கார்ல் சேகன்

கார்ல் எட்வர்ட் சேகன் (Carl Edward Sagan /ˈseɪɡən/ நவம்பர் 9 1934—திசம்பர் 20 1996) ஒரு அமெரிக்க அறிவியிலாளர், வானியற்பியலாளர், வானியலாளர், அண்டவியலாளர் மற்றும் எழுத்தாளர்.

அறிவியல், வானவியல், வானியற்பியல் போன்ற துறைகளை மக்களிடையே பிரபலமாக்குவதில் பெருவெற்றி கண்டவர். இவர் அறுநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், பத்திகள் எழுதியுள்ளார்; இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தனித்தோ பிற எழுத்தாளர்களுடன் சேர்ந்தோ வெளியிட்டுள்ளார். தனது படைப்புகளில் அறிவியல் முறை (Scientific method), அறிவிய ஐயுறவியல் (Scientific skepticism) போன்றவற்றை பெரிதும் முன்வைத்துள்ளார். வேற்றுக்கோள் உயிரினங்களின் உயிரியலின் (Exobiology) முன்னோடியாகக் கருதப்படும் இவர், வேற்றுக் கோள்களில் அறிவாற்றல் உள்ள உயிர்களைத் தேடும் சேட்டி (SETI - Search for Extra-Terrestrial Intelligence) திட்டத்துக்கு தனது படைப்புகளின் மூலம் ஆதரவு தேடித்தந்தார்.

கார்ல் சேகன்
Carl Sagan
கார்ல் சேகன்
1980 இல் கார்ல் சேகன்
பிறப்புகார்ல் எட்வர்ட் சேகன்
(1934-11-09)நவம்பர் 9, 1934
புரூக்ளின், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்புதிசம்பர் 20, 1996(1996-12-20) (அகவை 62)
சியாட்டில், வாசிங்டன்
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல், வானியற்பியல், அண்டவியல், வான் உயிரியல், விண்வெளி அறிவியல், கோள் அறிவியல்
பணியிடங்கள்கோர்னெல் பல்கலைக்கழகம்
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
சிமித்சோனியன் வானியற்பியல் அவதான நிலையம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
கல்விராஹ்வே உயர்நிலைப் பள்ளி
கல்வி கற்ற இடங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம்
(இளங்கலை), (முதுகலை), (முனைவர்)
ஆய்வு நெறியாளர்கெரார்டு குயிப்பர்
அறியப்படுவதுசேட்டி அமைப்பு
காஸ்மோஸ்
காண்டாக்ட்
பேல் புளூ டாட்
விருதுகள்ஓர்ஸ்டட் பதக்கம் (1990)
நாசா சிறந்த பொதுச் சேவை பதக்கம் (இருமுறை)
அபுனைவுக்கான புலிட்சர் பரிசு (1978)
அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் பொதுநல பதக்கம் (1994)
துணைவர்லின் மர்குலிஸ்
(1957–65; மணமுறிப்பு; 2 பிள்ளைகள்)
லிண்டா சால்சுமன்
(1968–81; மணமுறிப்பு; 1 பிள்ளை)
ஆன் ட்ரூயென்
(1981–1996; 2 பிள்ளைகள்)
கையொப்பம்
கார்ல் சேகன்

சேகனின் வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. 1980ல் அவர் எழுதி எடுத்துரைத்த காஸ்மோஸ் தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமடைந்தது. அபுனைவு புத்தகங்களைத் தவிர காண்டாக்ட் என்ற அறிபுனை புத்தகத்தையும் சேகன் எழுதியுள்ளார். அது அவரது மறைவுக்குப் பின்னர் 1997ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. சேகன் தனது வாழ்நாளில் எம்மி, ஹூகோ, லோக்கஸ், புலிட்சர், அசிமோவ் விருதுகள் உட்பட பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றுள்ளார்.

இளமையும் கல்வியும்

நியுயார்க்கு புரூக்லினில் பிறந்தார். நியு ஜெர்சியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்து படித்தார்.சாகன் சிறுவனாக இருந்தபோதே இயற்கையின் அதிசயங்களைக் கண்டு வியந்து கேள்விகள் கேட்பார்.அவருடைய அறிவியல் ஆர்வத்தைக் கண்டு பெற்றோர்கள் அறிவியல் புத்தகங்களையும் தேவையான பொருள்களையும் வாங்கிக் கொடுத்து சாகனை ஊக்கப்படுத்தினர். 1939 இல் நியுயார்க்கில் நிகழ்ந்த உலகச் சந்தைக்கு தம் பெற்றோருடன் சென்றார்.அப்பொழுதே அவருக்குத் தேடல் உணர்வு ஏற்பட்டது.அவருடைய தாயார் தம் ஐந்து வயது மகனை பொது நூலகத்தில் சேர வைத்து படிப்பிலும் ஆய்விலும் ஊக்கம் ஏற்பட வழிவகை செய்தார். பின்னர் சாகன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை அறிவியல், முதுகலை அறிவியல் பயின்று ஆய்வுப் பட்டமும் பெற்றார்.

பணியும் சாதனையும்

1968 ஆம் ஆண்டு வரை ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே ஆய்வுகள் செய்தார். பின்னர் கார்னல் பல்கலைக் கழகத்தில் வானியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார். சாகன் தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கார்னல் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கான பணியில் ஈடுபட்டார். அங்கு கோள்கள் ஆய்வுப் படிப்பு ஆய்வகத்தில் இயக்குநராகப் பணி புரிந்தார்.

