உருகுநிலை

திண்மமொன்றின் உருகுநிலை (Melting Point) என்பது அப்பொருள் திண்ம நிலையிலிருந்து நீர்ம (திரவ) நிலைக்கு மாறும் போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்.

உருகுநிலையில் திண்ம, நீர்ம நிலைகள் சமநிலையில் காணப்படும். ஒரு பொருளின் உருகுநிலையானது அங்கிருக்கும் அழுத்தத்தில் (pressure) தங்கியிருக்கும். எனவே உருகுநிலையானது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் வரையறுக்கப்படும். வெப்பம் ஏற்றப்படும் போது பொருளின் வெப்பநிலை உயர்ந்து கொண்டு செல்லும், எனினும் பொருள் உருகத் தொடங்கியதும் வெப்பநிலை மாற்றம் எதுவும் இல்லாது வெப்பம் உறிஞ்சப்படும். இது உருகல் மறைவெப்பம் எனப்படும். சில பொருட்கள் நீர்மநிலைக்கு (திரவநிலைக்கு) வராமலே வளிம (வாயு) நிலையை அடைவதுண்டு. இது பதங்கமாதல் என அழைக்கப்படுகின்றது.

எதிர்மாறாக, நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு மாறும்போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்போது இது உறைநிலை (Freezing Point) எனப்படும். பல பொருட்களுக்கு உருகுநிலையும், உறைநிலையும் ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக தனிமங்களில் ஒன்றான பாதரசத்தின் உருகுநிலை, உறைநிலை இரண்டுமே 234.32 கெல்வின் (−38.83 °C or −37.89 °F). ஆனாலும் சில பதார்த்தங்களுக்கு திண்ம-நீர்ம நிலைமாற்ற வெப்பநிலைகள் வேறுபடும். எடுத்துக்காட்டாக அகார் 85 °C (185 °F) யில் உருகும் ஆயினும், திண்மமாகும் வெப்பநிலை 31 °C - 40 °C (89.6 °F - 104 °F) ஆக இருக்கும்.

சில பொருட்கள் மீக்குளிர்வுக்கு உட்படுவதனால், உறைநிலையானது ஒரு தனிச் சிறப்புள்ள இயல்பாகக் கருதப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக பனிக்கட்டியின் உருகுநிலையானது 1 வளிமண்டல அழுத்தத்தில் 0 °C (32 °F, 273.15 K) ஆகும். நீரின் உறைநிலையும் அதுவேயாகும். ஆனாலும், உறைநிலைக்கு போகாமலே நீரானது சிலசமயம் மீக்குளிர்வுக்கு உட்பட்டு −42 °C (−43.6 °F, 231 K) ஐ அடையும்.

கொதிநிலையைப் போல உருகுநிலை அமுக்க மாற்றத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுவதில்லை. வளியமுக்க நிலையில் அறியப்பட்ட பொருட்களுள் மிகக்கூடிய உருகுநிலையைக் கொண்டது கரிமத்தின் ஒரு வடிவமான கிராபைட் ஆகும். இதன் உருகுநிலை 3948 கெல்வின்கள் ஆகும்.

உருகுநிலை
Kofler bench

மேற்கோள்கள்

Tags:

திண்மம்நீர்மம்பதங்கமாதல்மறைவெப்பம்வளிமம்வெப்பநிலைவெப்பம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வி. சேதுராமன்வேதாத்திரி மகரிசிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சூரியக் குடும்பம்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்அழகி (2002 திரைப்படம்)லொள்ளு சபா சேசுதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பாக்கித்தான்சூல்பை நீர்க்கட்டிகணையம்பெரும் இன அழிப்புவெந்தயம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்அரக்கோணம் மக்களவைத் தொகுதிமுருகன்பிலிருபின்இந்தோனேசியாமீனா (நடிகை)தென் சென்னை மக்களவைத் தொகுதிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ்நாடு சட்டப் பேரவைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குஆடுஜீவிதம் (திரைப்படம்)அம்பேத்கர்ஊராட்சி ஒன்றியம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்எட்டுத்தொகைதமிழக மக்களவைத் தொகுதிகள்காப்பியம்தமிழ் இலக்கியம்கள்ளர் (இனக் குழுமம்)நுரையீரல் அழற்சிகரிகால் சோழன்ரோசுமேரிவிளம்பரம்காடைக்கண்ணிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஹோலிராதிகா சரத்குமார்நாயன்மார்கண்ணதாசன்திராவிடர்முரசொலி மாறன்நன்னூல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்கயிறு இழுத்தல்பேரூராட்சிகல்லணைசிலம்பம்இந்திய ரூபாய்தினகரன் (இந்தியா)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பரிவுஜவகர்லால் நேருஈரோடு தமிழன்பன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பொது ஊழிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)பழனி முருகன் கோவில்இந்தியப் பொதுத் தேர்தல்கள்சேரர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இசுலாமிய நாட்காட்டிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இளையராஜாவேற்றுமையுருபுவினோஜ் பி. செல்வம்ம. பொ. சிவஞானம்பௌத்தம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழர் விளையாட்டுகள்தமிழ் மாதங்கள்அரபு மொழிபரிவர்த்தனை (திரைப்படம்)முத்துராமலிங்கத் தேவர்ரமலான் நோன்பு🡆 More