2014 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியப் பொதுத் தேர்தல் 2014 (Indian general election of 2014) இந்தியாவின் 16வது மக்களவையைக்கான 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களில் நடைபெற்றது.

இந்திய வரலாற்றில் 1951க்கு பிறகு, அதிக நாட்கள், பல்வேறு கட்டங்களாக, வாக்குப்பதிவு நடைபெற்ற தேர்தல், இது ஆகும். இதற்கு முன் அதிக நாட்கள் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்களுக்கு நடந்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, இத்தேர்தலில் 814.5 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றதால் இது உலகின் மிகப் பெரிய தேர்தல் ஆகவும் கணிக்கப்படுகிறது. 2009 தேர்தலுக்குப் பின்னர் 100 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்கத் தகுதி பெற்றனர். 543 தொகுதிகளுக்கு மொத்தமாக 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்தியப் பொதுத் தேர்தல், 2014
2014 இந்தியப் பொதுத் தேர்தல்
← 2009 7 ஏப்ரல் – 12 மே 2014 2019 →

மக்களவையின் 543 இடங்களுக்கு

272 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
பதிவு செய்தோர்834,082,814
வாக்களித்தோர்66.44% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 8.23 pp
  First party Second party Third party
  2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2014 இந்தியப் பொதுத் தேர்தல்
தலைவர் நரேந்திர மோதி ராகுல் காந்தி ஜெயலலிதா
கட்சி பா.ஜ.க காங்கிரசு அஇஅதிமுக
கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -
தலைவரான
ஆண்டு
10 சூன் 2013 19 சனவரி 2013 9 பிப்ரவரி 1989
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
வடோதரா, வாரணாசி அமேதி -
முந்தைய
தேர்தல்
116 206 9
வென்ற
தொகுதிகள்
282 44 37
மாற்றம் 2014 இந்தியப் பொதுத் தேர்தல்166 2014 இந்தியப் பொதுத் தேர்தல்162 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 28
மொத்த வாக்குகள் 171,660,230 106,935,942 18,111,579
விழுக்காடு 31.0% 19.4% 3.27%
மாற்றம் 2014 இந்தியப் பொதுத் தேர்தல்12.20% 2014 இந்தியப் பொதுத் தேர்தல்9.24% 2014 இந்தியப் பொதுத் தேர்தல்1.60%

2014 இந்தியப் பொதுத் தேர்தல்
தேசிய மற்றும் பிராந்திய வாரியாக கூட்டணிகளின் முடிவுகள்
16வது மக்களவை
16வது மக்களவை

முந்தைய பிரதமர்

மன்மோகன் சிங்
காங்கிரசு

பிரதமராகத் தெரிவு

நரேந்திர மோதி
பாஜக

பதினைந்தாவது மக்களவையின் பதவிக்காலம் மே 31 இல் முடிவடைவதற்கு 15 நாட்களுக்கு முன்னர், 2014 மே 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 989 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டன. சராசரியாக 66.38 வீதமானோர் இத்தேர்தலில் வாக்களித்தனர். இம்முறையே இந்தியத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமாக வாக்களிக்கப்பட்டது. தேசிய சனநாயகக் கூட்டணி 336 தொகுதிகளைக் கைப்பற்றியது. இக்கூட்டணியின் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மையைப் பெற்றது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 59 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. இவற்றில் இந்திய தேசிய காங்கிரசு 44 இடங்களைக் கைப்பற்றியது.

குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் 34 விழுக்காட்டினர் குற்ற வழக்குகளில் தொடர்புடையர்கள் என தேர்தல் ஆணையத்திடம் தாங்களே அறிவித்துள்ளனர்.

