இலுகன்சுக் மக்கள் குடியரசு

இலுகன்சுக் மக்கள் குடியரசு (Luhansk People's Republic) (உருசியம்: Луга́нская Наро́дная Респу́блика, ஒ.பெ Luganskaya Narodnaya Respublika, பஒஅ: ; உக்ரைனியன்: Луганська Народна Республіка), (சுருக்கப் பெயர் LPR or LNR), இதன் தலைநகரம் இலுகன்சுக் நகரம் ஆகும்.

உக்ரைனின் வடகிழக்கில் அமைந்த தொன்பாஸ் பிரதேசத்தில் அமைந்த இலுகன்சுக் மாகாணத்தின் உருசியா ஆதரவு பெற்ற கிளர்ச்சிகளின் விளைவாக, 27 ஏப்ரல் 2014 அன்று இலுகன்சுக் மாகாணம், தன்னை மக்கள் குடியரசு நாடு என தானாக அறிவித்துக் கொண்டது. 5 செப்டம்பர் 2014 அன்று உக்ரைன், ருசியா மற்றும் இலுகன்சுக் மாகாண கிளர்ச்சிப்படைகள் செய்து கொண்ட மின்ஸ்க் முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி இலுகன்சுக் மாகாணம் தனி நாடாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இலுகன்சுக் மக்கள் குடியரசு நாட்டிற்கு உருசியா மட்டும் 21 பிப்ரவரி 2022 அன்று அங்கீகாரம் வழங்கியது. பின்னர் 22 பிப்ரவரி 2022 அன்று உருசியா இலுகன்சுக் மக்கள் குடியரசை அங்கீகாரம் அளித்ததை கியுபா, சிரியா, வெனிசூலா மற்றும் நிகரகுவா நாடுகள் வரவேற்றது.ஆனால் பிற உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவை இலுகன்சுக் மக்கள் குடியரசிற்கு, நாடு என்ற அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும் உக்ரைன் நாட்டு அதிகாரிகள், இரண்டாம் மின்ஸ்க் ஒப்பந்தத்திற்கு எதிராக ருசியா இலுகன்சுக் மக்கள் குடியரசை அங்கீகாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுள்ளது.

இலுகன்சுக் மாகாணம்
கொடி of
கொடி
русский (ru) of
русский (ru)
குறிக்கோள்: 
Луганск, сила и свобода
"Luhansk, strong and free"
நாட்டுப்பண்: 
Гимн Луганской Народной Республики
"Anthem of the Luhansk People's Republic"
2014-இல் இலுகன்சுக் மக்கள் குடியரசாக அறிவித்துக் கொண்ட பகுதிகள் (வெளிர் மற்றும் அடர்பச்சை): கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் (அடர் பச்சை நிறம்)
2014-இல் இலுகன்சுக் மக்கள் குடியரசாக அறிவித்துக் கொண்ட பகுதிகள் (வெளிர் மற்றும் அடர்பச்சை): கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் (அடர் பச்சை நிறம்)
நிலை21 பிப்ரவரி 2022 அன்று உருசியா மட்டும் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ள்து.
தலைநகரம் இலுகன்சுக்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ருசியா
அரசாங்கம்ஓரவை, அரசியலமைப்பு குடியரசு
• குடியரசுத் தலைவர்
லியோனிட் பசெக்னிக்
• பிரதம அமைச்சர்
செர்ஜி இவனோவிச் கோஸ்லோவ்
• தலைவர், மக்கள் குழு
டெனிஸ் மிரோஷ்னிசென்கோ
சட்டமன்றம்இலுகன்சுக் மக்கள் குடியரசின் மக்கள் குழு
உக்ரைலிருந்து பிரிந்த தன்னாட்சி நாடு
• நிறுவப்பட்ட ஆண்டு
27 ஏப்ரல் 2014
• இலுகன்சுக் மக்கள் குடியரசு
11 மே 2014
5 செப்டம்பர் 2014
• இரண்டாம் மின்ஸ்க் ஒப்பந்தம்
12 பிப்ரவரி 2015
• உருசியாவால் அங்கீகாரம் பெற்றது
21 பிப்ரவரி 2022
பரப்பு
• மொத்தம்
8,377 km2 (3,234 sq mi)
மக்கள் தொகை
• மதிப்பிடு
1,464,039
நாணயம்உருசிய ரூபிள், உக்ரைன் நாணயம், யுரோ
நேர வலயம்ஒ.அ.நே+3
இலுகன்சுக் மக்கள் குடியரசு
உக்ரைன் நாட்டின் கிழக்கில் தொன்பாஸ் பிரதேசத்தில் லுகான்ஸ்கா மாகாணம் மற்றும் தோனெத்ஸ்க் மாகாணம்
இலுகன்சுக் மக்கள் குடியரசு
உக்ரைன் நாட்டின் கிழக்கில் லுகான்ஸ்கா மாகாணம் மற்றும் தோனெத்ஸ்க் மாகாணம்

