சஷ்டி

சஷ்டி அல்லது சட்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.

இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஆறாவது திதி சட்டி ஆகும். ஷட் எனும் வடமொழிச் சொல் ஆறு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஆறாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் ஆறாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் ஆறாம் நாளுமாக இரண்டு முறை சட்டித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் சட்டியைச் சுக்கில பட்சச் சட்டி என்றும், பூரணையை அடுத்த சட்டியைக் கிருட்ண பட்சச் சட்டி என்றும் அழைக்கின்றனர்.

சஷ்டி
சட்டித் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

வானியல் விளக்கம்

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும். சட்டித் திதி ஆறாவது திதியும் 21 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 60 பாகையில் இருந்து 72 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சச் சட்டித் திதியும், 240 பாகையிலிருந்து 252 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சச் சட்டியும் ஆகும்.

இந்து சமயச் சிறப்பு நாட்கள்

இந்து சமயத்தினர்க்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாகக் கொண்டே வருகின்றன. இது முருகனுக்குரிய சிறப்பு நாளாகும். சட்டித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:

  • கந்தசட்டி விரத நிறைவு: ஐப்பசி மாத வளர்பிறைச் சட்டித் திதி.
  • விநாயகருக்கான கார்த்திகைச் சட்டி 21 நாள் விரத நிறைவு: மார்கழி வளர்பிறைச் சட்டித் திதி.

கபிலா சஷ்டி கபிலா சஷ்டி என்பது பாத்ரபத மாதத்தில் தேய்பிறையில் வருகின்ற சஷ்டிதிதியாகும். இந்த நாள் சந்திரனுடைய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்நாளில் விருப்ப தெய்வத்திற்கும், பசுவிற்கும் பூசை செய்தல் சிறப்பாகும். பசுவிற்கு புற்கள் போல உணவிடுதலும் நன்மைதரும்

ஆதாரம்

உசாத்துணைகள்

  • இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்றம், 2006.
  • திரவியம், மு., இந்துசமயக் களஞ்சியம், திருமகள் நிலையம், 1995.
  • Balachandra Rao, S., Indian Astronomy: An Introduction, University Press (India) Private Limited, 2002.
  • Sharma, P. D., Hindu Astronomy, Global Vision Publishing House, 2004.

காண்க

வெளி இணைப்புகள்

Tags:

சஷ்டி வானியல் விளக்கம்சஷ்டி இந்து சமயச் சிறப்பு நாட்கள்சஷ்டி ஆதாரம்சஷ்டி உசாத்துணைகள்சஷ்டி காண்கசஷ்டி வெளி இணைப்புகள்சஷ்டிஅமாவாசைஇந்துக் காலக் கணிப்பு முறைசந்திர மாதம்சந்திரன்திதிபூரணைவளர்பிறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிலப்பதிகாரம்கிராம நத்தம் (நிலம்)எடப்பாடி க. பழனிசாமிஅறுபது ஆண்டுகள்கௌதம புத்தர்சித்தர்எங்கேயும் காதல்தமிழ் எண் கணித சோதிடம்இந்திய உச்ச நீதிமன்றம்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்யூடியூப்வரலட்சுமி சரத்குமார்மாணிக்கவாசகர்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)மொழியியல்தங்கம்சோழர் காலக் கட்டிடக்கலைபெரியாழ்வார்அயோத்தி இராமர் கோயில்மனத்துயர் செபம்ராதாரவிவைப்புத்தொகை (தேர்தல்)உரிச்சொல்புறநானூறுகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிசப்தகன்னியர்சைவத் திருமுறைகள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழ்நாடுவாட்சப்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சி. விஜயதரணிஅபினிநாம் தமிழர் கட்சிமதீச பத்திரனகலிங்கத்துப்பரணிதமிழ்விடு தூதுமாணிக்கம் தாகூர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)வெள்ளியங்கிரி மலைசித்த மருத்துவம்மாமல்லபுரம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இரச்சின் இரவீந்திராசீர் (யாப்பிலக்கணம்)சூரிகருப்பைமெய்யெழுத்துநீலகிரி மாவட்டம்வினைத்தொகைசத்குருதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019யாதவர்ஆண்டாள்பழமுதிர்சோலை முருகன் கோயில்மக்களாட்சிசிங்கம் (திரைப்படம்)அன்புபதிற்றுப்பத்துஜோதிமணிசிறுபஞ்சமூலம்பாட்டாளி மக்கள் கட்சிசிவாஜி கணேசன்வேற்றுமையுருபுநயன்தாராஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழர் விளையாட்டுகள்தொலைக்காட்சிஸ்ரீலீலாவிஷ்ணுவைரமுத்துஅம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழர் கலைகள்சிதம்பரம் மக்களவைத் தொகுதிபிரீதி (யோகம்)ரோபோ சங்கர்கம்பராமாயணம்மீனாட்சிசுந்தரம் பிள்ளைதிருமலை நாயக்கர் அரண்மனை🡆 More