தட்பவெப்பநிலை

காலநிலை (Climate) அல்லது தட்பவெப்பநிலை என்பது நெடுங்கால அடைவிலான வானிலை புள்ளியியல் நிலவலாகும்.

காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நீண்டகால அடிப்படையிலான வெப்பநிலை, ஈரப்பதன், மழைவீழ்ச்சி, வளிமண்டலத் துகள் எண்ணிக்கை போன்ற பல வானிலையியல் காரணிகளின் வேறுபாடுகளை மதிப்பிட்டு அளக்கப்படுகிறது. இது வானிலை (weather) என்பதிலிருந்து வேறுபட்டது. வானிலை என்பது குறுங்கால அடைவிலான மேற்கூறிய காரணிகளின் மதிப்பீடு ஆகும்.

ஒரு வட்டாரக் காலநிலை புவி வளிமண்டலம், நீர்க்கோளம், பாறைக்கோளம், உயிர்க்கோளம், பனிக்கோளம் ஆகிய ஐந்து கூறுபாடுகளால் தாக்கமுறும் காலநிலையால் உருவாகிறது.

குறிப்பிட்ட இடத்தின் தட்பவெப்பநிலை அது இருக்கும் புவிக்கோளக் கிடைவரை அல்லது அகலாங்கு, தரைக்கிடப்பு, குத்துயரம், பனி மூடல், அருகிலுள்ள பெருங்கடல்களும் அவற்றின் நீரோட்டங்களும் போன்றவற்றினால் தாக்கத்துக்கு உள்ளாகிறது. காலநிலை சார்ந்த மேற்கூறிய பல்வேறு மாறிகளின் நிரலான வேறுபாட்டு வகைமை நெடுக்கங்களைப் பயன்படுத்தி, குறிப்பாக வெப்பநிலை, மழைப்பொழிவு இரண்டின் நிரலான வேறுபாட்டு வகைமை நெடுக்கங்களைப் பயன்படுத்தி, தட்பவெப்பநிலையை ஐந்து தட்பவெப்பநிலை வகைகளாகப் பிரிக்க முடியும். மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகைப்பாட்டு முறை தொடக்கத்தில் விளாதிமீர் கோப்பென் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலிருக்கும் தோர்ண்த்வெயிட் முறை, , முன்கூறிய வெப்பநிலை மழைப்பொழிவு ஆகியவற்றுடன் நிலைத்திணைகளின் இலைகளில் நிகழும் நீராவிப்போக்கயும் வகைப்படுத்தலில் சேர்த்துக் கொள்கிறது. இவ்வகைப்பாடு விலங்கினங்களின் பல்வகைமை பற்றியும், அவற்றின் மீதான தட்பவெப்பநிலை மாற்றங்களின் தாக்கம் பற்றியும் ஆய்வு செய்வதற்குப் பயன்படுகிறது. பெர்கரான் முறையும் வெளிசார் ஒருங்கியல் வகைபாட்டு முறையும் வட்டாரக் காலநிலையை வரையறுக்கும் காற்றுப் பெருந்திரள்களின் உருவாக்கத்தில் கவனத்தைக் குவிக்கிறது.

