சிவிங்கிப்புலி

வேங்கை அல்லது சிவிங்கிப்புலி (Cheetah) பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும்.

Cheetah
புதைப்படிவ காலம்:Late Pliocene to Recent
சிவிங்கிப்புலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
பாலூட்டிகள்
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Felinae
பேரினம்:
Acinonyx

Brookes, 1828
இனம்:
A. jubatus
இருசொற் பெயரீடு
Acinonyx jubatus
(Schreber, 1775)
மாதிரி இனம்
Acinonyx venator
Brookes, 1828 (= Felis jubata, Schreber, 1775) by monotypy
சிவிங்கிப்புலி
சிவிங்கிப்புலியின் வாழிட வரைப்படம்

இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 112 கிமீ முதல் 120 கிமீ (70 முதல் 75 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும்.

உடல் அமைப்பு

சிவிங்கிப்புலி 
வேங்கை
சிவிங்கிப்புலி 
சிவிங்கிப் புலி, சிறுத்தை, ஜாகுவார் - வித்தியாசங்கள்

சிவிங்கிப்புலி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வேங்கையின் தலை சிறியதாகவும், உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும், வால் நீளமாகவும் இருக்கும். இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும், 112 முதல் 135 செமீ நீளமான உடலும், 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும். ஆனால் ஒரு வேங்கையைத் தனியாகப் பார்க்கும் போது அது ஆணா, பெண்ணா என இனம் பிரித்துக் காண்பது கடினமே.

வசிப்பிடம்

வேங்கை மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக மரத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கும். இவை பெரும்பாலும் மரத்திலும், புதர் மறைவிலும் தான் வசிக்கின்றன.

உணவுப்பழக்கம்

வேங்கை வேட்டையாடுதல் மூலமே உணவு தேடிக்கொள்கிறது. மான், குதிரை, முயல் உள்ளிட்ட உயிரினங்களை வேட்டையாடி உண்கிறது.

வாழ்க்கைமுறை

சிவிங்கிப்புலி 
பெண் வேங்கை தன் குட்டியுடன்

பெண் வேங்கைகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் வேங்கைகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.

சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

சிவிங்கிப்புலி 
பழக்கப்படுத்திய சிவிங்கிப்புலியைக் கொண்டு தென் குசராத்தில் மானை வேட்டாயாடும் 1812 ஆண்டைய ஓவியம்

வேட்டைப் பயன்பாடு

இந்த விலங்கை பழங்காலத்தில் இருந்து மனிதர்கள் பழக்கப்படுத்தி வேட்டைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியத் துணைக்கண்டத்தில் குறுநில மன்னர்கள் பலர் சிவிங்கிப் புலியைப் பழக்கி, வெளிமான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தினர்.

மேற்கோள்கள், அடிக்குறிப்புகள்

Tags:

சிவிங்கிப்புலி உடல் அமைப்புசிவிங்கிப்புலி வசிப்பிடம்சிவிங்கிப்புலி உணவுப்பழக்கம்சிவிங்கிப்புலி வாழ்க்கைமுறைசிவிங்கிப்புலி வேட்டைப் பயன்பாடுசிவிங்கிப்புலி மேற்கோள்கள், அடிக்குறிப்புகள்சிவிங்கிப்புலிஊனுண்ணிபாலூட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீரமாமுனிவர்தாவரம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்சிங்கம் (திரைப்படம்)கூலி (1995 திரைப்படம்)கவிதைஇலங்கைதமிழ் மாதங்கள்பரணி (இலக்கியம்)யாதவர்வானிலைதமிழ்நாடு சட்ட மேலவைஅக்பர்வேதாத்திரி மகரிசிவாதுமைக் கொட்டைவிளையாட்டுமோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழிசை சௌந்தரராஜன்வண்ணார்திருமலை (திரைப்படம்)அன்மொழித் தொகைசித்ரா பௌர்ணமிநாலடியார்திருமணம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)இந்திய அரசியல் கட்சிகள்தமிழ் படம் 2 (திரைப்படம்)கருச்சிதைவுஐயப்பன்ஈ. வெ. இராமசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருமுருகாற்றுப்படைஉடுமலை நாராயணகவிமறைமலை அடிகள்புறநானூறுமுடிகோயம்புத்தூர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இளங்கோவடிகள்தமிழ் தேசம் (திரைப்படம்)சேமிப்புஆந்திரப் பிரதேசம்வாணிதாசன்புவிகிருட்டிணன்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதிருவாசகம்சுபாஷ் சந்திர போஸ்மு. வரதராசன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்விசாகம் (பஞ்சாங்கம்)சிறுதானியம்மக்களாட்சிவிண்ணைத்தாண்டி வருவாயாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடு காவல்துறைபாசிப் பயறுதமிழ் இலக்கணம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஜிமெயில்திருநங்கைஅங்குலம்கல்லீரல்நெல்ஆயுள் தண்டனைஅளபெடைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இங்கிலீஷ் பிரீமியர் லீக்திருமலை நாயக்கர் அரண்மனைநான் அவனில்லை (2007 திரைப்படம்)சைவத் திருமுறைகள்தமிழில் கணிதச் சொற்கள்அய்யா வைகுண்டர்சங்க இலக்கியம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி🡆 More