பின்னணி

இந்திய அரசியலமைப்பின் படி, மக்களவைக்கான தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் முன்கூட்டியே கலைக்கும் போது நடைபெறுகின்றன. 15வது மக்களவைக்காக நடத்தப்பட்ட முந்தைய தேர்தல் 2009 ஏப்ரல்-மே மாதங்களில் இடம்பெற்றன. இதன் காலம் 2014 மே 31 இல் முடிவடைய வேண்டும். 16வது மக்களவைக்கான தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தால் முதற்தடவையாக ஒன்பது கட்டங்களாக நடத்தப்பட்டன.

2009 தேர்தல்களின் பின்னர் அண்ணா அசாரே தலைமையில் நடத்தப்பட்ட இலஞ்ச ஒழிப்பு இயக்கம், மற்றும் ராம்தேவ் சுவாமிகள், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரால் நடத்தப்பட்ட இதே போன்ற போராட்டங்கள் நாட்டில் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தன. கெச்ரிவால் 2012 இல் ஆம் ஆத்மி கட்சி என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்க தெலுங்கானா இயக்கம் நடத்தப்பட்டது. ஆந்திரா முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் இறப்பை அடுத்து ஆந்திராவிலும் அரசியல் குழப்ப நிலை உருவானது. அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்தார்.

15வது மக்களவையின் கடைசி அமர்வு 2014 பெப்ரவரி 6 இல் ஆரம்பித்து பெப்ரவரி 21 இல் முடிவடைந்தது. கடைசி அமர்வில் ஊழலைக் கட்டுப்படுத்தும் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் அட்டவணை

தேர்தல் ஏப்பிரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெற்றன

மாநிலம் / யூனியன் பிரதேசம் மொத்தத் தொகுதிகள் தேர்தல் கட்டங்களும், தேதிகளும்
  • கட்டம் 1
  • ஏப்ரல் 7, 2014
  • கட்டம் 2
  • ஏப்ரல் 9, 2014
  • கட்டம் 3
  • ஏப்ரல் 10, 2014
  • கட்டம் 4
  • ஏப்ரல் 12, 2014
  • கட்டம் 5
  • ஏப்ரல் 17, 2014
  • கட்டம் 6
  • ஏப்ரல் 24, 2014
  • கட்டம் 7
  • ஏப்ரல் 30, 2014
  • கட்டம் 8
  • மே 07, 2014
  • கட்டம் 9
  • மே 12, 2014
ஆந்திரா 42 - - - - - - 17 25 -
அருணாச்சலப் பிரதேசம் 2 - 2 - - - - - - -
அசாம் 14 5 - - 3 - 6 - - -
பீகார் 40 - - 6 - 7 7 7 7 6
சத்தீஸ்கர் 11 - - 1 - 3 7 - - -
கோவா 2 - - - 2 - - - -
குஜராத் 26 - - - - - - 26 - -
அரியானா 10 - - 10 - - - - - -
இமாசலப் பிரதேசம் 4 - - - - - - - 4 -
ஜம்மு & காஷ்மீர் 6 - - 1 - 1 1 1 2 -
ஜார்கந்த் 14 - - 5 - 5 4 - - -
கர்நாடகா 28 - - - - 28 - - - -
கேரளா 20 - - 20 - - - - - -
மத்தியப் பிரதேசம் 29 - - 9 - 10 10 - - -
மகாராஷ்டிரா 48 - - 10 - 19 19 - - -
மணிப்பூர் 2 - 1 - - 1 - - - -
மேகாலயா 2 - 2 - - - - - - -
மிசோரம் 1 - 1 - - - - - - -
நாகலாந்து 1 - 1 - - - - - - -
ஒடிசா 21 - - 10 - 11 - - - -
பஞ்சாப் 13 - - - - - - 13 - -
ராஜஸ்தான் 25 - - - - 20 5 - - -
சிக்கிம் 1 - - - 1 - - - - -
தமிழ்நாடு 39 - - - - - 39 - - -
திரிபுரா 2 1 - - 1 - - - - -
உத்தரப் பிரதேசம் 80 - - 10 - 11 12 14 15 18
உத்தராகண்டம் 5 - - - - - - - 5 -
மேற்கு வங்கம் 42 - - - - 4 6 9 6 17
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 - - 1 - - - - - -
சண்டிகர் 1 - - 1 - - - - - -
தாத்ரா நகர் ஹாவேலி 1 - - - - - - 1 - -
தாமன் தையு 1 - - - - - - 1 - -
இலட்சத்தீவுகள் 1 - - 1 - - - - - -
டெல்லி 7 - - 7 - - - - - -
புதுச்சேரி 1 - - - - - 1 - - -
வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகள் 543 6 7 92 7 122 117 89 64 41
2014 இந்தியப் பொதுத் தேர்தல் 
எந்தெந்தக் கட்டங்களில், மாநிலங்களின் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது என்பதனைக் காட்டும் புவியியல் வரைபடம்

