இந்தியாவிலுள்ள பெருநகரங்கள்

தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், புனே, கொச்சி, கோயம்புத்தூர், போன்றவைன்றவை இந்தியாவிலுள்ள சில முக்கியமான மாநகரங்களாகும்.

போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவை இந்நகரங்கள் சந்திக்கும் பொதுவான இடையூறுகளாகும்.

இவற்றுள் மும்பை நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குகிறது. சென்னை, பெங்களூர் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் விளங்குகின்றன.

மும்பை

மும்பை (மராத்தி: मुंबई, Mumbaī , ஐபிஏ:[ˈmʊm.bəi] ), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது. நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது . இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.

தில்லி

இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் 
தில்லி

தில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தலைநகர் பகுதி)யில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.

கொல்கத்தா

இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் 
கொல்கத்தா

கொல்கத்தா (வங்காள மொழி: কলকাতা) (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் பரப்பளவின் அடிப்படையில் உலக அளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகும் .

சென்னை

இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் 
சென்னை

சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

பெங்களூரு

இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் 
பெங்களூரு

பெங்களூரூ (கன்னடம்:ಬೆಂಗಳೂರು,) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள பெங்களூரு, மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.

ஐதராபாத்

இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் 
ஐதராபாத்

ஐதராபாத் (தெலுங்கு: హైదరాబాద్, உருது: حیدرآباد) தெற்கு இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மிகையான மக்கள்தொகையுடன் கூடிய தலைநகரம் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது. ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும்.நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் A-1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.

அகமதாபாத்

சேலம்

சேலம் (ஆங்கிலம்:Salem) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது. சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும். தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிக்கு அடுத்த ஐந்தாவது பெருநகரம் ஆகும். தென்னிந்தியாவை பொறுத்தவரையும், தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தான் தமிழக மக்கள் நுகர்வோர் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகர விலைதான் தமிழகத்தில் 38 மாவட்டங்களும் நிர்ணயிக்கப்படும். சேலம் மாநகராட்சியானது தென்னிந்திய இரயில்வே கோட்ட தலைமை இடமாகும். இந்த கோட்டத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் அடங்கும். இதனாலையே இது சேலம் பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இது இந்தியாவின் 44 வது பெரிய நகரம் ஆகும்.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் (Coimbatore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமும் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். இது சுருக்கமாக கோவை (Kovai) என்று அழைக்கப்படுகிறது. தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. இது இந்தியாவின் பதினாறாவது மிகப்பெரிய நகரம் ஆகும்.

புனே

இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் 
புனே

முன்னதாக புனாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூனா என்றறியப்படும் புனே மராத்தி: पुणे)இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள புனே நகரம் புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரகமாகும். இன்று, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏழு பல்கலைக்கழகங்களுடன் புனே கல்வி வசதிவாய்ப்புகள் கொண்ட நகரமாக அறியப்படுகிறது அத்துடன் புனே நகரம் பாரம்பரிய இசை, விளையாட்டுக்கள், இலக்கியம், அயல்நாட்டு மொழியைக் கற்பித்தல், நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் ஆய்வு போன்ற பல்வேறு கலாச்சார செயல்பாடுகளுக்காகவும் நன்கறியப்படும் நகரமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் இந்தியா முழுவதிலுமிருந்து புலம்பெயர்பவர்களையும் மாணவர்களையும் கவர்கிறது, அத்துடன் மத்திய கிழக்கு, ஈரான், கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்காசியா ஆகிவற்றிலிருந்து வரும் மாணவர்களையும் கவர்வதால் இது பல சமூகங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் உள்ள நகரமாக விளங்குகிறது. இந்த நகரம் மோசமான பொதுப் போக்குவரத்து வசதியைக் கொண்டிருப்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த வாகனங்களையே (பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள்) பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் மும்பைஇந்தியாவிலுள்ள பெருநகரங்கள் தில்லிஇந்தியாவிலுள்ள பெருநகரங்கள் கொல்கத்தாஇந்தியாவிலுள்ள பெருநகரங்கள் சென்னைஇந்தியாவிலுள்ள பெருநகரங்கள் பெங்களூருஇந்தியாவிலுள்ள பெருநகரங்கள் ஐதராபாத்இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் அகமதாபாத்இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் சேலம்இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் கோயம்புத்தூர்இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் புனேஇந்தியாவிலுள்ள பெருநகரங்கள் மேற்கோள்கள்இந்தியாவிலுள்ள பெருநகரங்கள்அகமதாபாத்இந்தியாகொச்சிகொல்கத்தாகோயம்புத்தூர்சென்னைதில்லிபுனேபெங்களூர்பெருநகர் பகுதிமும்பைஹைதராபாத்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கருக்கலைப்புமதுரை மக்களவைத் தொகுதிகடையெழு வள்ளல்கள்வன்னியர்வெந்தயம்இந்தியப் பிரதமர்சிற்பி பாலசுப்ரமணியம்அலீமுடியரசன்நன்னூல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்நன்னீர்வேற்றுமையுருபுபரிதிமாற் கலைஞர்நாம் தமிழர் கட்சிபத்து தலமயக்கம் என்னதேசிக விநாயகம் பிள்ளைஇந்தியத் தேர்தல் ஆணையம்அகத்தியமலைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கள்ளர் (இனக் குழுமம்)வெள்ளியங்கிரி மலை2022 உலகக்கோப்பை காற்பந்துநவக்கிரகம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சித்தர்கள் பட்டியல்திருமுருகாற்றுப்படைசிறுபஞ்சமூலம்நெல்லிகம்பர்குடும்பம்கோயம்புத்தூர் மாவட்டம்கண்ணப்ப நாயனார்ரவிச்சந்திரன் அசுவின்முத்துலட்சுமி ரெட்டிதென்னாப்பிரிக்காசூரியக் குடும்பம்கட்டபொம்மன்சினைப்பை நோய்க்குறிபரணி (இலக்கியம்)கட்டுரைசெண்டிமீட்டர்மதுராந்தகம் தொடருந்து நிலையம்பாரத ரத்னாமருது பாண்டியர்பெரும்பாணாற்றுப்படைதஞ்சாவூர்லியோஆதலால் காதல் செய்வீர்அரபு மொழிஅறிவியல்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தமிழக மக்களவைத் தொகுதிகள்குறிஞ்சி (திணை)சுரதாதீரன் சின்னமலைசிங்கப்பூர்நாளந்தா பல்கலைக்கழகம்இலங்கைசவாய் மான்சிங் விளையாட்டரங்கம்ரமலான் நோன்புஇந்திய அரசியல் கட்சிகள்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்குமரி அனந்தன்தமிழ் எண் கணித சோதிடம்குலுக்கல் பரிசுச் சீட்டுஉப்புச் சத்தியாகிரகம்வால்ட் டிஸ்னிஅப்துல் ரகுமான்உமாபதி சிவாசாரியர்அறுபடைவீடுகள்அகத்தியர்ஜன கண மனசைலன்ஸ் (2016 திரைப்படம்)🡆 More