கொரிய மக்கள்

கொரிய மக்கள் (Korean people) என்பவர்கள் கொரிய, மஞ்சூரியா ஆகிய இடங்களை பூர்வீகமாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர்.

கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளில் எழுபது இலட்சத்திற்கும் மேலான கொரியர்கள் புலம்பெயர்ந்து சீனா, சப்பான் மற்றும் வட அமெரிக்க பசிபிக் விளிம்புக் கடலோர நாடுகளில் வாழ்கின்றனர்.

கொரிய மக்கள்
மொத்த மக்கள்தொகை
(82.5 மில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கொரிய மக்கள் South Korea      50,423,955 (2014 மதிப்பீடு)
கொரிய மக்கள் North Korea      25,300,000 (2014 மதிப்பீடு)

புலம்பெயர் மக்கள்தொகை
கொரிய மக்கள் China2,573,928
கொரிய மக்கள் United States2,091,432
கொரிய மக்கள் Japan892,704
கொரிய மக்கள் Canada215,993
கொரிய மக்கள் Russia176,411
கொரிய மக்கள் Uzbekistan173,832
கொரிய மக்கள் Australia156,865
கொரிய மக்கள் Kazakhstan105,483
கொரிய மக்கள் Philippines88,102
கொரிய மக்கள் Vietnam86,000
கொரிய மக்கள் Mexico51,800
கொரிய மக்கள் Brazil49,511
கொரிய மக்கள் United Kingdom44,749
கொரிய மக்கள் Indonesia40,284
கொரிய மக்கள் Germany33,774
கொரிய மக்கள் New Zealand30,527
கொரிய மக்கள் Argentina22,580
கொரிய மக்கள் Singapore20,330
கொரிய மக்கள் Thailand20,000
கொரிய மக்கள் Kyrgyzstan18,403
கொரிய மக்கள் France14,000
கொரிய மக்கள் Malaysia14,000
கொரிய மக்கள் Ukraine13,083
கொரிய மக்கள் Guatemala12,918
கொரிய மக்கள் India10,397
கொரிய மக்கள் United Arab Emirates9,728
கொரிய மக்கள் Sweden7,250
கொரிய மக்கள் Saudi Arabia5,145
கொரிய மக்கள் Paraguay5,126
கொரிய மக்கள் Cambodia4,372
கொரிய மக்கள் Taiwan4,304
கொரிய மக்கள் Ecuador2,000
மொழி(கள்)
கொரியம் speakers: 80 மில்லியன்
சமயங்கள்
Plurality: சமயம் சாராதவர். கிறித்தவம் பின்பற்றுவோர், கொரியப் பௌத்தம், கொரிய shamanism, சியோண்டோயியம், கொரியக் கன்ஃபியூசனியம் பின்னணியினர்.

சொற்பிறப்பியல்

தென்கொரியர்கள் தங்களை ஆங்குக்-இன் அல்லது ஆங்குக்-சாரம் என்பர்; இவற்றின் பொருள் "கொரிய நாட்டு மக்கள்" என்பதாகும். புலம்பெயர்ந்த கொரியர்கள் தங்களை ஆநின் என கூறிக்கொள்கின்றனர். (இதன் பொருள் "கொரிய மக்கள்").

வடகொரியர்கள் தங்களை யோசியோன்-இன் அல்லது யோசியோன் சாரம் என்பர்; இவற்றின் பொருள் "யோசியோன் மக்கள்" என்பதாகும். இதே போல சீனக் கொரியர்கள் தங்களைச் சீன மொழியில் சோசியான்சூ (சீனம்: 朝鲜族) எனவோ அல்லது யோசியோன்யோக் எனவோ கூறிக்கொள்கின்றனர். இவை இரண்டுமே "யோசியோன் இனக்குழு" எனப் பொருள்படும்.

நடுவண் ஆசியக் கொரியர்கள் தங்களை கொரியோ-சாரம் என்பர். இது 918 முதல் 1392 வரை ஆண்ட கொரியப் பேரசின் பெயரை குறிப்பதாகும்.

