சந்திரயான்-3

சந்திரயான்-3 (Chandrayaan-3) என்பது இந்திய நிலாப்பயண சந்திரயான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) திட்டமிட்டுள்ள மூன்றாவது மிக அண்மைய நிலாத் தேட்டத் திட்டமாகும்.

2023 சூலையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2019 இல் சந்திரயான்-2 இல் ஏவப்பட்டதைப் போன்று, விக்ரம் என்ற நிலாத் தரையிறங்கியையும், பிரக்யான் என்ற நிலாத் தரையூர்தியையும் கொண்டுள்ளது.

சந்திரயான்-3
Chandrayaan-3
சந்திரயான்-3
சந்திரயான்-3 ஒருங்கிணைந்த தொகுதியை இணைக்கும் முன் சுத்தமான அறையில்
திட்ட வகை
  • நிலாத் தரையிறங்கி
  • தரையூர்தி
  • செலுத்து பெட்டகம்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ)
இணையதளம்www.isro.gov.in/Chandrayaan3.html
திட்டக் காலம்8 மாதம்-கள் and 24 நாள்-கள் (கழிந்தது)
  • செலுத்து பெட்டகம்: ≤ 3 முதல் 6 மாதங்கள் (திட்டம்) 8 மாதம்-கள் and 2 நாள்-கள் (கழிந்தது) (சுற்றுப்பாதையில் செருகியதிலிருந்து)
  • விக்ரம் தரையிறங்கி: ≤ 7 மாதம்-கள் and 14 நாள்-கள் (கழிந்தது) (தரையிறங்கியதிலிருந்து)
  • பிரகியான் தரையூர்தி: ≤ 14 நாள்கள் (திட்டம்)
விண்கலத்தின் பண்புகள்
செயற்கைக்கோள் பேருந்துசந்திரயான்
தயாரிப்புஇசுரோ
ஏவல் திணிவு3,900 கிகி
ஏற்புச்சுமை-நிறைசெலுத்துகைப் பெட்டகம்: 2,148 கிகி
தரையிறங்கி (விக்ரம்): 1,726 கிகி
தரையூர்தி (பிரகியான்) 26 கிகி
மொத்தம்: 3900 kg
திறன்செலுத்துகைப் பெட்டகம்: 758 W
தரையிறங்கி: 738 W
தரையூர்தி: 50 W
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்14 சூலை 2023, 14:35:17 இசீநே, (9:05:17 ஒசநே)
ஏவுகலன்ஜி. எஸ். எல். வி மார்க் III எம்4
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
ஒப்பந்தக்காரர்இசுரோ
நிலா சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்5 ஆகத்து 2023
நிலா தரையிறங்கி
விண்கலப் பகுதிவிக்ரம் தரையிறங்கி
தரையிறங்கிய நாள்23 ஆகத்து 2023, 18:02 IST, (12:32 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்)
தரையிறங்கிய பகுதி69°22′03″S 32°20′53″E / 69.367621°S 32.348126°E / -69.367621; 32.348126
(மான்சினசு, சிம்பேலியசு குழிகளுக்கிடையில்)
நிலா தேட்ட ஊர்தி
விண்கலப் பகுதிபிரகியான் தரையூர்தி
தரையிறங்கிய நாள்TBD
சந்திரயான்-3
சந்திரயான் திட்டம்
← சந்திரயான்-2 நிலாத் துருவ ஆய்வுத் திட்டம் →

சந்திரயான்-3 சதீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2023 சூலை 14 அன்று ஏவப்பட்டது. விண்கலம் 2023 ஆகத்து 5 அன்று நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. விக்ரம் தரையிறங்கி பிரக்யான் தரையூர்தியுடன் நிலாவின் தென்முனைப் பகுதியில் ஆகத்து 23 அன்று 12:33 ஒசநே நேரத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, தென்முனையில் தரையிறங்கிய முதலாவது நாடாகவும், அத்துடன் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நான்காவது நாடாகவும் இந்தியாவை உருவாக்கியது.தரையிறங்கி 2023, செப்டம்பர் 3 அன்று இறங்கிய இடத்தில் இருந்து துள்ளிக் குதித்து 30–40 cm (12–16 அங்) அளவு தள்ளிய இருப்பை அடைந்தது its landing site.

விக்ரம் தரையிறங்கியும் பிரக்யான் தரையூர்தியும் செப்டம்பர் முறையே செப்டம்பர் 2 அன்றும் 4 அன்றும் இறங்கிய இடத்தில் உள்ள சூரிய ஆற்றல் அருகி வந்ததால் உறங்க வைக்கப்பட்டன. தரையிறங்கியும் தரையூர்தியும் செப்டம்பர் 22 அண்று சூரிய எழுச்சியின்போது மீண்டும் வேலை செய்ய திட்டமிடப்பட்டது.unrise on 22 September. என்றாலும், செப்டம்பர் 22 அன்று விக்ரம் தரையிறங்கியும் பிரக்யான் தரையூர்தியும் விழிப்பு அழைப்புக்குத் துலங்காமல் தவறவிட்டன.

பின்னணி

சந்திரயான் நிகழ்நிரலின் இரண்டாம்கட்டமாக, சந்திரயான்-2 ஏவூர்தி மார்க் 3 (LVM 3) வழியாக விண்ணில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஏவியது. இதில் ஒரு சுற்றுகலனும் ஒரு தரையிறங்கியும் ஒரு தரையூர்தியும் இருந்தன. . இதன் நோக்கம் தரையிறக்கியை மெதுவாக நிலாத்தரையில் 2019 செப்டம்பரில் இறக்கி தரை ஊர்தியை நிலாவில் இயக்குதலாகும்.முந்தைய அறிக்கைகளில் இருந்து இந்தியாவும் யப்பானும் கூட்டாக நிலாத் தென்முனைக்குச் செல்லத் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. இதில் யப்பான் ஏவுகலத்தையும் தரையூர்தியையும் இந்தியா தரையிறக்கியையும் வடிவமைப்பதாக இருந்துள்ளது. இத்திட்டத்தில் களப் பதக்கூறுகள் எடுத்தலும் நிலாவில் இரவில் வாழும் தொழில்நுட்பங்களும் அடங்கியுள்ளன.

சந்திரயான்-2 திட்ட விக்ரம் தரையிறங்கியின் மென்மையான தரையிறக்கம் பொய்த்துப்போனதால், 2025 ஆம் ஆண்டின் கூட்டுச்செயல் திட்டத்தைச் சிறப்பாக முடிக்க, நிலாவில் மெதுவாகத் தரையிறங்கும் மற்றொரு திட்டம் இந்தியாவுக்குத் தேவையாகிவிட்டது.

ஐரோப்பிய விண்வெளி முகமை(ESA) இயக்கும் ஐரோப்பிய விண்வெளிக் கண்காணிப்பு(எசுட்டிராக்) ஓர் ஒப்பந்தப்படி இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கும். இந்தப் புதிய இணை ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ் ஐரோப்பிய விண்வெளி மையம் முதல் இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான்-1, சந்திரயான்-3]] நிலாச் செயற்கைக்கோள், சூரிய ஆராய்ச்சித் திட்டமான ஆதித்யா-எல்-1 போன்ற இசுரோவின் விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும். கைம்மாறாக, எதிர்கால எசா(ESA) திட்டங்கள், இசுரோ இயக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இசுட்டிராக்) நிலையங்களின் ஒத்துழைப்பைப் பெறும்.

