கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு

கோவிட்-19 தடுப்பூசி 2019–20 கொரோனாவைரசுத் தொற்று இதுவரை கண்டுபிடிக்ப்படவில்லை ஆனால் தடுப்பூசி உருவாக்க பல முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன.

கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு
தடுப்பூசிக்கு ஒப்புதல் கொடுத்த நாடுகளின் வரைபடம்
  பொது பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுதல் நடந்து வருகிறது
  EUA ஒப்புதல் அளிக்கப்பட்டது, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுதல் நடந்து வருகிறது
  EUA ஒப்புதல் அளிக்கப்பட்டது, குறைந்தபட்டச தடுப்பூசிகளுக்கு மட்டும்
  பொது பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
  EUAஒப்புதல் அளிக்கப்பட்டது, பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான திட்டமிடுதல்
  EUA நிலுவையில் உள்ளது

முந்தைய கொரோனா வைரசுத் தடுப்பூசி முயற்சிகள்

இதுவரை பல தடுப்பூசிகள் பறவைகளில் இருந்தும் விலங்குகளினால் ஏற்படும் கோராேனா வைரசுத் தடுப்பூசிள் இருக்கின்றன.

மனிதர்களைப் பாதிக்கும் கொரோனவிரிடே (Coronaviridae) வைரசுகளுக்கான தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முந்தைய முயற்சிகள் தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி (Severe acute respiratory syndrome என்பதன் ஆங்கிலச் சுருக்கம் சார்சு) மற்றும் அரபுநாடுகளில் அறியப்பட்ட சுவாச நோய்க்குறி (MERS) மற்றும் சார்சு க்கு எதிரான தடுப்பூசிகள் மனிதரல்லாத விலங்கு மாதிரிகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, சார்சுக்கு முழுமையாக குணமடைய செய்யும் அல்லது பாதுகாப்பு தடுப்பூசியும் இல்லை. அனால் மனிதர்களுக்கு பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

2020 முயற்சிகள்

சார்சு SARS-CoV-2 2019 ஆண்டின் இறுதியில் கோவிட்-19 என்று பெயரிடப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மிகப்பெரிய தொற்றுநோயாக பரவியது. அதன் காரணமாக தடுப்பூசியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசிகளை உருவாக்க பல நிறுவனங்கள் சுமார் 35 நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, மார்ச் 2020 நிலவரப்படி சுமார் 300 மருத்துவ ஆய்வுகள் நடந்து வருகின்றன. கோவிஷீல்டு, கொரோனாவேக், சைனோபார்மின் 2 தடுப்பூசிகள், மார்டர்னா-1273, பிஎன்டி162பி2 ஆகிய தடுப்பூசிகள் மூன்றாவது கட்ட சோதனையில் இருக்கின்றன. இந்தத் தடுப்பூசிகள் வெற்றிகரமாக 2கட்டம் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியும் டி செல்களும் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் பேருக்கு செலுத்தி சோதிக்கிற மூன்றாம் கட்ட சோதனையும் வெற்றி கண்டுவிட்டால் போதும் கொரோனா வைரஸ் தொற்றை விரட்டியடிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டதாக பொருள்

மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன

முன்கூட்டிய ஆராய்ச்சிகள்

மரபணு வரிசைகள் பகுப்பாய்வு

கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி முயற்சியில் 'பிரண்டியர்ஸ் இன் மைக்ரோபயாஜி' பத்திரிக்கையில் வெளியாகியுள்ள தகவல்:- உலகமெங்கும் இருந்து பல்வேறு பரிசோதனைக் கூடங்களில் பிரித்தெடுக்கப்பட்ட 48 ஆயிரத்து 635 கொரோனா வைரஸ் மரபணு வரிசைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. உலகின் அனைத்து கண்டங்களுக்கும் பயணித்து பரவியுள்ள இந்த வைரஸ் மாற்றங்களை இத்தாலி நாட்டில் உள்ள போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக்கியுள்ளனர். இதுபற்றி அந்த விஞ்ஞானிகள் கூறும்போது தங்களது பகுப்பாய்வில் இந்த கொரோனா வைரஸ்கள் சிறிய மாற்றம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மாதிரியில் 7 மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவான காய்ச்சல் இரு மடங்குக்கும் அதிகமாகிற மாறுபடுகின்ற விகிதத்தை கொண்டுள்ளன என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். போலோக்னா பல்கலைக்கழக பேராசிரியர் பெடரிகோ ஜியோர்கி இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் ஏற்கனவே மனிதர்களை பாதிக்கும் வகையில் உகந்ததாக உள்ளது. மேலும் இது அதன் குறைந்த பரிணாம மாற்றத்தை கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் கொரோனா வைரஸ்க்கு எதிராக உருவாக்குகிற தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்

சில நிறுவனங்களின் பெயர்கள்

உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசி

12 ஆகத்து 2020 அன்று உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசியை உருசியா கண்டுபிடித்து பதிவு செய்ததாக தெரிவித்துள்ளது. முதல் தடுப்பூசியை உருசியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள்

சமூக வலைதளங்களில் கோவிட்-19 2019–20 கொரோனாவைரசுத் தொற்று தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடித்ததாகவும் அது மருந்துகள் கிடைப்பதாகவும் பதிவுகள் செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு முந்தைய கொரோனா வைரசுத் தடுப்பூசி முயற்சிகள்கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு 2020 முயற்சிகள்கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு மரபணு வரிசைகள் பகுப்பாய்வுகொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு உலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசிகொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள்கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு மேற்கோள்கள்கொரோனாவைரசுத் தொற்று 2019 தடுப்பூசி ஆய்வு2019–20 கொரோனாவைரசுத் தொற்று

🔥 Trending searches on Wiki தமிழ்:

குலுக்கல் பரிசுச் சீட்டுபெண்பரணி (இலக்கியம்)பீப்பாய்பரதநாட்டியம்கொன்றைசிந்துவெளி நாகரிகம்சுற்றுலாவரிலொள்ளு சபா சேசுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நெல்லிவெந்தயம்நேர்பாலீர்ப்பு பெண்நாடாளுமன்ற உறுப்பினர்திருப்பாவைகொடைக்கானல்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்நீர் விலக்கு விளைவுகருப்பை நார்த்திசுக் கட்டிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்பெரும்பாணாற்றுப்படைஇந்தியாஅண்ணாமலையார் கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்தமிழர் கலைகள்பசுமைப் புரட்சிகருத்தரிப்புஇறைமைபாரதிதாசன்கருப்பைஇந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இட்லர்சிதம்பரம் நடராசர் கோயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதேசிக விநாயகம் பிள்ளைமருதமலை முருகன் கோயில்பொது ஊழிஉட்கட்டமைப்புகட்டுவிரியன்தருமபுரி மக்களவைத் தொகுதிஸ்ரீலீலாபாஸ்காதொல்காப்பியம்வல்லினம் மிகும் இடங்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சாகித்திய அகாதமி விருதுஅனுமன்பாரிலியோயூடியூப்ஆரணி மக்களவைத் தொகுதிஇசுலாமிய நாட்காட்டிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பழமுதிர்சோலை முருகன் கோயில்சிவாஜி கணேசன்வேலு நாச்சியார்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிசுந்தர காண்டம்மண்ணீரல்புதினம் (இலக்கியம்)குறிஞ்சிப் பாட்டுவரைகதைஅக்கி அம்மைகட்டபொம்மன்கேபிபாராதமிழ்ப் பருவப்பெயர்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)ஆற்றுப்படைதெலுங்கு மொழிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வாட்சப்கார்லசு புச்திமோன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மட்பாண்டம்அறுபது ஆண்டுகள்ஆழ்வார்கள்🡆 More