அசிரியா

பண்டைக் காலத்தில் அசிரியா என்பது, டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது.

இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய அசூர் என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா லெவண்ட், பண்டைய மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, அனத்தோலியாவின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது மெசொப்பொத்தேமியாவின் வட அரைப்பாகத்தையே குறித்தது. இது நினிவேவைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தென்பகுதி பபிலோனியா எனப்பட்டது.

அசிரியா
அசிரியப் பேரரசு
அசிரியா
மெசொப்பொத்தேமியா நாகரீக கால அசிரியா, பாபிலோன், சுமேரியா மற்றும் ஈலாம் பகுதிகள்
அசிரியா
லம்மசு என அழைக்கப்பட்ட அசிரியர்களின் சிறகுடன் கூடிய எருது.

அசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, அசுர் மலைகள் என அழைக்கப்பட்ட ஆர்மீனியாவின் கார்டுச்சிய மலைத்தொடர் வரை விரிவடைந்து இருந்தது.

அசிரிய அரசர்கள் வரலாற்றின் மூன்று கட்டங்களில் பெரும் நிலப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவை, பழைய, இடைக்கால, புதிய-அசிரிய அரசுகள் எனப்பட்டன. இவற்றுள், மிகப் பலம் பொருந்தியதும், பரவலாக அறியப்பட்டதுமான அரசு, கி.மு 911 க்கும், 612 க்கும் இடையில் நிலவிய புதிய-அசிரிய அரசு ஆகும்.

முற்பட்ட வரலாறு

அசிரியாவிலுள்ள பெரும்பாலான புதியகற்காலக் களங்கள், ஹஸ்சுனா பண்பாட்டின் மையமான டெல் ஹஸ்சுனாவில் காணப்படுகின்றன. அசிரிய அரசின் முற்பட்ட வரலாறு பற்றி அதிக தகவல்கள் கிடையா. சில யூத-கிறிஸ்துவ மரபுகளின்படி, அசுர் நகரம், ஷெம்மின் மகனான அஷுர் என்பவனால் நிறுவப்பட்டது எனக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் அஷுர் இந் நகரத்தின் காவற் கடவுளாகக் கருதப்பட்டான்.

மேல் டைகிரிஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதி தொடக்க காலங்களில் சுமெர், அக்காட், வட பபிலோனிய அரசுகளால் ஆளப்பட்டதாகத் தெரிகிறது.

தொடக்ககால அசிரிய நகர ஆட்சிகளும், அரசுகளும்

அசிரிய ஆட்சியாளர்களில் முந்திய கல்வெட்டுக்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுக்குப் பிந்தியவை. அக்காலத்தில், அசிரியா பல நகர ஆட்சிப் பகுதிகளையும், சிறிய செமிட்டிக் அரசுகளையும் கொண்டிருந்தது. அசிரிய முடியாட்சியை நிறுவியவனாக கி.மு 1900 ஆவது ஆண்டுக்குப் பின் வாழந்தவனான ஸுலிலு என்பவன் என்று கருதப்படுகிறது.

பிந்தைய அசிரியப் பேரரசுகள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

Tags:

அசிரியா முற்பட்ட வரலாறுஅசிரியா தொடக்ககால அசிரிய நகர ஆட்சிகளும், அரசுகளும்அசிரியா பிந்தைய அசிரியப் பேரரசுகள்அசிரியா இவற்றையும் பார்க்கவும்அசிரியா மேற்கோள்கள்அசிரியா வெளியிணைப்புக்கள்அசிரியாஅசூர், பண்டைய நகரம்அனத்தோலியாடைகிரிஸ்நினிவேபண்டைய எகிப்துபபிலோனியாமெசொப்பொத்தேமியாலெவண்ட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ஒளிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைகேழ்வரகுசிறுபஞ்சமூலம்கூலி (1995 திரைப்படம்)பிரசாந்த்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வேளாண்மைகணினிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அமெரிக்க ஐக்கிய நாடுகள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்திணை விளக்கம்குற்றாலக் குறவஞ்சிவெண்பாஈ. வெ. இராமசாமிஇந்திரா காந்திகார்லசு புச்திமோன்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்வாட்சப்தமிழ்ப் பருவப்பெயர்கள்தட்டம்மைவேதாத்திரி மகரிசிஆனைக்கொய்யாஅறுசுவைஇந்திய வரலாற்றுக் காலக்கோடுஅறுபது ஆண்டுகள்சித்தர்பாட்டாளி மக்கள் கட்சிநாம் தமிழர் கட்சிவிண்ணைத்தாண்டி வருவாயாசின்னம்மைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்தமிழக வரலாறுநஞ்சுக்கொடி தகர்வுதனுஷ் (நடிகர்)தாவரம்யுகம்சிங்கம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வினைச்சொல்கம்பர்மனித வள மேலாண்மைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சூர்யா (நடிகர்)மஞ்சள் காமாலைகன்னத்தில் முத்தமிட்டால்தளபதி (திரைப்படம்)மின்னஞ்சல்ஐம்பெருங் காப்பியங்கள்இலங்கையின் பொருளாதாரம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ராஜசேகர் (நடிகர்)பயில்வான் ரங்கநாதன்சிறுதானியம்பலாதிவ்யா துரைசாமியானைமுடக்கு வாதம்ஆல்சுற்றுலாசத்திமுத்தப் புலவர்கலம்பகம் (இலக்கியம்)கண்ணகிசென்னை மாகாணம்சீர் (யாப்பிலக்கணம்)திருமுருகாற்றுப்படைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மதுரை வீரன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிவிண்டோசு எக்சு. பி.புறநானூறுபச்சைக்கிளி முத்துச்சரம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பொருநராற்றுப்படைமனித உரிமைஐம்பூதங்கள்இந்திய தேசிய காங்கிரசு🡆 More