நோக்கம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-3 இன் நோக்கங்களாகப் பின்வருபவற்றைக் கொண்டுள்ளது.

1 தரையிறங்கியைப் பாதுகாப்பாகவும் மெதுவாகவும் நிலாத்தரையில் இறக்கிவிடல்.

2 நிலாவில் தரையூர்தி உலாவும் திறன்களை நோக்கீட்டாலும் செயல்விளக்கத்தாலும் நிறுவுதல்

3 நிலாவின் உட்கூற்றை நன்கு புரிந்து கொள்ளவும் நடைமுறைக்குப் பயன்படுத்தவும் நிலாத்தரையில் கிடைக்கும் வேதி, இயல்தனிமங்களின் மீது களத்திலேயே அறிவியல் செய்முறைகளை மேற்கொண்டு அவற்றின் நோக்கீடுகளைப் பதிவுசெய்தல் கோளிடை எனும் சொல் இருகோள்களுக்கு இடையே தேவைப்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கிச் செயல்படுத்தலைக் குறிக்கும் அடைமொழியாகும்.


வடிவமைப்பு

சந்திரயான்-3 பின்வரும் மூன்று முதன்மை உறுப்புகளைக் கொண்டுள்ளது.

செலுத்தப் பெட்டகம்

செலுத்தப்பெட்டகம் நிலாவின் 100 கிமீ வட்டணை வரையில் தரையிறங்கியையும் தரையூர்தியையும் கொண்டுசெல்லும். இது ஒருபக்கத்தில் சூரியப் பலகமும் உச்சியில் பெரிய உருளையும்(பெட்டகத்திடை தகவமைக்கும் கூம்பு) பூட்டிய பேழை போன்ற கட்டமைப்பாகும். இந்தக் கூம்பில் தரையிறங்கி அமர்கிறது. தரையிறங்கியோடு, இப்பெட்டகம் வாழ்தகவு புவிக்கோள் கதிர்நிரல்-முனைமை அளவி(SHAPE) எனும் கருவியைப் புவியின் கதிர்நிரலையும் முனைமை அளவுகளையும் நிலா வட்டணையில் இருந்து அளக்க கொண்டு செல்லப்படுகிறது.

தரையிறங்கி

விக்ரம் தரையிறங்கி நிலாவில் மென்மையாகத் தரையிறங்கும் பொறுப்புடையதாகும். இது நான்கு கால்களைக் கொண்ட பேழை வடிவம் தாங்கியதாகும். இதில் 800 நியூட்டன் விசைகொண்ட நான்கு உந்துபொறிகள் அமைந்துள்ளன. மேலும், இதில் கள ஆய்வுக்கான அறிவியல் கருவிகளும் தரையூர்தியும் உள்ளன.. சந்திரயான்-3 தரையிறங்கியில் நான்கு மாறும் விசையும் கூடுதலான திசைமாற்று வீதமும் கொண்ட உந்துபொறிகள் உள்ளன. ஆனால், சந்திரயான்-2 திட்ட விக்ரம் தரையிறங்கியில் ஐந்து 800 நியூட்டன்கள் விசையுள்ள உந்துபொறிகள் இருந்ததற்கு இது மாறானதாகும். அதில் நடுவில் மாறாத விசையுள்ள ஓர் உந்துபொறியும் பூட்டப்பட்டிருந்தது. சந்திரயான்-2 தறையிறங்கல் தோல்விக்குக் காரணமான பல முதன்மைக் காரணிகளில் ஒன்று, படக்கருவி வழிப்படுத்தலின்போது விண்கலத் திசைவைப்புக் கட்டுப்பாடு உயர்ந்துவிட்டதாகும். இதைத் தவிர்க்க, இப்போது தரையிறங்கியின் திசைவைப்புக் கட்டுப்பாடும் உந்துவிசையும் அனைத்து இறங்கும் கட்டங்களிலும் தொடர்ந்து கட்டுபடுத்தப்படும். மேஉம், கலத்தின் திசைமாற்ற வீதமும் சந்திரயான்-2 இன் நொடிக்குப் பத்து பாகைக் கோணத்தில் இருந்து, நொடிக்கு இருபத்தைந்து பாகைக் கோணத்துக்கு சந்திரயான்-3 இல் உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, மூன்று திசைகளிலும் திசைவைப்பை அளக்கவல்ல ஒருங்கொளி டாப்பிளர் விரைவளவியும்(LDV) சந்திரயான்-3 இல் பொருத்தப்பட்டுள்ளது . சந்திரயான் -2 தரையிறங்கியுடன் ஒப்பிடும்போது அதன் மொத்தல் கால்களும் வலிமைகூட்டப்பட்டுள்ளன. கருவி பின்னணிக் காப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-2 சுற்றுகலனில் உள்ள வட்டணை உயர்பிரிதிற ஒளிப்படக்கருவி(OHRC) முன்பு பிடித்த படிமங்களின் வழிகாட்டுதலில் தரையிறங்கி மேலும் துல்லியமான 4 km (2.5 mi) by 4 km (2.5 mi) கூடுதல் பரப்பளவுள்ள இறங்குகளத்தில் பாதுகாப்பாக இறங்கும். இசுரோ தரையிறங்கியின் கட்டமைப்பு விறைப்பையும் பின்னணிக் கருவிக் காப்பையும் மேம்படுத்தியுள்ளது. தரவு அனுப்பும் அலைவெண் நெடுக்கத்தையும் உயர்த்தியுள்ளது. கூடுதலாக, கீழிறங்கும்போதும் தரைதொடும்போதும் ஏற்பட வாய்ப்புள்ள தோல்விகளின்போது தரையிறங்கியின் வாழ்தகவை மீட்கும் பல வருநிகழ் இடர்தவிர்ப்பு அமைப்புகளையும் இணைத்துள்ளது.

தரையூர்தி

தரையூர்தி ஒரு நடமாடும் ஆய்வகமாகும். இது நிலப்பரப்பில் நடமாடி பதக்கூறுகளைத் திரட்டி, நிலாவின் புவியியல், வேதியியல் உட்கூறுகளைப் பகுப்பாய்வு செய்யும். இது ஆறு சக்கரங்கள் பூட்டிய, செவ்வக அடிமனையுள்ள உருண்டோடும் தானூர்தியாகும்.இதன் மொத்தும் கால்கள் சந்திரயான்-2 ஐ விட வலிமைமிக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கூடுதல் கருவி காப்பும் தரப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்பு விறைப்பை மேம்படுத்தி, பன்முக வருநிகழ்வேற்பு அமைப்புகளும் பொருத்தப்படுகின்றன.

