மொழியியல் ஒலியியல்

மொழியியலில் ஒலியியல் (Phonetics) என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் துறை ஆகும்.

மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்

இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இத்துறை, பேச்சு ஒலிகளின் இயற்பியல் இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் உடலியங்கியல் சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் நரம்புசார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

ஒலியியல் ஆய்வின் கருப்பொருட்களான ஒலிகள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். எழுத்து மொழிகளும் எழுத்துக்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலியியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது குறியியல்) ஒலியியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.

பிரிவுகள்

பேச்சொலியை ஆராயும் ஒலியியல் முறை முக்கியமான மூன்று கிளைகளைக் கொண்டது:

  • ஒலிப் பிறப்பியல் (articulatory phonetics), பேச்சொலியை உருவாக்குவதில் உதடுகள், நாக்கு, மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகளின் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது;
  • அலை ஒலியியல் (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வதால் இதை பெளதிக ஒலியியல் என்றும் அழைப்பர்.இங்கு ஒலிகளை ஆராய அறிவியல் கருவிகள், கணிதம், இயற்பியல் ஆகியன பயன்படுகின்றன; மற்றும்
  • கேட்பொலியியல் (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தலை அடிப்படையாகக் கொண்டு மொழியை ஆய்வு செய்வது.

மொழிகளில் பேச்சொலிகள்

பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) அனைத்துலக ஒலியியல் கழகம் (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய அனைத்துலக ஒலியியல் எழுத்து (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.

மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட அப்காசு மொழி தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட செடாங் மொழி வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட ரொடோகாசு மொழி தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட க்சூ மொழி வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக பிராகா மொழியில் 10 ஒலியன்களும், பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ரோடோகாசு மொழியில் 11 ஒலியன்களும், அவாயன் மொழியில் 12 ஒலியன்களும், சேர்பிய மொழியில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளையில் தெற்கு ஆபிரிக்காவின் கலகாரி பாலைவனத்தில் பேசப்படும் !க்சூ மொழியில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: கிளிக் ஒலி, குரல்வளைச் செயல் (phonation), காற்றோட்டப் பொறிமுறை (airstream mechanism)).

ஆங்கில மொழி 13 உயிர் ஒலியன்களையும், 24 மெய் ஒலியன்களையும் கொண்டது. சில கிளை மொழிகள் பல மாற்றொலிகளைக் (allophone) கொண்டுள்ளன. இது இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).

ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.

இவற்றையும் பார்க்கவும்

  • ஒலியியல் தலைப்புக்களின் பட்டியல்
  • Speech processing
  • ஒலியியல்
  • biometric word list
  • பல்கலைக்கழகங்களின் ஒலியியல் பிரிவுகள்
  • ஐபிஏ மற்றும் SAMPA.

வெளி இணைப்புகளும் உசாத்துணையும்

Tags:

மொழியியல் ஒலியியல் பிரிவுகள்மொழியியல் ஒலியியல் மொழிகளில் பேச்சொலிகள்மொழியியல் ஒலியியல் இவற்றையும் பார்க்கவும்மொழியியல் ஒலியியல் வெளி இணைப்புகளும் உசாத்துணையும்மொழியியல் ஒலியியல்அறிவியல்இயற்பியல்உடலியங்கியல்ஒலிநரம்புமொழியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விண்டோசு எக்சு. பி.ஏலகிரி மலைஅக்கியாவரும் நலம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்திராவிசு கெட்கோவிட்-19 பெருந்தொற்றுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கலாநிதி மாறன்மஞ்சள் காமாலைஆய்த எழுத்து (திரைப்படம்)ஜி. யு. போப்சிங்கம் (திரைப்படம்)வீரமாமுனிவர்வியாழன் (கோள்)நாடகம்தங்கராசு நடராசன்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇட்லர்வெ. இராமலிங்கம் பிள்ளைபாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆண் தமிழ்ப் பெயர்கள்நற்கருணைமுகம்மது நபிவெள்ளியங்கிரி மலைதிருமந்திரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்மழைவண்ணார்காமராசர்சீரடி சாயி பாபாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இந்தியாதொழிலாளர் தினம்முதற் பக்கம்ரோசுமேரிசுயமரியாதை இயக்கம்கருக்கலைப்புநரேந்திர மோதிஐம்பூதங்கள்மகாபாரதம்திருமலை (திரைப்படம்)பாண்டியர்பூக்கள் பட்டியல்திணை விளக்கம்கோயம்புத்தூர்ஆந்திரப் பிரதேசம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்விஷால்நிலாசுப்பிரமணிய பாரதிகாதல் கொண்டேன்இராமர்சுரதாதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வரலாற்றுவரைவியல்ஆகு பெயர்வளையாபதிகம்பர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருவிளையாடல் புராணம்மு. க. ஸ்டாலின்ஏலாதிதிருத்தணி முருகன் கோயில்மியா காலிஃபாதனுசு (சோதிடம்)பி. காளியம்மாள்நெசவுத் தொழில்நுட்பம்குடும்பம்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கடல்வெ. இறையன்புஇந்திரா காந்திபள்ளுவடலூர்🡆 More