பன்னம்

பன்னம் (அல்லது வித்திலியம், Fern) என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் தெரிடொ-'வைட்டே (Pteridophyte) என்று அழைப்பர்.

Ferns
புதைப்படிவ காலம்:டெவோனியக் கால பிற்பகுதி—Recent
PreЄ
Pg
N
பன்னம்
மரப் பன்னம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
துணைத்திணை:
Embryophyta
தரப்படுத்தப்படாத:
Monilophytes or pteridophytes
Classes
  • †Cladoxylopsida
  • Psilotopsida
  • Equisetopsida (alias Sphenopsida)
  • Marattiopsida
  • Polypodiopsida (alias Pteridopsida, Filicopsida)
  • †Zygopteridales
  • †Stauropteridales
  • †Rhacophytales
வேறு பெயர்கள்
  • Monilophyta
  • Polypodiophyta
  • Filices
  • Filicophyta

தெரிடொ-ஃபைட்டா (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலைத்திணை வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் தாவரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது வித்திலியங்கள் எனப்படுவன, வித்துக்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக நுண்வித்துக்கள் (spores) மூலம் இனப்பெருக்கம் செய்யும் குழாயுடைத் தாவரம் (vascular plant) என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. உண்மையான இலைகளைக் கொண்டிருப்பதால் இவை லைக்கோபைட்டாக்களிலிருந்து வேறுபடுகின்றன. இவை வித்துக்கள் மற்றும் பூக்களைக் கொண்டிராததால், வித்துத் தாவரத்திலிருந்து வேறுபடுகின்றன.

பன்னத்தின் (அல்) வித்திலியத்தின் வாழ்க்கை வட்டம்

சாதாரணப் பன்னமொன்றின் வாழ்க்கை வட்டம், இரண்டு வேறுபட்ட உருவாக்கக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு:

  1. நுண்வித்திகளை உருவாக்கும் ஸ்போரோபைட்டே கட்டம்.
  2. நுண்வித்திகள் கலப்பிரிவு மூலம் ஹப்லொயிட் புரோதலஸ் (haploid prothallus) ஆக வளர்ச்சியடைகின்றன. (கேம்டோபைட்டே கட்டம்)
  3. புரோதலஸ் உயிர்வித்தினை (gametes) உருவாக்குகின்றது.
  4. ஆண் gamete ஒரு பெண் உயிர்வித்தினைக் (gamete) கருக்கொள்ளச் செய்கிறது.
  5. இது கலப்பிரிவு மூலம் திப்லோயிட் ஸ்போரோபைட்டே பன்னமாக வளர்ச்சியடைகின்றது.

பன்னத்தின் அமைப்பு

பன்னம் 
பன்னங்கள்
  • தண்டுகள்: பொதுவாக இவற்றின் தண்டுகள் மிகவும் உயரம் குறைவானவை. எனவே நிலக்கீழ் தண்டுகளைக் குறிக்கும் ரைசோம் என்ற பெயரால் இத்தண்டுகள் அழைக்கப்படுகின்றன. எனினும் சில இனங்கள் 20 m உயரம் வரை ளரக்கூடியன.

காழ்க்க்லன் மூலகம் இவற்றின் காழில் காணப்படுவதில்லை. இவற்றின் காழில் பிரதான கடத்தும் ஊடகம் குழற்போலிகளாகும். உரியத்தில் தோழமைக் கலங்கள் காணப்படுவதில்லை. மிகவும் எளிய கடத்தும் கலன்களைக் கொண்ட தாவரங்களாக பன்னங்கள் உள்ளன (லைக்கோபைட்டாக்களும் இது போன்ற எளிய கலன் இலையங்களைக் கொண்டுள்ளன.)

  • இலை: பன்னங்களின் இலைகள் பன்னோலை என அழைக்கப்படும். இவ்விலைகள் விரிக்கப்படும் முன்னர் உருட்டப்பட்டு சுருக்கப்பட்ட வடிவில் காணப்படுகின்றன. இவ்வோலைகளே பன்னங்களின் பிரதான ஒளித்தொகுப்பு நடைபெறும்

பகுதிகளாகும்.

  • வேர்: பன்னங்களின் வேர்கள் ஏனைய தாவரங்களின் வேர்களை ஒத்ததாகும்.