தரையூர்தி வடிவமைப்புக் கூறுபாடுகளாவன:

  • ஆறு சக்கர வடிவமைப்பு
  • எடை 26 கிலோகிராம்கள் (57 pounds)
  • தரையில் இயங்கும் நெடுக்கம் 500 மீட்டர்கள் (1,600 அடி)
  • எதிர்பார்க்கும் ஆயுள்: ஒரு நிலா நாள் (14 புவி நாட்கள்)

சந்திரயான்-3 இன் தரையூர்தி கீழ்வரும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும்:

  • நிலா மேற்பரப்பின் உட்கூறுகள்
  • நிலா மண்ணில் பனிநீர் உள்ளமை
  • நிலா மொத்தல்களின் வரலாறு
  • நிலா வளிமண்டலப் படிமலர்ச்சி

அறிவியல் கருவிகள்

தரையிறங்கி

தரையிறங்கியில் கீழ்வரும் மூன்று அறிவியல் கருவிகளும் உள்ளன:

  • சந்திரா மேற்பரப்பு வெப்ப இயற்பியல் செய்முறை (சேசுட்டு-ChaSTE) நிலா மேற்பரப்பு வெப்பக் கடத்துதிறத்தையும் வெப்பநிலையையும் அளக்கும்.
  • நிலா நிலநடுக்க செயல்பாட்டளவி ( இல்சா-ILSA) நிலநடுக்கமானி இறங்கிய களத்தின் நிலநடுக்கத்தை அளக்கும்.
  • இலங்முயர் ஆய்வி (ராம்பா-எல்பி(RHAMBA-LP) நிலாப்பரப்பு மின்ம அடர்த்தியையும் வேறுபாடுகளையும் அளக்கும்.
சந்திரா மேற்பரப்பு வெப்ப இயற்பியல் செய்முறை (ChaSTE)
நிலா நிலநடுக்க செயல்பாட்டளவி (ILSA)

தரையூர்தி

தரையூர்தியில் கீழ்வரும் இரண்டு அறிவியல் கருவிகள் உள்ளன:

செலுத்தப் பெட்டகம்

இப்பெட்டகம் வாழ்தகவு புவிக்கோள் கதிர்நிரல்-முனைமை அளவி(SHAPE) எனும் கருவியைப் புவியின் கதிர்நிரலையும் முனைமை அளவுகளையும் நிலா வட்டணையில் இருந்து அளக்கக் கொண்டு செல்லப்படுகிறது.

திட்ட விவரம்

சந்திரயான்-3 அசைவூட்டம்
புவியைச் சுற்றி – வட்டணை உயர்த்தல்
புவியைச் சுற்றி
நிலாவைச் சுற்றி
       சந்திரயான்-3 ·        புவி ·        நிலா

ஏவுதல்

சந்திரயான்-3 
சந்திரயான்-3 விண்கல ஏவூர்தியான LVM3 மார்க்-4, சத்தீசு தவான் விண்வெளி மைய இரண்டாம் ஏவுதளத்திலிருந்து விண்ணில் சீறிப் பாய்தல், சிறி அரிகோட்டா

சந்திரயான் -3 திட்டமிட்டபடி 2023 ஜூலை 14, இசீநே 2:35 மணி(இசீநே) பிற்பகலில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள சிறி அரிகோட்டா நகரத்தில் உள்ள சத்தீசு தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. ஏவூர்தி விண்ணில் இயல்பாக முன்னேறிப் பாய்ந்தது என இசுரோ அறிவித்தது. ஏவிய 176 மணித்துளிகளில் சந்திரயான்-3 விண்கலம் ஏவூர்தியில் இருந்து தனியே பிரிந்தது. ஏவிய ஏழு மணித்துளிகளில் 210 கிமீ குத்துயரத்தை அடைந்த பின்னர் இதன் புவிமைய ஒத்தியங்கும் வட்டணையில் நிலைநிறுத்தப்பட்டது. புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் தோராயமாக 384,400 கிலோமீட்டர்கள் ஆகும். ஆகத்து 23 அல்லது ஆகத்து 24 ஆகிய நாட்களில் சந்திரயான்-3 நிலவின் தென்முனைப் பகுதியில் மென்மையான தரையிறக்கத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசுரோ செய்த கணக்கீட்டின்படி, நிலாவின் புவியண்மை நிகழும்போது சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதற்குச் சூலை மாதத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு சிறப்பு நடவடிக்கையாகும்.

வட்டணை

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகத்து 5 அன்று நிலா வட்டணை நுழைவை வெற்றிகரமாக முடித்து சந்திரயான்=3 விண்கலத்தை நிலாமைய வட்டணையில் நிலைநிறுத்தியது. இந்த நடவடிக்கையை பெங்களூருவில் உள்ள இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, சட்டளை வலைப்பினையம்(இசுட்டிராக்-ISTRAC) நிறைவேற்றியது.

தொடர்ந்த நிலாமைய நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஆகத்து 17, the விக்ரம் தரையிறங்கி செலுத்து பெட்டகத்தில் இருந்து பிரிக்கப்பட்டது; தரையிறங்கி நிலா மேற்பரப்பை அடைவதற்கான தன் சொந்தப் பயணத்தைத் தொடங்கியது. அடுத்த நடவடிக்கையை ஆகத்து 18 இல் மேற்கொண்டு தரையிறங்கி 117கிமீ க்கு 153கிமீ ஆக, நீள்வட்டத் தாழ்வட்டணையில் தரையிறங்க ஏந்தாக முதல்முறையாக வட்டணை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகத்து 20 அன்று தரையிறங்கியின் வட்டணை உயரம் 60 நொடிகள் எரியூட்டல் வழியாக 25கிமீக்கு 134கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.

தரையிறங்கல்

சந்திரயான்-3 
சந்திரயான்-2 சுற்றுகலனின் OHRC படக்கருவி எடுத்த சந்திரயான்-3 தரையிறங்கியின் படிமம்
சந்திரயான்-3 
பிரக்யான் உருண்டு வெளியேறல்

தரையிறங்கி 2023, ஆகத்து 23 இல் தனது வட்டணையின் மிகத் தாழ்ந்த புள்ளியை அணுகியபோது,யாதாவது, அது நிலாத் தரைக்கு மேலே 30 கிலோமீட்டர்கள் (19 mi) குத்துயர்ரத்தில் இருந்தபோது, அதன் நான்கு பொறிகலும் வேகத்தை ஒஉக்குவதர்காக எரியூட்டப்பட்டன. அதற்குப் பதினைந்த மணித்துளிகளுக்குப் பிறகு, நிலாத் தரைக்கு மேலே தரையிறங்கி 7.2 கிமீ (4.5 மைல்கள்) குத்துயரத்தை அடைந்தது; இந்தக் குத்துயரத்திலேயே இறங்குகலம் 10 மணித்துளிகள் இருந்துகொண்டு தன்னைத் தன் எட்டு சிறுபொறிகளை எரியூட்டி நிலைப்படுத்திக் கொண்டது. பிறகு தன் கிடைநிலையில் இருந்து குத்துநிலைக்கு இறங்கியவாறே தன் இருப்புக் கோணத்தை 90 பாகைகளுக்குத் திருப்பியது.

