சிவ சேனா: இந்திய அரசியல் கட்சி

சிவ சேனா (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும்.

சிவ சேனா என்பது சிவாவின் படைகள் என்னும் பொருள்படும். இங்கே சிவா என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான சிவாஜியைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று பால் தாக்கரேவால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரே ஆவார். மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி தொடக்க காலத்தில் தென் இந்தியர்களுக்கு எதிராக மும்பை நகரில் நடந்த பல கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.

சிவ சேனா
தலைவர்ஏக்நாத் சிண்டே
நிறுவனர்பால் தாக்கரே
மக்களவைத் தலைவர்விநாயக் பாவுராவ்
தொடக்கம்19 சூன் 1966 (57 ஆண்டுகள் முன்னர்) (1966-06-19)
தலைமையகம்சிவசேனா இல்லம், தாதர், மும்பை, மகாராட்டிரம்
மாணவர் அமைப்புபாரதிய வித்யார்த்தி சேனா (BVS)
இளைஞர் அமைப்புயுவ சேனா
பெண்கள் அமைப்புசிவசேனா மகிளா அகாதி
கொள்கைபழைமைவாதம்
இந்துத்துவம்
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிதேஜகூ (1998–2019)
மகா விகாசு அகாதி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
7 / 545
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
3 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மகாராஷ்டிர சட்டமன்றம்)
16 / 288
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மகாராட்டிரம் மேல்சபை)
15 / 78
தேர்தல் சின்னம்
சிவ சேனா: முதலமைச்சர்கள், கட்சியில் பிளவு, தேர்தல் ஆணயத்தின் அங்கீகாரம்
இணையதளம்
shivsena.org
இந்தியா அரசியல்

பின் இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறிய இக்கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இதன் தேர்தல் சின்னம் வில் - அம்பு ஆகும்.

சிவ சேனாவின் பால் தாக்ரே, பாசகவின் மகாஜன் முயற்சியில் 1989ஆம் ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் 2014 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் 2014, செப்டம்பர் 25 அன்று பாசக- சிவ சேனா கூட்டணி முறிந்ததாக பாசக அறிவித்தது 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள். 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது.

  • 2019 சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் 19வது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2022ல் கட்சியில் பிளவு ஏற்பட்டடது. ஏக்நாத் சிண்டே தலைமையில் மகாராட்டிரா அரசு நிறுவப்பட்டது. பெரும்பாலான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் சிண்டே பக்கம் சென்றனர். தேர்தல் ஆணையம் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவு தான் உண்மையான சிவ சேனா கட்சி என 17 பிப்ரவரி 2023 அன்று அங்கீகாரம் வழங்கியது.

முதலமைச்சர்கள்

முதலமைச்சர் படம் ஆட்சிக்காலம் நாட்கள் இதர பதவிகள்
மனோகர் ஜோஷி
சிவ சேனா: முதலமைச்சர்கள், கட்சியில் பிளவு, தேர்தல் ஆணயத்தின் அங்கீகாரம் 
14.03.1995 - 31.01.1999 1419 நாட்கள் இந்திய மக்களவைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்
நாராயன் ரானே
சிவ சேனா: முதலமைச்சர்கள், கட்சியில் பிளவு, தேர்தல் ஆணயத்தின் அங்கீகாரம் 
01.02.1999 - 17.10.1999 258 நாட்கள் வருவாய்த்துறை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர்
உத்தவ் தாக்கரே
சிவ சேனா: முதலமைச்சர்கள், கட்சியில் பிளவு, தேர்தல் ஆணயத்தின் அங்கீகாரம் 
28.11.2019 - 30.6.22 945 நாட்கள் சிவசேனா தலைவர், சாமனா பத்திரிகை ஆசிரியர்
ஏக்நாத் சிண்டே
சிவ சேனா: முதலமைச்சர்கள், கட்சியில் பிளவு, தேர்தல் ஆணயத்தின் அங்கீகாரம் 
30.6.22 பதவியில் உள்ளார் சிவசேனா தலைவர்