இந்தியத் தேர்தல் ஆணையம் மிசோரமின் தேர்தல் தேதியை ஏப்பிரல் 9 லிருந்து ஏப்பிரல் 11க்கு மாற்றியது.

கூட்டணி

ஆம் ஆத்மி கட்சி

  • ஆம் ஆத்மி கட்சி தங்கள் சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.
  • ஆஆகட்சி இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தங்கள் சார்பில் போட்டியிடும் 30 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.
  • இதன் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் போட்டியிடும் 20 தொகுதிகளும் அவற்றுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்
  • நான்காவது வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது.
  • ஐந்தாவது வேட்பாளர் பட்டியலில் 50 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • ஆறாவது வேட்பாளர் பட்டியலில் 55 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • ஏழாவது வேட்பாளர் பட்டியலில் 26 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • எட்டாவது வேட்பாளர் பட்டியலில் 19 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • ஒன்பதாவது வேட்பாளர் பட்டியலில் 30 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • பத்தாவது வேட்பாளர் பட்டியலில் 22 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • பதினொன்றாவது வேட்பாளர் பட்டியலில் 11 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • பன்னிரெண்டாவது வேட்பாளர் பட்டியலில் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • பதிமூன்றாவது வேட்பாளர் பட்டியலில் 22 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
  • பதினான்காவது வேட்பாளர் பட்டியலில் 19 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்

காங்கிரசு

  • காங்கிரசு மகாராட்டிரத்தில் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது.
  • பீகாரில் இராச்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
  • காங்கிரசு தன் முதல் வேட்பாளர் பட்டியலில் 194 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. நந்தன் நிலெக்கணி, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
  • காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த மத்தியப் பிரதேச இண்ட் தொகுதி வேட்பாளர் பாக்கிரத் பிரசாத் வேட்பாளர் பட்டியல் வெளியான பின் பாசகவில் இணைந்தார்.
  • இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
  • 58 பேர் உடைய மூன்றாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது .
  • 50 பேர் உடைய நான்காவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது
  • 26 பேர் உடைய ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது
  • 16 பேர் உடைய ஆறாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது
  • 12 பேர் உடைய ஏழாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது

பாஜக

  • பாஜக தங்கள் சார்பில் போட்டியிடும் 54 தொகுதிகளையும் அவற்றுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது.
  • இரண்டாவது பட்டியலில் எதியூரப்பா உள்ளிட வேட்பாளர்கள் 52 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டனர்.
  • 97 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • 93 பேர் கொண்ட நான்காவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது
  • 67 பேர் கொண்ட ஐந்தாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது
  • 14 பேர் கொண்ட ஆறாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது
  • 14 பேர் கொண்ட ஏழாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது
  • கோவா விகாஷ் கட்சி பாசகவுக்கு ஆதரவு தெரிவித்தது.

