சீலக்காந்த்: மீன் வரிசை

பிற, உரையினைக் காண்க

சீலக்காந்த்
புதைப்படிவ காலம்:
>ஆரம்பக் டெவோனியக் காலம் முதல், 409–0 Ma
PreЄ
Pg
N
சீலக்காந்த்: மீன் வரிசை
2019 இல் தென்னாப்பிரிக்காவின், குவாசுலு-நடால் தெற்கு கடற்கரை, புமுலாவில் உயிருடன் காணப்பட்ட சீலகாந்த்
சீலக்காந்த்: மீன் வரிசை
Sபிரேசிலின் ஆரம்பகால கிரெட்டேசியசு காலத்திய (மாவ்சோனிடே) ஆக்செல்ரோடிச்திசு அராரிபென்சின் மாதிரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஆக்டினிசிடியா
வரிசை:
குடும்பம்:
லாட்டிமெரிடே
பேரினம்:
லேட்டிமெரியா

கோப், 1871
மாதிரி இனம்
சீலகாந்தசு கிரனுலேட்டசு
அகாசி, 1839
குடும்பமும் பேரினமும்
  • லாடிமெரியோடேய்
    • லாட்டிமெரிடே
    • †மவ்சோனிடே

சீலக்காந்த் (Coelacanths, SEE-lə-kanth ) என்பது தற்போது அரிதான மீன் வரிசையில் (Coelacanthiformes) மீனாகும். இதன் லேடிமேரியா பேரினத்தில் தற்காலத்தில் இரண்டு இனங்கள் உள்ளன அவை: மேற்கு இந்தியப் பெருங்கடல் கோலாகாந்த் (லாடிமேரியா சாலம்னே), முதன்மையாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள கொமோரோ தீவுகளுக்கு அருகில் காணப்படுகிறது. அடுத்தது இந்தோனேசிய கோலாகாந்த் (லாடிமேரியா மெனாடோயென்சிஸ்) ஆகும். இதன் பெயர் பேர்மியன் இனமான சீலக்காந்த்திலிருந்து உருவானது.

சீலக்காந்த் மீன்கள் அற்றுவிட்டதாக கருதப்பட்ட மிகப்பழமையான மரபு வழியைச் சேர்ந்தவை. அதாவது இவை நுரையீரல்மீன் மற்றும் நாற்கால் விலங்குகளுடன் (இதில் நீர்நில வாழ்வன, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியவை அடங்கும்) அக்டினோட்டெரிகீயை மீன்களை விட நெருங்கிய தொடர்புடையவை. இவை இந்தோனேசியாவின் கடற்கரை மற்றும் இந்தியப் பெருங்கடலில் காணப்படுகின்றன. மேற்கிந்தியப் பெருங்கடல் சீலக்காந்த் மிக அருகிய இனம் ஆகும்.

410 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமையான கோயலாகாந்த் மீன்களின் புதைபடிவங்கள் உள்ளன. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, களிமண்ணாய காலத்துக்குப் பிறகு இந்த மீன்கள் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் 1938 இல் தென்னாப்பிரிக்காவின் கடற்கரையில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

சீலக்காந்த் மீன்கள் நீண்ட காலமாக "வாழும் தொல்லுயிர் எச்சம்" என்றே கருதப்பட்டது. ஏனெனில் அறிவியலாளர்கள் இதை புதைபடிவத்தில் இருந்து மட்டுமே அறியப்பட்ட ஒரு உயிரலகு என்று கருதினர். இதனுடன் நெருங்கிய உறவுகளும் உயிருடன் இல்லை. தோராயமாக இதன் தற்போதைய வடிவத்தில் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிணமித்தது. இருப்பினும், பல அண்மைய ஆய்வுகள், சீலக்காந்த் உடல் வடிவங்களானது முன்பு நினைத்ததை விட மிகவும் மாறுபட்டவை என்பதைக் காட்டுகின்றன.