தோற்றங்கள்

மொழியியல், தொல்லியல் ஆய்வுகள்

கொரியர்கள் அல்தாயிக் மொழி பேசும் கொரியத் தீவகக் கால்வழி மக்கள் ஆவர். or proto-Altaic தொல்லியல் சான்றுகளின்படி முதனிலைக் கொரியர்கள் தென்-நடுவண் சைபீரியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

உலகிலேயே கொரியத் தீவகத்தில்தான் கல்மேடைபோன்ற ஒற்றையறைப் பெருங்கற்படைக் கல்லறைகள் ஏராளமாக நிறைந்துள்ளன. உண்மையில் இங்கே 35,000 முதல் 100,000 ஒற்றையறைப் பெருங்கற்படைக்காலக் கல்லறைகள் உள்ளன. அதாவது, உலகில் உள்ள இவ்வகைக் கல்லறைகளில் 70% கல்லறைகள் இங்குள்ளன. இவை மஞ்சூரியா, சாண்டாங் தீவகம், கியூழ்சு ஆகிய ப்குதிகளிலும் இவை காணப்படுகின்றன. பிற வடகிழக்கு ஆசியப் பகுதிகளில் கானப்படாத இவை மேற்கூறிய இடங்களில் மட்டும் பரவியுள்ளமை இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

மரபியல் ஆய்வுகள்

மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஆய்வுகள், பன்முறைத் தொடர்ந்துநிகழ்ந்த மாந்தக் குடியேற்றங்கட்குப் பிறகும் கொரியர்கள் தெளிவாக பலகாலமாக அகமணக்குழு வாழ்வில் இருந்தமைக்கான முடிவுகளைத் தெரிவிக்கின்றன. இவர்களில் இப்போது மூன்றுவகை முதன்மை மாந்தரின ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள் நிலவுகின்றன.

ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்

கொரிய ஆண்களில் கொரியத் தீவகம் அல்லது அதைச் சூழ்ந்த பகுதியில் இருந்து பரவிய துணைக்கவையான O-M176 ஒருமைப் பண்புக் குழுவின் (P49) வகையும் கிழக்காசியாவில் பொதுவாக நிலவும் ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுவாகிய O-M122 வகையும் உள்ளது. பெரும்பாலான கொரிய ஆண்களில் O2b ஒருமைப் பண்புக் குழு தோரா. 30% அளவில் (20% இலிருந்து 37% வரை) அமைகிறது. to 37%); சில கொரிய ஆண்களின் பதக்கூறுகளில் O3 ஒருமைப் பண்புக் குழு தோரா. 40% அளவில் உள்ளது. கொரிய ஆண்களில் தோராயமாக 15% அளவுக்கு C-M217 ஒருமைப் பண்புக் குழுவும் கூட நிலவுகிறது.

சிற்சில வேளைகளில் கொரிய ஆண்களில் தோராயமாக 2% அளவு நிகழ்வெண்ணிக்கையில் D-M174 ஒருமைப் பண்புக் குழு காணப்படுகிறது. (0/216 = 0.0% DE-YAP, 1/68 = 1.5% DE-YAP(xE-SRY4064), 8/506 = 1.6% D1b-M55, 3/154 = 1.9% DE, 5/164 = 3.0% D-M174, 1/75 D1b*-P37.1(xD1b1-M116.1) + 2/75 D1b1a-M125(xD1b1a1-P42) = 3/75 = 4.0% D1b-P37.1, 3/45 = 6.7% D-M174). மேலும் D1b-M55 துணைக்கவை சிறிய பதக்கூறொன்றில் பெரும அளவில் காணப்படுகிறது. இது ஜப்பானிய (n=16) ஐனு மக்களில் மட்டுமன்றி, ஜப்பானியத் தீவகம் முழுவதிலும் நிலவும் மரபுக் குறிப்பான் ஆகும். கொரிய ஆண்களில் மிக அருகலாகக் காணலாகும் ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாக, Y மரபன் N-M231 ஒருமைப் பண்புக் குழு தோரா. 4% அளவிலும் O-MSY2.2 ஒருமைப் பண்புக் குழு தோரா. 3% அளவிலும் O2(xO2b) தோரா. 2% அளவிலும், Q-M242 ஒருமைப் பண்புக் குழுவும் R1 ஒருமைப் பண்புக் குழுவும் சேர்ந்து தோரா. 2% அளவிலும் அமைவதுடன் J, Y*(xA, C, DE, J, K), L, C-RPS4Y(xM105, M38, M217), C-M105 போன்ற ஒருமைப் பண்புக் குழுக்களும் உள்ளன.

ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்கள்

கொரியர்களின் ஊன்குருத்து மரபன் கால்வழி ஆய்வுகள், டி4 ஒருமைப் பண்புக் குழுக்களின் நிகழ்வெண்ணிக்கை உள்மங்கோலியாவிலும் அருன்பானரிலும் உள்ள கொரிய இனக்குழுக்களில் 23% (11/48) முதல் தென்கொரிய இனக்குழுக்களில் தோரா. 32% (33/103) வரை அமைந்துள்ளது. டி4 ஒருமைப் பண்புக் குழு பொதுவாகக் கொரியர்களிலும் வடகிழக்கு ஆசியக் கொரியர்களிலும் அமைந்துள்ளது. அமெரிக்கா, பாலினேசியா, தென்கிழக்கு ஆசியா கொரியர்களில் சிலசமயம் ஊன்குருத்து பி (B) ஒருமைப் பண்புக் குழுவும் அமைவதுண்டு. உள்மங்கோலியாவிலும் அருன்பானரிலும் தென்கொரியா இனக்குழுக்களிலும் ஊன்குருத்து பி. ஒருமைப் பண்புக் குழு தோரா. 10%முதல் 20% வரை காணப்படுகிறது. ஊன்குருத்து மரபன் ஏ வகை ஒருமைப் பண்புக் குழு தோரா. 7% அளவுக்குத்(7/103) தென்கொரியர்களிலும் 15%வரை (7/48) அருன்பானரிலும் உள்மங்கோலியாவிலும் உள்ள கொரிய இனக்குழுக்களிலும் அமைகிறது. ஏ வகை ஒருமைப் பண்புக் குழு சுக்சி, எசுக்கிமோ, நா-தேனிக்கள், அமெரிந்துகள், வட, நடுவண் அமெரிக்காவில் உள்ள தொல்குடிகளில் மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.

மற்ற அரைப்பகுதி கொரியர்களில் பல்வேறு மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழுக்களாக, ஜி (G) வகை, என்9 (N9) வகை, ஒய் வகை, எஃப் வகை,எம்7, எம்8,, எம்9 எம்10, எம்11 வகைகள், ஆர்11 வகை, ய சி வகை, இசட் வகை ஆகிய ஒருமைப் பண்புக் குழுக்கள் அமைகின்றன.

நிகரிணை குறுமவக ஆய்வுகள்

கொரியர்கள் பொதுவாக அல்தாயிக் மொழி பேசும் வடகிழக்காசிய குழுசார்ந்த மக்கள்தொகையினராகக் கருதப்படுகின்றனர். என்றாலும் அண்மை நிகரிணை குறுமவக ஆய்வுகளின் (Autosomal Tests) முடிவுகள் இவர்கள் கிழக்காசியப் பகுதியின் தெற்கு, வடக்குப் பிரிவுகளின் சிக்கலான இருமைப் பண்புக் கூட்டுத் தோற்றம் கொண்டவராகத் தெரிவிக்கின்றன.கொரியர்களின் ஆண்கால்வழி வரலாற்றைப் புரிந்துகொள்ள, கொரியாவில் இருந்தும் அதைச் சுற்றியமைந்த கிழக்காசிய வட,தென் பகுதிகளில் இருந்தும் மேலும் கூடுதலான ஒய் மரபன் ஒருமைப் பண்புக் குழு சார்ந்த குறிப்பான்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய ஆய்வில் 25 வகை ஒய்-குறுமவக மரபன் ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கம் சார்ந்த குறிப்பான்களும் 17 வகை ஒய்-குறுமவக குறுந்தொடர் மீள்வு இருப்புவரைகளும் (Y-STR locii) கிழக்காசியாவின் பலபகுதிகளை சேர்ந்த 1,108 ஆண்களின் ஆய்வுகளில் இனம்பிரிக்கப்பட்டுள்ளன.