பொதுவுடமைவாதிகள்

மூன்றாவது அணி

காங்கிரசு, பாசக கூட்டணியில் அல்லாத அதிமுக, சமாஜ்வாதி கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), ஜனதா தளம் (மதசார்பற்ற), ஜனதா தளம் (ஐக்கிய), பிஜு ஜனதா தளம், அசாம் கன பரிசத், பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிசக் கட்சி, ஜார்கண்ட் விகாஷ் மோர்சா ஆகிய 11 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளன.

மாநிலங்கள்

தமிழ்நாடு

கேரளா

மகாராட்டிரம்

பீகார்

  • 2002ல் பாசக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய இராம்விலாஸ் பாசுவானின் லோக் சனசக்தி கட்சி பாசகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க உள்ளது.
  • காங்கிரசும் இராச்டிரிய ஜனதா தளமும் தேசியவாத காங்கரசும் கூட்டணி உடன்பாடு கண்டன. இதன் படி காங்கிரசு 12 தொகுதியிலும் தேசியவாத காங்கிரசு ஒரு தொகுதியிலும் இராச்டிரிய ஜனதா தளம் 27 தொகுதியிலும் போட்டியிடும்.
  • ஜனதாதளம் (ஐக்கிய) முதல் பட்டியலில் 15 வேட்பாளர்களை அறிவித்தது.

உத்திரப் பிரதேசம்

  • சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் எதிர்த்து வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி நிறுத்தாது என்று உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்
  • காங்கிரசு ராஷ்டிரிய லோக்தளத்திற்கு 8 தொகுதிகளையும் அப்னா தளத்திற்கு 3 தொகுதிக்களையும் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் ஒதுக்கியது
  • பகுஜன் சமாஜ் கட்சி 80 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

மேற்கு வங்காளம்

  • பாசக வட வங்காள கட்சியான கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவுடன் உடன்பாடு கண்டது.

ஒடியா

  • இங்கு மக்களவைத்தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. பிஜு ஜனதா தளம் தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அரியானா

இந்திய தேசிய லோக்தளம் அரியானாவின் பத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அரியானாவின் 10 தொகுதிகளில் பாசக 8 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான அரியானா ஜாங்கிட் காங்கிரசு 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

ஆந்திரப் பிரதேசம்

பாசகவும் தெலுங்கு தேசமும் இணைந்து போட்டியிடுகின்றன. தெலுங்கானாவில் பாசக 8 மக்களவை தொகுதிகளிலும் 47 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும். சீமாந்திராவில் பாசக 5 மக்களவை தொகுதிகளிலும் 15 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும்

வாக்குப்பதிவு

முதற்கட்டம்

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
அசாம் 5 76
திரிபுரா 1 85

இரண்டாம் கட்டம்

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
நாகலாந்து 1 84.64
மணிப்பூர் 1 77.43
மேகாலயா 2 66
அருணாச்சலப் பிரதேசம் 2 71

மூன்றாம் கட்டம்

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
பீகார் 6 எடுத்துக்காட்டு
சத்தீஸ்கர் 1 51.4
அரியானா 10 73
ஜம்மு & காஷ்மீர் 1 68
ஜார்கந்த் 5 58
கேரளா 20 73.4
மத்தியப் பிரதேசம் 9 54.98
மகாராஷ்டிரா 10 54.13
ஒடிசா 10 67
உத்தரப் பிரதேசம் 10 65
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 67
சண்டிகர் 1 74
இலட்சத்தீவுகள் 1 71.34
டெல்லி 7 64

மிசோரம்

மிசோரமின் ஒரு மக்களவைத்தொகுதிக்கு ஏப்பிரல் 11 அன்று நடந்த தேர்தலில் 61.70% வாக்குகள் பதிவாகின. ஏப்பிரல் 11 அன்று மிசோரமில் மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது.