சீலக்காந்த் மீன்கள் ஆக்டினிஸ்டியாவின் துணைப்பிரிவைச் சேர்ந்தவை. நுரையீரல் மீன்கள் மற்றும் ஆஸ்டியோலிபிஃபார்ம்ஸ், போரோலேபிஃபார்ம்ஸ், ரைசோடான்ட்ஸ், பாண்டெரிச்சிஸ் போன்றவை சில அழிந்துபோன டெவானியக் கால மீன்களுடன் தொடர்புடையவை.

கண்டுபிடிப்பு

சீலக்காந்த்: மீன் வரிசை 
1839 இல் லூயிஸ் அகாசிஸால் பெயரிடப்பட்ட சீலக்காந்த் கிரானுலட்டஸின் கோயில்காந்த் புதைபடிவம்.

கோயல்காந்த்களின் ஆரம்பகால புதைபடிவங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. நுரையீரல்மீன்கள் நாற்காலி உயிர்கள் மற்றும் டெட்ராபோட்களுடன் தொடர்புடைய சீலக்காந்த் மீன்கள் கிரீத்தேசியக் காலத்தின் முடிவில் அற்றுவிட்டதாக நம்பப்பட்டது. அக்டினோட்டெரிகீயை மீன்களை விட டெட்ராபாட்களுடன் மிக நெருக்கமாக தொடர்புடையதான இது, சீலக்காந்த் மீன் மற்றும் டெட்ராபோட்களுக்கு இடையில் இடைநிலை இனங்களாக கருதப்பட்டது. 1938 திசம்பர் 23 இல், முதல் கோயலாகாந்த் மீனின் துணை இனமான லாடிமேரியா மீனில் ஒன்று தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில், சலும்னா ஆற்றில் (இப்போது தியோலோமன்கா) கண்டுபிடிக்கப்பட்டது. அருங்காட்சியக காப்பாட்சியர் மார்ஜோரி கோர்டேனே-லாடிமர், உள்ளூர் மீனவர் கேப்டன் ஹென்ட்ரிக் கூசன் பிடித்த மீன்களிடையே இந்த மீனைக் கண்டுபிடித்தார். லாடிமர் ரோட்ஸ் பல்கலைக்கழக மீனியலாளரான, ஜே எல் பி ஸ்மித்தை தொடர்பு கொண்டு, மீனின் வரைபடங்களை அனுப்பினார். மேலும் அவர் "MOST IMPORTANT PRESERVE SKELETON AND GILLS = FISH DESCRIBED." என்று உறுதிப்படுத்தினார்.

1938 முதல், மேற்கிந்தியப் பெருங்கடல் கோலாகாந்த் கொமொரோசு, கென்யா, தன்சானியா, மொசாம்பிக், மடகாசுகர், ஐசிமங்காலிசோ சதுப்பு நிலப் பூங்கா, தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நேட்டலின் தென் கடற்கரையில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டது.

கொமோரோ தீவுக் கூட்டத்தில் 1952 திசம்பரில் மீண்டும் இம்மீன் கண்டுபிடிக்கப்பட்டது. 1938 மற்றும் 1975 க்கு இடையில், 84 மீன் மாதிரிகள் பிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

இதில் இரண்டாவதாக தற்கால உயிரினமாக உள்ள இந்தோனேசியன் கோகநாத் 1999 இல் இந்தோனேசியாவின் வட சுலாவேசியின் மனாடோவில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இது 1998 இல் மார்க் வி. எர்ட்மேன் கண்டுபிடித்த மாதிரியின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது. பின்னர் இது இந்தோனேசிய அறிவியல் நிறுவனத்தில் (LIPI) வைக்கப்பட்டது. எர்ட்மேனும், அவரது மனைவி அர்னாஸ் மேத்தாவும் முதன்முதலில் 1997 செப்டம்பரில் ஒரு உள்ளூர் சந்தையில் இந்த மீனில் ஒன்றை பார்த்தனர். ஆனால் இந்த இனத்தின் முதல் மாதிரியை விற்பதற்கு முன் சில ஒளிப்படங்களை மட்டுமே எடுத்தனர். இது ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு என்பதை உறுதிசெய்த பிறகு, எர்ட்மேன் 1997 நவம்பரில் மீனவர்களை நேர்காணல் செய்யவும் மேலும் ஒரு மீனைப் பார்க்கவும் சுலவேசிக்குத் திரும்பினார். இரண்டாவது மீனின் மாதிரி 1998 சூலையில் ஒரு மீனவரால் பிடிக்கப்பட்டது, பின்னர் அது எர்ட்மேனிடம் ஒப்படைக்கப்பட்டது.

