பண்பாட்டுப் படுகொலை

பண்பாட்டுப் படுகொலை அல்லது கலாச்சார சுத்திகரிப்பு (Cultural genocide / cultural cleansing) எனும் கருத்தியல் 1944 ஆம் ஆண்டில் ரபேல் லெம்கின் எனும் வழக்கறிஞரால் இனப்படுகொலையிலிருந்து வேறுபடுத்தி காட்டப்பட்டது.கலாச்சார இனப்படுகொலையை துல்லியமான வரையறை செய்யப்படாவிட்டாலும், ஆர்மீனிய இனப்படுகொலை அருங்காட்சியகம் இதை ஆன்மீக, தேசிய மற்றும் கலாச்சார அழிவின் மூலம் நாடுகளின் அல்லது இனக்குழுக்களின் கலாச்சாரத்தை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்று வரையறுக்கிறது.

இராபர்ட் ஜௌலியன் போன்ற இன ஒப்பாய்வியல் அறிஞர்கள், பண்பாட்டுப் படுகொலை எனும் சொல்லிற்கு இணையாக இனப்படுகொலை எனும் சொல்லாடலை பயன்படுத்தினர். இந்த பயன்பாடு இனக் குழு மற்றும் பண்பாடு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட பூர்வ குடிகளின் உரிமைகள தொடர்பான பிரகடனத்தில் இனப்படுகொலை, பண்பாட்டுப் படுகொலை எனும் சொற்கள் நீக்கப்பட்டு சுருக்கமாக இனப்படுகொலை என மாற்றப்பட்டது.

விளக்கம்

இனப்படுகொலை தொடர்பான சரியான சட்ட வரையறை மற்றும் சரியான வழி வகைகள் குறிப்பிடப்படவில்லை. பண்பாட்டுப் படுகொலை என்பது இனம், மதம், மொழி அல்லது அல்லது தேசிய இனைக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகும். எனவே கலாச்சாரப் படுகொலை அல்லது பண்பாட்டுப் படுகொலையில் மொழி, வழிபாட்டு முறைகள், தொன்மையான நூல்கள், கலைப்படைப்புகள் மற்றும் கட்டமைப்புகள் போன்ற கலாச்சார கலைப்பொருட்களை அழிக்கப்படுவதும் அழிப்பதும் அடங்கும், அத்துடன் பொருத்தமானவற்றை அழிப்பவரின் கருத்துக்கு இணங்காத கலாச்சார நடவடிக்கைகளை அடக்குவதும் அடங்கும்.

சாத்தியமான பல காரணங்களுக்கிடையில், பண்பாட்டு இனப்படுகொலை மத நோக்கங்களுக்காக செய்யப்படலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்தோ அல்லது வரலாற்றிலிருந்தோ மக்களின் ஆதாரங்களை அகற்றுவதற்காக இன அழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.

பூர்வ குடிகளின் பண்பாட்டு உரிமைகள் குறித்தான ஐக்கிய நாடுகள் அவையின் பிரகடனம்

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் 27 மார்ச் 2008 அன்று பூர்வ குடிமக்களின் பண்பாட்டை காத்திடவும், இனப்படுகொலைகளை தடுத்திடவும் சில விதிகளை வகுத்தது. 1994-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பிரகடனத்தின் பிரிவு 7-இன் படி பண்பாட்டுப் படுகொலை குறித்தான் விளக்கம் தரவில்லை. பிரகடனத்தின் சில விதிகள்:

    பழங்குடி மக்களை இனப்படுகொலை மற்றும் கலாச்சார இனப்படுகொலைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்பதற்கான கூட்டு மற்றும் தனிப்பட்ட உரிமை உள்ளது, இதில் தடுப்பு மற்றும் நிவாரணம் உட்பட:
      (அ) தனித்துவமான மக்கள், அல்லது அவர்களின் கலாச்சார விழுமியங்கள் அல்லது இன அடையாளங்கள் போன்ற அவர்களின் ஒருமைப்பாட்டை இழக்கும் நோக்கம் அல்லது விளைவைக் கொண்ட எந்தவொரு செயலும்;
      ( ஆ) அவர்களின் நிலங்கள், பிரதேசங்கள் அல்லது வளங்களை அகற்றுவதற்கான நோக்கம் அல்லது விளைவைக் கொண்ட எந்தவொரு செயலும்;
      (இ) எந்தவொரு உரிமைகளையும் மீறுவது அல்லது குறைத்து மதிப்பிடும் நோக்கம் அல்லது விளைவைக் கொண்ட மக்களை புலம் பெயரச் செய்தல்;
      (ஈ) சட்டமன்றம், நிர்வாக அல்லது பிற நடவடிக்கைகளால் பிற பூர்வ குடிகளின் பண்பாடு அல்லது பழக்கவழக்கங்களை ஒருங்கிணைத்தல்;
      (உ) பூர்வ குடிகளுக்கு எதிரான எந்தவொரு பிரச்சாரமும்.