நான்காம் கட்டம்

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
கோவா 2 75
அசாம் 3 75
திரிபுரா 1 81.8
சிக்கிம் 1 76

ஐந்தாம் கட்டம்

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
பீகார் 7 56
சத்தீஸ்கர் 3 63.44
ஜம்மு & காஷ்மீர் 1 69
ஜார்கந்த் 5 62
கர்நாடகா 28 67.28%
மத்தியப் பிரதேசம் 10 54
மகாராஷ்டிரா 19 62
மணிப்பூர் 1 74
ஒடிசா 11 73.4%
ராஜஸ்தான் 20 63.26
உத்தரப் பிரதேசம் 11 63
மேற்கு வங்கம் 4 79

ஆறாம் கட்டம்

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
அசாம் 6 77.05
பீகார் 7 60
சத்தீஸ்கர் 7 66
ஜம்மு & காஷ்மீர் 1 28
ஜார்கந்த் 4 63.55
மத்தியப் பிரதேசம் 10 64.4
மகாராஷ்டிரா 19 55.33
ராஜஸ்தான் 5 59.2
தமிழ்நாடு 39 73.67%
உத்தரப் பிரதேசம் 12 60.2
மேற்கு வங்கம் 6 82
புதுச்சேரி 1 83

ஏழாம் கட்டம்

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் 17 70
பீகார் 7 60
குசராத் 26 62
ஜம்மு & காஷ்மீர் 1 25.62
பஞ்சாப் 13 73
உத்தரப் பிரதேசம் 14 57.1
மேற்கு வங்கம் 9 81
தாத்ரா நகர் ஹாவேலி 1 85
தாமன் தையு 1 76

எட்டாம் கட்டம்

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் 25 76
பீகார் 7 58
இமாசலப் பிரதேசம் 4 65
ஜம்மு & காஷ்மீர் 2 39.6
உத்தரப் பிரதேசம் 15 55.52
உத்தராகண்டம் 5 62
மேற்கு வங்கம் 6 81

ஒன்பதாம் கட்டம்

மாநிலம் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
பீகார் 6 58
உத்தரப் பிரதேசம் 18 55.29
மேற்கு வங்கம் 17 79.96

இந்தியஅளவில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம்

9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள இந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பது, சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்

இதற்கு முன்பு அதிக அளவாக, கடந்த 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன

தேர்தல் செலவு

16-வது இந்திய மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு இந்திய நடுவண் அரசு 3,426 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இத்தொகை கடந்த மக்களவை தேர்தல் நடத்துவதற்கு ஆனதைக் காட்டிலும் 131 விழுக்காடு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகையில் தேர்தல் பாதுகாப்புச் செலவு சேர்க்கப்படவில்லை. தேர்தல் பாதுகாப்புச் செலவினை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக் கொண்டன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்

தேர்தல் ஆணையத்தின் கட்டளைப்படி இந்திய மக்களவைத் தேர்தல் 2014 முடிந்த நாளான மே மாதம், 12-ஆம் நாள், மாலை 6.30க்கு பின் செய்தி ஊடகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின.

நிறுவனம் வெளியான நாள் வெற்றி கணிப்புகள்
சிஎன்என்-ஐபிஎன் 12 மே 2014 பஜக+276 (±6), காங்கிரஸ் + 97 (±5), மற்றவர்கள் 148 (±23)
இந்தியா டூடே 12 மே 2014 பஜக+ 272 (±11), காங்கிரஸ்+ 115 (±5), மற்றவர்கள் 156 (±6)
டைம்ஸ் நவ்+ஓஆர்ஜி 12 மே 2014 பஜக+ 249, காங்கிரஸ்+ 148, மற்றவர்கள் 146
ஏபிப்பி நியுஸ்+நீல்சென் 12 மே 2014 பஜக+ 274, காங்கிரஸ்+ 97, மற்றவர்கள் 165
இந்தியா டி.வி + சிவோட்டர் 12 மே 2014 பஜக+ 289, காங்கிரஸ்+ 101, மற்றவர்கள் 148
நியுஸ் 24+சாணக்கியா[ 12 மே 2014 பஜக+ 340 (±14), காங்கிரஸ்+ 70 (±9), மற்றவர்கள் 133 (±11)
தேர்தல்களின் தேர்தல் 12 மே 2014 பஜக+ 283, காங்கிரஸ்+105, மற்றவர்கள் 149

