பிரிக்ஸ்

பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும்.

பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்க ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும். இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகி வருகிற நாடுகளாகும். 2012ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$13.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்

பிரிக்ஸ்
BRICS
பிரேசில், உருசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா
சுருக்கம்BRICS
முன்னோர்பிரிக் நாடுகள்
உருவாக்கம்செப்டம்பர் 2006 (ஐநா பொதுச்சபையின் 61-வது கூட்டத்தொடர்)
1-ஆவது உச்சிமாநாடு: 16 சூன் 2009
நிறுவனர்ஐநா பொதுச்சபை 61-வது அமர்வு:
பிரேசில் செல்சோ அமோரிம்
உருசியா செர்கே லாவ்ரொவ்
இந்தியா மன்மோகன் சிங்
சீனா லி சாவோசிங்
உருசியா விளாதிமிர் பூட்டின்
சீனா கூ சிங்தாவ்
1-வது உச்சிமாநாடு:
பிரேசில் லூலா த சில்வா
உருசியா திமீத்ரி மெத்வேதெவ்
இந்தியா மன்மோகன் சிங்
சீனா கூ சிங்தாவ்
நிறுவப்பட்ட இடம்ஐநா தலைமையகம், நியூயார்க்கு நகரம் (ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 61-ஆவது அமர்வு)
எக்கத்தரீன்பூர்க் (1-வது பிரிக் உச்சிமாநாடு)
வகைசர்வதேச அமைப்பு
நோக்கம்அரசியல்
தலைமையகம்பிரிக்சு டவர்
தலைமையகம்
துறைகள்பன்னாட்டு அரசியல்
உறுப்பினர்கள் (2022)
5
நிதியுதவிஉறுப்பு நாடுகள்
முன்னாள் பெயர்
பிரிக் நாடுகள்

வரலாறு

2006 செப்டம்பரில் பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்ட சந்திப்பு நடந்தது. அதன்பிறகு 2008 மே 16ல் ரஷ்யாவில் உயர்நிலை அரசியல் சந்திப்பு நடந்தது. நான்கு நாடுகளின் தலைவர்கள் லுலா ட சில்வா(பிரேசில்), திமித்ரி மெட்வெடெவ்(ரஷ்யா) மன்மோகன் சிங்(இந்தியா), மற்றும் கூ சிங்தாவ்(சீனா) பங்கேற்க, ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் முதல் மாநாடு 2009 ஜூன் 16ல் தொடங்கியது. உலக பொருளாதர நிலை, நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு முதலியவை பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.

2010 டிசம்பர் 24ல் தென்னாப்பிரிக்கா முறைப்படி பிரிக் கூட்டணியுடன் சேர்ந்தது அதனையடுத்து தென்னாப்பிரிக்காவை குறிக்க "எஸ்" என்ற ஆங்கில எழுத்து சேர்ந்து பிரிக்ஸ் என பெயரிட்டப்பட்டது. பிரிக்ஸ் கூட்டணியாக இருந்த இந்நாடுகள் 2011ல் சேர்ந்து பிரிக்ஸ் என கூட்டமைப்பாக மாற்றியது.

2014 பிரிக்ஸ் மாநாட்டில் $100 பில்லியன் மூதலீட்டில் பிரிக்ஸ் டெவலப்மெண்ட் வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சாங்காய் சீனா தலைமையிடமாக கொண்டு இயங்கும்.

பிரிக்ஸ் மாநாடுகள்

2009லிருந்து ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றன. ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011ல் நடைபெற்றது. நான்காவது மாநாடு மார்ச்சு 29, 2012 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இதில் நாட்டின் குடிமைப் பணிக்காக தேவைப்படும் அணு உற்பத்தியை ஈரான் நாடு தொடரவும், பிரிக் நாடுகளுக்கான பரிவர்த்தனைகள் அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே நடத்திக்கொள்ளவும், பிரிக் நாடுகளுக்கான வங்கி முகமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாடு பங்குகொண்டோர் நாள் நடத்திய நாடு தலைமையேற்றவர் நடைபெற்ற இடம்
முதல் மாநாடு பிரிக் ஜூன் 16, 2009 உருசியா திமித்ரி மெட்வெடெவ் எகடரின்பர்க்
இரண்டாம் மாநாடு பிரிக் ஏப்ரல் 16, 2010 பிரேசில் லுலா ட சில்வா பிரசிலியா
மூன்றாம் மாநாடு பிரிக்ஸ் ஏப்ரல் 14, 2011 சீன மக்கள் குடியரசு கூ சிங்தாவ் சான்யா
நான்காம் மாநாடு பிரிக்ஸ் மார்ச் 29, 2012 இந்தியா மன்மோகன் சிங் புது தில்லி
ஐந்தாம் மாநாடு பிரிக்ஸ் 26-27 மார்ச், 2013 தென் ஆப்பிரிக்கா யாக்கோபு சூமா டர்பன்
ஆறாவது மாநாடு பிரிக்ஸ் ஜுலை 15-17, 2014 பிரேசில் டில்மா ரூசெஃப் போர்த்தலேசா

உறுப்பு நாடுகள்

உறுப்பு நாடுகளின் பட்டியல்:

உறுப்பு நாடு தலைவர் 2011 மொத்த உள்நாட்டு உற்பத்தி
$அமெரிக்க டால்ர்
2011 மனித வளர்ச்சிச் சுட்டெண்(HDI)
பிரேசில் பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெஃப் 12,916 11,845 0.718
உருசியா ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் 13,235 16,687 0.755
இந்தியா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 1,527 3,703 0.547
சீன மக்கள் குடியரசு சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி கூ சிங்தாவ் 5,183 8,394 0.687
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்க ஜனாதிபதி யாக்கோபு சூமா 8,342 10,977 0.619