நாட்டு விவரம்

2018-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 8377 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலுகன்சுக் மக்கள் குடியரசின் மக்கள் தொகை 14,64,039 ஆகும். இது ஓரவை முறைமை கொண்ட நாடாளுமன்ற அரசியல் அமைப்பு கொண்டது. இதன் முதல் குடியரசுத் தலைவர் லியோனிட் பசெக்னிக் ஆவார். முதல் பிரதம அமைச்சர் செர்ஜி இவனோவிச் கோஸ்லோவ் ஆவார். இதன் நாணயம் உருசிய ரூபிள் ஆகும். இதற்கென தனி அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இராணுவம் உள்ளது. இந்நாட்டிற்கு ருசியா மட்டும் அகீகாரம் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் இந்நாட்டை உறுப்பினராக சேர்க்கவில்லை.

பொது வாக்கெடுப்பு

இலுகன்சுக் குடியரசு தன்னாட்சியுடன் செயல்பட வேண்டுமா அல்லது வேண்டமா என்பது குறித்து 11 மே 2014 அன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.இந்த பொது வாக்கெடுப்பை கண்காணிக்க பன்னாட்டுப் பார்வையாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பொது வாக்கெடுப்பில் 81% பேர் வாக்களித்தனர். இலுகன்சுக் குடியரசு தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக 96.2% பேர் வாக்களித்தனர். 3.8% மக்கள் எதிராக வாக்களித்தனர்.

விடுதலை அறிவிப்பு

பொது மக்கள் வாக்கெடுப்பின்படி, இலுகன்சுக் குடியரசு தன்னாட்சியுடன் கூடிய நாடாக அறிவித்து கொண்டது. ஆனால் இலுகன்சுக் மாகாணக் குடியரசுக் குழு இதனை ஆதரிக்கவில்லை என்றாலும், இலுகன்சுக் குடியரசு, உக்ரைன் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக செயல்படலாம் எனக்கருதியது.மேலும் இப்பிராந்தியத்தில் உக்ரேனிய இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் உக்ரைனில் ருசியா மொழிக்கான அதிகாரப்பூர்வ தகுதியை வழங்கவும் கோரியது. .

20 மே 2014 அன்று இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தோனெத்ஸ்க் மக்கள் குடியரசு கூட்டாக தங்களை தன்னாட்சி கொண்ட சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டது.

பின்னணி

நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்பினராக உக்ரைன் நாடு சேர முடிவு எடுத்தது. உக்ரைன் நாட்டின் இந்த முடிவால், நேட்டோ அமைப்பின் இராணுவம் தனது எல்லை அருகே நிறுத்தப்படலாம் என்ற அச்சம் ருசியாவிற்கு ஏற்பட்டது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என வலியுறுத்தி, உக்ரைனின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேசத்தில் உள்ள மாகாணங்களில், ருசியா ஆதரவு பெற்ற உருசிய மொழி பேசும் கிளர்ச்சிப் படைகள் உக்ரைனிற்கு எதிராக 2014-ஆம் ஆண்டில் பெரிய அளவில் கிளர்ச்சிகள் செய்தனர். இதனிடையே உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள கிரிமியா தீபகற்த்தை ருசியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி, ருசியாவுடன் இணைத்தனர். 2014-ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட மின்ஸ்க் முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி இலுகன்சுக் தன்னாட்சி நாடாக அறிவித்துக் கொண்டது. அதே போன்று தோனெத்ஸ்க் மாகாணமும் தன்னாட்சி நாடாக அறிவித்துக் கொண்டது.