இதற்குப் பிறகு, கலம் தன் நான்கு பொறிக்களில் இரண்டு பொறிகளை மட்டும் பயன்படுத்தி, ஓரளவு 150 மீட்டர்கள் (490 அடி); குத்துயரத்துக்கு வரும்வரை தன் இறங்குவேகத்தை விரைவாகக் குறைத்தது; அந்நிலையிலேயே கலம் 30 நொடிகளுக்குத் தங்கி மிதந்தபடி இருந்து. உகந்த இறங்குமிடத்தைக் கண்டறிந்தது. பின்னர் அது தன் இறங்கலைத் தொடர்ந்து 12:32 (ஒபொநே) சமையத்தில் நிலாத் தரையைத் தொட்டது.

வட்டணை கட்டுப்படுத்தலும் நிலைநிறுத்தலும்

செயற்கைக்கோள் ஜி. எஸ். எல். வி மார்க் III-M4 ஏவூர்தியால் 2023, சூலை 14 மாலையில் 2:35 இசீநே மணியளவில் புவிமைய ஒத்தியங்கும் வட்டணைக்கு ஏவப்பட்டது. அப்போதைய புவியண்மை 170 km (106 mi) ஆகும். இதற்குப் பிறகு, பல தொடர் வட்டணை உயர்த்தல் முயற்சிகள் நீர்மப் புவிச்சேய்மை உந்துபொறி வழியும் வேதிம முடுக்கிகள் வழியும் மேற்கொள்ளப்பட்டுச் செயற்கைக்கோள் நிலா பெயரும் வட்டணைக்குள் செலுத்தப்படும்.

திட்டக் காலநிரல்

# நாள்/
நேரம் ( ஒபொநே)
LAM எரிப்பு நேரம் அடைந்த உயரம் சாய்வு வட்டணைநேரம் மேற்கோள்கள்
புவிச்சேய்மை புவியண்மை
புவி மைய நடவடிக்கைகள்
1 15 சூலை 2023 இல்லை 41,762 km (25,950 mi) 173 km (107 mi) 21.3° இல்லை
2 17 சூலை 2023 இல்லை 41,603 km (25,851 mi) 226 km (140 mi) இல்லை இல்லை
3 18 சூலை 2023 இல்லை 51,400 km (31,900 mi) 228 km (142 mi) இல்லை இல்லை
4 20 சூலை 2023 இல்லை 71,353 km (44,337 mi) 233 km (145 mi) இல்லை இல்லை
5 25 சூலை 2023 இல்லை 127,609 km (79,293 mi) 236 km (147 mi) இல்லை இல்லை
நிலா பெயரும் நுழைவு
1 31 சூலை 2023 இல்லை 369,328 km (229,490 mi) 288 km (179 mi) இல்லை இல்லை
நிலா மைய நடவடிக்கைகள்
1 5 ஆகத்து 2023 1,835 நொடி (30.58 ம.து) 127,603 km (79,289 mi) 236 km (147 mi) இல்லை தோராயமாக, 21 மணி
2 6 ஆகத்து 2023 இல்லை 4,313 km (2,680 mi) 170 km (110 mi) இல்லை இல்லை
3 9 ஆகத்து 2023 இல்லை 1,437 km (893 mi) 174 km (108 mi) இல்லை இல்லை
4 14 ஆகத்து 2023 இல்லை 177 km (110 mi) 150 km (93 mi) இல்லை இல்லை
5 16 ஆகத்து 2023 இல்லை 163 km (101 mi) 153 km (95 mi) இல்லை இல்லை
தரையிறங்கிப் பெட்டகம் பிரிதல்
1 17 ஆகத்து 2023 இல்லை 163 km (101 mi) 153 km (95 mi) இல்லை இல்லை
வட்டணை குறைத்தல்
1 18 ஆகத்து 2023 இல்லை 157 km (98 mi) 113 km (70 mi) இல்லை இல்லை
2 20 ஆகத்து 2023 60 நொடி (1 ம.து) 134 km (83 mi) 25 km (16 mi) இல்லை இல்லை
தரையிறங்கல்
1 23 ஆகத்து 2023
12:32
பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை
தரையூர்தி உருண்டு வெளியேறல்
1 23 ஆகத்து 2023 பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை பொருத்தமில்லை

செலுத்துகலத்தை புவி வட்டணையில் மீள நுழைத்தல்

சந்திரயான்-3 
செலுத்துகல நிலா வட்டணை நுழைப்பு நடவடிக்கை
சந்திரயான்-3 
நிலா வெளியேற்றப் பறப்பும் புவிப் பெயர்வு வழித்தட செலுத்தமும்
சந்திரயான்-3 
நிலா ஈர்ப்புவிட்டுவிலகலும் புவி ஈர்ப்பு அண்மையைக் கடத்தலும்

செய்முறை அடிப்படையில், சந்திரயான்-3 செலுத்துகலம் நிலா வட்டணையில் இருந்து நகர்த்தி, புவி வட்டணையில் நிலைநிறுத்தப்பட்டது. இது தான் இசுரோ முதன்முதலில் புவிக்கு அப்பால் உள்ள விண்கலத்தைப் புவி வட்டணைக்கு மீட்டு பறக்கவைத்த விண்கலமாகும்.

CH-3 PM புவிமீள்வுச் செயல்முறைகள்
நாள் நடவடிக்கை/நிகழ்வு வட்டணை
புவிச்சேய்மை (கிமீ) புவியண்மை (கிமீ) சுற்றுகாலம் (மணிகள்) சாய்வு (deg)
தொடக்க நிலா வட்டணை 150 இல்லை 2.1 இல்லை
9 அக்தோபர் 2023 நிலாவட்டணை நடவடிக்கை 1 5112 இல்லை 7.2 இல்லை
13 அக்தோபர் 2023 புவிப் பெயர்வு வழித்தட நுழைப்பு ≈3,80,000 ≈1,80,000 இல்லை இல்லை
18 அக்தோபர் 2023 நிலா அருகே பறத்தல் 1 இல்லை இல்லை இல்லை இல்லை
24 அக்தோபர்October 2023 நிலா அருகே பறத்தல் 2 இல்லை இல்லை இல்லை இல்லை
2 நவம்பர் 2023 நிலா அருகே பறத்தல் 3 இல்லை இல்லை இல்லை இல்லை
07 நவம்பர் 2023 நிலா அருகே பறத்தல் 4 இல்லை இல்லை இல்லை இல்லை
10 நவம்பர் 2023 நிலா ஈர்ப்புக் கோள விலகல் இல்லை இல்லை இல்லை இல்லை
22 நவம்பர் 2023 முதல் புவியண்மைக் கடப்பு இல்லை ≈1,54,000 இல்லை இல்லை
கடைசிப் புவி வட்டணை (மாறியல்பு) ≥1,15,000 ≈300 27

செலுத்துகலம் புவி வட்டணையில் மாறுபடும் புவியண்மை, புவிச்சேய்மை நிலைகளுடன் அமைந்த வட்டணையில் இப்போது சுற்றிவருகிறது. இவ்வட்டணையின் முன்கணித்த சிறுமப் புவிச்சேய்மையாக 1.15 இலட்சம் கிமீ உள்ளது. வட்டணை சுற்றுகாலம் அணுக்கமாக 13 நாட்களாகும். புவிநடுவரைத் தளத்துடனான சாய்வு 27 பாகைகளாகும்.திட்டமிட்டபடி, புவியை நெருங்கும்போது, SHAPE கருவி செயல்படுத்தப்படுகிறது. மேலும், 28, 2023, அக்தோபர் 28 அன்று கதிரவமறைப்ப்பின் போது SHAPE கருவிச் சிறப்புச் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது. SHAPE கருவியின் செயல்பாடுகள் மேலும் தொடரும்.