பண்பாட்டுப் படுகொலைகளின் பட்டியல்

  • சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இசுலாமியப் பழங்குடி மக்கள் பொது இடங்களில் அவர்களது தாய் மொழியான உய்குர் மொழியில் பேசவும், மசூதிகளில் வழிபடவும், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதை தடுக்க குடும்பக் கட்டுப்பாடு செய்தல், குழந்தைகளை சீனப் பண்பாட்டின் கீழ் வளர்க்க அரசின் கல்வி நிலையங்களில் கட்டாயக் கல்வி படிக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை சீன அரசு செய்து வருகிறது. இதனை மீறுபவர்களை தடுப்பு முகாம்களில் அடைத்து, மூளைச்சலவை செய்தும், மறுகல்வி வழங்கியும் சீனப் பண்பாட்டிற்கும், பழக்க வழக்கங்களுக்கும் மாற்றச் செய்கின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பண்பாட்டுப் படுகொலை விளக்கம்பண்பாட்டுப் படுகொலை பூர்வ குடிகளின் பண்பாட்டு உரிமைகள் குறித்தான ஐக்கிய நாடுகள் அவையின் பிரகடனம்பண்பாட்டுப் படுகொலை களின் பட்டியல்பண்பாட்டுப் படுகொலை இதனையும் காண்கபண்பாட்டுப் படுகொலை மேற்கோள்கள்பண்பாட்டுப் படுகொலை வெளி இணைப்புகள்பண்பாட்டுப் படுகொலைஆர்மீனிய இனப்படுகொலைஇனப்படுகொலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஞானபீட விருதுலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்ஐம்பெருங் காப்பியங்கள்அம்பேத்கர்கருப்பைகணையம்நாயக்கர்பரணி (இலக்கியம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மலேரியாஉரைநடைஉலக ஆய்வக விலங்குகள் நாள்சென்னை சூப்பர் கிங்ஸ்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஆழ்வார்கள்முன்னின்பம்நஞ்சுக்கொடி தகர்வுதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்உலர் பனிக்கட்டிதேவாங்கு2024 இந்தியப் பொதுத் தேர்தல்திதி, பஞ்சாங்கம்விலங்குஆறுமுக நாவலர்ஒற்றைத் தலைவலிஆந்திரப் பிரதேசம்பெண்இயேசு காவியம்தமிழ்நாடுர. பிரக்ஞானந்தாகார்த்திக் (தமிழ் நடிகர்)கூகுள்இந்திய உச்ச நீதிமன்றம்வசுதைவ குடும்பகம்அன்புமணி ராமதாஸ்பொருளாதாரம்உத்தரகோசமங்கைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வெண்குருதியணுகண்ணாடி விரியன்அறுசுவைசிறுபஞ்சமூலம்சுற்றுச்சூழல்தமிழ்ஒளிஜோக்கர்சங்ககால மலர்கள்சுரதாஅக்கி அம்மைஇதயம்மறைமலை அடிகள்மாசாணியம்மன் கோயில்பள்ளுகடவுள்பாரதிய ஜனதா கட்சிபகவத் கீதைபொருநராற்றுப்படைமண் பானைதிருமூலர்ஐம்பூதங்கள்தமிழ்நாடு காவல்துறைஅடல் ஓய்வூதியத் திட்டம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)உலக மலேரியா நாள்ஆண்டு வட்டம் அட்டவணைவிசாகம் (பஞ்சாங்கம்)வல்லினம் மிகும் இடங்கள்திருமலை (திரைப்படம்)இந்தியத் தேர்தல் ஆணையம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ரோசுமேரிசெஞ்சிக் கோட்டைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மயில்காமராசர்சீறாப் புராணம்🡆 More