கட்சியில் பிளவு

சூன் 2022-இல் சிவசேனா கட்சியின் பெரும்பான்மையான சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் சிண்டே தலைமையில் சிவ சேனா கட்சியின் தனிப்பிரிவாக செயல்படுவதுடன், மகாராட்டிரா சட்டமன்றத்தில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயர் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் சிண்டே அணியினர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கோரிய நிலைவில், சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயர் 9 அக்டோபர் 2022 அன்று தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இந்நிலையில் அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 3 நவம்பர் 2022 அன்று இடைக்காலத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் 10 அக்டோபர் 2022 அன்று உத்தவ் தாக்கரே பிரிவுக்கு சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) என்றும் மற்றும் தீப்பந்தம் சின்னமும் ஒதுக்கியது.ஏக்நாத் சிண்டே தலைமையிலான கட்சிக்கு இரட்டை வாட்கள் & கேடயம் சின்னமும், கட்சியின் பெயராக பாலாசாகேபஞ்சி சிவ சேனா எனப்பெயர் வழங்கப்பட்டது.

தேர்தல் ஆணயத்தின் அங்கீகாரம்

சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடிகளை பயன்படுத்தும் உரிமையை ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாலாசாகேபஞ்சி சிவ சேனா பிரிவுக்கு மட்டுமே உரியது என இந்தியத் தேர்தல் ஆணையம் 17 பிப்ரவரி 2023 அன்று உத்தரவிட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

சிவ சேனா முதலமைச்சர்கள்சிவ சேனா கட்சியில் பிளவுசிவ சேனா தேர்தல் ஆணயத்தின் அங்கீகாரம்சிவ சேனா இதனையும் காண்கசிவ சேனா மேற்கோள்கள்சிவ சேனாசிவாஜி (மன்னன்)தென்னிந்தியாபால் தாக்கரேமகாராஷ்டிராமும்பை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கெத்சமனிஅண்ணாதுரை (திரைப்படம்)தங்க தமிழ்ச்செல்வன்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்தமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ்ப் புத்தாண்டுமீனா (நடிகை)திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஆடு ஜீவிதம்பாண்டியர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஜெ. ஜெயலலிதாஆத்திசூடிஅப்துல் ரகுமான்இந்திய ரூபாய்மறைமலை அடிகள்பூப்புனித நீராட்டு விழாமுருகன்காரைக்கால் அம்மையார்ம. கோ. இராமச்சந்திரன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தங்கம் (திரைப்படம்)புதுமைப்பித்தன்மரியாள் (இயேசுவின் தாய்)பாண்டவர்கருப்பைகமல்ஹாசன்என்விடியாமீன்நயினார் நாகேந்திரன்திருப்பதிசிவவாக்கியர்தொல்காப்பியம்புனித வெள்ளிசுவாதி (பஞ்சாங்கம்)ஆனந்தம் விளையாடும் வீடுபாஸ்காஅன்னி பெசண்ட்இந்தியாகாதல் (திரைப்படம்)தென்னாப்பிரிக்காநாடாளுமன்ற உறுப்பினர்கட்டுவிரியன்தமிழ்நாடு சட்டப் பேரவைசின்னம்மைமூலம் (நோய்)உ. வே. சாமிநாதையர்புதிய ஏழு உலக அதிசயங்கள்இயேசுவின் இறுதி இராவுணவுஇரட்சணிய யாத்திரிகம்லோ. முருகன்எயிட்சுமூசாதேவேந்திரகுல வேளாளர்சூர்யா (நடிகர்)ரவிச்சந்திரன் அசுவின்பெரிய வியாழன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகாமராசர்சீறாப் புராணம்மொழிகபிலர் (சங்ககாலம்)விராட் கோலிதிராவிட முன்னேற்றக் கழகம்விடுதலை பகுதி 1முக்குலத்தோர்டி. எம். செல்வகணபதிஇந்திய வரலாறுஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தங்கம் தென்னரசுமதுராந்தகம் தொடருந்து நிலையம்போயர்சிற்பி பாலசுப்ரமணியம்வினோஜ் பி. செல்வம்முகலாயப் பேரரசுகலைஞர் மகளிர் உரிமைத் தொகை🡆 More