நெளிகோதுமை: ஒரு தாவர இனம்

நெளிகோதுமை (Buckwheat) ( பேகோபைரம் எசுக்குலென்டம்), அல்லது இயல்பு நெளிகோதுமை அதன் கூலம் போன்ற விதைகளுக்காக பயிரிடப்படும் தாவரமாகும்.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/பேகோபைரம்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

இது ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. இதையொத்த மேலும் கார்ப்பான பேகோபைரம் டாட்டாரிகம் ஆசியாவில் வீட்டினமாக்கப்பட்டு உணவுப் பயிராக வளர்க்கப்படுகிறது. நெளிகோதுமை என வழங்கினாலும் இது புல் தாவரம் அல்ல என்பதால் கோதுமையோடு எந்தவகையிலும் உறவு கொண்டதன்று. மாறாக, புளியாரைக் கீரைப் பயிரோடும் பாலிகோனம் முடிச்சுக்களையோடும் உரூபார்புடனும் தொடர்புள்ளதாகும். நெளிகோதுமை அதில் அமைந்த சிக்கலான மாவுப்பொருளால் ஒரு போலிக் கூலமாக அமைகிறது.

நெளிகோதுமை
நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): பேகோபைரம்
இனம்:
வார்ப்புரு:Taxonomy/பேகோபைரம்ப. எசுக்குலென்டம்
இருசொற் பெயரீடு
ப எசுக்குலென்டம்
கோன்ராடு மோயெஞ்சு
வேறு பெயர்கள்
  • பாலிகோனம் பேகோபைரம் L. 1753
  • பேகோபைரம் சீரியேல் Raf.
  • பேகோபைரம் திரையாந்திரீ Fenzl
  • பேகோபைரம் எமார்கினேட்டம்' (Roth) Meisn. 1840
  • பேகோபைரம் எமார்கினேட்டம் Moench 1802
  • பேகோபைரம் பேகோபைரம் (L.) H.Karst., invalid tautonym
  • பேகோபைரம் பாலிகோனம் Macloskie
  • பேகோபைரம் சகிட்டாட்டம் Gilib.
  • பேகோபைரம் சராசெனிக்கம் Dumort.
  • பேகோபைரம் வல்கேர் Hill ex Druce 1913
  • பேகோபைரம் வல்கேர் T.Nees 1853
  • பாலிகோனம் எமார்கினேட்டம்m Roth
நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல்
பூட்டனில் உள்ள பம்தாங் வயலில் விளையும் நெளிகோதுமை

இருபதாம் நூற்றாண்டில் நெளிகோதுமை விளைச்சல் காலக உரப் பயன்பாட்டால் பிற முதன்மை கூலங்கள் பேரளவில் விளைந்தமையால் வேகமாக வீழ்ச்சி கண்டது.

வேர்ச்சொல்லியல்

"நெளிகோதுமை " அல்லது "பீச் கோதுமை" எனும் பெயர் அதன் முக்கோண வடிவத்தாலும் கோதுமையைப் போல பயன்படுத்துவதாலும் ஏற்பட்டதாகும். இது இதைவிட பெரிய பீச் விதைகளை ஒத்திருப்பதால் பீச் கோதுமை எனப்படுகிறது இந்தச் சொல் இடைக்கால டச்சு மொழிச் சொல்லாகிய boecweite: boec (புத்தியற் டச்சு beuk) என்பதன் மொழிபெயர்ப்பான "பீச்" அல்லது கோதுமை எனவும் கருதப்படுகிறது அல்லது டச்சு மொழிச் சொல்லைப் போன்ற வடிவமுள்ள தாயக மொழிபெயர்ப்புச் சொல்லில் இருந்தும் உருவாகியிருக்கலாம்.

வரலாறு

நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல் 
பூக்கும் இயல்பு நெளிகோதுமை
நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல் 
நெளிகோதுமை, யப்பான் வேளாண் களஞ்சிய விளக்கம் செய்கெய் சூசெத்சு (Seikei Zusetsu) (1804)

இயல்பு நெளிகோதுமையின் காட்டுவகை பே. எசுக்கொலென்டம் ssp. ஆன்செசுட்டிரேல் ஆகும். பே. ஓமோட்ரோப்பிகம் வகை பே. எசுக்குலென்டம் வகையுடன் இணைந்த்ருவானது. இந்தக் காட்டுவகைகள் சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள யுன்னானில் பரவலாக ஒன்றாகப் பரவியுள்ளன. டார்ட்டாரி நெளிகோதுமையின் காட்டுவகை பே. டாட்டாரிகம் ssp. பொட்டானினி ஆகும்.

