செங்கால் நாரை

       இனப்பெருக்க எல்லை        குளிர்கால எல்லை

செங்கால் நாரை
செங்கால் நாரை
செருமனியில் இரு நாரைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Ciconia
இனம்:
C. ciconia
இருசொற் பெயரீடு
Ciconia ciconia
(L, 1758)
செங்கால் நாரை
தோராயமான பரவலும் பாதைகளும்

 
வலசைப் பாதை
வேறு பெயர்கள்

Ardea ciconia லின்னேயசு, 1758

செங்கால் நாரை (Ciconia ciconia - White Stork) நாரை (சிகோனிடே) குடும்பத்தைச் சேர்ந்த ஓர் நீர் இறங்கு பறவை ஆகும். இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது; நீண்ட செந்நிற கால்களும் செந்நிற அலகும் இப்பறவையை எளிதில் இனங்காண உதவும். 100-இலிருந்து 115 செ.மீ வரை இதன் உயரம் இருக்கும்.

பரவல்

செங்கால் நாரைகள் இனப்பெருக்கம் செய்யுமிடங்களின் பரவல் 80 மே.-லிருந்து 500 கி. வரையும் 320 தெ.-லிருந்து 600 வ. வரையிலான பகுதிகளாகும். இதனடிப்படையில் இவற்றை ஐரோப்பியத் தொகை, ஆப்பிரிக்கத் தொகை, ஆசியத் தொகை என வகைப்படுத்தலாம்.

சதுப்பு நிலங்கள், களிமண் நிலங்கள், நீர்நிலை கூடிய திறந்தவெளிகள் இவையே இந்நாரைகளின் விருப்பமான இருப்பிடங்களாகும். மனிதர்கள் வாழ்விடங்களுக்கருகிலும் இவை கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன.

ஐரோப்பியர்கள் இந்த நாரை தான் குழந்தையைக் கொண்டு வரும் பறவை என நம்புகின்றனர். அங்கே, முக்கியமாக ஆலந்து, போலந்து ஆகிய நாடுகளில் செங்கால் நாரை மக்களுக்கு நெருங்கிய பறவைகளில் ஒன்று. வீட்டு மாடியில், குறிப்பாக, புகைபோக்கியில் கூடு கட்டினால் அது நல்லது என்று கருதுகின்றனர். அதைப் பாதுகாக்க வீட்டுக்காரருக்கு அரசு ஒரு ஊக்கத்தொகை கொடுக்கின்றது. மனிதரின் அருகாமைக்கு இவை நன்கு பழகியிருக்கின்றன.

வலசை

பனிப்பொழிவில் தரை பனியால் மூடப்படும் போது இவை கூட்டம் கூட்டமாக வலசை போக ஆரம்பிக்கின்றன. சில கூட்டம் ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றன. வேறு சில இந்தியா நோக்கிப் பயணிக்கின்றன. அவற்றில் பெரும்பான்மை (எண்ணிக்கையில் குறைந்த அளவே) மராட்டிய, கருநாடகப் பகுதிகளை வந்தடைகின்றன; தமிழ்நாட்டிற்கு இவை மிக அரிதாகவே வருகின்றன. (தாராபுரம் கீரனூரில் 1987-இலும் வேலூரிலும் செங்கால் நாரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன). ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் உள்ள செங்கால் நாரைகள் அங்குள்ள குப்பைக் கூளங்களில் ஆண்டு முழுவதும் உணவு கிடைப்பதால் வலசை போவதை நிறுத்தி விட்டனவா என்று 2013இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு வினவுகிறது.

உணவு

பூச்சிகள் (வெட்டுக்கிளி, தத்துக்கிளி), தவளை/தேரை, தலைப்பிரட்டைகள், மீன், கொறி விலங்குகள், பாம்பு, ஊர்வன, மண்புழு, சிப்பிகள் ஆகியவை செங்கால் நாரைகளின் உணவுப் பட்டியலாகும்.

உண்ணும் முறை

அலகினைத் தரைநோக்கி உள்ளவாறு வைத்தபடியே கம்பீரமாக நடந்து செல்லும் இந்நாரை. இரையைக் கண்டவுடன் தன் தலையை சற்று பின்னிழுத்து பிறகு வேகமாக முன்னே அலகைச் செலுத்தி தன் இரையைப் பிடிக்கும்.

கலைச்சொற்கள்

  • சிறகுத் தொகுதி = plumage | வலசை போதல் = migration
  • இனப்பெருக்கம் = breeding | வளையம் பொருத்துதல் = ringing
  • தொகை = population | சதுப்பு நிலம் = marshy land
  • நீர் இறங்கு பறவை = wading bird

மேற்கோள்கள்

Tags:

செங்கால் நாரை பரவல்செங்கால் நாரை வலசைசெங்கால் நாரை உணவுசெங்கால் நாரை கலைச்சொற்கள்செங்கால் நாரை மேற்கோள்கள்செங்கால் நாரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாலடியார்கம்பர்பயில்வான் ரங்கநாதன்பாட்டாளி மக்கள் கட்சிமதீச பத்திரனநாழிகையூடியூப்சாத்துகுடிநாளந்தா பல்கலைக்கழகம்சித்ரா பௌர்ணமிகுணங்குடி மஸ்தான் சாகிபுஅடல் ஓய்வூதியத் திட்டம்மாம்பழம்விபுலாநந்தர்அனுமன்துரை (இயக்குநர்)வசுதைவ குடும்பகம்தினகரன் (இந்தியா)சித்திரகுப்தர்நந்திக் கலம்பகம்பக்கவாதம்சேரர்கேரளம்முல்லை (திணை)சிலம்பம்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிபித்தப்பைபலாமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமெட்பார்மின்அத்தி (தாவரம்)இந்திய அரசியல் கட்சிகள்தீபிகா பள்ளிக்கல்கல்லுக்குள் ஈரம்நற்றிணைகாளை (திரைப்படம்)செஞ்சிக் கோட்டைபல்லவர்சமயபுரம் மாரியம்மன் கோயில்திராவிடர்கூத்தாண்டவர் திருவிழாகள்ளுதிருநாவுக்கரசு நாயனார்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்திதி, பஞ்சாங்கம்சிவன்நிதி ஆயோக்நவதானியம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)மகரம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுபெண்ணியம்கார்லசு புச்திமோன்சுவாமிமலைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அறுபடைவீடுகள்நாட்டு நலப்பணித் திட்ட தினம்வெப்பநிலைவே. செந்தில்பாலாஜிநான்மணிக்கடிகைவெ. இராமலிங்கம் பிள்ளைமழைஆல்பறவைக் காய்ச்சல்வேலு நாச்சியார்காரைக்கால் அம்மையார்தேர்தல்ஐக்கிய நாடுகள் அவைபழனி முருகன் கோவில்சிறுநீர்ப்பைவிசயகாந்துசிங்கப்பூர்புவிதீரன் சின்னமலைபஞ்சபூதத் தலங்கள்இந்திய வரலாறுமாசாணியம்மன் கோயில்🡆 More