தொழிலாளர் தினம்சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்விடு தூதுமாற்கு (நற்செய்தியாளர்)முல்லை (திணை)தமிழர் அணிகலன்கள்பொருநராற்றுப்படைதொலைக்காட்சி🡆 More