சந்திரயான்-3 செலுத்துகல அசைவூட்டம்
புவியைச் சுற்றி
நிலாவைச் சுற்றி
      சந்திரயான்-3 செக ·        புவி ·        நிலா

மேற்பரப்பு செயல்பாடுகள்

நிலாவின் தென்முனைப் பகுதியில் மென்மையாக தரையிறங்கியதும், சந்திரயான்-3 விக்ரம் தரையிறங்கி பிரக்யான் தரையூர்தியை நிலாவின் குழிப்பள்ளங்கள் நிரம்பிய மேற்பரப்பை ஆய்வுசெய்ய வெளியேற்றியது. தன் ஒருங்கிணைந்த ஒலிப்படக்கருவிகளைப் பயன்படுத்தி சுற்றுச் சூழலை காணொலிகளாகப் புவிக்கு அனுப்பியது. நிலாவில் இருவார இடைவெளியில் திட்டமிட்ட ஆய்வுப் பணிகளை நிறைவேற்றத் தொடங்கியது.

தரையூர்தியின் முதல் காணொலி 2023, ஆகத்து 25 அன்று அனுப்பப்பட்டது. அது விக்ரமை விட்டு வெளியேறிச் சாய்தளம் வழியாக உருண்டு நிலாத் தரையைத் தொடுவதைக் கட்டியது. இசுரோ விக்ரம் தான் தரையிறங்கும்போது, தரைத்தூசியைத் தட்டி மேலெழுப்பியபடி, இறங்குமிடத்தை அடையும் காட்சியையும் வெளியிட்டது. இசுரோ தரையூர்தியின் இரண்டு அறிவியல் கருவிகளையும் இயக்கி வைத்ததையும் அது எட்டு மீட்டர்கள் ந்கர்ந்துள்லதையும் பின்னர் வெளியிட்டது.

சந்திரயான்-3 
தரையூர்திக் கலஇயக்கக் கருவி எடுத்த 4 மீ விட்டப் பள்ளக்குழி.

இசுரோ ஆகத்து 26 அன்று தரையூர்தி தரையிறங்கிப் பார்வையை விட்டு கூடுதலான தொலைவுக்கு நகர்ந்துவிட்ட புதிய காட்சியை வெளியிட்டது. இச்ரோ ஆகத்து 27 அன்று3 மீட்டர் தோலைவில் மிகப் பெரிய குழிப்பள்ள விளிம்பில் எடுத்த இருபடங்களை வெளியிட்டது.

தரையிறங்கி செப்டம்பர் 3 அன்று அதற்கிட்ட செய்முறைகளை முடித்ததும் உறக்க முறைமையில் வைக்கப்பட்டது. அதன் மின்கல அடுக்குகள் மின்னேற்றப்பட்டது. வரும் நிலா இரவுக்கு ஆயத்தப்படுத்த அதன் அலைவாங்கிகள் முடக்கப்பட்டன. " தரையூர்தியின் அறிவியல்கருவிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அதுவரை திரட்டிய தகவல்கள் தரையிறங்கி ஊடாகப் புவிக்கு அனுப்பட்டன", என இசுரோ கூறியது. சந்திரயான்-3 இன் தரையிறங்கியும் தரையூர்தியும் ஒரு நிலா நாளுக்கு அதாவது 14 புவிநாளுக்கு மட்டிமே இயங்க திட்டமிடப்பட்டது. மேலுல்ம், கல மின்னனியல் கருவிகளும் −120 °C (−184 °F) இரவு வெப்பநிலைகளை மட்டுமே இரவு நேரத்தில் தாங்க வடிவமைக்கப்பட்டன. தரையிறங்கியும் தரையூர்தியும் நிலா இரவைத் தாங்கி பிழைத்திருந்தால், அடுத்த 1 நிலா நாளுக்கு விரிவாக்கி மேலும் அறிவியல் செய்முறைகளைத் தொடர்ந்து செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

துள்ளிக் குதிப்புச் செய்முறை

விக்ரமின் பொறிகள் செப்டம்பர் 3 அன்று ஒரு சிறு துள்ளிக் குதிப்புக்காக எரியூட்டப்பட்டன. அது 40 cm (16 அங்) உரத்துக்கு நிலாத்தரையில் இருந்த் மேலெழுந்து, அதே அளவு தொலைவுக்குப் பக்கவாட்டில் நகர்ந்து மீண்டும் தரையிறங்கியது. இந்தச் செய்முறை எதிர்கால பதக்கூறுகள் கொண்டுசெல்லும் திட்டங்களுக்கான வெள்ளோட்டமாக அமைந்தது.ஐந்தத் துள்லிக் குதிப்புக்கு முன் அறிவியல் கருவிகளும் தரையூர்தியை இறக்கும் சாய்தளம் உல்ளிழுக்கப்பட்டு பின் வெளியிறக்கப்பட்டன.

திட்ட ஆயுள்

  • செலுத்தப் பெட்டகம்: இது தரையிரங்கியையும் தரையூர்தியையும் 100 by 100 கிலோமீட்டர்கள் (62 mi × 62 mi) வட்டணை வரை கொண்டுசெல்வதோடு தன் 6 அறிவியல் கருவிகளின் செய்முறைகளை 6 மாதங்கள் வரை செய்யும்.
  • தரையிறங்கிப் பெட்டகம்: 1 நிலா நாள் (14 புவி நாள்)
  • தரையூர்திப் பெட்டகம்: 1 நிலா நாள் (14 புவி நாள்)

திட்டச் செயல் அலுவலர்கள்

  • இசுரோ தலைவர்: எசு. சோமநாத்
  • திட்ட இயக்குநர்: எசு. மோகனகுமார்
  • இணைத் திட்ட இயக்குநர்: ஜி. நாராயணன்
  • திட்ட இயக்குநர்: முனைவர் ப. வீர முத்துவேல்
  • துணைத் திட்ட இயக்குநர்: கல்பனா காளகத்தி
  • ஊர்தி இயக்குநர்: பிஜு சி. தாமசு
  • இணை ஊர்தி இயக்குநர்: பி. கே. சுதீசுகுமார்

நிதிவளம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2019 திசம்பரில் திட்டச் செலவுக்கான தொடக்க நிதியாக 75 கோடி உரூபா வேண்டியுள்ளது. இதில் 60 கோடி உரூபா முதலீட்டுச் செலவாகவும் 15 கோடி உரூபா வருவாய்ச் செலவாகவும் கோரியுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டினை உறுதிப்படுத்தும் வகையில், இசுரோவின் முன்னாள் தலைவர் கே. சிவன், இதன் செலவு சுமார் ₹615 கோடி (2023ல் ₹721 கோடி அல்லது 90 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குச் சமம்) என்று கூறினார்.

