ஒப்பீட்டு மொழியியல்

ஒப்பீட்டு மொழியியல் என்பது, வரலாற்று மொழியியலின் ஒரு கிளைத் துறையாகும்.

மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்

இது, மொழிகளின் வரலாற்றுத் தொடர்புகளை அறிந்துகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. மொழிகள் பெருமளவில் கடன்வாங்குவதன் மூலம் அல்லது மரபுவழி மூலம் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம்.

மரபுவழித் தொடர்பு அம்மொழிகளுக்கு ஒரு பொது மூலம் அல்லது ஒரு முந்து மொழி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒப்பீட்டு மொழியியல் மொழிக் குடும்பங்களை உருவாக்குவதையும், முதல்-மொழிகளை மீட்டுருவாக்கம் செய்து ஆவணப்படுத்தப்பட்ட மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. சான்றுள்ள மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சொற்களிடையேயான வேறுபாட்டைக் காட்டுவதற்காக, தப்பியிருக்கக் கூடிய சான்றுகளில் காணப்படாத சொற்களுக்கு முன்னொட்டாக நட்சத்திரக் குறி இடப்படுகின்றது.

வழிமுறைகள்

ஒப்பீட்டு முறை என்னும் உத்தி மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளின் ஒலியியல் முறைமைகள், உருபனியல் முறைமைகள், தொடரியல், சொற் தொகுதி ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பீட்டு மொழியியலின் அடிப்படை உத்தியாகும். கோட்பாட்டளவில் தொடர்புள்ள இரண்டு மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் தர்க்கரீதியான முறையில் விளக்கம் தரக்கூடிய வகையில் அமைந்திருத்தல் அவசியம். எடுத்துக்காட்டாக, ஒலியியல் மற்றும் உருபனியல் முறைமைகள் கூடிய ஒழுங்கமைவு கொண்டவையாக இருத்தல் வேண்டும்.

நடைமுறையில் ஒப்பீடு வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக சொற் தொகுதிகளை மட்டும் ஒப்பிடக்கூடும். சில வழிமுறைகளில் முந்திய முதல்-மொழியொன்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியலாம். ஒப்பீட்டு முறை மூலம் உருவாக்கப்பட்ட முதல்-மொழிகள் எடுகோள்கள் மட்டுமேயானாலும், மீட்டுருவாக்கம் மூலம் எதிர்வு கூறுதல் கூடும். இது தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டு, இன்று எந்த இந்திய-ஐரோப்பிய மொழிகளிலுமே காணப்படாத குரல்வளையொலிகள் இந்திய-ஐரோப்பிய மெய்யொலிகளுள் அடங்கியிருந்தது என்ற சோசுரே (Saussure) என்பவரின் முன்மொழிவு ஆகும். இந்த எடுகோள் பின்னர் இட்டைட்டு மொழியின் கண்டுபிடிப்புடன் சரியென நிறுவப்பட்டது. இதன்படி சோசுரே எதிர்வு கூறிய அதே மெய்யொலி எதிர்பார்க்கப்பட்ட அதே சூழலிலேயே இருக்கக் காணப்பட்டது.

Tags:

மொழிவரலாற்று மொழியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழில் சிற்றிலக்கியங்கள்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வியாழன் (கோள்)மஞ்சும்மல் பாய்ஸ்காதல் கொண்டேன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பில்லா (2007 திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைநரேந்திர மோதிஹரிணிகைப்பந்தாட்டம்இசைகலித்தொகைசீமைக்காரை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்தாவரம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)புற்றுநோய்சூரைமாரியம்மன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019யாவரும் நலம்திருக்குறள்சுந்தர காண்டம்பூவெல்லாம் உன் வாசம்இன்ஸ்ட்டாகிராம்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்சார்பெழுத்துதினைகாரைக்கால் அம்மையார்மனித மூளைஅக்பர்சமணம்ரோகித் சர்மாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்தியாவில் இட ஒதுக்கீடுசிவனின் 108 திருநாமங்கள்மக்களவை (இந்தியா)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்குக்கு வித் கோமாளிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)யோனிஅன்னை தெரேசாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திராவிட முன்னேற்றக் கழகம்வே. செந்தில்பாலாஜிஓ காதல் கண்மணிபரிதிமாற் கலைஞர்தமிழர் நிலத்திணைகள்ஸ்ரீலீலாபத்ம பூசண்ஜவகர்லால் நேருவிலங்குநாடார்ம. கோ. இராமச்சந்திரன்நுரையீரல் அழற்சிநஞ்சுக்கொடி தகர்வுகஜினி (திரைப்படம்)தலித்இன்று நேற்று நாளைஉப்புச் சத்தியாகிரகம்முத்துராஜாதஞ்சாவூர்தமிழ்எயிட்சுஐராவதேசுவரர் கோயில்காதல் கோட்டைமறைமலை அடிகள்இலங்கை சட்டவாக்கப் பேரவைகாடுகல்லணைஇராமர்கிருட்டிணன்ஜன கண மனகுண்டலகேசிதிருநெல்வேலி🡆 More