அலெக்சேய் நவால்னி

அலெக்சேய் அனத்தோலியெவிச் நவால்னி அல்லது அலெக்சி நவால்னி (Alexei Anatolievich Navalny; உருசியம்: Алексе́й Анато́льевич Нава́льный; 4 சூன் 1976 – 16 பெப்ரவரி 2024) உருசியாவின் எதிர்க்கட்சித் தலைவரும், வழக்கறிஞரும், ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளரும், வலைத்தளப் பதிவரும் ஆவார்.

இவர் உருசியாவின் எதிர்காலம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறார். நவால்னியின் யூடியூப் சானலுக்கு 6 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களும், டுவிட்டர் கணக்கை 2 மில்லியன் பயனர்களும் பின்பற்றுகிறார்கள். மேற்படி ஊடகங்கள் வழியாக உருசியாவில் விளாதிமிர் பூட்டின் அரசு செய்து வரும் ஊழல்களை வெளிப்படுத்தி இடித்துரைக்கிறார். மேலும் ஊழல்களுக்கு எதிரான அமைப்புகளைத் திரட்டி, ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறார். சூலை 2013-இல் அலெக்செ நவால்னி மோசடி குற்றத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனை பெற்றார். 2013-இல் நவால்னி மாஸ்கோ நகர மேயர் தேர்தலில் போட்டியிட்டு 27% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.

அலெக்சேய் நவால்னி
Alexei Navalny
Алексей Навальный
அலெக்சேய் நவால்னி
2011 இல் நவால்னி
எதிர்கால உருசியா கட்சியின் தலைவர்
பதவியில்
28 மார்ச் 2019 – 17 சனவரி 2021
Deputyலியொனீது வோல்க்கொவ்
முன்னையவர்இவான் சுதானொவ்
பின்னவர்லியொனீது வோல்க்கொவ் (பதில்)
பதவியில்
17 நவம்பர் 2013 – 19 மே 2018
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்இவான் சுதானொவ்
உருசிய எதிர்க்கட்சி ஒருங்கிணைப்புப் பேரவைத் தலைவர்
பதவியில்
27 அக்டோபர் – 24 நவம்பர் 2012
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்காரி காஸ்பரொவ்
கீரொவ் மாகாண ஆளுநரின் ஆலோசகர்
பதவியில்
4 மே – 11 செப்டம்பர் 2009
ஆளுநர்நிக்கித்தா பெலிக்
மாஸ்கோ, யாப்லக்கா தலைமை அதிகாரி
பதவியில்
12 ஏப்ரல் 2004 – 22 பெப்ரவரி 2007
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1976-06-04)4 சூன் 1976
புத்தின், மாசுக்கோ மாகாணம், உருசியா, சோவியத் ஒன்றியம்
இறப்பு16 பெப்ரவரி 2024(2024-02-16) (அகவை 47)
கார்ப், யமலோ-நெனெத்து, உருசியா
தேசியம்உருசியர்
அரசியல் கட்சி
  • எதிர்கால உருசியா (2013–2024)
  • சுயேச்சை (2007–2013)
  • யாப்லக்கா (2000–2007)
துணைவர்
யூலியா நவால்னயா (தி. 2000)
பிள்ளைகள்2
கல்வி
வேலை
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி
  • செயற்பாட்டாளர்
  • வலைப்பதிவர்
அறியப்படுவதுஊழலுக்கு எதிரான போராட்டம்
விருதுகள்சாகரவ் பரிசு (2021)
கையெழுத்துஅலெக்சேய் நவால்னி
இணையத்தளம்navalny.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும், NavalnyLiveChannel

நவால்னி உருசிய, உக்ரைனிய மரபுகளைச் சேர்ந்தவர். 1998 இல் உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துப் பட்டம் பெற்றார். 2010-இல் புலமைப்பரிசில் பெற்று யேல் பல்கலைக்கழகம் சென்றார்.

2020 ஆகத்து மாதத்தில், நஞ்சூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன உருசிய மூத்த அதிகாரிகளின் மீது பயணத் தடைகளை அறிவித்தன. இதற்கிடையில், பூட்டினின் ஊழல்களை விளக்கி நவால்னி பூட்டினின் அரண்மனை என்ற ஆவணம் ஒன்றை வெளியிட்டதை அடுத்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 2021 பெப்ரவரியில் இவரது ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்குப் பதிலாக இரண்டரை ஆண்டுகள் தொழிலாளர் சீர்திருத்தக் குடியேற்றத்தில் வைக்கப்பட்டார். பன்னாட்டு மன்னிப்பு அவை இவரை மனச்சாட்சியின் கைதிகளின் பட்டியலில் வகைப்படுத்தியது. 2021 அக்டோபரில், இவரது மனித உரிமைச் செயற்பாடுகளுக்காக சாகரவ் பரிசு வழங்கப்பட்டது.

திசம்பர் 2023 இல், நவால்னி சிறையில் இருந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் காணாமல் போனார், பின்னர் யமலோ-நேனெத்தில் உள்ள புதிய ஆர்க்டிக் வட்ட சிறையில் மீண்டும் தோன்றினார். 2024 பிப்ரவரி 16 அன்று, நவால்னி தனது 47-வது அகவையில் இறந்துவிட்டதாக உருசிய சிறைத்துறை தெரிவித்தது.