திட்ட அறிவியல் பலன்கள்

நிலாத் தென்முனையை அடைந்ததும் சந்திரயான்-3, பிரக்யான் தரையூர்தியை நிலாத் தரையில் ஆய்வுசெய்ய இறக்கிவிட்டது. தரையிறங்கியும் தரையூர்தியும் தம் தொகுப்புப் படக்கருவிகளைப் பயன்படுத்தி நிலாச் சூழலைப் படமெடுத்து அவற்றைத் தரைக் கட்டுபாட்டு நிலையத்துக்கு அனுப்பி வைத்தன. மேலும் நிலாவில் இருவாரத்துக்குத் திட்டமிட்ட ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டன.

தரையிறங்கியின் முதல் காணொலி 2023, ஆகத்து 25 இல் பதிவு செய்யபட்டது; இது சாய்தளத்தில் வெளியேறி நிலாத் தரைக்குச் செல்லும் விக்ரம் தரையூர்தியைக் காட்டியது. இசுரோ இந்தக் காணொலியை எக்சுக் கார்ப்பில் வெளியிட்டது, இது மேலும் தரையிறங்கி இறங்குமிடத்தை நெருங்குவதையும் தரையைத் தொடுகையில் தூசியைத் தட்டை எழுப்புவதையும் காட்டியது. இசுரோ பிறகு, பிரக்யான் ஊர்தியின் இரண்டு அறிவியல் கருவிகள் இயக்கி வைக்கப்பட்டதையும் ஊர்தி எட்டு மீட்டர் தொலைவு நகர்ந்ததையும் எழுத்துவழி கீச்சுப் பதிவில் வெளியிட்டது.

சந்திரயான்-3 
தரையூர்தியில் உள்ள நகரும் ஒளிப்படக் கருவி பிடித்த ஒரு 4-மீட்டர்-விட்ட (13 அடி)முள்ள நிலாவின் குழிப்பள்ளம்.

இசுரோ ஆகத்து 26 இல் ஒரு புதிய காணொலியை வெளியிட்டது. இது தரையிறங்கியோடு, அதன் இருப்பிடப் பார்வைக்கு அப்பால் நகர்ந்து செல்லும் தரையூர்தியையும் காட்டியது. தரையூர்தி ஆகத்து 27 இல் தன் இருப்பிடத்தில் இருந்து இருபெரும் குழிப்பள்ளங்களை 3 மீட்டர் அருகில் எதிர்கொண்டபோது இரண்டு காட்சிகளை வெளியிட்டது. என்றாலும், பிறகு தரையூர்தி புதிய வழித்தடத்தில் தொடர்ந்து பாதுகாப்பாக நகர்ந்தது.

வெப்பநிலை வேறுபாடு

தரையிறங்கிப் பெட்டகத்தில் உள்ள நான்கு கருவிகளில் ஒன்றான சந்திரா மேற்பரப்பு வெப்ப இயற்பியல் செய்முறை (ChaSTE) நோக்கீடுகளை இசுரோ வெளியிட்டது. இவ்வகைத் தரவுகள் முதன்முதலில் இப்போது தான் வெளியிடப்படுகின்றன. ChaSTE கருவி நிலாத் மேற்பரப்பின் வெப்பக் கடத்துமையையும்(கடத்துதிறனையும்) நிலா மேற்பரப்பிலும் கீழும் உள்ள பல்வேறு புள்ளிகளில் அமையும் வெப்பநிலை வேறுபாடுகளையும் அளந்து, நிலாவின் வெப்பப் பரவல் நிலவரத்தை அறியும் நோக்கமுடையதாகும்.

சந்திரயான்-3 
நிலாமுனைப்பகுதியில் ஒரு புள்ளியில் 10 செமீ ஆழத் தரை மேற்பகுதி ஊடே ChaSTE கருவி அளந்த வெப்பநிலை வேறுபாட்டின் வரைபடம்.

இசுரோ வெளியிட்ட முதல் தரவுகளின் தொகுப்பு நிலாத் தரையின் மேலும் கீழும் மிக பாரிய வெப்பநிலைகளின் வேறுபாட்டைக் காட்டியது. இசுரோ வெளியிட்ட வரைபடம் மேற்பரப்பு வெப்பநிலை 50 °C (122 °F) அளவினும் கூடுதலாக அமைய, அது கிட்டதட்ட−10 °C (14 °F) அளவுக்குத் தரைக்குக் கீழாக சில மிமீகளுக்குள் வேகமாக வீழ்ச்சியடைதலைக் காட்டியது. இந்த அளவீடுகள் நிலாத்தரையின் மேலடுக்கு மண் வெப்பத்தை நன்றாக கடத்தவில்லை என்பதையும் அது அடிப்பரப்புக்கு வெப்பக்காப்பைத் தருவதையும் காட்டுகிறது.

இந்த அளவீடுகள் முந்தைய தேட்டங்களிலும் செய்முறைகளிலும் வெளிபாட்ட வெப்பப் பரவலோடு பொருந்திப்போகின்றன. ஆனால், நிலாத் தென்முனை ப்பகுதி அருகில் தரையின் மேல்மண், அடிமண் வெப்பநிலைகளை நேரடியாக அளப்பது இதுவே முதல்முறையாகும்.

இசுரோ அறிவியலாளர் பி. எச். தாருகேசா, கண்டுபிடிப்பைப் பற்றிக் கூறும்போது, 70-செல்சியசு (158-பாரன்ஃகைட்) அளவுக்கான உயர் நெடுக்க வெப்பநிலை நிலா மேற்பரப்பருகில் "எதிர்பார்க்கப்படவில்லை" எனக் கருத்துரைத்துள்ளார்.

கந்தகக் கண்டுபிடிப்பு

இசுரோ ஆகத்து 29 அன்று பிரக்யான் தரையூர்தியில் உள்ள ஒருங்கொளி கிளர்முறிவு கதிர்நிரல் பதிவிக் (LIBS) கருவி களச் செய்முறை அளவீடுகள் வழி " ஐயத்துக்கு இடமின்றி" நிலாத் தென்முனை தரைப்பரப்பில் கந்தகம் இருப்பதைக் கண்டுபிடித்ததாக கூறியது. நிலாவில் கந்தகம் இருப்பது முன்பே அறியப்பட்டிருந்தாலும், இது நிலாத் தென்முனையில் முதல் தடவையாக கந்தகம் இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கந்தகம் மட்டுமன்றி, தரையூர்தி அலுமினியம் (Al), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr), டைட்டானியம் (Ti), மங்கனீசு (Mn), சிலிக்கான் (Si), உயிரகம் (O). ஆகிய தனிமங்கள் தென்முனையிலும் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. கூடுதலாக, நீரகம் (H) தேடும் பணியையும் தரையூர்தி தொடர்வதாக கூறியுள்ளது.

சந்திரயான்-3 
நிலாவில் உள்ள தனிமங்களைப் பிரக்யான் தரையூர்தி கண்டுபிடித்துள்ளது.

மின்மச் சூழல் அளவீடு

இசுரோ ஆகத்து 31 அன்று, விக்ரம் தரையிறங்கியின் இராம்பாக் கருவியியின் மின்மச் சூழல் அடர்த்தித் தரவுகளை வெளியிட்டது. தொடக்கநிலை மதிப்பீடுகள் நிலாத்தரை மேற்பரப்பில் தாழ் மின்ம அடர்த்தி, ஒரு பருமீட்டருக்கு 5 முதல் 30 மில்லியன் மின்னன்கள் வேறுபாட்டுடன் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மதிப்பீடு நிலா நாளின் தொடக்கக் கட்டங்களுக்கு உரியதாகும். ஆய்கலம் முழு நிலா நாளுக்கும் தரையருகு மின்மச் சூழலின் மாற்றத்தைப் பதிவுசெய்யக் கருதியுள்ளது.

