இயக்கவியல்

இயக்கவியல் (Dynamics) விசையியலின் ஒரு பிரிவாகும்.

பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.

மரபார்ந்த விசையியல்

நியூட்டனின் இரண்டாவது விதி
வரலாறு · காலக்கோடு

இடப்பெயர்ச்சி இயக்கம், சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் ஆகிய இயக்கங்களைப் பொருள்கள் பெற்றுள்ளன.

இயக்கவியல், திடப் பொருள் இயக்கவியல் மற்றும் வளைமைப் பொருள் இயக்கவியல் என இருவகைப்படும். திடப் பொருள் எனப்படுவது உருத்திரிபு அற்றவை, அவற்றின் மீது விசை செயல்படும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் நிலையாக இருக்கும்.

வரலாறு

இயக்கவியலின் அடிப்படை விதிகளை நீயூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிபியா மெதெமேட்டிகா (Principia Mathematica) என்னும் படைப்பு நூலை 1687இல் வெளியிட்டார். மேலும் ஆய்லர், மேக்சுவெல் போன்றோர் முறையே சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் குறித்து விதிகளை வகுத்தனர்.

விசை

விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.

நியூட்டனின் இயக்க விதிகள்

பொருளின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை நியூட்டன் உருவாக்கினார். பொருள் மற்றும் அவைகளின் மீது ஒரு விசை ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும்.

முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இயக்கவியல் வரலாறுஇயக்கவியல் விசைஇயக்கவியல் நியூட்டனின் இயக்க விதிகள்இயக்கவியல் இவற்றையும் பார்க்கஇயக்கவியல் மேற்கோள்கள்இயக்கவியல் வெளி இணைப்புகள்இயக்கவியல்அணுகோள்சடப்பொருள்விசையியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிளைமொழிகள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)பாசிசம்இந்திய அரசியல் கட்சிகள்தாவரம்சிலம்பம்ஈ. வெ. இராமசாமிநவதானியம்கோயம்புத்தூர்கஜினி (திரைப்படம்)சிறுநீரகம்வெண்குருதியணுஜவகர்லால் நேருஅரசியல் கட்சிவாட்சப்கனடாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைசோழர்கல்விகண்ணப்ப நாயனார்திருமூலர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தங்கராசு நடராசன்இரண்டாம் உலகப் போர்சூரரைப் போற்று (திரைப்படம்)ம. கோ. இராமச்சந்திரன்திரைப்படம்முதல் மரியாதைநான்மணிக்கடிகைஅம்பேத்கர்ஒற்றைத் தலைவலிதேம்பாவணிபட்டினப் பாலைசெக் மொழிமு. க. முத்துதைப்பொங்கல்அபினிஇந்தியத் தலைமை நீதிபதிதிருப்பதிமணிமுத்தாறு (ஆறு)யானைஜோதிகாகடவுள்ஆந்திரப் பிரதேசம்ஜே பேபிகஞ்சாசிலம்பரசன்நெடுஞ்சாலை (திரைப்படம்)இந்திய தேசிய சின்னங்கள்இந்திவிந்துகருக்காலம்திருவோணம் (பஞ்சாங்கம்)மீன் வகைகள் பட்டியல்அகநானூறுசெங்குந்தர்இலட்சம்தேவயானி (நடிகை)ஆத்திசூடிகங்கைகொண்ட சோழபுரம்ஆசிரியர்ரச்சித்தா மகாலட்சுமிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)அனைத்துலக நாட்கள்பட்டினத்தார் (புலவர்)வெந்தயம்இந்து சமயம்இந்திய நாடாளுமன்றம்வேதநாயகம் பிள்ளைஇராமர்பணவீக்கம்திருமணம்அரிப்புத் தோலழற்சிகணினிஇந்து சமய அறநிலையத் துறைஇளையராஜா🡆 More