நஞ்சூட்டப்படல் மற்றும் மீட்பு

20 ஆகஸ்டு 2020 அன்று தென்மத்திய உருசியாவின் தோம்ஸ்க் நகரத்திலிருந்து மாஸ்கோ நகரத்திற்கு வானூர்தியில் சென்று கொண்டிருந்த நவால்னிக்கு தீடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வழியில் உள்ள ஓம்ஸ்க் நகரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவால்னி மருத்துவமனையில் கத்திக்கொண்டே தாம் இறந்து கொண்டிருப்பதாக மருத்துவர்களிடம் கூறினார். காலையில் நவால்னி வானூர்தியில் ஏறுவதற்கு முன்னர் வானூர்தி நிலையத்தில் தேனீர் மட்டும் அருந்தினார் என்றும் அப்போது தேனீரில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கலாம் என அவருடைய உதவியாளர் கூறினார். மருத்துவர்களும் நவால்னி குருதியில் நஞ்சு இருந்த தடயத்தை இரத்தப் பரிசோதனையில் கண்டறிந்தனர். ஜெர்மனியால் அனுப்பபட்ட வானூர்தியில் ந்வால்னியை ஏற்றி பெர்லின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 24 ஆகஸ்டு 2020 அன்று பெர்லின் மருத்துவர்கள் நவால்னி உடலில் நஞ்சு ஏற்றப்பட்டு இருந்ததை உறுதிப்படுத்தினர்.

நாடு திரும்பல் மற்றும் சிறையில் அடைத்தல்

ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சையில் உடல் நலம் தேறிய நவால்னி, 17 சனவரி 2021 அன்று மாஸ்கோ திரும்பினார். பிப்ரவரி 2021-இல் நவால்னி மீது நிலுவையில் பழைய குற்றச்சாட்டுகளுக்காக உருசியாவின் காவல்துறையினர் நவால்னியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். உருசியாவை ஆளும் விளாதிமிர் பூட்டின் அரசின் மனிதாபிமானமற்ற செயல்களை கண்டித்து, நவால்னி 31 மார்ச் 2021 முதல் சிறையில் உண்ணாநோன்பு இருந்து வருகிறார். இதனால் நவால்னியின் சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய ரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரித்தார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட நவால்னிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும், சிறையிலிருந்து விடுவிக்கவும் 20 ஏப்ரல் 2021 அன்று ருசியா முழுவதும் போராட்டம் நடத்திய நவால்னியின் ஆதரவாளர்களில் 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்சேய் நவால்னி சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என உருசியாவை அமெரிக்கா எச்சரித்தது.

ஊழல் வழக்கில் 13 ஆண்டுச் சிறை

அலெக்சி நவால்னி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அலெக்ஸி சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். தற்போதைய விளாடிமிர் புடின் அரசு, அலெக்ஸி மீது வேறு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 13 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவிட்டார்.

விருதுகளும் பரிசுகளும்

சாகரவ் பரிசு

ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 2021-ஆம் ஆண்டிற்கான சாகரவ் பரிசு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சேய் நவால்னிக்கு வழங்கப்பட்டது.

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அலெக்சேய் நவால்னி நஞ்சூட்டப்படல் மற்றும் மீட்புஅலெக்சேய் நவால்னி ஊழல் வழக்கில் 13 ஆண்டுச் சிறைஅலெக்சேய் நவால்னி விருதுகளும் பரிசுகளும்அலெக்சேய் நவால்னி அடிக்குறிப்புகள்அலெக்சேய் நவால்னி மேற்கோள்கள்அலெக்சேய் நவால்னி வெளி இணைப்புகள்அலெக்சேய் நவால்னிஇடித்துரைப்பாளர்கள்உருசியம்உருசியாஊடகம்டுவிட்டர்மாஸ்கோமில்லியன்யூடியூப்விளாதிமிர் பூட்டின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பத்து தலசுற்றுலாதமிழிசை சௌந்தரராஜன்2024 இந்தியப் பொதுத் தேர்தல்மதுரகவி ஆழ்வார்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சத்திய சாயி பாபாபோதைப்பொருள்குறிஞ்சி (திணை)ஆற்றுப்படைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கருச்சிதைவுகுண்டலகேசிகாதல் கொண்டேன்நற்றிணைகாரைக்கால் அம்மையார்அளபெடைஏலாதிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இசைசித்த மருத்துவம்அவதாரம்இரட்சணிய யாத்திரிகம்கடையெழு வள்ளல்கள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சூரரைப் போற்று (திரைப்படம்)காயத்ரி மந்திரம்தொல். திருமாவளவன்கில்லி (திரைப்படம்)செயற்கை மழைசிறுகதைதமிழ்நாடுகொடுக்காய்ப்புளிஆண்டு வட்டம் அட்டவணைகோத்திரம்தமிழில் சிற்றிலக்கியங்கள்மு. வரதராசன்நம்ம வீட்டு பிள்ளைசின்னம்மைதேவாரம்பாட்டாளி மக்கள் கட்சிஉயிரளபெடைதீரன் சின்னமலைஇன்னா நாற்பதுதிருப்புகழ் (அருணகிரிநாதர்)இராமலிங்க அடிகள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்மூலம் (நோய்)தமிழ் இலக்கியம்வாலி (கவிஞர்)மொயீன் அலிசுந்தர காண்டம்மயில்அழகர் கோவில்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்சிவபெருமானின் பெயர் பட்டியல்அன்மொழித் தொகைபோகர்சித்திரகுப்தர்தினமலர்ஜல் சக்தி அமைச்சகம்தகவல் தொழில்நுட்பம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஆண் தமிழ்ப் பெயர்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பக்கவாதம்எயிட்சுதரணிபாம்புபுறநானூறுசிவம் துபேஅருணகிரிநாதர்தமிழ்நாடு அமைச்சரவைகுடும்ப அட்டைஉணவுச் சங்கிலிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்விஷ்ணு🡆 More