சாகரவ் பரிசு

சாகரவ் பரிசு (Sakharov Prize) அலுவல்முறையாக கருத்துரிமைக்கான சாகரவ் பரிசு திசம்பர் 1988இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் மனித உரிமைகளுக்காகவும் சிந்தனைச் சுதந்திரத்திற்காகவும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த தனிநபர்கள்/குழுவினரை பெருமைப்படுத்தும் வண்ணம் உருசிய அறிவியலாளர் ஆந்திரே சாகரவ் நினைவாக நிறுவப்பட்ட பரிசாகும்.

ஐரோப்பிய நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவும் வளர்ச்சிக் குழுவும் தயாரிக்கும் வரைவுப் பட்டியலிலிருந்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது. பரிசுத் தொகையாக €50,000 வழங்கப்படுகின்றது.

கருத்துரிமைக்கான சாகரவ் பரிசு
சாகரவ் பரிசு
2013இல் நாடாளுமன்ற இசுட்ராசுபர்கு அரைக்கோளத்தில் 1990 ஆண்டுக்கான பரிசை ஆங் சான் சூச்சிக்கு வழங்கியபோது.
நாடுஐரோப்பிய ஒன்றியம், பிரான்சு Edit on Wikidata
வழங்குபவர்ஐரோப்பிய நாடாளுமன்றம்
வெகுமதி(கள்)€50,000
முதலில் வழங்கப்பட்டது1988
தற்போது வைத்துள்ளதுளநபர்நாடியா முரத் பசீ, இலாமியா அஜி பசர்
இணையதளம்அலுவல்முறை வலைத்தளம் சாகரவ் பரிசுப் பிணையம் வலைத்தளம்

முதன்முறையாக இப்பரிசு தென்னாப்பிரிக்க நெல்சன் மண்டேலாவிற்கும் உருசிய அனடோலி மார்ச்சென்கோவிற்கும் இணைந்து வழங்கப்பட்டது. 1990 ஆண்டுக்கான பரிசு ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டபோதும் சிறையில் இருந்தமையால் 2013ஆம் ஆண்டுதான் வழங்க முடிந்தது. முதல் அமைப்பொன்றுக்கு வழங்கிய பரிசு அர்கெந்தீனாவின் பிளாசா டெ மாயோவின் மதர்களுக்கு 1992இல் வழங்கப்பட்டது.

சாகரவ் பரிசு பெற்றவர்களில் சிலர் இன்னமும் கடுமையான அரசியல் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பெலருசிய இதழாளர் சங்கம் (2004), டாமாசு டெ பிளாங்கோ, கிலெர்மோ பாரினாசு (கூபா, 2005 & 2010), அலெக்சாண்டர் மிலின்கீவிச் (பெலாரசு, 2006), கூ யா (சீனா, 2008) ஆகியோர் சிலராவர். 2011இல் பரிசு பெற்ற ரசான் சைதூனே 2013இல் கடத்தப்பட்டார்; இன்னமும் காணக்கிடைக்கவில்லை. 2012இல் பரிசு பெற்ற நஸ்ரன் சோடூதெ செப்டம்பர் 2013இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்; நஸ்ரனும் அவருடன் பரிசு பெற்ற சாபர் பனாகியும் இன்னமும் ஈரானை விட்டு வெளியேறத் தடை செய்யப்பட்டுள்ளனர்.

சாகரவ் பரிசு பெற்ற மூவருக்கு பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது: நெல்சன் மண்டேலா, ஆங் சான் சூச்சி, மலாலா யூசப்சையி.

20 அக்டோபர் 2021 அன்று சாகரவ் பரிசு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ருசியா எதிர்கட்சித் தலைவர் அலெக்சேய் நவால்னிக்கு வழங்கப்பட்டது.

சாகராவ் பரிசு பெற்றவர்கள் பட்டியல்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆந்திரே சாகரவ்உருசியாஐரோப்பிய நாடாளுமன்றம்சிந்தனைச் சுதந்திரம்மனித உரிமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இசுலாத்தின் புனித நூல்கள்தேவநேயப் பாவாணர்சீர் (யாப்பிலக்கணம்)திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஆறுமுக நாவலர்தமிழ் மாதங்கள்மாணிக்கம் தாகூர்உயிரித் தொழில்நுட்பம்சப்தகன்னியர்சமந்தா ருத் பிரபுசங்ககால மலர்கள்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைஉ. வே. சாமிநாதையர்கலைதமிழர் கலைகள்நாம் தமிழர் கட்சிஇராபர்ட்டு கால்டுவெல்சுருதி ஹாசன்மொழிபெயர்ப்புவிடை (இலக்கணம்)தமிழ்நாடு காவல்துறைவேலுப்பிள்ளை பிரபாகரன்விஜய் சங்கர்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதிருவள்ளுவர்வைப்புத்தொகை (தேர்தல்)பாசிப் பயறுபல்லவர்ரோசுமேரி2024 இந்தியப் பொதுத் தேர்தல்கள்ளுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்எஸ். ஜெகத்ரட்சகன்மண்ணீரல்திராவிட இயக்கம்வீரப்பன்நிணநீர்க்கணுசித்தர்சுதேசி இயக்கம்தமிழ்நாடு அரசியல்வரலாறுநஞ்சுக்கொடி தகர்வுஅருச்சுனன்பகத் சிங்மு. மேத்தாபொன்னுக்கு வீங்கிகலிங்கத்துப்பரணிஇந்திய தேசிய காங்கிரசுவிவேகானந்தர்பனிக்குட நீர்கீழடி அகழாய்வு மையம்காதல் மன்னன் (திரைப்படம்)ம. பொ. சிவஞானம்சென்னைதமிழ் இலக்கணம்சிவன்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முன்மார்பு குத்தல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கர்ணன் (மகாபாரதம்)மூசாகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்புறப்பொருள்பத்து தலஇரண்டாம் உலகப் போர்இந்திய அரசியலமைப்புமுடியரசன்கள்ளர் (இனக் குழுமம்)ஐயப்பன்வாசெக்டமிதொல். திருமாவளவன்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்பழமொழி நானூறுஐ (திரைப்படம்)அக்கி அம்மைஇந்திய தேசியக் கொடிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)🡆 More