நிலநடுக்க அளவீடுகள்

அதே நாளில் இசுரோ, தரையிறங்கியில் உள்ள இல்சாக் கருவி பதிவுசெய்த தரையூர்தியின் ஆகத்து 25 அன்றைய நகர்வின் அதிர்வு அளவீடுகளை வெளியிட்டது. ஆகத்து 26 இல் இயற்கை அதிர்வொன்றும் ஏற்பட்டுள்ளது. பிந்தைய நிகழ்வுக்கான காரணம் ஆய்க்குட்படுத்தப்பட்டுள்ளது.

நிலாத் தண்ணீர்

ஐக்கிய இராச்சிய இலைசெசுட்டர் பலகலைக்கழககத்தின் கோள் அறிவியல் பேராசிரியரான ஜான் பிரிட்ஜெசு, நியூ சயன்ட்டிசுட்டு இதழுக்கு நிலாத் தரையின் மிகத் தாழ்ந்த அழுத்தத்தால், மேற்பரப்பில் சந்திரயான்-3 நீர்ம வடிவில் தண்ணீரைக் கண்டுபிடித்தல், அதாவதுவெப்பநிலை உறைநிலையை விட சற்றே கூடவுள்ள இடத்திலும் கண்டுபிடித்தல் அரிதே. ஏனெனில், பனியாக உறைந்த நீரும் வெப்பநிலையால் ஆவியாகிவிடும். நிலத்தடியில் சிறிது ஆழத்தில் அழுத்தம் உயர்வதால் நீர்ம வடிவில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. என்றாலும், சந்திரயான்-3 இன் செய்முறை அளவீடுகளை விளக்குவதும் கூட மிகத் தொடக்க முடிவாகவே அமையும். ஆனால், அவர்கள் இதற்கான தரவுகளைப் பெறுதலே வியப்பூட்டுவதாக உள்ளது" எனக் கூறியுள்ளார். மேலும் பிரிட்ஜெசு, " இதை மற்ற சில முகமைகளோடு இந்த முடிவுகளை ஒப்பிடாமல் இருக்க முடியாது; பொறியாளர்கள் இப்போது இதைத் தொடர்ந்து முயன்றபடியே தான் உள்ளனர். இது உருசியரை மிஞ்ச செய்யப்படுவதுபோல தொடரப்படுகிறது ", எனக் கூறி முடித்துள்ளார்.

நாட்டு உள்ளகத் துலங்கல்கள்

சந்திராயன்-3 திட்ட வெற்றிக்காக இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி பெங்களூரு இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையத்துக்குச் நேரடியாகச் சென்று, இசுரோ அறிவியலாளர்கள் குழுவைப்ப் பாராட்டினார் மேலும் அவர் விக்ரம் தரையிறங்கி நிலாத் தரையைத் தொட்ட இடத்துக்குச் சிவசக்தி புள்ளி எனப் பெயரிட்டார். மேலும் அவர் விக்ரம் தரையிறங்கி நிலாத் தரையைத் தொட்ட நாளான ஆகத்து 23 தேசிய விண்வெளி நாளாக அறிவித்தார்.

நிலாப் பரப்பில் சந்திரயான்-3 வெற்றிகரமாக மென்மையாகத் தரையிறங்கியதும் இசுரோ தலைவர் எசு. சோமநாத் " நிலாவில் இந்தியா" எனப் பூரித்தார். "தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுத் திருத்தினோம். இப்போது இன்னும் 14 நாட்களில் நாங்கள் செய்முறைகளை நிறைவேற்றவேண்டும்" என, இந்தியா டுடே இதழுக்குக் அவர் கூறினார்.

திட்ட இயக்குநர் ப. வீர முத்துவேல், " இது மகிழ்ச்சியின் பெருந்தருணம். குழு சார்பில் திட்ட இயக்குநராக இந்த இலக்கை எட்டியதில் செறிவான நிறைவு கிடைத்துள்ளது. முழுத்திட்டமும் ஏவுதலில் இருந்து நிலாத் தரையிறங்கும் வரை குறைவின்றி திட்டமிட்ட காலநிரல்படி அனைத்துமே நடந்தேறியது" எனக் கூறினார். திட்ட இயக்குநர் எசு. மோகன குமார், சந்திரயான்-3 ஒரு 'குழு முயற்சி' எனவும் கருவி வழங்கிய அனைவரும் உய்யநிலை இலக்குப் பொருட்களை நேரத்தே தந்தது, இந்த திருப்புமுனை மைல்கல்லை அடைய வழிவகுத்தது எனவும் கூறினார்.

இதேவேளையில், சந்திரயான்-2 ஏவிய முன்னாள் இசுரோ தலைவர் கே. சிவன், " நாம் இந்த அரும்பெரும் வெற்றியைக் காண, உண்மையில் கிளர்ச்சியுறுகிறோம். இதற்காக, கடந்த நான்காண்டுகளாகக் காத்திருந்தோம்.ஐந்த வெற்றி நமக்கும் நம் நாட்டுக்கும் இணிய வெற்றியாகும்" என்றார்.

தில்லி முதலமைச்சரான அரவிந்து கெஜிரிவாலும் இசுரோ அறிவியலாளர்களை வெற்றிகரமான தரையிறக்கத்துக்காக, இதுவொரு "வரலாற்றுத்" தருணம் பாராட்டியுள்ளார். " இது வரலாற்று நிகழ்வு. இது நாட்டின் அரும்பெரும் அடைவு. இதௌ நம் அனைவருக்கும் சுருக்கு தருவது. சந்திரயான்-னின் வெற்றி, அனைத்து மக்கள், அறிவியலாளர்கள், பொறியாளர்கள், பணியாளர்களின் கடும் உழைப்பால் விளைந்துள்ளது. இதில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள். வெல்க, பாரதத் தாய்! (பாரத் மாதா கி ஜெய்)", என்று தனது எக்சுப் பதிவில் இட்டுள்ளார்.

இந்திய முதன்மை நீதிபதியான த. ய. சந்திரசூட் இந்நிகழ்வு ஒரு மாபெரும் வரலாற்று அடைவு எனப் பாராட்டி, இந்த வெற்றிக்காக இசுரோவை வாழ்த்தினார். " இந்திய நாட்டுக் குடிமகன் ஓவ்வொருவரும் செறிந்த செருக்கும் பெருமையும் அடையலாம். "சந்திரயான் -3 இன் சிறப்புமிக்க மென்மையான நிலாத் தரையிறக்கத்தை இன்று கண்ணாரக் கண்டேன்" என்று கூறி, மேலும், " இந்நிகழ்வு மிகமிகச் சிறப்பானது;ஏனென்றால், நிலாவின் தென்முனையில் முதன்முதலில் தரையிறங்கிய நாடாகும் பேறுபெற்றுள்ளது. இது புதிய வாய்ப்புகளுக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும். உண்மையி, நிலா மென் தரையிறக்கம் நம் நாட்டின் முன்னேற்றத்தின் திருப்புமுனை மைல்கல்லாகும்," வாழ்த்தினார்.