மேலுள்ள கட்டமைப்பு பன்னத்தின் வித்தித் தாவரத்துக்கே (2n தாவரம்) பொருத்தமானதாகும். பன்னத்தின் புணரித்தாவரம் (n தாவரம்) கட்டமைப்பில் மிக எளிமையானதாகும். இது கட்டமைப்பில் ஈரலுருத் தாவரம் போலக் காணப்படும். பன்னத்தின் புணரித்தாவரக் கட்டமைப்பு பின்வருமாறு காணப்படும்:

  • புரோதல்லசு: பச்சை நிறமான ஒளித்தொகுப்பில் ஈடுபடக்கூடிய ஒரு கட்டமைப்பாகும். இது புணரிகளை உருவாக்ககூடியது. இது 3-10 mm நீளமானதுடன் 2-8 mm அகலமானது. இது இதயம் அல்லது சிறிநீரகத்தின் வடிவுடைய மிக மெல்லைய ஒரு கலத் தடிப்புடைய கட்டமைப்பாகும்.
  • அன்தரீடியா: புணரித்தாவரத்தின் விந்துக்களை உருவாக்கும் பகுதி.
  • ஆர்கிகோனியா: புணரித்தாவரத்தின் சூலை (முட்டைக் கலத்தை) உருவாக்கும் பகுதி
  • ரைஸொட்கள்: புணரித்தாவரத்தின் வேர்களாகச் செயற்படும் நீட்டப்பட்ட கலன்களாலான பகுதி. எனினும் இவை உண்மையான வேர்களல்ல. இவை புணரித்தாவரத்தை நிலத்தில் பதித்து அதற்குத் தேவையான நீரையும், கனியுப்புக்களையும் பெற்றுக் கொடுக்கின்றன.

உசாத்துணை

வெளியிணைப்பு

பன்னம் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
பன்னம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pteridophyta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

பன்னம் பன்னத்தின் (அல்) வித்திலியத்தின் வாழ்க்கை வட்டம்பன்னம் பன்னத்தின் அமைப்புபன்னம் உசாத்துணைபன்னம் வெளியிணைப்புபன்னம்இனப்பெருக்கம்தாவரம்பூக்கும் தாவரம்வித்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவண்ணாமலைசிறுநீர்ப்பாதைத் தொற்றுசுயமரியாதை இயக்கம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தினகரன் (இந்தியா)பார்க்கவகுலம்திருவள்ளுவர்வ. உ. சிதம்பரம்பிள்ளைசட்டம்உடுமலை நாராயணகவிஓரங்க நாடகம்அயோத்தி தாசர்பால்வினை நோய்கள்பீப்பாய்தற்குறிப்பேற்ற அணிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்முடிதமிழ்நாட்டின் நகராட்சிகள்மரகத நாணயம் (திரைப்படம்)வேலு நாச்சியார்திரவ நைட்ரஜன்சங்க காலப் புலவர்கள்கருமுட்டை வெளிப்பாடுதிருவோணம் (பஞ்சாங்கம்)நெடுநல்வாடைசாய் சுதர்சன்கருட புராணம்சேரர்மலைபடுகடாம்சுரதாகண்டம்சூரியக் குடும்பம்நாடோடிப் பாட்டுக்காரன்தினமலர்விடுதலை பகுதி 1சீனாசெயற்கை நுண்ணறிவுஞானபீட விருதுஆய்த எழுத்துசிவபுராணம்சரத்குமார்டேனியக் கோட்டைபெருமாள் திருமொழிதமன்னா பாட்டியாநேர்பாலீர்ப்பு பெண்உரிச்சொல்சங்ககாலத் தமிழக நாணயவியல்உயிர்மெய் எழுத்துகள்செஞ்சிக் கோட்டைசுபாஷ் சந்திர போஸ்திராவிடர்மங்கலதேவி கண்ணகி கோவில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நிலக்கடலைபெரியபுராணம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சைவத் திருமணச் சடங்குமூகாம்பிகை கோயில்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மாதேசுவரன் மலைதமிழ் எண் கணித சோதிடம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்மனித மூளைதமிழ் எழுத்து முறைவரலாறுதமிழ்த் தேசியம்அதிமதுரம்வெப்பநிலைகேரளம்குடலிறக்கம்வாதுமைக் கொட்டைகூகுள்மீனாட்சிசுந்தரம் பிள்ளைநீதி இலக்கியம்பித்தப்பை🡆 More