தேர்தல் முடிவுகள்

விரிவான தரவுகளுக்கு -

336 147 60
தேஜகூ ஏனைய ஐமுகூ
கட்சி பாஜக இதேகா அதிமுக அஇதிகா பிஜத சிசே தெதேக
தலைவர் நரேந்திர மோதி ராகுல் காந்தி ஜெ. ஜெயலலிதா மம்தா பானர்ஜி நவீன் பட்நாய்க் உதாவ் தாக்கரே சந்திரபாபு நாயுடு
2014 இந்தியப் பொதுத் தேர்தல்  2014 இந்தியப் பொதுத் தேர்தல்  2014 இந்தியப் பொதுத் தேர்தல்  2014 இந்தியப் பொதுத் தேர்தல் 
வாக்குகள் 31.0%, 171,637,684 19.3%, 106,935,311 3.3%, 18,115,825 3.8%, 21,259,681 1.7%, 9,491,497 1.9%, 10,262,982 2.5%, 14,094,545
தொகுதிகள் 282 (51.9%) 44 (8.1%) 37 (6.8%) 34 (6.2%) 20 (3.6%) 18 (3.3%) 16 (2.9%)
282 / 543
44 / 543
37 / 543
34 / 543
20 / 543
18 / 543
16 / 543


2014 இந்தியப் பொதுத் தேர்தல் 

தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

  தேசகூ (31.0%)
  ஐமுகூ (19.3%)
  பசக (4.1%)
  திக (3.8%)
  சக (3.4%)
  ஏனைய (31.8%)