பன்னாட்டுத் துலங்கல்கள்

யோசப்பு அசுச்சாபேக்கர், ஐரோப்பிய விண்வெளி முகமையின் பொது இயக்குநர் பின்வருமாறு கூறினார்: " அரிய பணி, வாழ்த்த்துகள் இசுரோ ! சந்திரயான்-3 க்கும் இந்திய மக்கள் அனைவருக்கும்!! மற்ரொரு வான்பொருளில் முதன்முறையாக மென்மையான தரையிறக்கம், புதிய தொழில்நுட்பங்களை அடைந்தமைக்கான எத்தகைய அருமையான செயல்விளக்கம். மிகச் சிறந்த செயல்; நான் மிகவும் வியப்புற்றேன்."

மாலத்தீவின் அயல் நாட்டு அமைச்சர், அப்துல்லா சாகிது தனது கிறீச்சலில் குறிப்பிட்டார்: " தெற்காசிய நாடாகவும் அண்டை நாடாகவும் உள்ள இந்தியா நிலாவின் தென்முனையில் சந்திரயான் -3 விண்கலத்தினை மென்மையாகத் தரையிறக்கிய தற்காக பெருமை கொல்கிறேன். இதுவொரு மானிட வெற்றியாகும்! புதிய தேட்டத்துக்கான புதிய சாளரங்கள் திறந்துள்ளன."

நாசாஆட்சியர் பில் நெல்சன் தன் கிறீச்சலில் கூறினார்: " வாழ்த்துகள் இசுரோ! நிலாவின் தென்முனையில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறங்கியதற்கு! வாழ்த்துகள் இந்தியா! நிலாவில் நான்காம் நாடாக வெற்றிகரமாக விண்கலத்தை மென்மையாகத் தரையிறக்கியதற்கு! உங்கள் பங்காளராக இதில் நாங்கள் கலந்துகொண்டதில் பெருமை கொள்கிறோம்".

தென்னாப்பிரிக்கக் குடியரசு தலைவர் சிறில் இராமப்போசா இவ்வாறு கூறியுள்ளார்: " பிரிக்சுக் குடும்பக் கூட்டுறுப்பினராக, இது எங்களுக்கு சிறப்பான தருணம்! உங்களுடன் இணைந்து பெருமகிழ்வெய்துகிறோம்மிந்த மாபெரும் வெற்றியில் உம்முடன் சேர்ந்து பேரின்பத்தைல் திளைக்கிறோம்."

இந்தியக் குடியரசு தலைவைவர் திரௌபதி முர்முவுக்கும் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதிக்கும் கிரெம்ளி உருசிய அரசு தலைவர் புத்தினின் செய்தியை மேற்கோலிட்டுக் காட்டியது: " நிலாத் தென்முனை அருகே இந்திய விண்கலம் சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் என் நெஞ்சமினிய வாழ்த்துகளை அன்போடு ஏற்க! விண்வெளித் தேட்டத்தில் இது மாபெரும் படிக்கட்டாகும். இது இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் அடைந்த உள்ளார்ந்த வெற்றிக்கொரு சான்றாகும்”.

கிறீச்சல் போன்ற எக்சு தளத்தில் நேப்பாள முதன்மை அமைச்சர் புழ்சுப கமால் தாகல் இவ்வாறு கூறியுள்ளார்: " இன்று நிலாவின் மேற்பரப்பில் சந்திரயான் – 3 வின்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி அறிவியல் தொழில்நுட்பத்தில் வரலாற்றுச் சாதனையைத் தெறிக்கவிட்டதற்கு சிறீ ந்ரேந்திர மோதி, இசுரோ குழுவிற்கு நான் வாழ்த்தகளைத் தெரிவித்து கொள்கிறேன் technology."

மேலும் காண்க

மேற்கோள்கள்

Tags:

சந்திரயான்-3 பின்னணிசந்திரயான்-3 நோக்கம்சந்திரயான்-3 வடிவமைப்புசந்திரயான்-3 அறிவியல் கருவிகள்சந்திரயான்-3 திட்ட விவரம்சந்திரயான்-3 திட்டச் செயல் அலுவலர்கள்சந்திரயான்-3 நிதிவளம்சந்திரயான்-3 திட்ட அறிவியல் பலன்கள்சந்திரயான்-3 நாட்டு உள்ளகத் துலங்கல்கள்சந்திரயான்-3 பன்னாட்டுத் துலங்கல்கள்சந்திரயான்-3 மேலும் காண்கசந்திரயான்-3 மேற்கோள்கள்சந்திரயான்-3இந்திய விண்வெளி ஆய்வு மையம்சந்திரயான் திட்டம்சந்திரயான்-2நிலாத் தேட்டம்பிரக்யான் தரையூர்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முருகன்இயேசுஐங்குறுநூறுஆசாரக்கோவைஇந்து சமயம்ந. பிச்சமூர்த்திஔவையார்இந்திய அரசியலமைப்புகுடும்ப அட்டைபயில்வான் ரங்கநாதன்புதுக்கவிதைஉலக ஆய்வக விலங்குகள் நாள்இளங்கோவடிகள்பெரும்பாணாற்றுப்படைஆப்பிள்பிள்ளையார்சே குவேராநாலடியார்தமிழக வரலாறுபோயர்எங்கேயும் காதல்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்நாம் தமிழர் கட்சிசிதம்பரம் நடராசர் கோயில்கார்லசு புச்திமோன்ஆண் தமிழ்ப் பெயர்கள்மீனாட்சிசுந்தரம் பிள்ளைதிரிசாஇரா. இளங்குமரன்தொல்காப்பியர்நாளந்தா பல்கலைக்கழகம்கருட புராணம்பிரசாந்த்எஸ். ஜானகிபாரிபுதுமைப்பித்தன்அடல் ஓய்வூதியத் திட்டம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கிராம சபைக் கூட்டம்ரா. பி. சேதுப்பிள்ளைபூப்புனித நீராட்டு விழாநாடகம்சதுரங்க விதிமுறைகள்சுப்மன் கில்பத்துப்பாட்டுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்முத்துலட்சுமி ரெட்டிஉடுமலைப்பேட்டைஐஞ்சிறு காப்பியங்கள்மார்கஸ் ஸ்டோய்னிஸ்உயர் இரத்த அழுத்தம்வண்ணார்ஆசியாபுதினம் (இலக்கியம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுசுப்பிரமணிய பாரதிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பல்லவர்நருடோபால் (இலக்கணம்)திராவிட முன்னேற்றக் கழகம்தற்கொலை முறைகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கமல்ஹாசன்புதிய ஏழு உலக அதிசயங்கள்நாயக்கர்போக்குவரத்துமணிமேகலை (காப்பியம்)அன்னை தெரேசாசச்சின் டெண்டுல்கர்ரெட் (2002 திரைப்படம்)தலைவி (திரைப்படம்)தமிழ்ப் புத்தாண்டுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்யானைவானிலைகொடைக்கானல்🡆 More