முசுலிம் சகோதரத்துவம்

முசுலிம் சகோதரத்துவ சமூகம் (The Society of the Muslim Brothers, அரபு மொழி: الإخوان المسلمون‎, பெரும்பாலும் சுருக்கமாக சகோதரத்துவம் அல்லது MB) உலகின் மிகவும் செல்வாக்குடைய , பெரும் இசுலாமிய இயக்கங்களில் ஒன்றாகும்.

பல அரபு நாடுகளில் பெரும் எதிர்கட்சியாக விளங்குகின்ற இச்சமூகம் எகிப்தில் 1928ஆம் ஆண்டில் இசுலாமிய அறிஞரும் பள்ளியாசிரியருமான ஹசன் அல்-பன்னாவால் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் இறுதிகட்டத்தில் முசுலிம் சகோதரத்துவத்தில் இரண்டு மில்லியன் உறுப்பினர்கள் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது. இதன் கருத்தாக்கங்கள், "இசுலாமிய ஈகைப் பணியுடன் அரசியல் செயல்முனைப்பு", அரபு உலகெங்கும் பரவியதுடன் பிற இசுலாமிய குழுக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகளவில் பயன்படுத்தப்படும் இதன் மிகவும் புகழ்பெற்ற முழக்கம் "இசுலாமே தீர்வு" என்பதாகும்.

முசுலிம் சகோதரத்துவம்
தலைவர்முகமது படீ
தொடக்கம்1928
இசுமைலியா, எகிப்து
தலைமையகம்கெய்ரோ, எகிப்து
கொள்கைஇசுலாமியவாதம்
இசுலாமிய ஒற்றுமை
இசுலாமிய கிலாபத்
குதுப்பிசம்
யூதநாடு எதிர்ப்பு
அரசியல் நிலைப்பாடுஇசுலாமிய கிலாஃபா
இணையதளம்
www.ikhwanonline.com
www.ikhwanweb.com

"முசுலிம் குடும்பம், தனிநபர்,சமூகம் ...மற்றும் நாட்டின் வாழ்வை ஒழுங்குபடுத்தும் ஒரே உய்வுத்துணையாக ..." திருக்குர்ஆன் மற்றும் சுன்னாவை ஆக்குவதே தனது கொள்கையாக சகோதரத்துவம் அறிவித்துள்ளது. இந்த இயக்கம் அலுவல்முறையாக தனது கொள்கைகளை நிலைநாட்ட வன்முறை வழிகளை எதிர்க்கிறது; இருப்பினும் இச்சமூகத்தில் முன்பு படைசார் பிரிவு இருந்ததையும் இனப்படுகொலை, குண்டுவெடிப்புகள் மற்றும் அரசியல் எதிரிகளின் கொலைகளில் இதன் உறுப்பினர்கள் ஈடுபட்டதையும் சுட்டி இதன் எதிர்ப்பாளர்கள் இதனை ஓர் வன்முறை இயக்கமாக விவரிக்கின்றனர். குறிப்பாக இந்தச் சமூகத்தை நிறுவிய ஹசன் அல்-பன்னா மற்றும் எகிப்திய பிரதமர் மகமது அன்-நுக்ராஷி பாஷா கொலை செய்யப்பட்டதைச் சுட்டுகின்றனர். அதே நேரம் ஆயுதமேந்திய ஜிகாத்தை விட மக்களாட்சித் தேர்தல்களை ஆதரிப்பதற்காக இந்த இயக்கத்தை அல் காயிதா எதிர்க்கிறது.

முசுலிம் சகோதரத்துவம் துவக்கத்தில் இசுலாமை கற்பித்தும் கல்வி புகட்டியும் மருத்துவமனைகளை நிறுவியும் வணிக வளாகங்களை நிறுவியும் ஓர் சமய சமூக அமைப்பாக விளங்கியது. செல்வாக்குப் பெறத் தொடங்கியவுடன் 1936இல் எகிப்தில் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்தது. இந்த காலகட்டத்தில் சகோதரத்துவ உறுப்பினர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முதல் அரபு-இசுரேல் போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எகிப்திய அரசு இச்சமூகத்தை கலைத்து இதன் உறுப்பினர்களைக் கைது செய்தது. 1952ஆம் ஆண்டு நிகழ்ந்த எகிப்து புரட்சியை ஆதரித்தது. ஆனால் எகிப்தின் குடியரசுத் தலைவரைக் கொலை செய்ய முயன்றதால் மீண்டும் தடை செய்யப்பட்டது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக சிரியாவில், முசுலிம் சகோதரத்துவம் தடை செய்யப்பட்டுள்ளது.

முசுலிம் சகோதரத்துவ உறுப்பினர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைச் சமூகத்திற்கு வழங்க கடமைப்பட்டுள்ளனர். இந்தப் பங்களிப்புகளில் சவூதி அரேபியா மற்றும் பிற எண்ணெய்-வள நாடுகளில் பணியாற்றும் உறுப்பினர்களிடமிருந்து பெறப்படுவதும் அடக்கம் .

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

    எகிப்து
    மற்ற கிளைகள்

Tags:

அரபு மொழிஇரண்டாம் உலகப் போர்எகிப்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவவாக்கியர்மாடுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழச்சி தங்கப்பாண்டியன்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்ஜன கண மனவைப்புத்தொகை (தேர்தல்)முடக்கு வாதம்தைப்பொங்கல்பிலிருபின்விநாயகர் அகவல்சங்க காலம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சித்தார்த்வாதுமைக் கொட்டைஆடுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பெரிய வியாழன்கணையம்கணியன் பூங்குன்றனார்மண்ணீரல்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)பாரிபூரான்சட் யிபிடிகுமரி அனந்தன்இராவண காவியம்நபிரமலான்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதேர்தல் நடத்தை நெறிகள்திருநங்கைஇரண்டாம் உலகப் போர்கருணாநிதி குடும்பம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மு. கருணாநிதிதேர்தல் பத்திரம் (இந்தியா)இசுலாத்தின் ஐந்து தூண்கள்எயிட்சுகுற்றாலக் குறவஞ்சிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கூகுள்தமிழ்நாடு சட்டப் பேரவைமருது பாண்டியர்வியாழன் (கோள்)தனுசு (சோதிடம்)தமிழ் தேசம் (திரைப்படம்)விசயகாந்துநிலக்கடலைகார்லசு புச்திமோன்வேதம்வினைத்தொகைபுதுமைப்பித்தன்சுயமரியாதை இயக்கம்திருக்குர்ஆன்ராசாத்தி அம்மாள்அயோத்தி தாசர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தேவாரம்அறுபடைவீடுகள்நேர்பாலீர்ப்பு பெண்ஐ (திரைப்படம்)நீர் மாசுபாடுமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்மதுரைக் காஞ்சிகுமரகுருபரர்முதலாம் உலகப் போர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்நான்மணிக்கடிகைசுந்தரமூர்த்தி நாயனார்ஆ. ராசாசிதம்பரம் மக்களவைத் தொகுதிசாரைப்பாம்புமாசாணியம்மன் கோயில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)பூலித்தேவன்ராதிகா சரத்குமார்🡆 More