கட்சி வாரியாக வெற்றி விவரம்

[உரை] – [தொகு]
2014 இந்தியப் பொதுத்தேர்தல் முடிவுகளின் விவரம்
கட்சி வாக்குகள் தொகுதிகள்
எண் % +/- எண் +/- %
பாரதிய ஜனதா கட்சி BJP 171,657,549 31.0% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 12.2% 282 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 166 51.9%
இந்திய தேசிய காங்கிரசு INC 106,938,242 19.3% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 9.3% 44 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 162 8.1%
அண்ணா திமுக ADMK 18,115,825 3.3% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 1.6% 37 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 28 6.8%
திரிணாமுல் காங்கிரசு AITC 21,259,684 3.8% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.6% 34 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 15 6.3%
பிஜு ஜனதா தளம் BJD 9,491,497 1.7% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 20 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 6 3.7%
சிவ சேனா SHS 10,262,982 1.9% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.3% 18 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 7 3.3%
தெலுங்கு தேசம் கட்சி TDP 14,094,545 2.5% 16 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 10 2.9%
தெலுங்கானா இராஷ்டிர சமிதி TRS 6,736,490 1.2% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.6% 11 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 9 2.0%
மார்க்சியக் கம்யூனிசக் கட்சி CPM 17,986,773 3.2% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2.1% 9 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 7 1.7%
ஒய்எஸ்ஆர் காங்கிரசு YSRCP 13,991,280 2.5% New 9 New 1.7%
தேசியவாத காங்கிரசு கட்சி NCP 8,635,554 1.6% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.4% 6 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 3 1.1%
லோக சனசக்தி கட்சி LJP 2,295,929 0.4% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 6 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 6 1.1%
சமாஜ்வாதி கட்சி SP 18,672,916 3.4% 5 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 18 0.9%
ஆம் ஆத்மி கட்சி AAP 11,325,635 2.0% New 4 New 0.7%
இராச்டிரிய ஜனதா தளம் RJD 7,442,323 1.3% 4 0.7%
அகாலி தளம் SAD 3,636,148 0.7% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.3% 4 0.7%
அனைத்திந்திய ஐக்கிய சனநாயக முன்னணி AIUDF 2,333,040 0.4% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 3 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2 0.6%
ராச்டிரிய லோக் சமதா கட்சி RLSP 1,078,473 0.2% New 3 New 0.6%
ஐக்கிய ஜனதா தளம் JD(U) 5,992,196 1.1% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.4% 2 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 18 0.4%
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) JS(S) 3,731,481 0.7% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 2 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 1 0.4%
இந்திய தேசிய லோக் தள் INLD 2,799,899 0.5% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.2% 2 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2 0.4%
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா JMM 1,637,990 0.3% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 2 0.4%
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் IUML 1,100,096 0.2% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.2% 2 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2 0.4%
அப்னா தள் AD 821,820 0.1% 2 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2 0.4%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி CPI 4,327,297 0.8% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.6% 1 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 3 0.2%
பாட்டாளி மக்கள் கட்சி PMK 1,827,566 0.3% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.2% 1 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 1 0.2%
Revolutionary Socialist Party RSP 1,666,380 0.3% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 1 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 1 0.2%
சுவாபிமானி பக்ச SWP 1,105,073 0.2% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 1 0.2%
நாகாலாந்து மக்கள் முன்னணி NPF 994,505 0.2% 1 0.2%
பகுஜன் சமாஜ் கட்சி BSP 22,946,182 4.1% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2.1% 0 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 21 0.0%
திராவிட முன்னேற்றக் கழகம் DMK 9,636,430 1.7% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 0 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 18 0.0%
தேசிய முற்போக்கு திராவிட கழகம் DMDK 2,079,392 0.4% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.4% 0 0.0%
சார்க்கந்து விகாசு மோக்சா JVM 1,579,772 0.3% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 0 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 1 0.0%
மறுமலர்ச்சி திமுக MDMK 1,417,535 0.4% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 0 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 1 0.0%
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு AIFB 1,211,418 0.2% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 0.1% 0 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2 0.0%
கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிய) விடுதலை CPI(ML)(L) 1,007,274 0.2% 0 0.0%
பகுஜன் முக்தி கட்சி BMP 785,358 0.1% 0 0.0%
சுயேட்சை IND 16,743,719 3.0% 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 2.2% 3 2014 இந்தியப் பொதுத் தேர்தல் 6 0.6%
ஏனையோர் 8 1.4%
நோட்டா NOTA 6,000,197 1.1% புதியது 0 புதியது 0.0%
செல்லுபடியான வாக்குகள் 100.00% 543 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த வாக்குகள் 66.4%
பதிவு செய்த வாக்காளர்கள்
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம்


வேறு தகவல்கள்

  • 1952 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மிகக் குறைந்தளவு முஸ்லிம் உறுப்பினர்கள் 2014 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 16வது மக்களவை 24 முசுலிம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இது 15வது மக்களவை முசுலிம் உறுப்பினர்களை விட 6 குறைவாகும். மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இது 4.4 விழுக்காடாகும். 1952 தேர்தலில் 4.3% முசுலிம்கள் வெற்றி பெற்றனர். இவ்வெண்ணிக்கை பின்னர் 5 முதல் 6 வீதம் வரை அதிகரித்து 1980 தேர்தலில் 9.3 வீதமாக அதிகரித்தது. அப்போது 49 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இந்திய தேசிய காங்கிரசு தமிழ்நாட்டில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் கட்டுப்பணத்தை இழந்தது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட குஜராத், இராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், தில்லி, இமாசல பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகண்ட், ஒடிசா, சீமாந்திரா (சூன் முதல் இது புதிய மாநிலமாக உருவாகிறது) மற்றும் கோவா முதலிய மாநிலங்களில் எத்தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.[சான்று தேவை]
  • பாரதிய சனதாவின் 7 முசுலிம் வேட்பாளர்களில் ஒருவரும் வெற்றிபெற வில்லை. கூட்டணி கட்சியான லோக் ஜன சக்தி சார்பில் ஒரு முசுலிம் வேட்பாளர் வெற்றிபெற்றார்.

