கான்சுடன்டீன் செர்னென்கோ

கான்சுடன்டீன் உசுத்தீனொவிச் செர்னென்கோ (Konstantin Ustinovich Chernenko; உருசியம்: Константи́н Усти́нович Черне́нко; உக்ரைனியன்: Костянти́н Усти́нович Черне́нко; 24 செப்டம்பர் 1911 – 10 மார்ச் 1985) சோவியத் அரசியல்வாதியும், சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் 7-ஆவது பொதுச் செயலாளரும் ஆவார்.

இவர் 1984 பெப்ரவரி 13 முதல் 1985 மார்ச் 10 இல் இறக்கும் வரை சோவியத் ஒன்றியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

கான்சுடன்டீன் செர்னென்கோ
Konstantin Chernenko
Константин Черненко
கான்சுடன்டீன் செர்னென்கோ
1984 இல் செர்னென்கோ
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
13 பெப்ரவரி 1984 – 10 மார்ச் 1985
முன்னையவர்யூரி அந்திரோப்பொவ்
பின்னவர்மிக்கைல் கொர்பச்சோவ்
சுப்ரீம் சோவியத் செயற்குழுத் தலைவர்
பதவியில்
11 ஏப்ரல் 1984 – 10 மார்ச் 1985
முன்னையவர்யூரி அந்திரோப்பொவ்
வசீலி குசுனித்சோவ் (பதில்)
பின்னவர்அந்திரேய் குரோமிக்கோ
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் இரண்டாம் செயலாளர்
பதவியில்
10 நவம்பர் 1982 – 9 பெப்ரவரி 1984
முன்னையவர்யூரி அந்திரோப்பொவ்
பின்னவர்மிக்கைல் கொர்பச்சோவ் (நடைமுறைப்படி)
பதவியில்
25 சனவரி 1982 – 24 மே 1982
முன்னையவர்மிக்கைல் சூசுலொவ்
பின்னவர்யூரி அந்திரோப்பொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கொன்ஸ்டன்டீன் உசுத்தீனொவிச் செர்னென்கோ

(1911-09-24)24 செப்டம்பர் 1911
பல்சாயா தெசு, யெனிசெயிசுக், உருசியப் பேரரசு
இறப்பு10 மார்ச்சு 1985(1985-03-10) (அகவை 73)
மாஸ்கோ, உருசியா, சோவியத் ஒன்றியம்
காரணம் of deathஎம்விசிமா, குருதித்தேக்க இதயத் திறனிழப்பு
இளைப்பாறுமிடம்கிரெம்லின்
தேசியம்உக்ரைனியர்
அரசியல் கட்சிசோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1931-1985)
துணைவர்(s)பைனா வசீலியெவ்னா செர்னென்கோ,
அன்னா திமீத்ரியெவ்னா லியூபீமொவா (தி. 1944)
பிள்ளைகள்4
விருதுகள்
பட்டியலைப் பார்க்க
  • சோசலிச தொழிலாளர் நாயகன் சோசலிச தொழிலாளர் நாயகன் சோசலிச தொழிலாளர் நாயகன்
    லெனினின் ஆணை லெனினின் ஆணை லெனினின் ஆணை லெனினின் ஆணை
    தொழிலாளர் சிவப்புப் பதாகையின் ஆணை தொழிலாளர் சிவப்புப் பதாகையின் ஆணை தொழிலாளர் சிவப்புப் பதாகையின் ஆணை கான்சுடன்டீன் செர்னென்கோ
    கான்சுடன்டீன் செர்னென்கோ கான்சுடன்டீன் செர்னென்கோ கான்சுடன்டீன் செர்னென்கோ
    கான்சுடன்டீன் செர்னென்கோ
கையெழுத்துகான்சுடன்டீன் செர்னென்கோ
Military service
பற்றிணைப்புசோவியத் ஒன்றியம்
கிளை/சேவைசோவியத் ஆயுதப்படை
சேவை ஆண்டுகள்1930–1933
உறுப்புரிமை

ஏனைய அரசியல் பதவிகள்
சோவியத் ஒன்றியத்தின் தலைவர்

சைபீரியாவைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த செர்னென்கோ, 1929-இல் சோவியத் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் கழகமான கொம்சோமால் அமைப்பில் சேர்ந்தார். 1931 இல் கட்சியின் முழு உறுப்பினரானார். தொடர்ந்து பல கொள்கைப்பரப்புப் பதவிகளை வகித்த பிறகு, 1948 இல் அவர் கொள்கைப் பரப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மால்தாவியாவில், இலியோனீது பிரெசுனேவின் கீழ் பணியாற்றினார். பிரெசுனேவ் 1964 இல் கட்சியின் முதல் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, செர்னென்கோ மத்திய குழுப் பொதுத் துறையின் தலைவராக உயர்ந்து, பொலித்பியூரோவிற்கான நிகழ்ச்சி நிரலை அமைப்பதற்கும் மத்திய குழு ஆணைகளை வரைவதற்கும் பொறுப்பானார். 1971 இல் செர்னென்கோ மத்திய குழுவின் முழு உறுப்பினராகவும், பின்னர் 1978 இல் பொலித்பியூரோவின் முழு உறுப்பினராகவும் ஆனார்.

