துபாய்: ஐக்கிய அறபு அமீரகத்திலுள்ள ஒரு நகரம்

துபாய் அல்லது துபை (Dubai, அரபு மொழி: دبيّ‎, துபாய்ய்) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் சீர்படுத்துவதற்காகச் வகையில் முதலாவது நகரமாகும்.

இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் அபுதாபி அமீரகத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது. துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு எதிர்வாக்கு (வீட்டோ) அதிகாரம் கொண்டுள்ள அமீரகங்கள் ஆகும்.

துபாய்
إمارة دبيّ
அமீரகம்
துபாய் அமீரகம்
துபாய்-இன் கொடி
கொடி
Location of துபாய்
நாடுஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்துபாய்
நகரவாக்கம்9 ஜூன் 1833
விடுதலை2 டிசம்பர் 1971
(பிரித்தானியாவிடம் இருந்து)
தோற்றுவித்தவர்மக்தூம் இப்னு பதீ இப்னு சுகைல் (1833)
தொகுதிதுபை
துணைப் பிரிவுகள்
நகரங்களும் ஊர்களும்
  • ஜெபல் அலி
  • அட்டா
  • அல் உனைவா
  • அல் அவீர்
  • அல் அஜரெயின்
  • அல் லுசாயிலி
  • அல் மர்க்காப்
  • அல் பாக்
  • எயில்
  • அல் சுஃபாரி
  • உட் அல்-பைளா
  • அல் மலாய்கா
  • அல் மடம்
  • மார்கம்
  • உர்கூப் ஜுவைசா
  • அல் கீமா
அரசு
 • வகைஅரசியலமைப்பு முடியாட்சி
 • மன்னர்முகமது பின் ராஷித் அல் மக்தூம்
 • முடிக்குரிய இளவரசர்ஹமதான் இப்னு முகமம்து இப்னு ராசித் அல்-மக்தூம்
பரப்பளவு
 • அமீரகம்4,114 km2 (1,588 sq mi)
மக்கள்தொகை (2008)
 • அமீரகம்22,62,000
 • அடர்த்தி408.18/km2 (97/sq mi)
 • பெருநகர்34,10,737
 • தேசியம் 
(2005)
17% அமீரகர்
9.1% அரபுக்கள்
42.3% இந்தியர்
13.3% பாக்கிஸ்தானியர்
7.5% வங்காளிகள்
2.5% பிலிப்பீனியர்
1.5% இலங்கையர்
0.9% ஐரோப்பியர்
0.3% அமெரிக்கர்
5.7% வேறு நாடுகள்
நேர வலயம்அமீரக நேரம் (ஒசநே+4)
இணையதளம்துபை அமீரகம்
துபை மாநகராட்சி

துபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக் குளித்தல் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபி பகுதியிலிருந்து, "பனியாஸ்" என்னும் இனக்குழுவினர் அல்-மக்தூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

2012 ஆம் ஆண்டில், துபாய் உலகிலேயே மிக விலையுயர்ந்த 22 நகரமாகவும் மத்திய கிழக்கில் மிகவும் விலையுயர்ந்த நகரமாகவும் இருந்தது. 2014 ஆம் ஆண்டில், ஜெனீவாவுக்குப் பிறகு, உலகின் மிக அதிக விலையுயர்ந்த ஹோட்டல் அறைகளாக துபாயின் ஹோட்டல் அறைகள் மதிப்பிடப்பட்டன. அமெரிக்க உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெர்சர் மூலம் மத்திய கிழக்கில் வாழும் சிறந்த இடங்களில் துபாய் மதிப்பிடப்பட்டது.