கோள்களை நோக்கி மேற்கொள்ளப் பட்ட விண்வெளிப் பயண முயற்சியில் சாகனின் பங்களிப்பு குறிப்பிடும் அளவுக்கு இருந்தது. நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்வெளி வீரர்களிடையே தம் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். 1950 முதல் நாசா அமைப்புடன் தொடர்ந்து உறவு கொண்டு இருந்தார். வீனஸ் ஜூபிட்டர் புதன் ஆகிய கோள்களின் வெப்பநிலைகள் பற்றியும் கால மாறுபாடுகள் பற்றியும் ஆய்வு செய்தார். புவி வெப்பமாதல் பற்றியும் அதை எதிர்கொண்டு அதன் தீய விளைவுகளைத் தவிர்க்கும் வழி வகைகள் பற்றியும் எழுதினார். அணு ஆயுதப் போருக்கு எதிராகவும் கண்டித்தும் பேசினார். அவர் எழுதிய காஸ்மாஸ் என்னும் அண்டவியல் பற்றிய தொலைக் காட்சித் தொடர் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து காஸ்மாஸ் என்னும் பெயரில் நூல் ஒன்றும் அவரால் எழுதப்பட்டது. காண்டாக்ட் என்னும் பெயரில் ஒரு புதினமும் அவர் எழுதினார்.

சமூக அக்கறை

அணு ஆயுதப் பரவலையும் போரையும் கடுமையாக எதிர்த்தார். மதத்தைப் பற்றியும் அறிவியல்பற்றியும் நிறைய எழுதினார். மதத்தையும் கடவுளையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தார். எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறினார். சுற்றுப்புறச் சூழல், புவியைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் நாட்டம் கொண்டார். மனிதர்களை நேசிப்பதோடு விலங்குகள் பறவைகள் மற்ற உயிரினங்களையும் நேசித்துப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னார்.

குறிப்பிடத்தக்க புத்தகங்கள்

  • டிராகன்ஸ் ஆஃப் ஈடன் (Dragons of Eden)
  • காஸ்மோஸ் (Cosmos)
  • புரோகாஸ் பிரெய்ன் (Brocas' Brain)
  • தி பேல் புளூ டாட் (The Pale Blue Dot)
  • காண்டாக்ட் (Contact)
  • தி டீமன் ஹாண்டட் வோர்ல்டு (The Demon Haunted World)

முக்கிய விருதுகள்

மேற்கோள்கள்

Tags:

கார்ல் சேகன் இளமையும் கல்வியும்கார்ல் சேகன் பணியும் சாதனையும்கார்ல் சேகன் சமூக அக்கறைகார்ல் சேகன் குறிப்பிடத்தக்க புத்தகங்கள்கார்ல் சேகன் முக்கிய விருதுகள்கார்ல் சேகன் மேற்கோள்கள்கார்ல் சேகன்அண்டவியல்உதவி:IPA/Englishஎழுத்தாளர்ஐக்கிய அமெரிக்காவானியற்பியல்வானியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயர் இரத்த அழுத்தம்முதற் பக்கம்மக்காதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அபுல் கலாம் ஆசாத்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்புகாரி (நூல்)ரமலான் நோன்புகுருவி.ஐ.பி (திரைப்படம்)கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசிவாஜி (பேரரசர்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கலாநிதி மாறன்அகத்தியர்தமிழ்நாடு சட்டப் பேரவைஇஸ்ரேல்உப்புச் சத்தியாகிரகம்தாயுமானவர்இளையராஜாசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)கொல்கத்தா நைட் ரைடர்ஸ்திருமூலர்திருக்குர்ஆன்நெடுநல்வாடைசஞ்சு சாம்சன்பங்குனி உத்தரம்தமிழ்நாடு காவல்துறைசித்தார்த்மொழிபெயர்ப்புயூடியூப்கிராம நத்தம் (நிலம்)அணி இலக்கணம்சத்குருரமலான்அ. கணேசமூர்த்திஆதலால் காதல் செய்வீர்கணையம்சேலம் மக்களவைத் தொகுதிபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்2014 உலகக்கோப்பை காற்பந்துதிரு. வி. கலியாணசுந்தரனார்மாதவிடாய்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிமார்பகப் புற்றுநோய்நாமக்கல் மக்களவைத் தொகுதிகாமராசர்நானும் ரௌடி தான் (திரைப்படம்)நாயன்மார்நீக்ரோவிஜயநகரப் பேரரசுநரேந்திர மோதிகொன்றை வேந்தன்மயில்பயண அலைக் குழல்கோயம்புத்தூர்வேதம்எஸ். சத்தியமூர்த்திஇந்தியப் பிரதமர்சைவ சமயம்தீரன் சின்னமலைஎலுமிச்சைகருப்பை நார்த்திசுக் கட்டிஇந்திரா காந்திஅபூபக்கர்பிரீதி (யோகம்)மூசாஅலீமீன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்திய அரசுசைவத் திருமுறைகள்நற்றிணைவாய்மொழி இலக்கியம்வியாழன் (கோள்)திருநெல்வேலிஇராவணன்🡆 More