பெரெசுனேவும் அவருக்கு அடுத்து பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற அந்திரோப்பொவும் முறையே 1982, 1984 இல் இறந்த பின்னர், செர்னென்கோ பிப்ரவரி 1984 இல் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 1984 இல் உச்ச சோவியத் செயலகத்தின் தலைவரானார். ஆனாலும், விரைவான உடல்நலக் குறைவு காரணமாக, செர்னென்கோ தனது அதிகாரப்பூர்வக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. 13 மாதங்கள் மட்டுமே நாட்டை வழிநடத்திய பின்னர் மார்ச் 1985 இல் இறந்தார். அவரை அடுத்து மிக்கைல் கொர்பச்சோவ் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

செர்னென்கோவுக்கு அவரது முதல் மனைவியான பைனா வாசிலியேவ்னாவுக்கு ஆல்பர்ட் என்ற மகன் உள்ளார். 1944-இல் அவரை மணந்த அவரது இரண்டாவது மனைவியான அன்னா திமீத்ரியெவ்னா லியூபிமோவாவுடன், அவருக்கு யெலீனா, வேரா என்ற இரண்டு மகள்களும், விளாதிமிர் என்ற மகனும் இருந்தனர். 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காப்பக ஆவணங்களின்படி, செர்னென்கோவுக்கு இன்னும் பல மனைவிகள் இருந்தனர், அவர்களுடன் இன்னும் பல குழந்தைகள் இருந்தனர்; 1940களில் செர்னென்கோவின் தொழில் வளர்ச்சி குறைவதற்கு இந்தச் சூழ்நிலை காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கான்சுடன்டீன் செர்னென்கோ தனிப்பட்ட வாழ்க்கைகான்சுடன்டீன் செர்னென்கோ குறிப்புகள்கான்சுடன்டீன் செர்னென்கோ மேற்கோள்கள்கான்சுடன்டீன் செர்னென்கோ வெளி இணைப்புகள்கான்சுடன்டீன் செர்னென்கோஉக்குரேனிய மொழிஉருசியம்சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சிசோவியத் ஒன்றியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பித்தப்பைஉணவுதங்க மகன் (1983 திரைப்படம்)இந்தியன் பிரீமியர் லீக்வைரமுத்துகா. ந. அண்ணாதுரைமருதநாயகம்நீக்ரோநற்றிணைதலைவி (திரைப்படம்)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்புணர்ச்சி (இலக்கணம்)விருத்தாச்சலம்வணிகம்மூலம் (நோய்)ரத்னம் (திரைப்படம்)விஜயநகரப் பேரரசுசூரியக் குடும்பம்காசோலைஐங்குறுநூறுஅய்யா வைகுண்டர்அகமுடையார்குணங்குடி மஸ்தான் சாகிபுஎலுமிச்சைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்குண்டலகேசிகற்றாழைசினேகாபிள்ளையார்விலங்குபோதைப்பொருள்அமலாக்க இயக்குனரகம்மதுரை நாயக்கர்செப்புஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்விஜய் வர்மாபால் (இலக்கணம்)சட் யிபிடிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்சிவன்இட்லர்இந்தியன் (1996 திரைப்படம்)வளையாபதிதிரவ நைட்ரஜன்போக்குவரத்துதமிழ் இலக்கியப் பட்டியல்அனுஷம் (பஞ்சாங்கம்)கழுகுநோய்சங்க காலம்தங்கம்வண்ணார்மெய்யெழுத்துபரணி (இலக்கியம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தாய்ப்பாலூட்டல்போயர்கபிலர்மூவேந்தர்பெரியாழ்வார்புதிய ஏழு உலக அதிசயங்கள்நேர்பாலீர்ப்பு பெண்ஐம்பெருங் காப்பியங்கள்பஞ்சபூதத் தலங்கள்பறவைதமிழ் விக்கிப்பீடியாதமிழ்நெல்பத்து தலகருத்துபரிபாடல்இடிமழைகாமராசர்மீனா (நடிகை)விண்ணைத்தாண்டி வருவாயாவைர நெஞ்சம்மண்ணீரல்சிற்பி பாலசுப்ரமணியம்🡆 More