நாடுகளின் ஒப்பீடு

பிரிக்ஸ்  பிரேசில் பிரிக்ஸ்  ரஷ்யா பிரிக்ஸ்  இந்தியா பிரிக்ஸ்  சீனா பிரிக்ஸ்  தென்னாப்பிரிக்கா
மக்கள் தொகை 190,732,694 143,030,106 1,210,193,422 1,347,350,000 49,991,300
பரப்பளவு 8,514,877 km² (3,287,597 sq. mi) 17,075,400 km² (6,592,800 sq. mi) 3,287,263 km² (1,269,210 sq. mi) 9,596,961 km² (3,705,407 sq. mi) 1,221,037 km² (471,445 sq. mi)
மக்கள் தொகை நெருக்கம் 22/km² (57/sq. mi) 8.3/km² (21.5/sq. mi) 394/km² (943/sq. mi) 140/km² (363/sq. mi) 41/km² (106/sq. mi)
தலை நகரம் பிரசிலியா மாஸ்கோ புது தில்லி பெய்ஜிங் பிரிட்டோரியா, ப்லோம்ஃபோடேன், கேப் டவுன்
பெரிய நகரம் சாவோ பாவுலோ – 11,316,149 (19,889,559 Metro) மாஸ்கோ – 11,551,930(15,000,000 Metro) மும்பை – 13,922,125 (21,347,412 Metro) சாங்காய் – 17,836,133 (16,650,000 Metro) ஜோகானஸ்பேர்க் – 1,009,035(3,888,180 Metro)
அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி நாடுமுழுக்க உருசிய மொழி; இதர பகுதிகளின் 27 துணை மொழிகள் இந்தி and மற்றும்ஆங்கிலம் உட்பட 22 மொழிகள் சீனம் ஆபிரிக்கான மொழி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகள்
மொத்த தேசிய உற்பத்தி அமெரிக்க டாலர்2.076 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்1.479 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்1.954 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்5.767 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்0.363 ட்ரில்லியன்
மொத்த தேசிய உற்பத்தி(பிபிபி) அமெரிக்க டாலர்2.185 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்2.276 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்4.589 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்9.058 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்0.528 ட்ரில்லியன்
இராணுவ செலவுகள் $33.5 பில்லியன் $52.5 பில்லியன் $41.3 பில்லியன் $114.3 பில்லியன் $3.7 பில்லியன்

†'இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மற்றும் துணை மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், மாநிலங்களின் அலுவல் மொழிகளை மாநிலங்களே தீமானிக்கும்; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியாவிற்கு தேசிய மொழியில்லை.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பிரிக்ஸ் வரலாறுபிரிக்ஸ் மாநாடுகள்பிரிக்ஸ் உறுப்பு நாடுகள்பிரிக்ஸ் நாடுகளின் ஒப்பீடுபிரிக்ஸ் இவற்றையும் பார்க்கபிரிக்ஸ் மேற்கோள்கள்பிரிக்ஸ் வெளி இணைப்புகள்பிரிக்ஸ்இந்தியாஉருசியாசீன மக்கள் குடியரசுதென்னாப்பிரிக்காபிரிக்பிரேசில்மொத்த உள்நாட்டு உற்பத்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரட்டைக்கிளவிமகரம்ஏப்ரல் 27காடுபுணர்ச்சி (இலக்கணம்)கில்லி (திரைப்படம்)பஞ்சாப் கிங்ஸ்செங்குந்தர்விபுலாநந்தர்கட்டபொம்மன்பதிற்றுப்பத்துசீனாவாற்கோதுமைசூர்யா (நடிகர்)தமிழர் பண்பாடுமண் பானைராஜா ராணி (1956 திரைப்படம்)மலைபடுகடாம்யானைசுரதாகுருதி வகைதிராவிட மொழிக் குடும்பம்நேர்பாலீர்ப்பு பெண்ஆடை (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்ரத்னம் (திரைப்படம்)கிளைமொழிகள்சிலம்பரசன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்குப்தப் பேரரசுகுண்டலகேசிமூலிகைகள் பட்டியல்புறப்பொருள் வெண்பாமாலைபல்லவர்பிரசாந்த்செக் மொழிரயத்துவாரி நிலவரி முறைகுறவஞ்சிவெண்குருதியணுகர்மாமுல்லை (திணை)பத்து தலதிருநாள் (திரைப்படம்)பாசிசம்மார்கழி நோன்புஇலங்கை தேசிய காங்கிரஸ்வேலுப்பிள்ளை பிரபாகரன்கல்லணைபிரேமம் (திரைப்படம்)பிரகாஷ் ராஜ்மயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திருநெல்வேலிசெண்டிமீட்டர்ராதிகா சரத்குமார்யாவரும் நலம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்முதற் பக்கம்சின்ன வீடுசிவாஜி (பேரரசர்)இன்ஸ்ட்டாகிராம்முத்தொள்ளாயிரம்இந்திரா காந்திவிராட் கோலிஐங்குறுநூறுநவக்கிரகம்கடவுள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)கழுகுநெருப்புஇராமலிங்க அடிகள்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழ் தேசம் (திரைப்படம்)இணையம்விநாயகர் அகவல்சப்தகன்னியர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)🡆 More