இயல்பு நெளிகோதுமை கிமு 6000 ஆண்டளவில் ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் வீட்டினமாக்கப்பட்டு பயிரிடப்பட்டுள்ளது. பிறகு இது நடுவண் ஆசியாவுக்கும் திபெத்துக்கும் பரவி, அதற்குப் பின் நடுவண்கிழக்குப் பகுதிக்கும் ஐரோப்பாவுக்கும் வந்தடைந்துள்ளது. வீட்டினமாக்கம் சீனா, யுன்னானின் மேற்குப் பகுதியில் பெரும்பாலும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இதன் மிகப் பழைய எச்சங்கள் கிமு 2600 ஆண்டளவில் சீனாவிலும் பூந்துகள்கள் கிமு 4000 ஆண்டளவில் யப்பானிலும் கிடைத்துள்ளன. உலகின் மிக உயரத்தில் வளரும் வீட்டினமாக்கத் தாவரம் இது திபெத்து மேட்டுச் சமவெளி ஓரமுள்ள யுன்னானிலோ அல்லது அந்தச் சமவெளியிலேயோ பயிரிடப்பட்டுள்ளது. நெளிகோதுமை ஐரோப்பா வட அமெரிக்காவில் முதலில் அறிமுகப்படுத்திய தாவரங்களில் ஒன்றாகும். இது 2006 இல் கனடா உருவாக்கிய ஒரு பயிரிடும்வகை சீனாவில் பரவலாகப் பயிரிடப்பட்டதும் உலக முழுவதும் பரவி விட்டது. இது இந்தியாவில் மாக்கோதுமை எனப்படுகிறது. இது நவராத்திரி விழாவுடன் பண்பாட்டியலாகத் தொடர்புள்ளது. அப்போது அனைத்துப் பண்டங்களும் நெளிகோதுமையிலேயே செய்யப்பாட்டு உண்ணப்படுகின்றன.

நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல் 
நெளிகோதுமையின் விதைமணியும் உதிர்பூவும்
நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல் 
நெளிகோதுமைக் கூலம்

பயிரிடல்

நெளிகோதுமை ஒரு குறும்பயிராகும். குறைவான மண்வள்ப் பகுதிகளில் நன்கு வளரும். ஆனால், மண்ணில் நீர் தேங்காமல் வற்றச் செய்யவேண்டும். டுதல் உரம், குறிப்பாக காலக உரம் விளைச்சலைக் குறைக்கும். வெப்பக் காலநிலைகளில் கோடையின் இறுதியில் குளிர்வானிலையில் பூக்குமாறு பயிரிடவேண்டும். பொலன்சேர்க்கை முகமை உயிரிகள் விளைச்சலைக் கூட்டும். நெளிகோதுமை பூக்கள் கருந்தேனைத் தருகின்றன. இது சிலவேளைகளில் தழையுரமாகவும் அரிப்புகாப்புத் தாவரமாகவும் காட்டுக் கவிப்புவகையாகத் தீவனமாகவும் பயன்படுகிறது.

உட்கூறுகள்

மாவுப்பொருள்

  • 71–78% உமி நீக்கி அரைத்த மாவில்
  • 70–91% பலவகை மாவு வகைகளில்
  • மாவுப்பொருள் 25%; அமிலோசுவும் அமிலோபெக்டினும் 75% .
  • உமி நீக்கி அரைத்த மாவைச் சூட்டுநீரால் பிசைந்தால், அது 7–37% எதிர்ப்புத்திறன் மாவுப்பொருளைக் கொண்டிருக்கும்.