புவியியல்

துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாரசீக வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ளது மற்றும் இது கடல் மட்டத்திலிருந்து 16 மீற்றர் உயரத்தில் உள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,588 சதுர மைல் ஆகும். துபாய் நேரடியாக அரேபிய பாலைவனத்தில் உள்ளது. துபாயின் நிலப்பரப்பு, துபாய் வனப்பகுதிகளின் தெற்குப் பகுதியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வித்தியாசமாக உள்ளது, இது மணல் பாலைவகை வடிவங்களால் உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் க்வெவர் பாலைவனங்கள் நாட்டின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்குள்ள மணல் நொறுங்கிய சிப்பிகள், பவளங்களைக் கொண்டுள்ளதுடன் வெள்ளை நிறத்தில் நல்ல நிலையில் காணப்படுகின்றது. நகரத்தைச் சுற்றியுள்ள மணல் பாலைவனமானது காட்டு புற்கள் மற்றும் அவ்வப்போது பேரீச்சை மரங்களையும் கொண்டுள்ளது.

மக்கட்தொகைப் பரம்பல்

மக்கட்தொகையைப் பொறுத்தமட்டில் துபாய் மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசுப் பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாட்டு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது.

துபாய் அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும்.

மதம்

துபாய் மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இசுலாமிய மதத்தைப் பின்பற்றும் ஒரு நாடாகும்.

இந்நாட்டில் வாழும் வெளிநாட்டினர்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவற்றுள் இசுலாமியர், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக எல்லா மதத்தவர்களுக்கும் அவர் அவர் விருப்பபடி வணங்குவதற்கு கோயில், கிறித்தவக் கோவில்கள் மற்றும் சீக்கியக் கோயிலும் உள்ளது.

துபாய் பொருளாதாரம்

துபாய்: புவியியல், மக்கட்தொகைப் பரம்பல், மதம் 
துபையின் இரவுக் காட்சி

2008 தரவுகளின்படி துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபுதாபியை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபாய். துபாய் அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்தே இருந்தது. இதன் காரணமாக, துபாய் அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபாய் கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபாயில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும்.

துபாய்: புவியியல், மக்கட்தொகைப் பரம்பல், மதம் 
ஷேக் சயத் சாலை, துபாய்

துபாயின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, உருசியா, ஈரான், பாகித்தான் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாக அமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்.

காலநிலை

துபாய் வெப்ப பாலைவனக் காலநிலையைக் கொண்டது ஆகும். பொதுவாக ஆகஸ்ட் மாதமே அதிகூடிய வெப்பம் நிலவும் மாதம் ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Dubai
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 31.8
(89.2)
37.5
(99.5)
41.3
(106.3)
43.5
(110.3)
47.0
(116.6)
47.9
(118.2)
48.5
(119.3)
47.5
(117.5)
45.1
(113.2)
42.4
(108.3)
38
(100)
33.2
(91.8)
48.5
(119.3)
உயர் சராசரி °C (°F) 24.2
(75.6)
25.6
(78.1)
28.6
(83.5)
33.2
(91.8)
37.8
(100)
39.7
(103.5)
41.2
(106.2)
41.4
(106.5)
39.1
(102.4)
35.6
(96.1)
30.7
(87.3)
26.3
(79.3)
33.4
(92.1)
தினசரி சராசரி °C (°F) 19.3
(66.7)
20.6
(69.1)
23.2
(73.8)
27.2
(81)
31.4
(88.5)
33.6
(92.5)
35.7
(96.3)
36.0
(96.8)
33.4
(92.1)
30.0
(86)
25.4
(77.7)
21.3
(70.3)
28.09
(82.57)
தாழ் சராசரி °C (°F) 14.4
(57.9)
15.5
(59.9)
17.7
(63.9)
21.2
(70.2)
24.9
(76.8)
27.5
(81.5)
30.2
(86.4)
30.5
(86.9)
27.7
(81.9)
24.3
(75.7)
20.0
(68)
16.3
(61.3)
22.5
(72.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) 6.1
(43)
6.9
(44.4)
9.0
(48.2)
13.4
(56.1)
15.1
(59.2)
18.2
(64.8)
20.4
(68.7)
23.1
(73.6)
16.5
(61.7)
15.0
(59)
11.8
(53.2)
8.2
(46.8)
6.1
(43)
பொழிவு mm (inches) 18.8
(0.74)
25.0
(0.984)
22.1
(0.87)
7.2
(0.283)
0.4
(0.016)
0.0
(0)
0.8
(0.031)
0.0
(0)
0.0
(0)
1.1
(0.043)
2.7
(0.106)
16.2
(0.638)
94.3
(3.713)
ஈரப்பதம் 65 65 63 55 53 58 56 57 60 60 61 64 59.8
சராசரி பொழிவு நாட்கள் 5.4 4.7 5.8 2.6 0.3 0.0 0.5 0.5 0.1 0.2 1.3 3.8 25.2
சூரியஒளி நேரம் 254.2 229.6 254.2 294.0 344.1 342.0 322.4 316.2 309.0 303.8 285.0 254.2 3,508.7
Source #1: Dubai Meteorological Office
Source #2: climatebase.ru (extremes, sun), NOAA (humidity, 1974–1991)
Climate data for Dubai
Month Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Year
Average sea temperature °C (°F) 23.4
(74.2)
21.9
(71.4)
23.2
(73.8)
25.5
(77.9)
28.8
(83.8)
31.6
(88.8)
32.7
(90.9)
33.5
(92.3)
33.1
(91.5)
31.3
(88.4)
28.6
(83.4)
25.4
(77.8)
28.3
(76.6)
Average Ultraviolet index 6 8 10 11+ 11+ 11+ 11+ 11+ 11 8 6 5 9.1
Source #1: seatemperature.org
Source #2: Weather Atlas


இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

துபாய் புவியியல்துபாய் மக்கட்தொகைப் பரம்பல்துபாய் மதம்துபாய் பொருளாதாரம்துபாய் இவற்றையும் பார்க்கவும்துபாய் மேற்கோள்கள்துபாய்அபுதாபி (அமீரகம்)அபுதாபி அமீரகம்அமீரகம்அரபு மொழிஅராபியத் தீபகற்பம்ஐக்கிய அரபு அமீரகம்பாரசீக வளைகுடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிராம சபைக் கூட்டம்இந்திய மக்களவைத் தொகுதிகள்சமூகம்கோவிட்-19 பெருந்தொற்றுமொழிஅப்துல் ரகுமான்திருமால்இந்திய நிதி ஆணையம்சூல்பை நீர்க்கட்டிதமிழக மக்களவைத் தொகுதிகள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கண்டம்இளங்கோவடிகள்புணர்ச்சி (இலக்கணம்)இரட்டைக்கிளவிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கண்ணாடி விரியன்தமிழ் தேசம் (திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்புதினம் (இலக்கியம்)மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்வாட்சப்கடையெழு வள்ளல்கள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)கங்கைகொண்ட சோழபுரம்தெலுங்கு மொழிஆய்வுஆறுமுக நாவலர்விருமாண்டிமரகத நாணயம் (திரைப்படம்)மருது பாண்டியர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அக்பர்கன்னி (சோதிடம்)இந்தியாதொல். திருமாவளவன்மே நாள்நிணநீர்க்கணுசெவ்வாய் (கோள்)உவமையணிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பாலை (திணை)தமிழ் விக்கிப்பீடியாசிவாஜி (பேரரசர்)சங்க இலக்கியம்சாத்துகுடிகருப்பை2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிவிவேகானந்தர்சோமசுந்தரப் புலவர்சப்ஜா விதைஇன்குலாப்பி. காளியம்மாள்ஈரோடு தமிழன்பன்அறுவகைப் பெயர்ச்சொற்கள்கணினிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்அரண்மனை (திரைப்படம்)நெசவுத் தொழில்நுட்பம்விஷ்ணுதமிழர் கப்பற்கலைபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுவேற்றுமைத்தொகைஇராசேந்திர சோழன்சைவ சமயம்பகிர்வுமாமல்லபுரம்பிள்ளையார்வடிவேலு (நடிகர்)காடுபிள்ளைத்தமிழ்அறிவுசார் சொத்துரிமை நாள்தமிழர் தொழில்நுட்பம்ஆனைக்கொய்யாநாயக்கர்கார்லசு புச்திமோன்குருதி வகை🡆 More