கெல்வின்

கெல்வின் (Kelvin) என்பது எசுஐ (SI) முறையின் ஒரு வெப்ப அலகு.

கெல்வின்
வெப்பநிலை அலகு மாற்றீடு
கெல்வின்
இலிருந்து
கெல்வின்
இற்கு
செல்சியசு [°C] = [K] − 273.15 [K] = [°C] + 273.15
பாரன்ஃகைட் [°F] = [K] × 95 − 459.67 [K] = ([°F] + 459.67) × 59
ரேன்கின் [°R] = [K] × 95 [K] = [°R] × 59
குறிப்பிட்ட வெப்பநிலைகளுக்கு அல்லாது
வெப்பநிலை மாற்றங்களுக்கு,
1 K = 1°C = 95°F = 95°R

இவ்வளவீட்டின் பாகைக் குறியீடு K ஆகும். எசுஐ (SI) அலகு முறையில் உள்ள ஏழு அடிப்படையான அலகுகளில் இதுவும் ஒன்று. வெப்பநிலையை அளக்கப் பயன்படும் அளவீட்டு முறைகளில், இந்த கெல்வின் அளவீட்டை தனிமுழு (absolute) அளவீட்டு முறை என்பர். ஏனெனில், இந்த அளவீட்டின் படி சுழி கெல்வின் வெப்பநிலையானது (0 K) வெப்பவியக்கவியல் (Thermodynamics) கொள்கைகள் மற்றும் கருத்துக்களின் படியும் யாவற்றினும் கீழான அடி வெப்பநிலையாகும். எப்பொருளும் எக்காலத்திலும், இந்த சுழி கெல்வின் வெப்பநிலைக்குக் கீழே செல்லலாகாது. வெப்பநிலையின் முற்றான அடிக் கீழ் எல்லை ஆகும். இக் கெல்வின் வெப்ப அளவீட்டின்படி, நீரானது நீராகவும், நீராவியாகவும், உறைபனியாகவும் ஒரே நேரத்தில் கூடி இருக்கும் முக்கூடல் புள்ளி எனப்ப்படும், சீர்சம நிலையில் (அல்லது சீரிணை இயக்கநிலையில்) இருக்கும் பொழுது, அவ் வெப்பநிலையானது 273.16 K என கணித்துள்ளனர். இதன் செல்சியசு வெப்பநிலையனது 0.01 C ஆகும். இவ்வளவீட்டு முறையானது லார்டு (அல்லது பாரன்) கெல்வின் எனப் பெயர் பெற்ற அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் தாம்சன் (1824-1907) என்னும் இயற்பியல் அறிஞரின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெப்ப இயக்கவியல் அடிப்படையில் ஒரு தனிமுழு வெப்ப அளவீட்டு முறையின் தேவை பற்றி இவர் எழுதியுள்ளார்.

வெப்பநிலை இடைவெளிகளில் ஒரு பாகை கெல்வின் என்பது ஒரு பாகை செல்சியசுக்குச் சமம். இடைவெளி 1 K = இடைவெளி 1 °C. பொதுவாக கெல்வின் பாகைகளைப் "பாகை" எனக் குறிப்பிடத்தேவை இல்லை. எடுத்துக்காட்டாக 6 கெல்வின் என்றால் 6 பாகை கெல்வின் என அறியப்படும்.

கெல்வின்

பிற வெப்ப அளவீட்டு முறைகளுடன் ஒப்பீடு

கெல்வின்(K) செல்சியஸ் (C) பாரன்ஃகைட் (F)
தனிமுழுச் சுழி வெப்பநிலை

(துல்லியமான வரைவிலக்கணம்)

0 K −273.15 °C −459.67 °F
உறைபனி உருகும் வெப்பநிலை

(தோராயமாக)

273.15 K 0 °C 32 °F
நீரின் முக்கூடல் புள்ளி

(துல்லியமான வரைவிலக்கணம்)

273.16 K 0.01 °C 32.018 °F
நீரின் கொதிநிலை

(தோராயமாக)

373.1339 K 99.9839 °C 211.9710 °F

வெப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை

கெல்வின்
கெல்வின்
கெல்வின்
கெல்வின்
கெல்வின்
கெல்வின்
கெல்வின்
கெல்வின்கெல்வின்

மேற்கோள்

Tags:

எசுஐசெல்சியசுமுக்கூடல் புள்ளிவில்லியம் தாம்சன்வெப்பம்வெப்பவியக்கவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சுற்றுச்சூழல் கல்விசங்க காலம்பாரத ரத்னாமுக்குலத்தோர்யோகாசனம்தனுஷ் (நடிகர்)சப்ஜா விதைஎ. வ. வேலுஅஜித் குமார்மனித மூளைஇராமாயணம்சிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழச்சி தங்கப்பாண்டியன்கல்லுக்குள் ஈரம்நவதானியம்இந்திய மக்களவைத் தொகுதிகள்ஐக்கிய நாடுகள் அவைகந்தர் அலங்காரம் (திரைப்படம்)மணிமேகலை (காப்பியம்)வேலு நாச்சியார்தைப்பொங்கல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்உலகப் புத்தக நாள்வே. செந்தில்பாலாஜிசினைப்பை நோய்க்குறிகருப்பை நார்த்திசுக் கட்டிஏப்ரல் 23திருவிளையாடல் புராணம்அகத்தியர்திராவிடர்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்திய செஞ்சிலுவைச் சங்கம்இந்தியத் தேர்தல் ஆணையம்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்வெப்பம் குளிர் மழைபுலிஇந்தியப் பிரதமர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)வெ. இறையன்புசித்தர்எயிட்சுகள்ளழகர் (திரைப்படம்)பாண்டியர்மதீச பத்திரனதமிழ்க் கல்வெட்டுகள்மரகத நாணயம் (திரைப்படம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சரண்யா துராடி சுந்தர்ராஜ்காடழிப்புசைவத் திருமுறைகள்உலக சுற்றுச்சூழல் நாள்மதுரைக் காஞ்சிசென்னைதமிழ் நாடக வரலாறுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதனியார் பள்ளிதிராவிட முன்னேற்றக் கழகம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஉணவுச் சங்கிலிபூலித்தேவன்முலாம் பழம்தமிழர் பருவ காலங்கள்வட்டாட்சியர்மதராசபட்டினம் (திரைப்படம்)அறுசுவைகல்லணைநீர் மாசுபாடுஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சீமான் (அரசியல்வாதி)நாலடியார்முத்தரையர்மூலம் (நோய்)யானையின் தமிழ்ப்பெயர்கள்பிரேமலுஒத்துழையாமை இயக்கம்திராவிட மொழிக் குடும்பம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சோளம்🡆 More