குரங்கு அம்மை

குரங்கு அம்மை (Monkeypox) என்பது குரங்கம்மைத் தீநுண்மியால் (வைரசால்) உண்டாகும் ஒரு தொற்றுநோய்.

இந்நோய் மாந்தர்களையும் சில விலங்குகளையும் தாக்குகின்றது. இதற்கான நோய் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் போன்றவையாகும். இதனைத்தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை தோன்றலாம். இந்நோய் தொற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 7-14 நாள்கள் தொடர்பாக இருக்கலாம். அறிகுறிகள் காணப்படும் காலம் 2-4 கிழமைகள்.

குரங்கு அம்மை
குரங்கு அம்மை
நான்கு வயது சிறுமியில் உடலில் காணப்படும் தடிப்புகளும் கொப்புளங்களும்
சிறப்புதொற்றுநோய்
அறிகுறிகள்காய்ச்சல், தலைவலி, உடல் தசைவலி, கொப்புளங்கள், நெறிகட்டுதல்
வழமையான தொடக்கம்5–21 நாள்கள் நோயுள்ளவர்கள் தொடர்பு
கால அளவு2–4 கிழமைகள் வரை
காரணங்கள்குரங்கம்மைத் தீநுண்மி
நோயறிதல்தீநுண்ம டிஎன்ஏ சோதனை
ஒத்த நிலைமைகள்சின்னம்மை, பெரியம்மை
தடுப்புபெரியம்மைத் தடுப்பூசி
மருந்துடெக்கோவிரிமாட் (Tecovirimat)
நிகழும் வீதம்அரிதாகக் காணப்படுவது
இறப்புகள்3.6% வரை (மேற்கு ஆப்பிரிக்கக் கிளை தீநுண்மி), up to 10.6% (Congo Basin clade, untreated)

விலங்குகளின் கடியாலோ, விலங்கின் கீறலாலோ, காட்டில் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியைக் கையாள்வதாலோ, நோயுற்றவரோடு நெருங்கிய தொடர்பாலோ, உடல்நீர்க்கலப்பாலோ குரங்கம்மை நோய் உண்டாகின்றது. இந்த நோய்க்கான தீநுண்மி பொதுவாக எலி போன்ற கொறிணிகளிடையே சுழற்சியில் இருக்கும். நோயை அறிந்துகொள்ள நோயுற்றவர் உடலில் சிறு வெட்டின் மூலம் தீநுண்மி உள்ளதை அதன் மரபணுச் சரத்தில் இருந்து கண்டுகொள்ளலாம்.

பெரியம்மைத் தடுப்பூசி இந்நோயைத் தடுக்க 85% வல்லமை கொண்டது. 2019 ஆம் ஆண்டு சின்னியோசு (ynneos) என்னும் குரங்கம்மைத் தடுப்பூசி அமெரிக்காவில் வளர்ந்த ஆட்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பெற்றது. தற்போது சீர்வழக்கான மருத்துவத் தீர்வு தீநுண்மி எதிர்ப்பு மருந்தாகிய தெக்கோவிரிமட்டு (tecovirimat) ஆகும். இது குறிப்பாக பெரியம்மை, குரங்கைம்மை போன்ற ஆர்த்தோபாக்சுவைரசுகளுக்கானவை (orthopoxviruses). இது ஐரோப்பிய ஒன்றியத்திலும், அமெரிக்காவிலும் குரங்கம்மைக்குத் தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட்ட மருத்துவ முறை. சிடோபோவிர் (Cidofovir) அல்லது பிரின்சிடோபோவிர் (brincidofovir) ஆகியவும் பயனுடையதாக இருக்கலாம். மருத்துவத் தீர்வுகள் எதையும் எடுத்துக்கொள்ளாவிட்டால் ஏற்படும் இறப்பின் வீதம் காங்கோ பகுதியிலும் நடு ஆப்பிரிக்கப் பகுதியிலும் காணப்படும் குரங்கம்மை வகையால் 10% அல்லது 11% என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்

Tags:

தீநுண்மிதொற்றுநோய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளையார்இந்தியத் தேர்தல் ஆணையம்திருநங்கைபுற்றுநோய்தன்னுடல் தாக்குநோய்மலைபடுகடாம்நாலடியார்இந்திய உச்ச நீதிமன்றம்அ. கணேசமூர்த்திவீரப்பன்வைரமுத்துகாம சூத்திரம்மாநிலங்களவைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிநாயன்மார்ஓ. பன்னீர்செல்வம்முதுமொழிக்காஞ்சி (நூல்)விவிலிய சிலுவைப் பாதைநானும் ரௌடி தான் (திரைப்படம்)சிவம் துபேசப்தகன்னியர்இயேசுகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதேர்தல் பத்திரம் (இந்தியா)தென்னாப்பிரிக்காஐ (திரைப்படம்)கொங்கு வேளாளர்பூலித்தேவன்இந்திய மக்களவைத் தொகுதிகள்கோயம்புத்தூர்தருமபுரி மக்களவைத் தொகுதிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ் எண்கள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பெரிய வியாழன்புறநானூறுபஞ்சபூதத் தலங்கள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுமுரசொலி மாறன்இந்திகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகல்லீரல் இழைநார் வளர்ச்சிதி டோர்ஸ்இசுலாமிய வரலாறுகரணம்பாரதிதாசன்தட்டம்மைஅளபெடைதிருவாரூர் தியாகராஜர் கோயில்காதல் மன்னன் (திரைப்படம்)பிரெஞ்சுப் புரட்சிமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்ஆசிரியர்அங்குலம்ஏலாதிமக்களாட்சிஅண்ணாதுரை (திரைப்படம்)ம. கோ. இராமச்சந்திரன்விருதுநகர் மக்களவைத் தொகுதிகுற்றாலக் குறவஞ்சிஆற்றுப்படைநெசவுத் தொழில்நுட்பம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அலீதமிழ்நாடுஎயிட்சுதிராவிடர்எடப்பாடி க. பழனிசாமிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திண்டுக்கல் மக்களவைத் தொகுதிரவிச்சந்திரன் அசுவின்விஜய் ஆண்டனிஅதிதி ராவ் ஹைதாரிகிரிமியா தன்னாட்சிக் குடியரசுகுண்டலகேசிமு. கருணாநிதிநாடார்🡆 More