உந்தம்

ஒரு அசையும் பொருளின் உந்தம் (momentum) என்பது, மரபு இயக்கவியலில் (classical mechanics) அதன் திணிவு (mass) (m) , மற்றும் அதன் வேகம் ( v } ) ஆகிய இரண்டின் பெருக்குத் தொகையென வரையறுக்கப்படுகிறது.

உந்தம் என்பது பருமனும் (magnitude) திசையும் (direction) கொண்ட ஒரு காவிக்கணியம் (vector quantity) ஆகும். இந்த வரவிலக்கணம் நேர்கோட்டில் இயங்கும் துணிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் இதனை நேரியக்க உந்தம் (linear momentum) அல்லது பெயர்வியக்க உந்தம் (translational momentum) என்றும் அழைப்பதுண்டு.

மரபார்ந்த விசையியல்

நியூட்டனின் இரண்டாவது விதி
வரலாறு · காலக்கோடு
அடிப்படைக் கருத்துக்கள்
வெளி · நேரம் · திணிவு · விசை
ஆற்றல் · உந்தம்

உந்தத்தை () என்று குறித்தால், ஆகும்.

உந்தம் = திணிவு X வேகம்

மேலும் புறவிசைகளின் தலையீடு இல்லாமல் தனிமைப்படுத்தப் பட்ட ஒரு தொகுதியின் மொத்த உந்தம் காக்கப்படுகின்றது. அதாவது அந்த தொகுதியினுள் நடக்கும் இயக்க மாற்றங்கள் அந்தத் தொகுதியின் மொத்த உந்தத்துக்கு குந்தகம் விளைவிப்பதிலை. இதனை உந்தக்காப்பு விதி என்று அழைப்போம்.

எடுத்துக்காட்டு

நொடிக்கு 10 m வேகத்தில் செல்லும் 10 kg திணிவு கொண்ட ஒரு பொருள் கொண்டிருக்கும் உந்தம் 10 x 10 = 100 Kgm/s ஆகும். இதே பொருள் நொடிக்கு 20 m வேகத்துடன் செல்லுமானால், அது இரு மடங்கு உந்தம் கொண்டிருக்கும். உந்தம் என்பதைக் கருத்தளவில் இரு விதமாக எண்ணலாம். ஒரு குறிப்பிட்ட உந்தம் கொண்ட ஒரு பொருளானது வேறு ஒரு பொருள் மீது மோதினால் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்றோ, அல்லது ஓர் உந்தம் கொண்ட பொருளை நிறுத்துவது எவ்வளவு கடினம் என்றோ காட்டும் ஓர் அளவு என்றோ கொள்ளலாம். இந்த உந்தம் என்னும் கருத்தை ஐரோப்பாவில் உள்ள பல அறிஞர்கள் எண்ணிக் குறித்து உள்ளனர். பிரெஞ்ச் அறிவியல் அறிஞர் ரெனே டேக்கார்ட்டு (René Descartes) அவர்கள் இந்த திணிவு-வேகப் பெருக்கத்தை குறிக்கும் உந்தத்தை நகர்ச்சியின் அடிப்படை விசை என்று குறித்தார் கோடி குரூசே (Codi Kruse) அவர்கள் தன்னுடைய "இரு புதிய அறிவியல்கள்" ( Two New Sciences ) என்னும் நூலில் இயக்க ஊக்கம் ("impeto") என்னும் இத்தாலிய மொழிச் சொல்லால் குறித்தார். ஐசாக் நியூட்டன், இலத்தீன் மொழியில் "மோட்டஸ்" ("motus"). இதனைத்தான் இங்கு உந்தம் என்று குறிப்பிடுகிறோம்.

நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதிக்கும் உந்தத்திற்கும் உள்ள தொடர்பு

நியூட்டோனிய விதிகளில் குறிப்பிடப்படும் விசை (F) என்பது உண்மையில் உந்த மாற்று வீதம் (rate of change of momentum) ஆகும்.

    உந்தம்  1 N =10 kg

திணிவு (m), மாறிலியாக (constant) இருப்பின், இவ்விளக்கம் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியைத் துல்லியமாய் விளக்குகின்றது. உந்தம் . இதில் உந்தம்  என்பது வேக வளர்ச்சி வீதமாகிய ஆர்முடுகல் (acceleration) ஆகும்.

ஆகவே வேகம் மாறாதிருக்குமானால் அப்பொருள் மீது விசைகள் ஏதும் உஞற்றப்படவில்லை என வெளிப்படையாகிறது கீழ்வரும் சமன்பாட்டில் இருந்து.

    உந்தம் 

மேற்கோள்களும் குறிப்புகளும்

Tags:

திசைவேகம்திணிவுமரபு இயங்கியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் இலக்கியப் பட்டியல்உடன்கட்டை ஏறல்தமிழ்நாடுஎட்டுத்தொகை தொகுப்புஇந்தியாவில் பாலினப் பாகுபாடுஇராசாராம் மோகன் ராய்தொலைக்காட்சிவணிகம்ஒற்றைத் தலைவலிசுப்பிரமணிய பாரதிஅணி இலக்கணம்கலித்தொகைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சுற்றுலாதிருவிளையாடல் புராணம்பதிற்றுப்பத்துமதுரைசேக்கிழார்பத்துப்பாட்டுநாயக்கர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இராசேந்திர சோழன்சாத்துகுடிதமிழ்நாடு காவல்துறைகம்பர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பஞ்சாங்கம்வெப்பநிலைதாய்ப்பாலூட்டல்ராஜா ராணி (1956 திரைப்படம்)சங்க இலக்கியம்கலாநிதி மாறன்இந்தியத் தலைமை நீதிபதிகட்டுரைகள்ளர் (இனக் குழுமம்)பிரேமலுநல்லெண்ணெய்இந்திய நிதி ஆணையம்குறிஞ்சிப் பாட்டுசுற்றுச்சூழல் மாசுபாடுகாம சூத்திரம்தெலுங்கு மொழிதிருச்சிராப்பள்ளிகுழந்தை பிறப்புவெள்ளி (கோள்)முடக்கு வாதம்காற்றுநெல்சமணம்மனித உரிமைகஞ்சாகம்பராமாயணம்ரயத்துவாரி நிலவரி முறைஆகு பெயர்வளையாபதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)ஐம்பெருங் காப்பியங்கள்கள்ளழகர் கோயில், மதுரைஅழகிய தமிழ்மகன்முடியரசன்பறவைக் காய்ச்சல்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்உவமையணிதேவாங்குசித்தர்அரச மரம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)அரண்மனை (திரைப்படம்)யாதவர்அக்பர்மத கஜ ராஜாஹரி (இயக்குநர்)எட்டுத்தொகைசுயமரியாதை இயக்கம்வௌவால்சுற்றுச்சூழல் பாதுகாப்புஉடுமலைப்பேட்டை🡆 More