நோட்டா வாக்குகள்

இதையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Tags:

2014 இந்தியப் பொதுத் தேர்தல் குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்2014 இந்தியப் பொதுத் தேர்தல் பின்னணி2014 இந்தியப் பொதுத் தேர்தல் தேர்தல் அட்டவணை2014 இந்தியப் பொதுத் தேர்தல் கூட்டணி2014 இந்தியப் பொதுத் தேர்தல் மாநிலங்கள்2014 இந்தியப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு2014 இந்தியப் பொதுத் தேர்தல் இந்தியஅளவில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம்2014 இந்தியப் பொதுத் தேர்தல் தேர்தல் செலவு2014 இந்தியப் பொதுத் தேர்தல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்2014 இந்தியப் பொதுத் தேர்தல் தேர்தல் முடிவுகள்2014 இந்தியப் பொதுத் தேர்தல் வேறு தகவல்கள்2014 இந்தியப் பொதுத் தேர்தல் இதையும் காண்க2014 இந்தியப் பொதுத் தேர்தல் மேற்கோள்கள்2014 இந்தியப் பொதுத் தேர்தல் உசாத்துணை2014 இந்தியப் பொதுத் தேர்தல் வெளியிணைப்புகள்2014 இந்தியப் பொதுத் தேர்தல்இந்தியத் தேர்தல் ஆணையம்இந்தியப் பொதுத் தேர்தல், 2009இந்தியாமக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மட்பாண்டம்மதீச பத்திரனகட்டுவிரியன்செரால்டு கோட்சீதிருத்தணி முருகன் கோயில்ஹாட் ஸ்டார்தங்கர் பச்சான்நெடுநல்வாடைசாகித்திய அகாதமி விருதுஅரிப்புத் தோலழற்சிஉருவக அணிஇதயம்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுநான்மணிக்கடிகைஉரைநடைஅகோரிகள்மண்ணீரல்தமிழ் இலக்கியப் பட்டியல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பறையர்69 (பாலியல் நிலை)பரணி (இலக்கியம்)அகநானூறுஅஸ்ஸலாமு அலைக்கும்சுவாதி (பஞ்சாங்கம்)திருவாரூர் தியாகராஜர் கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்இனியவை நாற்பதுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்முல்லை (திணை)வே. தங்கபாண்டியன்ஈரோடு மக்களவைத் தொகுதிதவக் காலம்போக்கிரி (திரைப்படம்)ஹோலிநபிகலைச்சொல்நாயன்மார் பட்டியல்இராசேந்திர சோழன்திருமுருகாற்றுப்படைதமன்னா பாட்டியாஊராட்சி ஒன்றியம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மணிமேகலை (காப்பியம்)மலக்குகள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நாளந்தா பல்கலைக்கழகம்ஆறுமுக நாவலர்அகழ்வாய்வுஐராவதேசுவரர் கோயில்இந்திய உச்ச நீதிமன்றம்மு. கருணாநிதிகல்விபுறநானூறுவிசுவாமித்திரர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்இந்திய ரூபாய்தமிழ் தேசம் (திரைப்படம்)வட்டாட்சியர்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வயாகராதமிழர் அளவை முறைகள்எயிட்சுமுகலாயப் பேரரசுபங்குனி உத்தரம்மயில்பீப்பாய்சினைப்பை நோய்க்குறிஎம். கே. விஷ்ணு பிரசாத்செயற்கை நுண்ணறிவுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅதிதி ராவ் ஹைதாரிஅறுசுவைகிராம ஊராட்சிவைகோபித்தப்பைசூரரைப் போற்று (திரைப்படம்)🡆 More