புரதம்

முருட்டுப் புரதம் 18% ஆகவும் உயிரியல் மதிப்புகள் 90% ஆக அமையும். மிகத் தேவையான அமினோ அமிலங்களின் உயர்செறிவால் இதை விளக்குகின்றனர். இவற்றில் குறிப்பாக இலிசைன், திரியோனைன், டிரைப்டோபான், கந்தகம் கொண்ட அமினோ அமிலங்கள் அடங்கும்.

கனிமச் சத்துகள்

  • இரும்பு செறிவாக உள்ளது (60–100 ppm), துத்தநாகம் (20–30 ppm),லினியம்(20–50 ppb).

பாலிபீனால்கள்

  • 10–200 ppm உரூட்டின், 0.1–2% டான்னின்கள், உமி நீக்கிய மாவில் காட்டெக்கின்-7- ஓ குளூக்கோசைடு அமைகிறது.

பேகோபைரின்

ஒரு கிராம் நெளிகோதுமையில் 0.4 to 0.6 மிகிராம் பேகோபைரின்கள் ( ஆறுவகைகள்) உள்ளன.

விளைச்சல்

நெளிகோதுமை விளைச்சல் – 2017
நாடு tonnes
நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல்  உருசியா
1,524,280
நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல்  சீனா
1,447,292
நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல்  உக்ரைன்
180,440
நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல்  பிரான்ஸ்
127,406
நெளிகோதுமை: வேர்ச்சொல்லியல், வரலாறு, பயிரிடல்  கசகிசுதான்
120,379
World
3,827,748
Source: FAOSTAT of the United Nations

வரலாற்றியலாக நெளிகோதுமை விளைச்சலில் உருசியப் பேரரசு தான் முன்னணியில் இருந்தது.

மேற்கோள்கள்

Tags:

நெளிகோதுமை வேர்ச்சொல்லியல்நெளிகோதுமை வரலாறுநெளிகோதுமை பயிரிடல்நெளிகோதுமை உட்கூறுகள்நெளிகோதுமை விளைச்சல்நெளிகோதுமை மேற்கோள்கள்நெளிகோதுமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலைபொன்னுக்கு வீங்கிமயக்கம் என்னசாத்தான்குளம்தமிழக வரலாறுசஞ்சு சாம்சன்டார்வினியவாதம்யானைமீனா (நடிகை)கோயம்புத்தூர்மாணிக்கவாசகர்காம சூத்திரம்பரிபாடல்மாணிக்கம் தாகூர்கண்ணாடி விரியன்பெண்ணியம்சுந்தர காண்டம்திருமுருகாற்றுப்படைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்முத்துலட்சுமி ரெட்டிதமிழ்நாட்டின் நகராட்சிகள்ஐ (திரைப்படம்)அண்ணாதுரை (திரைப்படம்)கிராம ஊராட்சிதைராய்டு சுரப்புக் குறைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தங்கம்சீறாப் புராணம்தமிழர் நெசவுக்கலைவாதுமைக் கொட்டைதமிழ்த்தாய் வாழ்த்துதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்நெல்சிதம்பரம் மக்களவைத் தொகுதிமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)சிலுவைஆகு பெயர்குருத்து ஞாயிறுநஞ்சுக்கொடி தகர்வுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்சூரரைப் போற்று (திரைப்படம்)குமரி அனந்தன்இராபர்ட்டு கால்டுவெல்கல்லணைதென்காசி மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய காங்கிரசுஇந்து சமயம்வே. செந்தில்பாலாஜிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராதமிழ்ப் பருவப்பெயர்கள்அங்குலம்தமிழச்சி தங்கப்பாண்டியன்நாயக்கர்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுமுல்லை (திணை)கணினிஎம். ஆர். ராதாவாணிதாசன்செயற்கை நுண்ணறிவுகாயத்ரி மந்திரம்அணி இலக்கணம்சூரியக் குடும்பம்வேதாத்திரி மகரிசிதமிழ்விடு தூதுஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சனீஸ்வரன்அஸ்ஸலாமு அலைக்கும்தமிழில் சிற்றிலக்கியங்கள்மரகத நாணயம் (திரைப்படம்)ஆசியாதமிழர் விளையாட்டுகள்தஞ்சாவூர்பனைபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இந்தோனேசியாதிருவிளையாடல் புராணம்தமிழர் அளவை முறைகள்🡆 More