மாரத்தான்

மாரத்தான் என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும்.

இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு 42.195 கிலோமீட்டர் ஆகும். இப்போட்டி 1896ஆம் ஆண்டிலிருந்தே ஒலிம்பிக் விளையாட்டாக இருந்தபோதும் 1921ஆம் ஆண்டில் தான் விதிமுறைகள் சீர்தரப்படுத்தப்பட்டன. தடகள விளையாட்டுப் போட்டிகள் தவிர உலகின் பல நகரங்களில் 800க்கும் கூடுதலான, தீவிர விளையாட்டாளர்கள் அல்லாது உடல்நலம் பேணும் பொதுமக்களும் பங்கெடுக்கும், மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன.பெரிய போட்டிகளில் ஆயிரக்கணக்கானவர் பங்கேற்பதும் உண்டு. முழுமையான தொலைவை ஓட முடியாதவர்களுக்காக அரை மாரத்தான் போட்டிகளும் உடன் நடைபெறும்.

தடகள விளையாட்டு
மராத்தான்
மாரத்தான்
பெர்லின் மராத்தான் போட்டி, 2007
ஆண்கள் சாதனைகள்
உலகச் சாதனைகென்யா எலியட் கிப்சோக்கி 2:01:39 (2018)
ஒலிம்பிக் சாதனைகென்யா சாமவேல் வான்சிரு 2:06:32 (2008)
பெண்கள் சாதனைகள்
உலகச் சாதனைகென்யா பிரிஜிட் கோசுகிய் 2:14:04 (2019)
ஒலிம்பிக் சாதனைஎதியோப்பியா திக்கி ஜெலானா 2:23:07 (2012)
மாரத்தான்
அண்மைய கால மாரத்தான் ஓட்ட வீரர்கள்

வரலாறு

மாரத்தான் 
பண்டைய கிரேக்கத்தில் ஓட்ட வீரர்கள்
மாரத்தான் 
1896 ஒலிம்பிக் போட்டி மாரத்தான் ஓட்ட வீரர்கள்

கி.மு. 490ல் நடந்த மாரத்தான் போரில் பாரசீகர்களை தோற்கடித்த வெற்றிச் செய்தியை தெரிவிக்க, பிலிப்பிடீசு என்ற கிரேக்க வீரன், மாரத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு, இடையில் எங்கும் நிக்காமல் தொடர்ந்து ஓடிச் சென்றான் என்றும் செய்தியைத் தெரிவித்த சிறிது நேரத்தில் மயங்கிச் செத்தான் என்றும் கூறப்படுகிறது. எனினும், இத்தகவலை உண்மையென உறுதிப்படுத்த தகவல் ஏதும் இல்லை. எரோடோட்டசு என்ற கிரேக்க வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, பெய்டிபைட்ஸ் ஏதென்சிலிருந்து ஸ்பார்டாவுக்கு ஓடிய ஒரு தூதுவன் ஆவார். பெய்டிபைட்ஸ் மாரத்தானுக்கும் ஏதென்சுக்கும் இடையில் ஓடினார் என்பது பிற்கால எழுத்தாளர்களால் புனையப்பட்டது என்றும் கருத வாய்ப்பிருக்கிறது. இது போன்ற குறிப்பு கி. பி. முதலாம் நூற்றாண்டில் புளூடார்ச்ச் என்பவரால் எழுதப்பட்ட "ஒன் தி குளோரி ஒவ் ஏதென்ஸ்" On the Glory of Athens என்ற நூலில் காணக்கிடைக்கிறது. அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் கணிப்புப்படி மாரத்தான் போர்க்களத்தில் இருந்து ஏதென்சுக்கு உள்ள தொலைவு 34.5 கி.மீ அல்லது 21.4 மைல்கள் ஆகும்.

மாரத்தான் போட்டிகள் முதன்முதலில் 1896 நவீன ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான மாரத்தான் போட்டி 1984 கோடை கால விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொலைவு

தொடக்க காலத்தில், மாரத்தான் போட்டிகளின் ஓட்டத் தொலைவு தீர்மானிக்கப்படவில்லை. அனைத்துப் போட்டியாளர்களும் ஒரே தடத்தில் ஓடுகிறார்கள் என்பது தான் முக்கியமாக கருதப்பட்டது. தொடக்க கால ஒலிம்பிக் மாரத்தான் போட்டிகளின் ஓட்டத் தொலைவு, போட்டி நடக்கும் இடத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருந்தது.

ஆண்டு தொலைவு (கி. மீ) தொலைவு (மைல்)
1896 40 24.85
1900 40.26 25.02
1904 40 24.85
1906 41.86 26.01
1908 42.195 26.22
1912 40.2 24.98
1920 42.75 26.56
1924 முதல் 42.195 26.22

தற்போது உறுதியாக கடைப்பிடிக்கப்படும் 42.195 கி.மீ போட்டித் தொலைவு, 1921ஆம் ஆண்டில் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் என்ற அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

இதனையும் காண்க

வெளியிணைப்புகள்

Tags:

மாரத்தான் வரலாறுமாரத்தான் தொலைவுமாரத்தான் இதனையும் காண்கமாரத்தான் வெளியிணைப்புகள்மாரத்தான்ஒலிம்பிக் விளையாட்டுக்கள்கிலோமீட்டர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்டம்நாடோடிப் பாட்டுக்காரன்திருவண்ணாமலைபாட்டாளி மக்கள் கட்சிபூலித்தேவன்ரயத்துவாரி நிலவரி முறைநான் வாழவைப்பேன்பிரதமைஐங்குறுநூறுஇரட்டைக்கிளவிரோசுமேரிஔவையார்தாவரம்வினோத் காம்ப்ளிதமிழ்நாடுகொன்றை வேந்தன்எலுமிச்சைமயங்கொலிச் சொற்கள்குதிரைவேலு நாச்சியார்அபினிதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்மழைநீர் சேகரிப்புதீரன் சின்னமலைஇந்தியாடி. என். ஏ.முதலாம் உலகப் போர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஆண்டு வட்டம் அட்டவணைதற்கொலை முறைகள்திருக்குறள்யாதவர்தாராபாரதிகலித்தொகைஅறுபடைவீடுகள்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வேலுப்பிள்ளை பிரபாகரன்விபுலாநந்தர்விண்ணைத்தாண்டி வருவாயாமீனம்நெய்தல் (திணை)மருதமலை (திரைப்படம்)தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்பால்வினை நோய்கள்தமிழ்வாணிதாசன்புதினம் (இலக்கியம்)பவன் கல்யாண்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்ஜீரோ (2016 திரைப்படம்)இராமலிங்க அடிகள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கன்னத்தில் முத்தமிட்டால்மாணிக்கவாசகர்சாய் சுதர்சன்முல்லைப்பாட்டுதமிழர் கலைகள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பிரசாந்த்கூத்தாண்டவர் திருவிழாநீர் மாசுபாடுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்உடுமலை நாராயணகவிமதுரைக்காஞ்சிசிவம் துபேஇடைச்சொல்நிறைவுப் போட்டி (பொருளியல்)சேமிப்புசித்தர்தங்கம்ஆங்கிலம்ராஜேஸ் தாஸ்திருமலை நாயக்கர் அரண்மனைகடவுள்நெடுநல்வாடைஏற்காடுகுகேஷ்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)🡆 More