தொல்காலநிலையியல் என்பது தொல்பழங் காலநிலைகளின் ஆய்வாகும். 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக காலநிலை பற்றிய நோக்கீடுகள் கிடைக்காததால், தொல்காலநிலைகள் மாற்றுமாறிகளால் குறிப்பாக, ஏரிப் படுகை, பனியகடுகள் ஆகிய உயிரியல் சாரா படிவுகளைப் போன்ற சான்றுவழியாகவும் உயிரியல் சான்றாக அமையும் மரவலயவியல், பவழத் திட்டுகள் போன்றவற்றாலும் அறியப்படுகின்றன. காலநிலைப் படிமங்கள் கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய முக்காலக் காலநிலைகளையும் விவரிக்கும் கணிதவியல் படிமங்கள் ஆகும். பல்வேறு காரணிகளால், காலநிலை மாற்றம் குறுங்கால அளவிலும் நெடுங்கால அளவிலும் ஏற்படலாம்; அண்மைக்கால வெதுவெதுப்பாக்கம் புவிக்கோள வெதுவெதுப்பாக்கம் தலைப்பில் விவாதிக்கப்படுகின்றன. இது காலநிலை பரவல்களை மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, மூன்று பாகை செல்சியசு நிரல் ஆண்டு வெப்பநிலை உயர்வு சமவெப்பநிலை வரைகளை அகலாங்கில் 0–400 கிமீ அளவுக்கும் (மித வெப்ப மண்டலத்தில்) குத்துயரத்தில் 500 மீ அளவுக்கும் தோராயமாக மாற்றுகிறது. எனவே, இந்தக் காலநிலை வட்டார மாற்றத்தால் விலங்குகள் குத்துயரத்தில் மேல்நோக்கியும் அகலாங்கில் புவிமுனை நோக்கியும் நகரவேண்டி நேர்கிறது".

வரையறை

பண்டைய கிரேக்கத்தில் காலநிலை, சாய்வு எனப்பொருள்படும் கிளைமா (klima) எனும் சொல்லால் வழங்கப்பட்டது. இச்சொல் வழக்கமாக, நெடுங்காலம் சார்ந்த நிரலான வானிலையாக வரையறுக்கப்பட்டது. இதன் செந்தர நிரல் அளவீட்டுக் காலம் 30 ஆண்டுகளாக இருந்தது. நோக்கத்தைச் சார்ந்து வேறு கால அளவும் பயனில் இருந்துள்ளது. காலநிலை நிரல்மதிப்பு சாராது ஒரு நாளைய அல்லது ஓர் ஆண்டின் வேறுபாட்டு மதிப்புகளாலும் குறிப்பிடப்படுவதுண்டு.காலநிலை ஆய்வுக்கான பன்னாட்டுக் குழுமம் (IPCC) தனது மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை (2001) தந்துள்ள அருஞ்சொல் விளக்கம் பின்வருமாறு:

காலநிலை என்பது வழக்கமாக குறுகிய பொருளில் "நிரலான (சராசரி) வானிலை," என வரையறுக்கப்படுகிறது அல்லது மிகவும் சீரியநிலையில், ஒரு மாதம் அல்லது பல ஆயிரம் ஆண்டுகள் அல்லது பல மில்லியன் ஆண்டுகள் அளவு காலத்தில் நிலவும் புள்ளியியல் விவரிப்பாகும். இது காலநிலை சார்ந்த அளவுகளின் நட்மை மதிப்பாகவோ வேறுபாட்டின் மதிப்பாகவோ கணிக்கப்படலாம் . செவ்வியல் கால இஅடிவெளி 30 ஆண்டுகளாகும் என உலக வானிலையியல் நிறுவனம் வரையறுக்கிறது. இந்த அளவுகள் பெரும்பாலும் மேற்பரப்பு மாறிகளாகிய வெப்பநிலை, மழை பொழிவு, காற்று ஆகியவை அமைகின்றன. அகன்ர பொருளில் காலநிலை என்பது காலநிலை அமைப்பு சார்ந்த புள்ளியியல் விவரிப்பும் நிலையும் ஆகும்.

