லோ. முருகன்

லோ.

முருகன் (L. Murugan, லோகநாதன் முருகன்) ஓர் வழக்கறிஞர் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆவார். இவர் தற்போது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.

லோ. முருகன்
லோ. முருகன்
எல். முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 ஜூலை 2021
பிரதமர்நரேந்திர மோடி
அமைச்சர்பர்சோத்தம் ரூபாலா
முன்னையவர்பிரதாப் சந்திர சாரங்கி
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 ஜூலை 2021
பிரதமர்நரேந்திர மோடி
அமைச்சர்அனுராக் சிங் தாக்கூர்
முன்னையவர்ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
முன்னையவர்தவார் சந்த் கெலாட்
தொகுதிமத்தியப் பிரதேசம்
மாநிலத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
பதவியில்
11 மார்ச் 2020 – 07 ஜூலை 2021
முன்னையவர்தமிழிசை சவுந்தரராஜன்
பின்னவர்அண்ணாமலை குப்புசாமி
துணைத் தலைவர், பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்
பதவியில்
2017–2020
முன்னையவர்ராஜ் குமார் வேர்க்க
பின்னவர்அருண் ஹால்டர்
கலாச்சார பிரிவின் 2 வது மாநில தலைவர்
தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
முன்னையவர்காயத்திரி ரகுராம்
பின்னவர்பதவியில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 29, 1977 (1977-05-29) (அகவை 46)
கோனூர், பரமத்தி, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கலையரசி
பிள்ளைகள்தர்னேஷ்
இந்திரஜித்
பெற்றோர்லோகநாதன்
முன்னாள் கல்லூரிடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
சென்னைப் பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர்அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவர் 1977 ஆம் ஆண்டு, மே 29 அன்று தெலுங்கு பேசும் அருந்ததியர் குடும்பத்தில் பிறந்தார். 1977இல் பிறந்த இவர், தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்தவர். இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும். 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார்.

ஆரம்ப கால அரசியல்

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அவர் இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 3 வது இடத்தைப் பெற்றார். அவர் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கான நிலை ஆலோசகராக ஆனார். மேலும் 2017 முதல் 2019 வரை இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக

தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார். 07 சூலை 2021 வரை அப்பதவியில் இருந்தார். அவர் அருந்ததியர் சமூகத்தில் இருந்து இந்த பதவியை வகிக்கும் முதல் நபர் ஆவார்.

அவர் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தாராபுரம் சட்டமன்றத் தொகுயில் போட்டியிட்டு திமுகவின் என். கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

மத்திய இணை அமைச்சராக

07 சூலை 2021 அன்று மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். சுதந்திரத்துக்குப் பிறகு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முதல் இந்திய அமைச்சரவை உறுப்பினர் இவர்.

அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்

Tags:

லோ. முருகன் ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விலோ. முருகன் ஆரம்ப கால அரசியல்லோ. முருகன் தமிழக பாஜக தலைவராகலோ. முருகன் மத்திய இணை அமைச்சராகலோ. முருகன் மேற்கோள்கள்லோ. முருகன்தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியாமீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூளாமணிமாத்திரை (தமிழ் இலக்கணம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுவடிவேலு (நடிகர்)திருநெல்வேலிதீரன் சின்னமலைஇளையராஜாபஞ்சபூதத் தலங்கள்கல்லணைபாண்டியர்புதிய ஏழு உலக அதிசயங்கள்தற்கொலை முறைகள்மரபுச்சொற்கள்முகம்மது நபிமண்ணீரல்பகிர்வுபதினெண்மேற்கணக்குகொல்லி மலைஅருணகிரிநாதர்ராஜா சின்ன ரோஜாதங்க மகன் (1983 திரைப்படம்)தமிழர் கப்பற்கலைமீனாட்சிசுந்தரம் பிள்ளைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பால்வினை நோய்கள்சேரன் (திரைப்பட இயக்குநர்)சப்ஜா விதைஇந்தியப் பிரதமர்விவேகானந்தர்குப்தப் பேரரசுகுடலிறக்கம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்நீதி இலக்கியம்வரலாறுந. பிச்சமூர்த்திதமிழ் இணைய மாநாடுகள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019வளையாபதிநம்மாழ்வார் (ஆழ்வார்)திருமணம்இலங்கையின் மாவட்டங்கள்பெரியாழ்வார்இணையம்சினைப்பை நோய்க்குறிநற்றிணைமுதலாம் உலகப் போர்கட்டுவிரியன்அக்பர்இனியவை நாற்பதுடி. என். ஏ.சேக்கிழார்பாசிப் பயறுஅண்ணாமலையார் கோயில்சேமிப்புபிள்ளைத்தமிழ்தமிழக மக்களவைத் தொகுதிகள்புதுமைப்பித்தன்கருப்பை நார்த்திசுக் கட்டிஅடல் ஓய்வூதியத் திட்டம்தமிழ் எண்கள்வெண்குருதியணுஜலியான்வாலா பாக் படுகொலைதிராவிடர்சீமான் (அரசியல்வாதி)அன்மொழித் தொகைபழனி முருகன் கோவில்ஆறுமுக நாவலர்செயற்கை மழைமுதுமலை தேசியப் பூங்காதிவ்யா துரைசாமிமொழிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)முதுமொழிக்காஞ்சி (நூல்)நுரையீரல் அழற்சிதொல்காப்பியர்சீறாப் புராணம்மணிமேகலை (காப்பியம்)முத்தரையர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி🡆 More