நிர்வாகப் பிரிவுகள்

இலுகன்சுக் மக்கள் குடியரசு 
இலுகன்சுக் மக்கள் குடியரசின் மாவட்டங்கள்

2014-ஆம் ஆண்டு முதல் இலுகன்சுக் மக்கள் குடியரசு 17 நகராட்சிகளும், மாவட்டங்களும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இலுகன்சுக் மக்கள் குடியரசு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lugansk People's Republic
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இலுகன்சுக் மக்கள் குடியரசு நாட்டு விவரம்இலுகன்சுக் மக்கள் குடியரசு பொது வாக்கெடுப்புஇலுகன்சுக் மக்கள் குடியரசு விடுதலை அறிவிப்புஇலுகன்சுக் மக்கள் குடியரசு பின்னணிஇலுகன்சுக் மக்கள் குடியரசு நிர்வாகப் பிரிவுகள்இலுகன்சுக் மக்கள் குடியரசு இதனையும் காண்கஇலுகன்சுக் மக்கள் குடியரசு மேற்கோள்கள்இலுகன்சுக் மக்கள் குடியரசு வெளி இணைப்புகள்இலுகன்சுக் மக்கள் குடியரசுen:WP:IPA for Russianஇலுகன்சுக் நகரம்உக்குரேனிய மொழிஉக்ரைன்உருசியம்உருசியாஐக்கிய நாடுகள் அவைதொன்பாஸ்பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிமின்ஸ்க் ஒப்பந்தம்ருசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெள்ளி (கோள்)பெரியாழ்வார்பறம்பு மலைபுதுமைப்பித்தன்இந்திய நிதி ஆணையம்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்கோயில்கன்னி (சோதிடம்)அறுபது ஆண்டுகள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஆளுமைமுல்லைக்கலிவெற்றிக் கொடி கட்டுபஞ்சதந்திரம் (திரைப்படம்)மீனா (நடிகை)உடுமலைப்பேட்டைபெண்ணியம்தமிழ் இலக்கணம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஆய்த எழுத்துகாளமேகம்பொருநராற்றுப்படைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்விஜயநகரப் பேரரசுகுருதி வகைகிராம நத்தம் (நிலம்)யானையின் தமிழ்ப்பெயர்கள்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)பரணி (இலக்கியம்)வெள்ளியங்கிரி மலைகபிலர் (சங்ககாலம்)இல்லுமினாட்டிநாட்டு நலப்பணித் திட்டம்சீறாப் புராணம்மரபுச்சொற்கள்திராவிடர்தமிழ்நாடுசூரியக் குடும்பம்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)பாலின விகிதம்சூர்யா (நடிகர்)மதுரைக் காஞ்சிதமிழ்ப் புத்தாண்டுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்போக்குவரத்துஇடிமழைவிசாகம் (பஞ்சாங்கம்)ஆளி (செடி)தாயுமானவர்அரவான்கடையெழு வள்ளல்கள்கமல்ஹாசன்தாய்ப்பாலூட்டல்நீதிக் கட்சிஜெயம் ரவிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நரேந்திர மோதிவேலு நாச்சியார்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சிவனின் தமிழ்ப் பெயர்கள்முல்லைப் பெரியாறு அணைஎயிட்சுகணினிகம்பர்இயற்கைஇளங்கோவடிகள்கேள்விமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வெட்சித் திணைகுறிஞ்சி (திணை)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்அட்சய திருதியைஆதிமந்திகலாநிதி மாறன்🡆 More