"காலநிலை என்பது நாம் எதிர்பார்ப்பது; வானிலை என்பது நம் நுகர்ந்து கொண்டிருப்பது." எனும் மக்கள் வழக்கு, காலநிலை, வானிலை இரண்டின் வேறுபாட்டைத் தெளிவாக விளக்குகிறது. வரலாற்றுக் காலப் பெருவெளியில் காலநிலையைத் தீர்மானித்த நிலையான மாறிகலாக, அகலாங்கு, குத்துயரம், நில,நீர் விகிதம், கடல், மலை நெருக்கம் ஆகியவை நிலவின. இந்த மாற்றம், பல மில்லியன் ஆண்டுகளாக கண்ட்த்தட்டு நகர்வால் ஏற்பட்டு வருகின்றன. பிற காலநிலை தீர்மானிப்பிகள் இயங்கியல் தன்மை வாய்ந்தவை: பெருங்கடல்களின் உவர்வெப்ப நீரோட்டம் 5 °C (9 °F) அளவுக்கு வெப்பநிலையை அத்திலாந்திக் பெருங்கடலின் படுகைகளை விட கடல்நீரில் உயர்த்துகிறது. பிர பெருங்கடல்களின் நீரோட்டங்கள் நில், நீரிடையில் அமையும் வெப்பத்தை வட்டார அளவில் மீள்பகிர்வு செய்து கொள்கின்றன. நிலைத்திணை கர்பரப்பின் வகையும் அடர்த்தியும் சூரிய வெப்ப உட்கவர்தலை தாக்கி, வட்டார அளவில் நீர்தேக்கத்தையும் மழைபொழிவையும் கட்டுபடுத்துகின்றன. வளிமண்டலத்தில் உள்ள பசுமை விளைவு வளிமங்களின் மாற்றம், புவி சூரிய ஆற்றலைத் தேக்கும் அளவைத் தீர்மானிக்கின்றன. இது புவியை வெதுவெதுப்பாக்குகிறது அல்லது குளிரச் செய்கிறது. காலநிலையைத் தீர்மானிக்கும் காரணிகள் எண்ணற்றவை; அவற்றின் ஊடாட்டம் சிக்கலானது; ஆனால், அகன்ற உருவரைகள் புரிந்துகொள்ளப்பட்ட பொது இசைவு ஏற்பட்டுள்ளது. இது வரலாற்றியலான காலநிலை மாற்றம் குறித்தமட்டிலாவது சரியாகும்.

காலநிலை வகைபாடு

தட்பவெப்பநிலை 
உலகளாவிய காலநிலை வகைபாடுகள்

ஒத்த வட்டாரங்களாக காலநிலையையை வகைப்படுத்துவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பண்டைய கிரேக்கத்தில் குறிப்பிட்ட இடத்தின் அகலாங்கு சார்ந்து காலநிலை வரையறுக்கப்பட்டுள்ளது. நிகழ்காலக் காலநிலை வகைபாடுகளை இருவகைகளாகப் பிரிக்கின்றனர். அவை ஆக்க முறைகள், புலன்சார் முறைகள் என்பனவாகும். ஆக்க முறைகள் காலநிலையை உருவாக்கும் காரணிகளில் கவனத்திக் குவிக்கின்றன. புலன்சார் பட்டறிவு சார்ந்த முறைகள் காலநிலையின் விளைவுகளில் கவனம் செலுத்துகின்றன.முன்னது, பல்வேறு காற்றுப் பெருந்திரள் வகைகளின் சார்பு அலைவெண்ணை அல்லது ஒருங்கான வானிலை அலைப்புகள் நிலவும் இருப்புகளைப் பொறுத்து காலநிலையைப் பிரிக்கிறது. பின்னது, நிலைத்திணை வகைசார்ந்து காலநிலை வட்டாரங்களை வரையறுக்கின்றது, evapotranspiration, இது பொதுவாக, கோப்பன் காலநிலை வகைபாட்டை ஒத்தது. இதில் முதலில் சில உயிரினக் குழுமல்வெளிகளைச் சார்ந்து காலநிலையை இனங்காணல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகைபடுகளின் பொதுவான குறைபாடு, இவை வட்டாரங்களுக்கு இடையில் தெளிவான எல்லைகளை வகுக்கின்றன. ஆனால், இயற்கையில் காலநிலை இயல்புகள் படிப்படியாகவே பெயர்வுறுகின்றன.