சீலக்காந்த்: மீன் வரிசை 
மேற்கு இந்தியப் பெருங்கடலின் கோயில்காந்தின் புனரமைப்பு
சீலக்காந்த்: மீன் வரிசை 
பாதுகாக்கப்பட்ட Latimeria menadoensis, டோக்கியோ கடல் உயிர் பூங்கா, ஜப்பான்

விளக்கம்

சீலக்காந்த் மீன்கள் பொதுவாக 75 முதல் 200 பதொம் கடலில் காணப்படும் மீன்களாகும். எஃகு நீலநிறம் கொண்ட இவை, இலேசான பழுப்பு நிற சாயல் கொண்டவை. இதன் உடல் முழுவதும் வெள்ளை நிற திட்டுக்கள் காணப்படும். மேலும் இதன் உடல் முழுக்க பெரிய கனமான செதில்களால் மூடப்பட்டிருக்கும். இதன் பின்புற துடுப்பு, அடித்துடுப்பு, பக்கத்துடுப்பு போன்றவற்றில் சிறிய காம்பு போன்ற எலும்பு இருக்கும். இதனால் இது பலமான மீனாக உள்ளது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுரைம. பொ. சிவஞானம்மார்பகப் புற்றுநோய்ஜவகர்லால் நேருமரகத நாணயம் (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்தேசிக விநாயகம் பிள்ளைடி. டி. வி. தினகரன்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்செயற்கை நுண்ணறிவுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பரிதிமாற் கலைஞர்திருவண்ணாமலைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இரச்சின் இரவீந்திராதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இலக்கியம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஈரோடு மக்களவைத் தொகுதிதொல்காப்பியம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஇலட்சம்புற்றுநோய்பௌத்தம்புனித வெள்ளிசிதம்பரம் மக்களவைத் தொகுதிநஞ்சுக்கொடி தகர்வுமூசாவிஜயநகரப் பேரரசுபிரீதி (யோகம்)கல்லீரல் இழைநார் வளர்ச்சிகுடும்பம்பஞ்சபூதத் தலங்கள்கண்ணாடி விரியன்கொங்கு வேளாளர்தென்காசி மக்களவைத் தொகுதிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சைவ சமயம்சுக்ராச்சாரியார்சூரரைப் போற்று (திரைப்படம்)மியா காலிஃபாமுதுமலை தேசியப் பூங்காஅவிட்டம் (பஞ்சாங்கம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சிற்பி பாலசுப்ரமணியம்திராவிட முன்னேற்றக் கழகம்திருப்பாவைபிரேமலதா விஜயகாந்த்புகாரி (நூல்)திருமூலர்தமிழர் கலைகள்மு. க. ஸ்டாலின்ஆங்கிலம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்முல்லைப்பாட்டுஉப்புச் சத்தியாகிரகம்கல்லணைசரத்குமார்ஆண்டு வட்டம் அட்டவணைசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்சீமான் (அரசியல்வாதி)நீலகிரி மாவட்டம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிதமிழ்நாடுபரிவுஉ. வே. சாமிநாதையர்கலிங்கத்துப்பரணிபூக்கள் பட்டியல்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்ஒற்றைத் தலைவலிசி. விஜயதரணிஅரபு மொழிகல்லீரல்அரவிந்த் கெஜ்ரிவால்தஞ்சாவூர்திருட்டுப்பயலே 2பெண் தமிழ்ப் பெயர்கள்🡆 More