பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (school) என்பது ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு, போதுமான கற்றல் இடம், கற்பித்தல் சூழலுடன் கூடிய கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடங்களைக் குறிப்பதாகும்.

பெரும்பான்மையான நாடுகளில் முறையான கல்வி முறைகள் உள்ளன, இது சில இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாரின் கல்விக் கூடங்களின் மூலம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளிகளுக்கான பெயர்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன . ஆனால் பரவலாக சிறு குழந்தைகளுக்கான தொடக்கப் பள்ளியும், ஆரம்பக் கல்வியை முடித்த இளைஞர்களுக்கான இடைநிலைப் பள்ளியும் இதில் அடங்கும். உயர் கல்வி கற்பிக்கப்படும் ஒரு நிறுவனம் பொதுவாக கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது.

பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்

மழலையர் பள்ளி அல்லது பாலர் பள்ளிகள் பரவலாக இளம் குழந்தைகளுக்கு (பொதுவாக 3 முதல் 5 வயது வரை) சில பள்ளிப் படிப்புகளை வழங்குகிறது. பல்கலைக்கழகம், தொழிற்கல்விப் பள்ளி, கல்லூரி ஆகியவை மேல்நிலைப் பள்ளிக்குப் பிறகு கல்வி கற்க வகை செய்கிறது. பொருளாதாரம் அல்லது நடனம் போன்ற ஒரு குறிப்பிட்ட துறைகளைக் கற்பிக்கவும் சில பள்ளிகள் இருக்கலாம்.மாற்றுப் பள்ளிகளானது பாரம்பரியமற்ற பாடத்திட்டத்தையும் முறைகளையும் வழங்கலாம்.

அரசு சாரா பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை, கூடுதலான கல்வித் தேவைகளை வழங்குவதற்கு உதவுகிறது. பிற தனியார் பள்ளிகள் மத ரீதியாகவும் இருக்கலாம், அதாவது கிறிஸ்தவ பள்ளிகள், குருகுல (இந்து பள்ளிகள்) மதராசா (அரபு பள்ளிகள்) ஹவ்சாஸ் (ஷியா முஸ்லீம் பள்ளிகள்) யெஷிவாஸ் (யூத பள்ளிகள்) , பிற பள்ளிகள் மாணவர்களது தனித் வளர்க்க முற்படுகின்றன.

சொற்பிறப்பியல்

பள்ளி என்ற சொல் கிரேக்கத்தின் σχολή (scholē′) என்பதிலிருந்து பெறப்பட்டது, இது முதலில் "ஓய்வு" என்றும் "ஓய்வு நேரம் பயன்படுத்தப்படும் இடம்" என்றும் பொருள்பட்டது.பின்னர், "விரிவுரைகள் வழங்குவதற்கான ஒரு குழு, σχολή என்றானது".

பெயர்க்காரணம்

தமிழில் பள்ளிக்கூடம் என்ற வார்த்தையின் பெயர்க்காரணத்தை தொ. பரமசிவன் விளக்கியுள்ளார். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் குருகுலத்திற்கு செல்ல முடியாது. சமண, பௌத்த மதங்கள் வளர்ந்தோங்கிய காலத்தில் துறவிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தங்களது படுக்கை இருக்கும் பகுதிக்கு கல்வி கற்க குழந்தைகளை அனுப்புமாறு கோரினர். தமிழில் படுக்கும் இடத்தைத் தான் பள்ளி என்று அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் நாங்கள் பள்ளிக்குப்போகிறோம்: அதாவது, சமண, பௌத்த படுகைகளுக்கு செல்கிறோம் என்று சொன்னதன் வழியாகவே தமிழில் கல்வி கற்கும் இடம் பள்ளி என்றானது என்கிறார் அவர்.

இந்தியாவில் பள்ளிப்படிப்பு

இந்தியாவில் கீழ்நிலைப் பாலர் வகுப்பு (Lower Kinder Garden), மேல்நிலைப் பாலர் வகுப்பு (Upper Kinder Garden), மற்றும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளி, 6 முதல் 8 வகுப்பு வரை நடுநிலைப்பள்ளி, 9வது மற்றும் 10வது வகுப்புகள் உயர்நிலைப்பள்ளி, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் மேல்நிலைப்பள்ளி என 14 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகின்றது.

இலங்கையில் பள்ளிப்படிப்பு

இலங்கையில் தரம் 1 முதல் தரம் 13 வரை பாடசாலைக் கல்வி போதிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பள்ளிக்கூடம் சொற்பிறப்பியல்பள்ளிக்கூடம் பெயர்க்காரணம்பள்ளிக்கூடம் இந்தியாவில் பள்ளிப்படிப்புபள்ளிக்கூடம் இலங்கையில் பள்ளிப்படிப்புபள்ளிக்கூடம் மேற்கோள்கள்பள்ளிக்கூடம் வெளி இணைப்புகள்பள்ளிக்கூடம்இடைநிலைக் கல்விகட்டாயக் கல்விகற்றல் இடம்கல்லூரிகல்விகல்வி நிறுவனக் கட்டிடக்கலைகல்வி நிறுவனம்தொடக்கப் பள்ளிபல்கலைக்கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சார்பெழுத்துகருப்பையுகம்கார்லசு புச்திமோன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சிறுதானியம்வெப்பநிலைஆளுமைகொல்லி மலைவினோஜ் பி. செல்வம்திருக்குர்ஆன்தாய்ப்பாலூட்டல்நயன்தாராமு. கருணாநிதிமலைபடுகடாம்தொடை (யாப்பிலக்கணம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கா. ந. அண்ணாதுரைமே நாள்பர்வத மலைபுனித யோசேப்புமூவேந்தர்இரட்டைக்கிளவிஸ்ரீலீலாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்வானிலையானையின் தமிழ்ப்பெயர்கள்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)போயர்புவியிடங்காட்டிபறவைசூல்பை நீர்க்கட்டிமனோன்மணீயம்மதுரை வீரன்கலாநிதி மாறன்தற்கொலை முறைகள்அகரவரிசைஇந்திய அரசியலமைப்புகோவிட்-19 பெருந்தொற்றுபாண்டியர்தமிழ் மன்னர்களின் பட்டியல்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்கைப்பந்தாட்டம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கல்லீரல்இதயம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ஈ. வெ. இராமசாமிஅய்யா வைகுண்டர்தேசிக விநாயகம் பிள்ளைமுதல் மரியாதைபகவத் கீதைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு காவல்துறைஇந்திய தேசிய சின்னங்கள்அரவான்தமிழ்விடு தூதுநாம் தமிழர் கட்சிசெக்ஸ் டேப்பழமுதிர்சோலை முருகன் கோயில்சமுத்திரக்கனிதொல்காப்பியம்நீதி இலக்கியம்கஞ்சாஇந்திய ரிசர்வ் வங்கிவடிவேலு (நடிகர்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ஐங்குறுநூறு - மருதம்தன்யா இரவிச்சந்திரன்பழனி முருகன் கோவில்பனிக்குட நீர்உயிர்மெய் எழுத்துகள்தமிழ்நாடு சட்டப் பேரவைஐம்பூதங்கள்பெண்ணியம்தொலைக்காட்சிகேரளம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்🡆 More