பண்பாடு

வட, தென் கொரியப் பண்பாடுகள் ஒரே மரபில் இருந்து தோன்றியவை என்றாலும் வட, தென் அரசியல் பிரிவிற்குப் பின்னர் இவர்களது பண்பாடுகள் இன்ரு சற்றே வேறுபாடுகள் கொண்டுள்ளன.

மொழி

கொரிய மக்கள் பேசும் மொழி கொரிய மொழியாகும். கொரிய மொழி ஆங்குல் எழுத்து முறைமையைப் பின்பற்றுகிறது. உலக முழுவதிலும் 78 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் கொரிய மொழியைப் பேசுகின்றனர்.

காட்சிமேடை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கொரிய மக்கள் சொற்பிறப்பியல்கொரிய மக்கள் தோற்றங்கள்கொரிய மக்கள் பண்பாடுகொரிய மக்கள் மொழிகொரிய மக்கள் காட்சிமேடைகொரிய மக்கள் மேற்கோள்கள்கொரிய மக்கள் வெளி இணைப்புகள்கொரிய மக்கள்கொரியத் தீபகற்பம்சப்பான்சீனாமஞ்சூரியாவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஔவையார்சாகித்திய அகாதமி விருதுசித்திரைநனிசைவம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நன்னூல்ம. கோ. இராமச்சந்திரன்சிறுகதைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சப்ஜா விதைகாடைக்கண்ணிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019நயன்தாராவிவிலிய சிலுவைப் பாதைதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்கோயம்புத்தூர் மாவட்டம்மாலைத்தீவுகள்லொள்ளு சபா சேசுஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நிணநீர்க்கணுகஞ்சாமட்பாண்டம்தமிழ் தேசம் (திரைப்படம்)பனைவினோஜ் பி. செல்வம்திருப்பதிநெடுநல்வாடை (திரைப்படம்)கண்ணாடி விரியன்சுற்றுச்சூழல்குலுக்கல் பரிசுச் சீட்டுஎட்டுத்தொகைபர்வத மலைஜெயம் ரவிகுமரி அனந்தன்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதிராவிசு கெட்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுதிருப்பூர் மக்களவைத் தொகுதிகாம சூத்திரம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வே. செந்தில்பாலாஜிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்சி. விஜயதரணிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்நீர் விலக்கு விளைவுகெத்சமனிதிரிசாகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஅழகி (2002 திரைப்படம்)தமிழ்ப் புத்தாண்டுஇயேசுதாய்ப்பாலூட்டல்இராபர்ட்டு கால்டுவெல்ஸ்ரீநஞ்சுக்கொடி தகர்வுஅபூபக்கர்உமறு இப்னு அல்-கத்தாப்இனியவை நாற்பதுகல்லீரல் இழைநார் வளர்ச்சிசெயற்கை நுண்ணறிவுகருக்கலைப்புஅக்கி அம்மைபிள்ளைத்தமிழ்தமிழ் எண்கள்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்தமிழ்விடு தூதுமயில்கணியன் பூங்குன்றனார்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இலக்கியம்பண்ணாரி மாரியம்மன் கோயில்திருப்பாவைகல்விசட் யிபிடிமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்மஞ்சள் காமாலைசுரதாஐக்கிய நாடுகள் அவை🡆 More