பெர்கரான், ஒருங்குவெளி வகைபாடு

காற்றுப் பெருந்திரளைச் சார்ந்த எளிய காலநிலை வகைபாடு இது. காற்றுப் பெருந்திரள் சார் வகைபாட்டில் பெர்கரான் வகைபாடே மிகவும் பரவலாக ஏற்கப்பட்ட ஒன்றாகும். இவ்வகைப்பாடு மூன்று எழுத்துகலைப் பயன்படுத்துகிறது. இவற்ரில், முதல் எழுத்து ஈரப்பத இயல்புகளைக் குறிக்கிறது; கண்ட உலர் காற்றுப் பெருந்திரளுக்கு c எனும் எழுத்தும் ஈரமான கடல்சார் காற்றுப் பெருந்திரளுக்கு m எழுத்தும் பயன்படுகின்றன. இரண்டாம் எழுத்து வட்டாரத்தின் வெப்ப்ப் பான்மைகளைக் குறிக்கிறது: T வெப்பமண்டலத்தையும் P பனிவெளியையும் A ஆர்க்டிக் அல்லது அண்டார்ட்டிக்கையும் M பருக்காற்றுப் பகுதியையும் E நிலநடுவரைக் காலநிலையையும் S வளிமண்டலத்தில் கீழ்நோக்கி இறங்கும் மீவுலர் காற்றுப் பெருந்திரளையும் குறிக்கிறது. மூன்றாம் எழுத்து வளிமண்டல நிலைப்பைக் குறிக்கிறது. காற்று, தரையை விட குளிர்வாக இருந்தால் k எனவும் தரைவிட வெதுவெதுப்பாக இருந்தால் w எனவும் குறிக்கப்படும். காற்றுப் பெருந்திரள் முறை 1950 களில் வானிலை முன்கணிப்பில் பயன்பட்டது; காலநிலை அறிஞர்கள் 1973 முதல் இம்முறையை ஒருங்குவெளி காலநிலையியலில் பயன்படுத்தலாயினர்.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

தட்பவெப்பநிலை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Climate
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:NIE Poster

Tags:

தட்பவெப்பநிலை வரையறைதட்பவெப்பநிலை காலநிலை வகைபாடுதட்பவெப்பநிலை மேற்கோள்கள்தட்பவெப்பநிலை மேலும் படிக்கதட்பவெப்பநிலை வெளி இணைப்புகள்தட்பவெப்பநிலைஈரப்பதன்மழைவீழ்ச்சிவானிலைவெப்பநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரத ரத்னாசங்க இலக்கியம்அறுசுவைதிருப்பூர் குமரன்மஞ்சள் காமாலைபொது நிர்வாகம்திருவாசகம்இந்திரா காந்திமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்புறநானூறுமுத்துராஜாவிரை வீக்கம்சுற்றுலாம. பொ. சிவஞானம்நடுக்குவாதம்பக்கவாதம்நவக்கிரகம்தினகரன் (இந்தியா)பாலை (திணை)மதுரகவி ஆழ்வார்முதுமொழிக்காஞ்சி (நூல்)வேளாண்மைமத கஜ ராஜாஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்தியப் பிரதமர்பதினெண் கீழ்க்கணக்குசித்திரகுப்தர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)ரோகிணி (நட்சத்திரம்)சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)அயோத்தி தாசர்உள்ளூர்கொல்லி மலைபஞ்சாங்கம்தமிழச்சி தங்கப்பாண்டியன்திருவிளையாடல் புராணம்சிதம்பரம் நடராசர் கோயில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இலக்கியம்கபிலர் (சங்ககாலம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)லீலாவதிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்வாஞ்சிநாதன்பௌத்தம்தனிப்பாடல் திரட்டுசத்திய சாயி பாபாஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இட்லர்நீதிக் கட்சிஉப்புச் சத்தியாகிரகம்தமிழ்நாடு அமைச்சரவைமனித உரிமைபோகர்மருதமலைபொருளாதாரம்மூகாம்பிகை கோயில்பறையர்கள்ளழகர் (திரைப்படம்)நீக்ரோதூத்துக்குடிஅரண்மனை (திரைப்படம்)பறவைபூலித்தேவன்தமிழர்உணவுச் சங்கிலிகம்பராமாயணம்மதுரைக் காஞ்சிஎச்.ஐ.விகேள்விபாமினி சுல்தானகம்கருப்பு நிலாமலேரியாசங்க காலம்கா. ந. அண்ணாதுரைஆதி திராவிடர்தாயுமானவர்🡆 More