இனப்படுகொலை

இனப்படுகொலை (Genocide) ஓர் இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.

இனப்படுகொலை
ரூவாண்டா இனக்கொலையினால் மாண்டவர்களின் மண்டையோடுகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஓர் இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படி குற்றச்செயலாகும்..

இக்கொடுஞ்செயல் புரிவோரைத் தண்டிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் கொண்டுவரப்பட்டது. இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண்டனை அளிக்க உடன்படிக்கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட நீதிமன்ற ஆணையத்தால் சர்வதேச உறுப்பினர்களை அழைத்தும் இன்னும் ஒருவரும் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வார்த்தைப் பயன்பாடு

இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை முதன் முதலில் ரபேல் லேம்கின் 1944ல் வெளிவந்த "Axis Rule in Occupied Europe" என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.

பாரிய இனவழிப்புகள்

அனைத்துலக குற்றம்

போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். 1933 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடுகள் கூட்டமைப்பின் (League of Nations), சட்ட அவையின் அனைத்துலகக் குற்றவியல் சட்டம் தொடர்பான மாநாட்டில், லெம்கின் ஒரு முன்மொழிவைச் செய்தார். இதற்காக அவர் காட்டுமிராண்டித் தனமான குற்றம் (Crime of Barbarity) உலகச் சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்னும் பொருளில் கட்டுரை ஒன்றை எழுதினார். இக் குற்றம் தொடர்பான கருத்துரு பின்னர் இனப்படுகொலை தொடர்பான எண்ணமாக உருவானது. இது, 1933 ஆம் ஆண்டில், ஈராக்கில் அசிரியர்கள் கொலை செய்யப்பட்ட அநுபவத்தில் இருந்து உருவானதாகும். லெம்கினுக்கு, ஈராக்கில் நடைபெற்ற இச் சம்பவம், முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தியது. அந்த ஆண்டிலேயே லெம்கின், இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கும்படியான தனது முன்மொழிவை, நாடுகள் கூட்டமைப்பின் சட்ட அவையிடம் கையளித்தார். இம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதுடன், அப்போது நாஸி ஜெர்மனியுடன் சமாதானம் செய்ய்துகொள்ள விரும்பிய போலந்து அரசும், லெம்கினின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் லெம்கின் தொடர்ந்தும் தனது நோக்கங்களுக்காகப் பல வழிகளிலும் போராடி வந்தார்.

லெம்கினின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் 1948 ஆம் ஆண்டில் இனப்படுகொலை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றமாக்கப்படுவதற்கு உதவின.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இனப்படுகொலை வார்த்தைப் பயன்பாடுஇனப்படுகொலை பாரிய இனவழிப்புகள்இனப்படுகொலை அனைத்துலக குற்றம்இனப்படுகொலை இவற்றையும் பார்க்கஇனப்படுகொலை மேற்கோள்கள்இனப்படுகொலை வெளி இணைப்புகள்இனப்படுகொலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல். திருமாவளவன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பிரேமலுபள்ளர்அன்னி பெசண்ட்ஏப்ரல் 24பலாஐம்பெருங் காப்பியங்கள்வில்லுப்பாட்டுதிருப்பூர் குமரன்வசுதைவ குடும்பகம்இந்திய நிதி ஆணையம்கலைஇராமர்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சுற்றுச்சூழல் மாசுபாடுமு. க. ஸ்டாலின்தமிழ்த் தேசியம்வேர்க்குருநாணயம்ருதுராஜ் கெயிக்வாட்அன்புமணி ராமதாஸ்மங்காத்தா (திரைப்படம்)காவிரிப்பூம்பட்டினம்சாகித்திய அகாதமி விருதுபழனி முருகன் கோவில்கமல்ஹாசன்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்பகவத் கீதைரோகிணிகொன்றைதிருமலை (திரைப்படம்)இராமாயணம்தேர்தல் மைகுறவஞ்சிஆய்த எழுத்துஇரசினிகாந்துதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராசங்க கால அரசர்கள்பாலை (திணை)தமிழர்எஸ். ஜானகிகாம சூத்திரம்பிரசாந்த்பஞ்சபூதத் தலங்கள்தளபதி (திரைப்படம்)கோயில்நாழிகைஇந்திய அரசியல் கட்சிகள்புறப்பொருள்குப்தப் பேரரசுசீரடி சாயி பாபாஅண்ணாமலை குப்புசாமிபக்கவாதம்ராஜசேகர் (நடிகர்)ஏலாதிகோத்திரம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்உயர் இரத்த அழுத்தம்மும்பை இந்தியன்ஸ்நீதிக் கட்சிராக்கி மலைத்தொடர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மாநிலங்களவைவேளாண்மைமுடியரசன்திருவோணம் (பஞ்சாங்கம்)கல்விக்கோட்பாடுசி. விஜயதரணிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஜீரோ (2016 திரைப்படம்)புதுப்பிக்கத்தக்க ஆற்றல்மதுரகவி ஆழ்வார்மஞ்சள் காமாலைபஞ்சதந்திரம் (திரைப்படம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பொது ஊழிகண்ணனின் 108 பெயர் பட்டியல்🡆 More